Sunday, 8 March 2009

நீங்க முட்டிக்குளங்கரையா?கலாய்க்கிறீங்களா?

பழமைபேசி, தமிழ்பிரியன்,வேந்தன் அரசு இன்னும் பல பதிவர்கள் என்னிடம் என் முந்தைய பதிவில் என்னைக் கலாய்க்கவும் செய்தார்கள்!! கேள்விகளும் கேட்டார்கள்!!! எனக்கு இரண்டும் ரொம்ப சந்தோசம்தான்!!

என் முந்தைய பதிவில் முழங்கையில் குழந்தைகளுக்கு அடிபட்டால் என்ன செய்யக்கூடாது என்று எழுதியிருந்தேன்.அதாவது எண்ணை போட்டு உருவக்கூடாது, எடுத்துவத்துக்கட்டுகிறேன் என்று செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லியிருந்தேன்!

அதனைப்படிக்க வேண்டுமாயின்:குழந்தைகளுக்கு முழங்கையில்........

அதற்கு பலவிதமான பதில்கள் வந்திருந்தன. மேலும் விபரங்களும் கேட்டிருந்தனர்.

மருத்துவக்கட்டுரைகள் படிக்கப்படுவதே பெரிய விசயம். அதில் படித்து நிறையக்கேள்விகள் கேட்டது உண்மையில் எனக்கு சந்தோசம்!!சில சந்தேகங்களைப் பார்ப்போம். அதற்கு நான் தந்த பதில்களும்!

நான் அந்தப்பதிவில் குழந்தைகளுக்கு முழங்கையில் எலும்பு அடிபட்டு இருந்தால் உருவக்கூடாதுன்னு போடுவதற்கு பதிலா ”உறுவி”என்று போட்டு விட்டேன்! விடுவாங்களா மக்கள்?

வேந்தன் அரசு தாக்குதலை ஆரம்பித்தார்:அவர் கேட்ட கேள்வி கீழே:

1.வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side

உறுவினா என்னானு சொல்லுங்கோ ?

திரு. வேந்தன் அரசுக்கு நான் தந்த பதில்

1.1   உறுவி (உருவி) என்றால் இழுத்து தேய்த்து விடுதல்!!
தெரியாமத்தானா?  நம்மல வச்சு காமெடி பண்ணீடாதீங்க!!!இஃகி! இஃகி!

மேலே என் பதிலைப் படித்தீர்கள்தானே? தவறுதலாப் போட்டத அவர் நாசூக்கா சுட்டிக்காட்டி விட்டார்!!!

கொஞ்சம் அன்பா இஃகி! இஃகி! ன்னு சிரிப்பை மேலே உள்ள பதிலில் முடிவில் கொடுத்தேன் பாருங்க. அவர் அதையும் விடவில்லை!!கீழே அவர் என் கேள்விக்கு கொடுத்த பதிலைப்பாருங்க!

வேந்தன் அரசுவின் பதில்:

2.  வேந்தன் அரசு:என்ன இது ப்ழமை பேசி போல சிரிக்கிறீங்க.
எனக்கு உருவி என்றால் தெரியும். உறுவி என் புலி உறுமுகிற மாதிரி ஏதோ என்னவோ என திகைத்தேன்
நீங்க எலும்பு மருத்துவரா அல்லது  முட்டிக்குளங்கரையா?

செமத்தியான கேள்வி கேட்டாரு வேந்தன்!! சிரிப்பு பழமை பேசி மாதிரி என்றார். அப்புறம் உறுவின்னா புலி உறுமுவது மாதிரியான்னு நம்மை பின்ன ஆரம்பித்தார்..    அதோட ”நீங்க எலும்பு மருத்துவரா? இல்லை முட்டிக்குளங்கரையா?”ன்னு ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்!!

உண்மையிலேயே முட்டிகுளங்கரை நான் கேள்விப்பட்டதே இல்லை!!! அதனால் நம்ம கேக்கணும்ல முட்டிக்குளங்கரைன்னா என்னான்னு?

கீழே நான் கேட்ட கேள்வி:

  2.1நான் திரு.வேந்தன்அரசுவிடம்

நல்லாக் கேட்டீங்க நண்பரே!!!
புலியோன்னு பயந்துட்டீங்க போல.
சே! காலையிலேயே உம்மை பயமுறுத்திவிட்டேனே!!!
வேந்தன் அரசு!!!

முட்டிக்குளங்கரை?
புரியலையே?
 

இந்த நேரம் பரமேஸ்வரி அவர்கள்  தகவல் இப்பொதுதான் தெரியும் இனிமே செய்யமாட்டேன்னாங்க..நன்றி!!!

3.பரமேஸ்வரி   ஓ உறுவக் கூடாதா? இப்பொழுதுதான் தெரியும்.. இனிமேல் செய்ய மாட்டேன். இதற்கு முன்பும் யாருக்கும் செயதது இல்லை  :-))

நம்ம திரு.வேந்தன் ஐயா விளக்கமா பதில் குடுத்தார். அவர் பதில் கீழே:

4.வேந்தன் அரசு:

”நீங்க எலும்பு மருத்துவரா அல்லது  முட்டிக்குளங்கரையா?/”””

முட்டிக்குளங்கரை?
புரியலையே?

கோயமுத்தூரில் தெலுங்குபாளையம் என்ற ஊரில் எலும்பு முறிவு மருத்துவமனை இருக்கு. அது மரபுமுறை மருத்துவம்.
இங்கே கொடுக்கப்படும் எண்ணைக்கு அது பெயர்

வேந்தன் ஐயா நல்லா விளக்கமா சொன்னாரு!! ஊடால நம்ம பழமைபேசியார் வந்துட்டார்! அவர் கொடுத்த பதில் கீழே:

5.பழமை பேசி:முட்டிக்குளங்கரை, புத்தூர், தெலுங்கு பாளையம் எல்லாம் ஒரே பொருள்தானுங்க ஐயா!

நன்றி சொல்லுவோம் பழமைக்கு!!

தமிழ்ப்பிரியனும் கொஞ்சம் விளக்கம் தந்தாரு! அதோட சில கேள்விகளும் சந்தேகங்களும் கேட்டு இருக்கார்....கீழே அவர் கேட்டது:

6.தமிழ்ப்பிரியன்

எங்க ஊர் கோபிசெட்டிபாளையம் பக்கம் சிங்கிரிபாளையம் என்ற ஒரு ஊர் உண்டு.  எலும்பு முறிவுக்குப் பிரபலம்.  அங்கே இது போன்ற வைத்தியம்தான் பிரபலம்.  நாங்க எல்லாம் சின்ன வயசுல சண்டை போடும்போது 'என்ன? சிங்கிரிபாளையம் போகனுமா?' அப்படின்னு பஞ்ச் டயலாக் அடிச்சிருக்கோம்.  :-) 

இது போன்ற மரபு முறை வைத்தியங்கள் தவறென்று பலருக்கும் (என் உள்பட) தெரியாது.  உங்கள் தகவலுக்கு நன்றி.  ஆனால் இது போன்ற முறையில் பல்வேறு மக்கள் குணம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. 

விபரங்கள் கொடுப்பதாக சொல்லி உள்ளீர்கள்.  காத்திருக்கிறோம். 

நன்றி,
நடராஜ கிருஷ்ணன். 

இதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்ல வேண்டும்!

முக்கியமா இந்த குழந்தைகள் முட்டி எலும்பு பிரச்சினை சொன்ன காரணம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதால்தான்!!!

கண் முன்னாடி பார்க்கிறேன்!!! குழந்தைகள் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு வருவதை!

முழங்கை மடக்கவரவில்லை என்றால் என்ன செய்வது சொல்லுங்க.

நேற்று ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார்கள்!! வலது கை சூம்பி சிறுத்துப்போய் விரல் எல்லாம் மடக்கி நீட்ட முடியவில்லை.. 

முறையாக செய்யப்படாத சிகிச்சை! அதாவது தேவையில்லாமல் இறுக்கிக் கையைக் கட்டிவிட்டார்கள்! கை சூம்பி விட்டது!

அந்த வைத்தியரே சரி செய்து இருக்கலாமே? ஏன் செய்யவில்லை! செய்யத்தெரியாது!

என்ன எதனால் இப்படி கை ஆகிவிட்டது என்றால் அதன் காரணம் அவருக்குத் தெரியாது!

காய்ச்சலுக்கு மந்திரிப்பார்கள் ஊர்களில்!! சரியாகும்!! அதுவே மூளைக் காய்ச்சலாக இருந்தால் சரியாகுமா?

காய்ச்சல் சாதாரணமாக வைரஸால் வருவதால் தானே சரியாகும் சந்தர்ப்பம் அதிகம்.

அதே வைரஸ் மூளையைத்தாக்கினால் மூளைக்காய்ச்சல்.

மூளைக்காய்ச்சல் சாதாரணமாக வருவதில்லை!

அதனால்தான் மந்திரிக்கிறவரும் தப்பிக்கிறார்,சும்மா இந்த மருந்தைக் குடுங்க என்று அலட்சியமாக சிகிச்சை செய்பவர்களும் சம்பாதிக்க முடியுது!!!

இப்ப நாம் சாதாரணமா குழந்தைகளை எல்லோரும் குழந்தை வைத்தியரிடம்தான் கொண்டு செல்கிறார்கள்!!

அதேபோல்தான் வயதானவர்கள் பரவாயில்லை. ஏதோ  கட்டுக் கட்டினாங்க பரவாயில்லை என்று விட்டுவிடலாம்!

ஏனெனில் எலும்பு புதிதாக வளரப்போவது இல்லை! பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்வார்கள்! குழந்தைகள் அப்படியல்ல,

எலும்பு வேகமாக வளர்ந்து ஊனத்தைக் காட்டிக்கொடுத்து எதிர்காலத்தை கெடுத்துவிடும்.

அதனால்தான் இதை எழுதினேன்!!!

முடிவுரை தற்போதைக்கு:: குழந்தைகளுக்கு முழங்கை எலும்பு உடைந்தால் உருவி விடாதீர்கள்!! எண்ணை போட்டு உருவ வேண்டாம். இறுக்கமாகக் கட்டவேண்டாம்!!நுண் கதிர் படம் எடுக்காமல் எடுத்துவைத்துக் கட்டுகிறேனஎன்று எதுவும் செய்ய வேண்டாம்!!!

22 comments:

நட்புடன் ஜமால் said...

\\முட்டிக்குளங்கரை\\

அறியாத வார்த்தை.

முடிவுரை நல்ல அறிவுரை.

தேவன் மாயம் said...

\\முட்டிக்குளங்கரை\\

அறியாத வார்த்தை.

முடிவுரை நல்ல அறிவுரை.

///

சரியா ஜமால்!!

தேவன் மாயம் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

///

நன்றி!!
அப்பாவித்தமிழன்!!

குடந்தை அன்புமணி said...

புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டோம். நாங்கள்லாம் புத்தூருக்கு போகணுமா? என்போம்! புத்தூருதான் எலும்பு கட்டுபோடறதுல பிரபலம்!

ராஜ நடராஜன் said...

மீண்டும் வருகிறேன்.

அப்துல்மாலிக் said...

மாருத்துவரே நல்ல அறிவுரை
மெய்யாலுமே நீங்கள் பதிவு எழுதுவது பற்றி ரொம்ப சந்தோஷம், ஏனென்றால் மருத்துவர்களிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் ரொம்ப பந்தா பண்ணுராங்க‌

அ.மு.செய்யது said...

அசத்தல் பதிவு தேவா..

நைஸ் அட்வைஸ்..ஃப்ரீயா..!!!!

அப்துல்மாலிக் said...

//வலது கை சூம்பி சிறுத்துப்போய் விரல் எல்லாம் மடக்கி நீட்ட முடியவில்லை.. முறையாக செய்யப்படாத சிகிச்சை! அதாவது தேவையில்லாமல் இறுக்கிக் கையைக் கட்டிவிட்டார்கள்! கை சூம்பி விட்டது! அந்த வைத்தியரே சரி செய்து இருக்கலாமே? ஏன் செய்யவில்லை! செய்யத்தெரியாது!//

சரியான தகவல்.. எவ்வளவு குழந்தைகளின் எதிர்காலம் அரைகுறை மருத்துவர்களிடம்

சி தயாளன் said...

முட்டிக்குளங்கரையா..?

ஹாஹாஹா :-)

ஆதவா said...

பேசாம நீங்க மருத்துவ கேள்வி பதில் ஆரம்பிக்கலாம்.... கேட்கிறவங்க நிறைய பேர் இருக்காங்கள்ல....

அருமையான பதிவு!!

தேவன் மாயம் said...

\முட்டிக்குளங்கரை\\

அறியாத வார்த்தை.

முடிவுரை நல்ல அறிவுரை.///

எனக்கும் இது புது சொல்

தேவன் மாயம் said...

புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டோம். நாங்கள்லாம் புத்தூருக்கு போகணுமா? என்போம்! புத்தூருதான் எலும்பு கட்டுபோடறதுல பிரபலம்!///

உண்மைதான்!!

தேவன் மாயம் said...

மீண்டும் வருகிறேன்//

வாங்க ராஜநடராஜன்

தேவன் மாயம் said...

மாருத்துவரே நல்ல அறிவுரை
மெய்யாலுமே நீங்கள் பதிவு எழுதுவது பற்றி ரொம்ப சந்தோஷம், ஏனென்றால் மருத்துவர்களிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் ரொம்ப பந்தா பண்ணுராங்க‌//

உங்க சந்தேகத்தை கேளுங்கள் சொல்கிறேன்

தேவன் மாயம் said...

அசத்தல் பதிவு தேவா..

நைஸ் அட்வைஸ்..ஃப்ரீயா..!!!!///


நன்றி!!!செய்யது

தேவன் மாயம் said...

//வலது கை சூம்பி சிறுத்துப்போய் விரல் எல்லாம் மடக்கி நீட்ட முடியவில்லை.. முறையாக செய்யப்படாத சிகிச்சை! அதாவது தேவையில்லாமல் இறுக்கிக் கையைக் கட்டிவிட்டார்கள்! கை சூம்பி விட்டது! அந்த வைத்தியரே சரி செய்து இருக்கலாமே? ஏன் செய்யவில்லை! செய்யத்தெரியாது!//

சரியான தகவல்.. எவ்வளவு குழந்தைகளின் எதிர்காலம் அரைகுறை மருத்துவர்களிடம்///

உண்மைதான் அபு!

தேவன் மாயம் said...

முட்டிக்குளங்கரையா..?

ஹாஹாஹா :-)//

டொன் லீ !!
போட்டோ அருமை

தேவன் மாயம் said...

பேசாம நீங்க மருத்துவ கேள்வி பதில் ஆரம்பிக்கலாம்.... கேட்கிறவங்க நிறைய பேர் இருக்காங்கள்ல....

அருமையான பதிவு!!//

செய்யலாம்தான்!!

kuma36 said...

ஆஹா இப்படியும் பதிவு போடலாமே!!

சூப்பரா பயனுல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி சார்

ஹேமா said...

தேவா,நல்ல ஒரு கருத்து வெளிப்பாடு.

Arasi Raj said...

காலை வணக்கம்.

நேரம் கிடைக்கம் போது வாங்க

http://sandaikozhi.blogspot.com/2009/03/1.html

priyamudanprabu said...

இதுல இம்புட்டு விசயம் நடந்திருக்கா???!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory