Tuesday 27 April 2010

ஜெஸ்வந்தி!!

பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில்நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான்அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.”

என்று என் மீது இரக்கப்பட்டு அன்புடன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.

இந்த அன்பு விருதை நான் நால்வருக்கு அளிக்க வேண்டும்.

1. சொல்லும்படியாக ஒன்றுமில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள விரும்புவது தமிழ்பற்றுள்ள தமிழர்களில் ஒருவன் என்று சொல்லும் அன்பு நண்பன் பிரவீன்

தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..! என்ற அவர் தளத்தில் அவர் படைப்புக்களைப் பாருங்கள்!

My Photo

2.ஹரிணிஅம்மா  சில கவிதைகள் மட்டும் எழுதும் இவரது தளத்தையும் பாருங்கள்.

My Photo

3.அசை போடுவது! சீனா ! வலைச்சரம் நடத்தும் மார்க்கண்டேயன் இவர்.

My Photo

4.ஜெரி ஈசானந்தா- ஒருமை 

அவரவர்களுக்கான உலகம்,அதில் அவரவர்களுக்கான பயணம்,இதில் நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே  என்று சொல்லும் ஜெரி கோபக்காரப்பதிவர்.

My Photo

இன்னும் நண்பர்கள் மீதமிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் விருது தரலாம் என்பதால் இந்த விருதை மேல் கண்ட நால்வருக்கும் அளிக்கிறேன்.

தமிழ்த்துளி தேவா.

Friday 16 April 2010

அன்றாடம் சூழல் மாசு குறைக்க-

உலக வெப்பமயமாதல், அதிக எரிசக்தி உபயோகித்தல், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவை தற்போது மிகப் பெரும் பிரச்சினைகளாக  உருவெடுத்துள்ளன. பெரிய தொழிற்சாலைகள், வாகனங்கள் இவற்றால்தான் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாமல்   இதில் நம் பங்கு என்ன? என்று யோசித்து ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று சில யோசனைகள் கீழே தொகுத்துள்ளேன்.
1.குளிக்கும் போது ஷவர் உபயோகித்தால் நல்ல நவீன ஷவர் வாங்கி உபயோகிக்கவும். இதனால் தண்ணீர் 60% குறைகிறதாம்.
2.பினைல் போன்றவை தவிர்த்து பேகிங் சோடா, உப்பு,வினிகர் போன்றவை கொண்டு வீட்டைத் தூய்மைப் படுத்தலாம்.
3.எனர்ஜி ஸ்டார் முத்திரையுள்ள மின் சாதனங்களை உபயோகித்தல் மிகவும் நல்லது.
4.வீட்டில் செடிகள் நிறைய தொட்டிகளில் வளர்க்கலாம்.
5.கம்பியூட்டரை எப்போதும் ஆனில் வைத்திருக்கக் கூடாது. அணைத்து வைத்துத் தேவைப்படும்போது உபயோகித்தால் நிறைய மின்சாரம் மிச்சமாகும்.
6.15 நிமிடத்துக்கு மேல் அறையைவிட்டு வெளியில் வந்தால் மின் விளக்குகளை அணைத்துவிடவும்.
7.கம்பியூட்டருக்கு எல்.சி.டி. மானிட்டர் மாற்றவும். சி.ஆர்.டி மானிட்டரைல் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரம் இதற்குப்போதுமானது.
8.மின் விளக்குகளை சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி மின் விளக்குக்களாக மாற்றவும்.
9.தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன.
10.குளிர்ந்த நீரில் துணி துவைக்கவும்.  மிஷினில் துவைத்தால் 85% சக்தி விரயம் ஏற்படுகிறதாம்.
இவற்றுடன் உங்கள் குழந்தைகளுக்கு சக்தியை சேமிக்கவும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவும் கற்றுக்கொடுங்கள்.

Thursday 8 April 2010

கொஞ்சம் தேநீர்-தொலைந்து போனவன்!

நேற்றிரவு

தொலைந்து போனவனைக்

கண்டேன்!!

 

தன் கூரிய

விருட்ச விரல்களால்

இரவைக் கிழித்துக்

கொண்டிருந்தான்.

 

கீழே நிழலாகக்

கிடந்த உடலகளினின்றும்

பீரிட்ட குருதி

அவன் கண்களூடாய்

வழிந்து கொண்டிருந்தது!

 

அவற்றின் அடங்காத

ஓலம்

வீங்கிப்போன அவன்

செவிப்பறைகளில்

அதிர்ந்து கொண்டிருந்தது.

 

புகையாய்க் கிளம்பிய

நர வீச்சம் தாளாமல்

அவன் நாசித்துவாரங்கள்

சிதறிக்கிடந்தன.

 

தன் முகம் காணச் சகியாது

உடலினின்றும்

தன் தலையைப்

பிய்த்தெடுத்தான்.

 

கைகளில் வழிந்த முகம்

என் முகத்தை

ஒத்திருக்க,

கிழிந்து கிடந்த

இரவின் ஊடாய்

அவனும் நானும்

மெதுவாகக் கரைந்து போனோம்.

Monday 5 April 2010

முழங்கைக்குக் கீழ் அடிபட்டால்!

பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்டால் விரைவாக தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியம். இதில்  தவறு செய்தால் வாழ்நாள் முழுக்க பாதிப்புடன் இருக்க வேண்டிவரும். அதே போல் நாம்  முழங்கைக்குக் கீழோ அல்லது முழங்கைப்பகுதியிலோ அடி பட்டால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்பதற்கான  சில காரணங்களில் ஒன்றைக் கீழே தந்துள்ளேன்.

1.கையில் முழங்கைப் பகுதிக்குக் கீழ் அடிபட்டு வீக்கம் வலி, கை வளைந்து இருத்தல், கையைத் தூக்க முடியாமல் இருத்தல் ஆகியவை இருந்தால் அவசியம் நுண்கதிர்ப்படம் எடுக்க வேண்டும்.

2.முழங்கைக்குக் கீழ் இறுக்கமாகக் கட்டுப் போடக் கூடாது. எலும்பு மருத்துவரே மாவுக்கட்டுப் போட்டாலும் கை விரல்கள் வீங்காமல் கட்டு சரியாக உள்ளதா? அல்லது இறுக்கமாக உள்ளதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் மருத்துவரை  உடன் பார்க்க வேண்டும்.

3.இறுக்கமான துணி கிழித்த வேட்டித் துண்டு ஆகியவற்றால் கட்டுப்போடக்கூடாது. எலும்பு மருத்துவர்கள் மாவுக்கட்டுப் போடும் முன் சாதாரண பஞ்சு அல்லது செயற்கைப் பஞ்சு சுற்றி அதன் மேல்தான் மாவுக்கட்டுப் போடுவார்கள்.அதனால் தோலுக்கும் மாவுக்கட்டுக்கும் இடையே ப்ஞ்சு இடைவெளி இருக்கும். ஆதலால் கட்டு கையை இறுக்காது.

4.அப்படிக் கட்டு இறுக்கமாக இருந்து நாம்   கவனிக்காமல் விட்டு விட்டால் கைக்குச் செல்லும் இரத்தம் அடைபட வாய்ப்புள்ளது.

5.இரத்த ஓட்டம் குறைந்தால் கை சூம்பிவிடும். இதனை ஆங்கிலத்தில் “Volkman’'s Ischemic Contracture”  என்று சொல்லுவார்கள்.

மேலேயுள்ள படத்தில் கை சுருங்கி விரல்கள், மணிக்கட்டு ஆகியவை நீட்டமுடியாமல் இருப்பதைப் பாருங்கள்.

6.இந்த வகை பாதிப்பில் கட்டுப்போட்ட பகுதியில் இரத்த ஓட்டம் நின்று விடுவதால் தசை, தசைநாண் ஆகியவை இரத்த ஓட்டமின்றி  சிறுத்து சுருங்கிப் போகின்றன. இதனால் அந்தக் கை உபயோகமற்றுப் போகின்றது.

7.இதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பெரிய அளவுக்கு பலனளிப்பதில்லை.  ஆகவே இந்த நிலை வருவதைத் தடுப்பதே சிறந்தது.

தமிழ்த்துளி தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory