பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்டால் விரைவாக தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியம். இதில் தவறு செய்தால் வாழ்நாள் முழுக்க பாதிப்புடன் இருக்க வேண்டிவரும். அதே போல் நாம் முழங்கைக்குக் கீழோ அல்லது முழங்கைப்பகுதியிலோ அடி பட்டால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்பதற்கான சில காரணங்களில் ஒன்றைக் கீழே தந்துள்ளேன்.
1.கையில் முழங்கைப் பகுதிக்குக் கீழ் அடிபட்டு வீக்கம் வலி, கை வளைந்து இருத்தல், கையைத் தூக்க முடியாமல் இருத்தல் ஆகியவை இருந்தால் அவசியம் நுண்கதிர்ப்படம் எடுக்க வேண்டும்.
2.முழங்கைக்குக் கீழ் இறுக்கமாகக் கட்டுப் போடக் கூடாது. எலும்பு மருத்துவரே மாவுக்கட்டுப் போட்டாலும் கை விரல்கள் வீங்காமல் கட்டு சரியாக உள்ளதா? அல்லது இறுக்கமாக உள்ளதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் மருத்துவரை உடன் பார்க்க வேண்டும்.
3.இறுக்கமான துணி கிழித்த வேட்டித் துண்டு ஆகியவற்றால் கட்டுப்போடக்கூடாது. எலும்பு மருத்துவர்கள் மாவுக்கட்டுப் போடும் முன் சாதாரண பஞ்சு அல்லது செயற்கைப் பஞ்சு சுற்றி அதன் மேல்தான் மாவுக்கட்டுப் போடுவார்கள்.அதனால் தோலுக்கும் மாவுக்கட்டுக்கும் இடையே ப்ஞ்சு இடைவெளி இருக்கும். ஆதலால் கட்டு கையை இறுக்காது.
4.அப்படிக் கட்டு இறுக்கமாக இருந்து நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் கைக்குச் செல்லும் இரத்தம் அடைபட வாய்ப்புள்ளது.
5.இரத்த ஓட்டம் குறைந்தால் கை சூம்பிவிடும். இதனை ஆங்கிலத்தில் “Volkman’'s Ischemic Contracture” என்று சொல்லுவார்கள்.
![]() |
மேலேயுள்ள படத்தில் கை சுருங்கி விரல்கள், மணிக்கட்டு ஆகியவை நீட்டமுடியாமல் இருப்பதைப் பாருங்கள்.
6.இந்த வகை பாதிப்பில் கட்டுப்போட்ட பகுதியில் இரத்த ஓட்டம் நின்று விடுவதால் தசை, தசைநாண் ஆகியவை இரத்த ஓட்டமின்றி சிறுத்து சுருங்கிப் போகின்றன. இதனால் அந்தக் கை உபயோகமற்றுப் போகின்றது.
7.இதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பெரிய அளவுக்கு பலனளிப்பதில்லை. ஆகவே இந்த நிலை வருவதைத் தடுப்பதே சிறந்தது.
தமிழ்த்துளி தேவா.
28 comments:
சேவை சிறக்க வாழ்த்துக்கள் டாக்டர்!
எனக்காகவே பதிவு போட்டமாதிரி இருக்கு. எனக்கும் tennis elbow பகுதியில் அடிபட்டு பெல்ட் உபயோகப்படுத்துகிறேன். நல்லவேளை எலும்புமுறிவெல்லாம் இல்லை. என்னுடைய டாக்டர் நீயும், சச்சின் டெண்டுல்கரும் உடன்பிறப்புகள் என்று சொல்லுவார்.சச்சினுக்கு இருக்கிற அதே பிரச்சினைதான் எனக்கும் என்பதை அப்படி கிண்டல் செய்வார்.
பகிர்வுக்கு நன்றி.
"நுண் கதிர்" நல்ல தமிழ்!!!
நன்றி மருத்துவர் ஐயா.
வால்பையன் said...
சேவை சிறக்க வாழ்த்துக்கள் டாக்டர்!
///
மிக்க நன்றி நன்பரே!
அமைதிச்சாரல் said...
எனக்காகவே பதிவு போட்டமாதிரி இருக்கு. எனக்கும் tennis elbow பகுதியில் அடிபட்டு பெல்ட் உபயோகப்படுத்துகிறேன். நல்லவேளை எலும்புமுறிவெல்லாம் இல்லை. என்னுடைய டாக்டர் நீயும், சச்சின் டெண்டுல்கரும் உடன்பிறப்புகள் என்று சொல்லுவார்.சச்சினுக்கு இருக்கிற அதே பிரச்சினைதான் எனக்கும் என்பதை அப்படி கிண்டல் செய்வார்.
///
முழங்கைப் பகுதியில் நிறைய விசயங்கள் உள்ளன.
நானும் கையில் மாவுக்கட்டுடன் இருந்திருக்கிறேன்...
ஆனால் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் தெரியாது...
நல்ல விழிப்புணர்வுப்பதிவு..
நன்றி அண்ணா...
முக்கியமான தகவல்.
பகிர்வுக்கு நன்றிங்க.!
பகிர்வுக்கு நன்றி.
சைவகொத்துப்பரோட்டா said...
"நுண் கதிர்" நல்ல தமிழ்!!!
நன்றி மருத்துவர் ஐயா.
//
நன்றி ! நன்றி!!
அகல்விளக்கு said...
நானும் கையில் மாவுக்கட்டுடன் இருந்திருக்கிறேன்...
ஆனால் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் தெரியாது...
நல்ல விழிப்புணர்வுப்பதிவு..
நன்றி அண்ணா...
///
தெரிந்து கொள்வது எங்காவது உதவும்!!
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
முக்கியமான தகவல்.
பகிர்வுக்கு நன்றிங்க.!
//
மிக்க நன்றி ஷங்கர்!!
----------------------------
5 April 2010 07:41
நண்டு@நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி.
///
வருகைக்கு நன்றி நண்பரே!!!
டாக்டர் "கட்டு போடுறது இருக்கட்டும்",என்ன ஆச்சு? அந்த தேனிலவு ரெண்டாம் பாகம்.?
இன்னும் இந்த விழிப்புணர்வு முழுக்க வராமல், கை கால் உடையும் போது, சரியான மருத்துவ சிகிச்சை பெறாமல் கஷ்டப் படும் மனிதர்கள் பலர்.
நல்ல பதிவு.
அவசியமான பதிவுகளை இடும் உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் சார்....
பகிர்வுக்கு நன்றி டாக்டர்
//முழங்கைக்குக் கீழ் இறுக்கமாகக் கட்டுப் போடக் கூடாது... கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் மருத்துவரை உடன் பார்க்க வேண்டும்.//
நான் இதுவரை, ஃப்ராக்சருக்கு இறுக்கமாகத்தான் (அசைவு இராதபடிக்கு) கட்டு போடுவார்கள் என்று நினைத்திருந்தேன். நல்ல தகவல் தெரிந்துகொண்டது மகிழ்ச்சி டாக்டர்.
பயனுள்ள தகவலுக்கு நன்றி டாக்டர்
Chitra said...
இன்னும் இந்த விழிப்புணர்வு முழுக்க வராமல், கை கால் உடையும் போது, சரியான மருத்துவ சிகிச்சை பெறாமல் கஷ்டப் படும் மனிதர்கள் பலர்.
நல்ல பதிவு.///
உண்மைதான்!! சரியான சிகிச்சை அவசியம்!!
தமிழரசி said...
அவசியமான பதிவுகளை இடும் உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் சார்..//
நன்றி தமிழரசி!
T.V.ராதாகிருஷ்ணன் said...
பகிர்வுக்கு நன்றி டாக்டர்//
மிக்க நன்றி!!
ஹுஸைனம்மா said...
//முழங்கைக்குக் கீழ் இறுக்கமாகக் கட்டுப் போடக் கூடாது... கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் மருத்துவரை உடன் பார்க்க வேண்டும்.//
நான் இதுவரை, ஃப்ராக்சருக்கு இறுக்கமாகத்தான் (அசைவு இராதபடிக்கு) கட்டு போடுவார்கள் என்று நினைத்திருந்தேன். நல்ல தகவல் தெரிந்துகொண்டது மகிழ்ச்சி டாக்டர்.//
கொஞ்சம் இடைவெளி வேண்டும்!!நன்றி!!
"உழவன்" "Uzhavan" said...
பயனுள்ள தகவலுக்கு நன்றி டாக்டர்///
நன்றி உழவன்!!
useful article.
thanks for sharing..
சமீபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனைப் பார்த்தேன். மணிக்கட்டுக்கு அருகில் வளைந்த நிலையில் இருந்தது அவன் கை. சிறு வயதில் தோழன் ஒருவன் கடித்ததை சரியாக கவனிக்காமல் விட்டதன் விளைவாம். இப்போதுதான் ட்ரீட்மென்ட் எடுக்கிறானாம்
miga miga avasiyamana pathivu
யூஸ்ஃபுல்லான தகவல்.
பகிர்வுக்கு நன்றி
முழங்கைக்கு கீழ் இருக்கமாக கட்டு போடக்கூடாது என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன், நன்றி,
இப்ப உள்ள யுத் களுக்கு தான் அடிகக்டி பைக்கில் செல்லும் போது கை பிராக்சர் ஆகிறது, இதனால் லஃப் லாங் அவர்கலுக்கு தான் பிரச்சனை என்பது தெரிவதில்லை.
அன்பின் தேவா
பயனுள்ள இடுகை - மருத்துவர்களைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாது - பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
Post a Comment