Tuesday 31 March 2009

பாடுவது கவியா?மைக்கேல் ஜாக்சன் மகனா?

பாரிஸ் மற்றும் பிரின்ஸ் ஜாக்ஸன்!!

 

நம்ம படிக்கும் காலத்திலேயே பிரபலமானவர் மைக்கேல் ஜாக்சன்!!!அவருடைய பாடல்கள் எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்தவை.

அப்போதெல்லாம் காரைக்குடியில் மணிக்கூண்டு என்று நகரின் பிரபல் நகைக்கடைகள் உள்ள பகுதியில் டீக்கடை ஒன்று உண்டு!!

அழகப்பா கல்லூரி மாணவர்கள் குழுக்கலை நாம் அங்கு பார்க்கலாம்!

அங்கு 25ஆ அல்லது 50 பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் போடுவார்கள். பெரும்பாலும் ஆங்கில்ப்பாடல்களாக இருக்கும்!!மாணவர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இடம் அது!!

நானும் நண்பர்களும் கடைகளுக்குச் செல்லும் பொழுது அந்தக் கடை அருகில் கொஞ்ச நேரம் நின்று பாட்டுக்கேட்பது வழக்கம்!!

இப்போது அந்தக் கடையும் இல்லை!! தொழில் நுட்ப வளர்ச்சி பாடல்களை ஒவ்வொரு தனிமனிதனின் காதுக்குள்ளும் தள்ளிக்கொண்டு இருக்கிறது!!

அதன் பின் ஜாக்ஸனின் மேடு பள்ளமான பாதை நமல்லுத்தெரியும்!!

இப்பொழுது ஜாக்கின் மகன் பாடப் போறாருங்கோ!!

பிரின்ஸ் ஜாக்ஸனுக்கு வயது 12 , ஜாக்ஸனே முகமூடி வாழ்க்கை. இதில் மகனை வெளியே காண்பிப்பாரா?

உலகமே மிகவும் எதிர்பார்க்கும் லண்டன் நிகழ்ச்சியில் ஜாக்ஸனுடன் பிரின்ஸ் ஜாக்ஸன் பாடவிருக்கிறார்.

ஜூலை 8 நிகழ்ச்சியாம் !! லண்டனில் உள்ள பதிவர்கள்  4 டிக்கெட்டும், போக வர டிக்கெட்டும் வாங்கி எனக்கு அனுப்பி வைக்கவும்!!

வன்முறை இளைஞர்களும்! நாமும் !

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!”மனிதன் பாதி

மிருகம் பாதி” போன்ற பாடல்களைக்கேட்டிருப்போம்!

மனிதன் தெய்வமாக மாறவேண்டாம்! மிருகமாக

மாறாமல் இருந்தால் சரி!!

ஏனெனில் இத்தகைய இளைஞர்கள்

(மனிதர்கள்) குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும்

விளைவிக்கும் கேடு மிக அதிகம்! நம் ஊரிலும்

பொதுவாக ஆண்களின் கரம் குடும்பத்தில்

ஓங்கியிருப்பதால் பெண்களும் குடும்ப

உறுப்பினர்களும் ஆண்களின் மிருக வெறிக்கு

ஆளாவது சாதாரணமாக நிகழ்கிறது!

 

குடும்ப விசயம் என்பதால் அக்கம் பக்கத்தார்

வேடிக்கைபார்க்கலாம் ! ”தட்டிக்கேட்டால் இது என்

குடும்ப விசயம், நீ தலையிடாதே”  என்கிற பதிலே

கிடைக்கும். மேலும் குடும்ப மானம் கருதி அவர்களும்

எந்த புகாரும் தருவதில்லை!

 

நாம் நேரடியாக அவ்வளவு கொடூரமான

மனிதர்களைச் சந்த்தித்து இருக்க மாட்டோம்.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் இந்த

நிலையிலுள்ள இளைஞர்களை அடையாளம்

கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும்

உள்ளிருப்பு சிகிச்சை முகாம்கள்

அமைப்பதும் மிக முக்கியம்!!

 

சர்க்கரை, இதய நோய்களுக்கு தேசிய

திட்டங்களைப்போல் இத்தகைய

மனப்பிறழ்வுகளையும்  ஆரம்பத்திலேயே கண்டறிந்து

களைய வேண்டியது அவசியமாகிறது!

 

பாஸ்டனில் சமீபத்தில் கெர்பி ரெவெலஸ் என்ற 23

வயது வலிபன் தன்னுடைய 17 வயது சகோதரியை 

வீட்டில் உபயோகிக்கும் கத்தியால் குத்தி கொன்று

உள்ளார்.

 

இதற்கு முன்னரே இவருக்கும் பக்கத்து வீட்டு

நபருக்கும் சிறிய கைகலப்பு ஏற்பட்டு உள்ளது! இவர்

தனது குடும்பத்துடனும் பாட்டியுடனும் வசித்து

வந்தவர்.

 

அவருடைய சகோதரி சரஃபினா (9 வயது) அவசர

போலீஸுக்கு போன் செய்தவுடன் போலீசார் பக்கத்தில்

ரோந்தில் இருந்ததால் உடனடியாக வீட்டுக் கதவை

உடைத்து உள்ளே நுழைந்தனர்.

 

போலீசாரின் கண் எதிரிலேயே தன் இன்னொரு

சகோதரியின் தலையை வெட்டி கையில் எடுத்து

விட்டு அடுத்த சகோதரியைக் கொல்ல முயலும்

போது போலீஸ்  அவரை சுட்டு வீழ்த்தினர்..

 

2004 ம் வருடம் இதே இளைஞன் ஒரு

பெண்மணியைத் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு

உள்ளார்.

 

உயிர் தப்பிய சகோதரியின் உடல் வயிற்றுப்

பகுதிகளிலும் நிறைய கத்திக் குத்துக்கள் காணப்பட்டு

உள்ளன..

 

ஒன்றும் அறியாத அப்பாவி பெண்குழந்தைகள் ஒரு

வெறி பிடித்த சகோதரனால் கொடூரமான முறையில்

கொல்லப்பட்டு இருப்பது கொடுமை!  இத்தகைய

கொடுமைகள் ஏன் நிகழ்கின்றன?ஏன் இன்று பல

இளைஞர்கள் அதீத வன்முறையில் ஈடு படுகிறார்கள்?

என்பவை இன்று சிந்தித்து கண்டறிந்து

அவற்றைக்களைய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்!!

இது ஏதோ உலகில் எங்கோ நடக்கும் விசயமல்ல!

நம்மைச்சுற்றிலும் நடந்து கொண்டு இருக்கும் விசயம்!

 

அலட்சியத்தாலும், குழந்தைகளின் மேல்

அக்கறையின்மையாலும் நாமே இத்தகைய

இளைஞர்களை உருவாக்குகிறோம்!!

 

ஆம் , இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நாம்தான் காரணம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப்பருவத்திலேயே நம்முடைய

செயல்பாடுகளும், நாம் வாழும் சூழ்நிலையும் மிகமிக

முக்கியம்!! இவற்றாலேயே ஒரு குழந்தை முறையற்ற

இளைஞனாக மாறுகிறது!!

 

குழந்தைப் பருவத்தில் சில விசயங்களைக்கொண்டு

இதனை  நாம் கண்டறியலாம்.

எப்படி? கீழேயுள்ள விசயங்களை கவனியுங்கள்:

1.உடன் கோபம்

2.அடிக்கடி சுயகட்டுப்பாட்டை இழந்து கத்துதல், கோபப்படுதல்

3.சின்ன விசயங்களுக்கும் எரிச்சல் அடையும் தன்மை

4.அடிக்கடி வெறுப்படைதல்

குழந்தைகளின் இந்தப் பண்புகளை பெற்றோர் எளிதாக

கண்டறியலாம்.. அதேபோல பள்ளி ஆசிரியர்களும்

எளிதாக அடையாளம் காணலாம்.

 

பெற்றோர் படிக்காத, விபரமில்லாதவர்களாக இருக்க

வாய்ப்பு உண்டு. ஆனால் ஆசிரியர்கள் அப்படியல்ல!

பள்ளீயிலேயே இத்தகைய குழந்தைகளைக்

கண்டறிந்து முறைப் படுத்துவதே சிறந்த மனிதர்களை

சமுதாயத்தில் உருவாக்கும்!!

 

இப்படிக் கண்டறிந்த குழந்தைகளுக்கு முறையான

சிகிச்சை அளித்தால் நிச்சயமாக அவர்களின்

தன்மையை குறைப்பதோடு இல்லாமல், கோபம், வெறி

ஆகியவை இல்லாமல் செய்து விடலாம் என்று

ஆரய்ச்சிகள் தெரிவிக்கின்றன!!

ஒரு இளைஞன் ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் கவனிக்க வேண்டியவை!!

1.ஏற்கெனவே இத்தகைய சம்பவம் நடந்து உள்ளதா?

2.நபர் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டவரா?

3.வீட்டிலோ,சுற்றியிருக்கும் பகுதியிலோ வன்முறைகள் அதிகமா?

4.போதை,மதுவுக்கு அடிமையா?

5.வீட்டில் துப்பாக்கி போன்றவை உண்டா?

6.வறுமை,கண்காணிப்பின்மை,பெற்றோர்

விவாகரத்து,வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்க

ப்பட்டவரா? ஆகியவை மனிதனை மாற்றும் !!

 

வீட்டில் அடிக்கடி பிள்ளைகளின் முன்

சண்டைபோடுதல், வாழும் இடத்தில் அடிக்கடி நிகழும்

சண்டைகளும், கொடிய நிகழ்வுகள்,

படங்களிலும் ,தொலைக்காட்சி போன்றவற்றில் 

காட்டப்படும் வன்முறைக்கதைகள், காட்சிகள்

ஆகியவையே இளைஞர்கள் இத்தகைய

கொடுமையான வன்முறைகளில் ஈடுபடுவதன்

காரணம்!!

 

தொலைக்காட்சியில் குழந்தைகள் என்ன

நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்று பெற்றோர்

கவனிக்க வேண்டும்.   என் நண்பர் ஒருவர் கேபிள்

இணைப்பையே துண்டித்து விட்டு சி.டி.யில்

தேர்ந்தெடுத்துப் பார்க்கிறார்கள்!! நாம் அந்த அளவுக்கு

செல்லமுடியாது!! இருந்தாலும் கண்காணிப்பு அவசியம்!

 

என்ன இன்றிலிருந்து நம் குழந்தைகளை

கவனிப்போமா?

 

ஆசிரியர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து இளம்

வயதிலேயே குழந்தைகளை நெறிப்படுத்த உதவ

வேண்டும்! அப்போதுதான் நல்ல இளைஞர்களை

நாம் எதிர்காலத்துக்கு அளிக்க முடியும்.

Monday 30 March 2009

கஞ்சா!! ஒரு பார்வை! அமெரிக்காவை சரிவிலிருந்து மீட்குமா?

pot,grass,hash,mary jone,M.J,hasish

கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்!!

சமீபத்தில் அமெரிக்காவில் கஞ்சாவை மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தலாமா என்று ஒரு சர்ச்சை எழுந்து உள்ளது!

பாரக் ஒபாமா இதுபற்றி  பேசியுள்ளார்..அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சட்டமாக உள்ளது..சில மாநிலங்களில் மருந்தாக இதனை உபயோகிக்கிறார்கள். சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் $14 பில்லியனுக்கு ஆண்டுக்கு கஞ்சா வர்த்தகம் நடக்கிறது.

கஞ்சா உபயோகத்துக்கு தடை நீக்கி வர்த்தக ரீதியாக மருத்துவத்தில் உபயோகிக்க அனுமதியளிப்பதன் மூலம் அரசுக்கு வரியாக மிகப்பெரும் தொகை கிடைக்கும் என்று கருதப்படுகிறது!!

அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர்களும் தங்கள் இளமைக்காலத்தில் கஞ்சா உபயோகித்தவர்கள்தான்.. ஒபாமா கொக்கையின் என்னும் போதைப்பொருளும் உபயோகித்தவராம்.. அமெரிக்காவில் இது சகஜம்தான் என்கிறீர்களா?

கஞ்சா வியாபாரத்தை முறைப்படுத்தி உரிய வரி விதித்து மருத்துவத்துறைக்கு அமெரிக்கா முழுமைக்கும் உபயோகிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் என்பது ஒரு சாராரின் கருத்து!!

இதனைப்பற்றி பல கருத்துக்கள்,கண்டனங்கள் செய்திகளாக வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மருத்துவத்துறையில் கஞ்சாவின் பயன் என்னவென்று பார்ப்போம்.

250க்கும் மேற்ப்பட்ட வியாதிகளுக்கு கஞ்சாவை மருந்தாக கொடுக்கலாம்! அவற்றில் முக்கியமாக

மூட்டுவலி-- வலியைக் குறைக்க!

ஆஸ்துமா---நுறையீரல் விரிவடைய செய்ய

மன சோர்வு-- மூடு ,உற்சாகம் ஏற்பட,

க்ளாக்கோமா,கண் நீர் அழுத்த நோய்--கண்ணின் அழுத்தம் குறைக்க!

வலி--- வலி நிவாரணி

சில அனுமதிக்கப்பட்ட கஞ்சாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கீழே:

1.நாபிலோன்-   புற்றுநோய் மருந்துகளால் ஏற்படும் குமட்டல்

2.மாரினால்- அதே குமட்டல், எயிட்ஸில் உடல் தசை குறைவைத்தடுக்க.

3.சாடிவெக்ஸ்- மல்டிபில் ஸ்கெலொரோஸிஸ் என்ற நரம்பு நோயில், புற்றுநோயில் ஏற்படும் வலி!

இவ்வளவு மருத்துவ குணமிருந்தாலும் கஞ்சா போதை வஸ்துவாக தவறாகப்பயன் படுத்தப்படுகிறது!! அதனாலேயே பல நாடுகளில் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கஞ்சாவால் ஏற்படும் விளைவுகள்: உற்சாகம்,புத்திசாலியாக நினைத்துக்கொள்ளுதல், தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம், கலகல்ப்பாக இருத்தல் போன்றவை இருந்தாலும்,

கவனமின்மை, சுயநினைவு இழத்தல், மாயத்தோற்றங்கள், நெஞ்சுவலி, ஞாபக மறதி, நடுக்கம், போன்றவை ஏற்படும்.

நீண்ட தூக்கமும் , அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மூச்சு விடசிரமம் , இறப்பு ஆகியவை நேரும்!!

Sunday 29 March 2009

குளிக்க மறுக்கும் குட்டிகள்!!

குளிப்பது எல்லோருக்கும் பிடித்த விசயமா? இங்கே பாருங்கள் இந்த குட்டிகளின் குளியல் ஆட்ட்த்தை!!!

1.அய்யய்யோ!!! காப்பாத்துங்க!!

2.புசு புசுன்னு இருந்த என்னை இப்படி ஆக்கிட்டானுங்க!!

3.என்னைய விடுங்க!!! அப்புறம் குளிக்கிறேன்!!

விட மாட்டேங்கிறீங்களே!

4.நான் கலையில் தான் குளித்தேன் என்றால் நம்புங்கப்பா!!

5.கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!!

6.எனக்கே குளியலா? வர மாட்டேன்!!

7.எப்படி நடுங்குது பாருங்க எனக்கு!!!

 

8.இப்படி கொடுமை பண்றாங்களே! யாராவது காப்பாத்துங்க என்னை!! ப்ளூகிராஸைக் கூப்பிடுங்கள்!!

என்ன நான் அனுப்பியிருக்கும் படங்களை உங்க குழந்தைகளிடம் காட்டலாம்!!! குளியல் வேலை ஈஸியா முடியும் பாருங்க!!!

Saturday 28 March 2009

நண்பர்களே!! நண்பர்களே!!!நம்ம கதை கேளுங்களே!!

 

நண்பர்களே!! என் நண்பன் ஒருவன் ஒரு செய்தி மின்னஞ்சலில் அனுப்பி இருந்தான்!!!

அது படிக்க நன்றாக இருந்ததால் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!!

எழுதிய நண்பர் வாழ்க!!

 

image

image image

image

image

image

Friday 27 March 2009

8.2 வினாடியில் காதல்!

 

காதல் மேட்டர்ன்னாலே குஜால்தான்!! இந்த அஜால் குஜால் மேட்டரப் பத்தி தாடி வளர்க்கிற விஞ்சானிங்க ஆராய்ச்சியெல்லாம் பண்றானுங்க!

”ஆல்பா பாண்ட் சிக்மா பாண்ட்” ஆராய்ச்சிய  விட்டுட்டு இவனுங்களுக்கு இந்த வேலை தேவையா நைனா? 

இவனுங்க ஆராய்ச்சி செய்யப்போவ..... நானு தூக்கம் போயி இந்த மத்தியானம் 3.15க்கு ஒக்காந்து பொம்பளைங்க பூக்கட்டுற கண்க்கா எழுதினுகீறேன்!!!    எல்லாம் நம்ப ஜொள்ளர் சங்க தோழர்களுக்குதான்!!!.....

அதுவும் நீயும் தூங்காத ஒக்காந்து, பதிவு வந்தவுடனே கபால்னு புடிச்சி பின்னூட்டமா குத்தித் தள்ளுறியே தோழா!! உன்னிய ஏமாத்தலாமா நானு!!!

தூங்கினா மேட்டர் சூடு ஆறிப்பூடுமே!!  அதான் !! ரெண்டு வார்த்தை சொல்லிடுறேன்!!!

கனடாக்கார விஞ்சானிங்களும், ஹாலந்து கெழவன்களும் சேந்து பண்ணிய ஆராய்ச்சியாம் இது!

115 கல்லூரி மாணவர்களை அழகிய நடிகைகளிடம் பேச விட்டு இருக்கிறார்கள்!!! இதில் ஆண் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் ? எவ்வளவு நேரம் முகத்தைப் பார்க்கிறார்கள் ? நடிகைகளின் கண்களை எவ்வளவு நேரம் நெருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்!( நம்ம ஊரு ஆராய்ச்சியாளர்களும் இப்படி ஆராய்ச்சி பண்ணலாமே!!! இளைஞர்கள் நாங்கள் ரெடி!!

நம்ம முதியோர் சங்கம் கூட ரெடியாம்பா!!!).

அதில் பல சுவாரசியமான முடிவுகள்!! அதாவது ஆராய்ச்சிக்குப்பின்னாடி எல்லா மாணவர்களிடமும் கேள்வியும் கேட்டு பதிலும் வாங்கி இருக்காங்க!

அதில்  பெண்கள் ஆண்களைப்பார்த்தவுடன் மயங்குவது இல்லையாம்! ரொம்ப யோசிக்கிறாங்களாம்!!!

இப்படி யோசிச்சு யோசிச்சே பல பேரை ப்ளாக் கவிஞர்களாக மாத்தீட்டீங்களே பெண்களே!!! இது ஞாயமா?.. (ஃபிகர் மடக்கும் மக்கள் கவனிக்கவும்!)

இதற்காக ரகசிய கேமரா வைத்து ஆராய்ச்சி பண்ணி ஒவ்வொரு பெண் ஆண்களின் கண்ணசைவுகளையும் முக மாறுதலகள் எவ்வளவு பேரை நேருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று எல்லா விபரங்களையும்  பதிவு செய்துள்ளார்கள்!!

பெண்கள் ஆண் நடிகர்களை, மாடல்களைப் பார்த்தாலும் டேடிங் போக விருப்பமா,காதலிக்க விருப்பமா என்று கேட்ட போது குழம்பியிருந்தார்கள்!!!

தேவயில்லாத கர்ப்பம், இவன் கைவிட்டுவிடுவானோ என்ற பயம் (அங்கேயுமா?) இருக்கிறதாம்!!

( இன்னா இது!! எங்கே போனாலும் இதே பேஜாரா? என்று நம் சங்கத்து சிங்கங்கள் கொதிப்பது கேட்கிறது!!  கூல்!!கூல்!! என்ன செய்வது!  இவ்வளவு இடர்களையும் தாண்டி கடலை உடைத்து, கரெக்ட் பண்றது எவ்வளவு கஷ்டம்!!)

பொம்பளைங்க இப்படி இருக்கிறார்களே!!

நம்ப பசங்க!!  (ஏக் மால் தோ துக்கடா!)  வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!! கதைதான்!!

4 வினாடி ஒரு நடிகை கண்ணை ப்பார்த்துட்டு வேற நடிகை இப்பிடி அலைபாய்ந்து எல்லா அழகையும் அள்ளிப்பருகின பசங்க செட்டில் ஆகலை!!!

8.2 வினாடி தொடர்ந்து ஒரு அழகியைப் பார்த்த பசங்க எல்லாம் கழண்டு ஒருமாதிரி ஆகி ஜோள்ளு விட ஆரம்பித்து இருக்கிறார்கள்! ( டேட்டிங் போக ரெடியாம்!! கூத்தைப் பாருங்கப்பா! எவ்வளவு நல்ல பசங்க!! நம்ம பசங்க!!!)

ஆராய்ச்சி முடிவில் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்!!

எச்சரிக்கை:  சங்கத் தோழா தொடர்ந்து 8.2 வினாடிக்கு மேல் பெண்களின் கண்களைப் பார்ப்பது ஆபத்து!!! பார்க்காதே!! பார்த்தே சிக்கிக்குவே மாப்பிள்ளே!!

8.2 வினாடிக்கு மேல் கண்ணோடு கண் நோக்கினால் ஆண் காதல் வசப்படுகிறான்!!(ராமனே இந்த லிஸ்டுதானே!-- அண்ண்லும் நோக்கினான் அவளும் நோக்கினான்!!!)....................அங்கே சரிதான்! இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! பார்த்துட்டான்னா...நொங்கிருவானுங்க!!!

இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? ஓகே...நடத்துங்க...

பி.கு:  இதைப் படித்து ப்ரூப் பார்த்த தங்கமணி 4 வினாடிக்கு மேல் எந்த அம்மிணியையும் லுக் உடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்!!   

  கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!

Thursday 26 March 2009

அடிவாங்கும் ஆண்கள்! ச(சி)ங்கமே சிலிர்த்தெழு!!

 

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நம் சங்கம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறது!!

ஏதோ ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு வேலைகளைச் செய்து வருகிறோம்!!

ஆபிஸில் ஆணிகளைப் பிடுங்கி களைத்து வரும் நம் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி(தானே போட்டுத்தான்) குடித்தவுடன் விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்!!

நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!

அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!!

பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்? அதை நாம் ஒத்துக்கொள்ள முடியுமா! பயத்தில் கைகாலெல்லாம் ஆடாது? சில நேரம் அழுது விடுவோமோ என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறோம்!

இப்படி இருக்கும் நேரத்தில் சமீபகாலமாக் நம் சங்கத்தைச் சார்ந்தவர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது!

பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார், அதுவும் குழந்தைகள் முன்னிலையில்! இப்படி செய்தால் கணவரை எப்படி குழந்தைகள் மதிக்கும்!

1.கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!

அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை! எல்லாத்துணிகளையும் துவைக்கவிட்டு, நம் சங்க நபரின் சட்டையைக் கழற்றி அதாலேயே வீடும் துடைக்கவைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி! !

 

2.இந்த காணொளியைப் பாருங்கள் !!

நான் சொல்வது பொய்யா?

இதைவிட ஆதாரம் என்ன வேண்டும்! நம் அப்பாவி அப்பா ஒருவர் எப்படி அடிபடுகிறார் பாருங்கள்!

இதைப் பார்த்த பின்னும் நாம் சும்மா இருக்க முடியுமா? படை கிளம்பட்டும் !! அந்த ராட்சத மனைவி இல்லாத நேரமாகப்பார்த்து நம் சங்க கணவனைப் பார்த்து வலி, வேதனையை தாங்குவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து வருவோம்! அடுத்த கூட்டத்தில் அவர் அனுபவங்களையும் எப்படி இந்த வலி வேதனையைத்தாங்கினார் என்றும் நம் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்!!

2.சரி விடுங்க விவாகரத்தாவது கொடுங்க என்று கெஞ்சியவருக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்!

ஆணின் கதி! 

இவர் விவாகரத்துதானே கேட்கிறார்! விட்டுவிடவேண்டியதுதானே!  கையைக் கட்டி அடித்து உதைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி!!

அதோடு விடவில்லை!! கட்டிலில் கட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்!அறை  சாவி இரண்டு பேரிடமும் இருக்கும்! கஷ்டப்பட்டு எழுந்து சாவியைப் போட்டு திறக்கப் பார்த்தால் திறக்க முடியவில்லை! முன்னெச்சரிக்கையாக பூட்டையே மாற்றி வெறு பூட்டு போட்டு விட்டார் அந்த மகராசி!!

எப்படியோ போலீஸுக்கு போன் பண்ணி அவங்க வந்து அறைக்கதவை உடைத்து ஆளை வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள்!!!

இந்த சம்பவத்தை நம் சங்கம் சார்பாக கண்டிப்பதுடன் இன்றிரவு உள்ள சங்க அவசர கூட்டத்திற்கு வரவும்!! நாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் அனைவரும் சங்கத்தின் முக்கிய விதிமுறைப்படி... மாறுவேடத்தில் வரவும்!!

Wednesday 25 March 2009

நம்ம ஊரு ஆளுங்க திருந்தமாட்டாங்கப்பா!

 

 

 ருக்கையிலிருந்து மெதுவாக  எழுந்து உடலை வளைத்து நெட்டி முறித்தேன். வயதாகிக்கொண்டே போகிறதல்லவா!

வயதாகிக்கொண்டே போகிறதா? அப்படித்தான் நண்பர்கள் பேசும்போது  சொல்லிக்கொள்வோம்.

உடலுக்குத்தான் வயசாகிக்கொண்டு போகிறது! உள்ளம் இன்னும் இளமை மாறாமல் அப்படியே கல்லூரி விடுதி வராண்டாக்களில்தானே சுத்திக்கொண்டு உள்ளது!

உணர்வுகளுக்கும் வயசாகவில்லை! கோபம் வருவதெல்லாம் குறையவில்லை

உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!

”இங்கிதம் தெரியாதவர்கள்!! இப்பத்தான் பார்க்கிறான், அதற்குள் வயசு என்னன்னு கேக்கிறான்! அடுத்து சம்பளம் என்னன்னு கேப்பான்! 

நம்ம ஊர் ஆளுங்க திருந்த மாட்டனுங்கப்பா”  என்று வீட்டில் கோபமாக பேசிக்கொண்டிருப்பேன்!

இப்படித்தான் ஒருமுறை பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.

பெரும்பாலும் பஸ்ஸில் ஏறினால் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டு இருப்பேன்! பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது அரிது!

அன்றும் அப்படித்தான்! கையில் காலச்சுவடு புத்தகத்துடன் கிடைத்த சீட்டில் அமர்ந்தேன்.

பக்கத்தில் இன்முகத்துடன் நடுத்தர வயதுக்கார ஆசாமி ! மெதுவாகத்திரும்பிப் பார்த்தேன்! மாநிறம்,கண்ணாடி அணிந்து இருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் ஒரு புன்முறுவல்! சிலரைப் பார்த்தால் ரொம்ப தெரிந்த மாதிரி இருக்குமே!.... அதே மாதிரி இருந்தது அவர் முகம்!

நானும் சற்று சிரித்தமாதிரியும், சிரிக்காதமாதிரியும் ஒரு பார்வை விட்டேன்!

”சார்! காரைக்குடி போறீங்களா?”

அவர்தான்!!

”ஆமா!”

”புஸ்தகம் கொஞ்சம் பார்க்கவா?”

”இந்தாங்க பாருங்க”  காலச்சுவடை அவரிடம் கொடுத்து விட்டு கண்ணை மூடினேன்!!

“சார்!!””

”என்னங்க” என்றேன்!!

”இந்தாங்க புத்தகம் ஒன்னுமே புரியலை!”

”காரைக்குடியில் எங்கே சார் வீடு?”

”செக்காலையில்”என்றேன்!

”அப்படியா? நானும் செக்காலைதான் இரண்டாவது தெரு!”

”ஓஹோ”ஒப்புக்கு தலை ஆட்டினேன்!

”நான் தாலுகா ஆபீஸில் உதவி தாசில்தாரா இருந்து ரிடையர் ஆயிட்டேன்! ஒரு பொண்ணு போஸ்ட் ஆபீஸில் க்ளார்க்கா இருக்கு! பையன் இஞ்சினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறான்!!”

”அப்படியா! ரொம்ப நல்லதுங்க!” ரிடையர்டு உதவி தாசில்தார் சரிதான்!!!ஆள் டீஸண்டாத்தான் பேசுகிறார்!

”சார் கல்யாணம் ஆயிருச்சுங்களா?

என்ன வருணாசிரமம் சார் நீங்க!”

எனக்குப்புரியவில்லை!!

“ வருணாசிரமம் என்றால் என்ன?’ என்றேன்!!

”என்ன சார்! தெரியாத மாதிரி கேக்கிறிங்க? வருணாசிரமம்னா ஜாதிதான்!! என்ன ஜாதின்னு கேட்டா ஒரு மாதிரி இருக்கும்!

வருணாசிரமம் டீஸண்டா இருக்கு பாருங்க!”

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது!!

‘’சார் ! என்னைய பார்த்தே 10 நிமிசம்தான் ஆகுது! நான் என்ன ஜாதியா இருந்தா உங்களுக்கு என்ன?  ந்ம்ம என்ன பொண்ணெடுத்து பொண்ணு குடுக்கவா போறோம்! ஏன் சார் இப்படி இருக்கீங்க?

நீங்கள்ளாம் எவ்வளவு படிச்சாலும் மாறவே மாட்டீங்களா?””

கோபத்துடன் கேட்டேன்!!

மனிதர் கப்சிப்!!

மெதுவாக எழுந்து கடைசி சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்!

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!”

பேருந்தில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது!!

Tuesday 24 March 2009

THE BLOGGER!

when everybody talks to their friends
the blogger chats to anonymous.

when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world,

when everybody watch breaking news
the blogger writes a hot news post,

when everybody does fitness exercise
our blogger writes articles for them!

Side profile of a man working on a computer photo

when everybody eats their food in time
our blogger reads recipes & wastes time,

when everybody enjoys sweet dreams
our blogger burns his midnight oil,

when his wife in need of appreciation
our blogger comments a lousy blog,

when everybody enjoys personal life
our blogger feels for the killings of world.

மரம் ஒரு அதிசயம்!

 

உயரமான மரங்கள் நிறைய பார்த்து இருப்போம்!

நம்ம ஊரில் அரசமரம் ஆலமரம் பார்த்து உள்ளோம்.

அதைவிட்டா அடையாறு ஆலமரம் பார்த்து

இருக்கலாம்.

 

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்

வரவில்லை. 

 

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள

மரங்கள்தான் உலகின் உயரமான மரங்கள்!

 

செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக

உயரமான மரங்கள்!  கலிபோர்னிய செம்மரங்கள்

(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.

 

மேலேயுள்ள மரம்  செம்மரம்தான்! மாண்ட்கோமெரி

காட்டில் கலிஃபோர்னியப் பகுதியில் உள்ளது ! இதன்

உயரம்

112 மீட்டர்-367.5அடி

விட்டம் 10 அடி!

 

மரத்தின் அடிவாரத்தில் இடதுபுறம் நிற்கும்

மனிதர்களின் அளவைப் பாருங்கள்!! மரத்தின் உயரம்

எவ்வளவு என்பது பிரமிப்பாக இல்லை!

 

கீழேயுள்ள படம் ஒரு அரிய பழைய படம்!

படம் எடுக்கப்பட்ட தேதி விபரம் இல்லை!

ஆயினும் அதம் வெட்டப்பட்ட பகுதியின் அகலம்

பாருங்களேன்! எவ்வளவு பெரியது!

வெட்டிய மரத்தில் எவ்வளவு பேர் உட்கார்ந்து போஸ்

கொடுக்கிறார்கள் பாருங்கள்!

இந்தப்படம் பார்க்க எளிமையாக உள்ளது!!

சாதாரண மரத்தையே வெட்டி ஆள் மேல் விழாமல்

கயிறு போட்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்?

ஆனால் இதனை எப்படி வெட்டி ஆள் மேல் சாயாமல்

பிடித்து!!!   உண்மையில் சாகசம்தான்!!

Sunday 22 March 2009

மரியாதைக் கொலைகள்? Honour killing!

பாகிஸ்தான், ஜோர்டான்,சௌதிஅரேபியா,சிரியா,துருக்கி,பாலஸ்தீனம்,இஸ்ரேல்,சிசிலி,கார்சிகா போன்ற நாடுகளில் ஒருவர் ஜாதி அல்லது கிளான் விட்டு காதலித்தாலோ,அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது தவறாக நடந்தாலோ அதனை பெரிய அவமானமாகக் கருதுவார்கள்!

நம்ம ஊரிலும் அப்படித்தாங்க என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்! நம் ஊரிலும் கொல்லுகிறார்களே என்றால் ஆமாம்!

இங்கு அதற்கு தண்டனை உண்டு!

அங்கு பெரிய தண்டனை கிடையாது!

இப்படிக்கொல்லுவதற்கு ”ஹானர் கில்லிங்”

என்று பெயர்.

ஜோர்டான் நாட்டில் 19 வயது பெண் அலங்காரம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அவளுடைய அப்பாவும் சகோதரரும் கோபம் கொண்டு அடித்தே கொன்று விட்டார்கள்.

ஜோர்டானில் ஒவ்வொரு வருடமும் 20 பெண்கள் இதுபோல் கொல்லப்படுகிறார்கள்!

ஜோர்டான் சட்டம் 340,98 களின்படி இது அனுமதிக்கப்பட்டு உள்ளது!

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு!

,ஜூன் 2007ல் கொல்லப்பட்ட ஒரு பெண்!

இந்தியா

இந்தியாவில் 1.1.2003ல் 21 வயது சுனிதா தேவி,அவருடைய காதலன் ஜஸ்பீர்சிங் ஆகியோர் பல்லா கிராமம் ஹரியானா மாநிலத்தில் இந்த மரியாதைக்கொலை செய்யப்பட்டனர்.

http://blogs.reuters.com/gbu/2008/05/22/honor-killing/

Photo

மேலேயுள்ள படத்தில்:ஹானர் கில்லிங் செய்யப்பட்ட சாரா ஆமினா.

பெர்லின்

ஹாடின் சருகுவின் துருக்கிய முஸ்லிம் சகோதரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்

கனடா

கனடாவில் க்ரேட்2 மாணவி அவரது அப்பாவால் பர்தா அணியாததால் கொல்லப்பட்டார்!

மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் தீவிரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!

Saturday 21 March 2009

ஃபாசன் பிரபலம்-ஒபாமா மனைவி மிகெல்லி ஒபாமா!

ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன்

உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா?

மேலே படத்தில் இவர் அணிந்துள்ள உடையின் விலை

2.70 லட்ச ரூபாயாம்!

நம்ம பார்வையில் அழகுக்கும் அமெரிக்கர்கள்

பார்வையில் அழகுக்கும் எவ்வளவு வித்தியாசம்

பாருங்க!

 

சாதாரண தோற்றத்துடன் கூடிய அவரை மக்கள் அழகியாக ஏற்றுக்கொண்டுள்ளது வியப்பளிக்கிறது!

45 வயது நிரம்பியவர் இவர்! அனைத்து உடையலங்கார

நிபுணர்களும் இவரால் இந்த ஆடை அலங்காரத்துறை

புத்துயிர் பெறும் என்று சந்தோசப்படுகிறார்கள்.

 

அமெரிக்க ஆடைவல்லுனர்கள் சங்கம் இந்த ஜூன்

மாதம் அவரை கவுரவிக்க உள்ளது>

 

அவருடைய படங்கள் பார்க்க.

 

எப்படியோ பொருளாதார நலிவில் பாதிக்கப்பட்டுள்ள

இத்துறை அவரால் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை

வந்துள்ளது அமெரிக்காவில்!

 

ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார

வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா?

 

தெரியாமத்தாங்க கேட்கிறேன்!

Friday 20 March 2009

இந்த ட்ரெஸ்ஸெல்லாம் யார் போடுவாங்க?

சமீபமா வலை மேய்ந்தபோது சில உடைகளைக்கண்டேன்.

அவற்றில் சில இங்கே?

யாராவது இந்த உடை அணிந்து

பார்த்து இருக்கீங்களா?

எஃப்.டிவி.ரசிகர்கள் அமைதிகாக்கவும்!

உடையுடன் போட்டோ வைத்திருப்பாவர்கள்

அனுப்பலாம்!

image image image

image

image 

image

image

image

ட்ரெஸ் பிடித்து உள்ளவர்கள்

கீழே உள்ள முகவரிக்கு வந்தால்

ஏலத்தில் எடுக்கலாம்!

நியூ ஃபாசன் டிசைனர் (ஃபாசன் சுடுபவர்) தேவா,

ஏலக்கடை,

வண்ணாரப்பேட்டை,

சென்னப்பட்டினம்...

மனைவியை மயக்கும் மந்திரங்கள்!

மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!

ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!

இது ஆண்களுக்கு மட்டும்.

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல.

அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!

1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?

2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.

4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் “இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே” அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை”” இப்படிச் சொல்லனும்!

6.ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

7.வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.

8.வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9.அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!

10.ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11.எப்பவுமே  அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12.குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13.வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14.வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16.ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.

17.மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

 

18.மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19.மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20.முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும்.

இப்படி இன்னும் நிறையவுள்ளது..

உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டதில் சொல்லவும்!!

Wednesday 18 March 2009

உலகின் விலையுயர்ந்த சோமபானங்கள்!

 
சரக்குன்னா சும்மாவா?  மேல் நாட்டில் சகஜமான இது இப்ப நம் நாட்டிலும் சாதாரணமாகிக் கொண்டு உள்ளது!
வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் பாட்டில் கொண்டாந்தியா? என்பதுதான் நம் மக்களில் முதல் கேள்வியாக இருக்கும்! எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க.
அதை வச்சுக்கிட்டு கொஞ்ச நாள் மக்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாது. முழு மப்பும்,விருந்துகளும்! வாழ்க்கையை சந்தோசமா கழிப்பார்கள்!
கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா?

இதில் உலகிலேயே விலையுயர்ந்த அரிதான சோமபானங்கள் இருக்கு! அவை என்ன என்னன்னு ஒரு சின்ன பட்டியல். யாராவது இதை சாப்பிட்டு இருந்தால் சொல்லவும்..

1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்

$38000 ரூபாய்கள்!

ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. போர்கட்டா ஸ்பால,அட்லாண்டிக் சிடிலே கிடைக்குதாம். யாராவது பதிவர் இருந்தா அனுப்பிவிடச் சொல்லுங்க. என்ன படு காஸ்ட்லி!!

எவ்வளவு ஆசையா தூக்கிப் பார்க்கிறார் பாருங்க!

2.ஜானி வாக்கர் 1805!

$20000

ஜானி வாக்கர் தெரியாத மக்கள் உண்டா? மிஞ்சிப்போனா கருப்பு லேபிள் சாப்பிட்டு இருப்போம்!45-70 வருசம் முன்னாடியாம் இது! 200 பாட்டில்தான் மிச்சமாம்.இன்னேரம் முடிந்து இருக்கும்!

3.க்லென்ஃபிட்டிச் அரிய விஸ்கி 1937

$20000

1937ல் தயாரிப்பு! கையால் வடிக்கப்பட்ட ஓல்ட் காஸ்க் வகை! தயாரிக்கப்பட்ட போது 61 புட்டிகள்தான் இருந்ததாம். வால்நட் நிறமுடையதாம், மிக அருமையான சுவை மிகுந்த கலவையாம்! கீழே பாட்டிலைப் பார்க்கவும்! கலரே சூப்பர்!

4.பால்வனிக் காஸ்க் 191

$13000

பார்க் அவென்யூ பிராந்திக்கடையில் நியூயார்க்கில் கிடைக்குதாம் இந்த சோம பானம்! ஸ்காட்லாந்தில் வடித்து முறுகலாக தரம் ஏற்றியது 1950 களில் உருவாக்கப்பட்டது! பாவிப்பசங்க 83 பாட்டில்தான் காச்சினானுங்களாம்! ஒவ்வொரு பாட்டிலுக்கும் நம்பர் போட்டு கையெழுத்து போட்டு அனுப்பினார்களாம்..அனுபவிங்கப்பா!

5.மாகல்லன் ஃபைன்& அரிய வகை 1939 , 40 வயசு

$10125

1926 ஆம் வருடம் உருவானது! 1939ல் புட்டிகளில் அடைக்கப்பட்டது இந்த பூதம்! மறுபடி 2002 பாட்டில் மாத்தி அடைத்து வித்தார்களாம். அருமையான காய்ந்த பழங்களின் வாடையுடன் கூடிய இந்த பழரசம் கிடைக்குமா இப்போது!

6.மாகல்லன் லாலிக்

$10000

இந்த சரக்குக்கு வயசு 50! பாட்டிலின் ஒயிலான தோற்றமே போதையேத்துதே!

கரும்சிகப்பு நிறம் கொண்ட ”சிங்கிள் மால்ட் விஸ்கி”! ன்னு போட்டு இருக்கான்! அப்படின்னா என்ன குடிமக்களே?

ஏலக்காய்,சாக்கலேட் ,பழங்கள் வாடையெல்லாம் இந்த ரசத்தில் இருக்காம். ஒரு லார்ஜ் ஏத்தலாம்! பாக்கெட் கனமா இருக்கணும்!

 

 

7.பவ்மோர் 40 வயது

$7000

ஸ்பானிஷ் ஷெர்ரி காடுகளில், ஷெர்ரி மர பேரல்களில்  20 வருடம் கூட்டுப்பருவ வாழ்க்கை! 1975ல் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்கப்பட்டது. அதன் பின் ஷேர்ரி காஸ்குகள் அழிவினால் போர்பார்ன் காஸ்குகளுக்கு மாற்றி வாழ்க்கையைத்தொடர்ந்ததாம் இந்த சரக்கு.

காஸ்க் என்றால் என்ன?

காஸ்க் என்றால் மர பேரல்!

அடுத்த 20 வருசம் முடிந்து 1890 ல் எடுக்கப்பட்டு 10 வருடங்களுக்குமுன் வெளியிடப்பட்டது!!  ஹிஸ்ட்ரி பயங்கரமா இருக்கே!.

8.ஜானிவாக்கர் ஊதா லேபிள்! 100 ஆண்டு புட்டி!

$3,500 MSRP

9.க்லென்லிவெட் செல்லார் கலெக்சன் 1964

$2000

என்ன நண்பர்களே!! ஒவ்வொரு பாட்டிலும் எவ்வளவு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு உள்ளது பார்த்தீர்களா?

நமக்கு இதெல்லாம் சரிவராது!

சீ! சீ! இந்த சரக்கெல்லால் புளிக்கும்!!

நமக்கு உகந்தது நாட்டுச்சரக்குதான்! சும்மா ”நச்”ன்னு இருக்கும்!

பி.கு:பொருள் விளக்கம்!

1.ஷெர்ரி காஸ்க்: ஷெர்ரி மர பேரல்கள் கீழே படம்:

 

2. போர்பான் (Bourbon)

அமெரிக்க விஸ்கி, சோளத்திலிருந்து வடிக்கப்படுவது, 18ம் நூற்றாண்டில் போர்பான் கவுண்டி, கெண்டகியில் தொடங்கப்பட்டது! 

3சிங்கிள் மால்ட் விஸ்கி: ஒரே இடத்தில் வடிகலன் பானையில் மால்ட் பார்லியில் மட்டும் உபயோகித்து செய்யப்பட்டது! ஓக் மர பேரல்களில்தான் அடைக்கப்பட்டது!

சில சுட்டிகள்: single malt whiskypot still,malted barley

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory