என்னால் சில நாட்களாகத் தொடர்ந்து பதிவில் எழுத
முடியவில்லை. கடைசியாக டிசம்பரில் எழுதியது. நான்
எழுதமுடியாததற்கு காரணங்கள்,
இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்தான்.
1.இந்திய மருத்துவ கழகம் செட்டிநாடு கிளைக்கு என்னை செயலராகத் தேர்ந்தெடுத்திருப்பது.
கழக செயலர் என்றால் கொஞ்சமாவது செயல்படவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
அதன்படி மருத்துவ முகாம்கள் நடத்துவதில் கொஞ்சம் முனைப்புக்காட்டி வருகிறேன்.
அதுபோல் மருத்துவர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தும் பொறுப்பும் செயலருடையதே.
இதனிடையில் இன்ன்னொரு மாற்றமும் சேர்ந்து கொண்டது.
2. அது முதுநிலை குடிமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று நான் அரசு மருத்துவமனை நாமக்கல்ல்லுக்கு மாற்றலாகி இருப்பது.
பதவி உயர்வு மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
ஆனால் நான் இருக்கும் ஊரிலிருந்து நாமக்கல் வெகு தொலைவு.
நாமக்கல்லுக்கு நான் செல்வது இதுவே முதல் முறை. யாரையும்
தெரியாத ஊர்.
பணி மாற்றத்தால் மருத்துவ சங்க செயலராக செயல்படுவதே பெரிய
வேலையாக உள்ளது.
அதனாலேயே வலைப் பக்கம் வர இயலவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது நடு நடுவே எட்டிப்பார்க்கிறேன்.
அன்புடன்
தேவகுமார்.