Wednesday, 31 December 2008

தமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை


தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத்தேடி
அலையும் போது
உன்னைக்கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக்கண்டோம்!!!

தரணித்தமிழர்
ஒன்றாய்க்கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக்கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம் 
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
பலர்
வழங்கககண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!

                          இந்த புத்தாண்டில் 
                          தமிழ் மண நிர்வாகிகளுக்கும் 
                          தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
                           தமிழ் மணத்தை
                          மேலும் சிறப்பாக
                           வழிநடத்திச்செல்ல
                          வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

                           தேவா.....

வேண்டும்!! வேண்டும்!! வேண்டும்!!!


            அனைவருக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள்!!!! இந்த வார்த்தையையும்        
             எழுத்துக்களையும் 1000ம் 1000ம் தடவை பார்த்து இருப்பீங்க!!!

            நடு இரவில் உதித்த இந்த புத்தாண்டு பல விடியல்களைத்தர வேண்டும்!!!

            குறிப்பாக!!!..................
          
            இலங்கைத்தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும்!!!

            மலேஷியத்தமிழருக்கு உரிமை வேண்டும்!!!

            அனைத்து வெளிநாட்டுத்தமிழர் வாழ்விலும் வளம் வேண்டும்!!!

            எட்டுத்திக்கும் சென்ற தமிழர் மொழி வளர்க்க வேண்டும்!!!

            தமிழ் அறிஞர் வாழ்வு சிறக்க வேண்டும்!!!

            தமிழர் பண்பாடு தழைக்க வேண்டும்!!!

            தமிழ் மணம் தழத்து ஓங்க வேண்டும்!!!

            தமிழ் மணக் கவிஞர்கள் சிறக்க வேண்டும்!!

            மொக்கைப் பதிவர்கள் நிறைய வேண்டும்!!!

            பகுத்தறிவுச் சிந்தனை பெருக வேண்டும்!!!  

            இறுதியாக...............................

            தமிழ்நாட்டுத்தமிழர்  ............................

            தமிழ் பேச வேண்டும்!!!........................

           ( எல்லாம் நடக்கும்!!!.......கடைசியில் சொன்னது

             மட்டும் நடக்காது என்கிறீர்களா??....................)

                                                   தேவா.

Tuesday, 30 December 2008

புத்தாண்டு கடி!!!!!


        ல்லோரும் புத்தாண்டை எப்படிக்கொண்டாடுவது என்று பலவிதமான ப்ளான்களில் இருப்பிங்க!!!புத்தாண்டுக்கு எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவது....எப்படி ப்ளாகில் சொல்வதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பிங்க!!!
        ப்ளாக் மன்னர்கள் எப்படியேல்லாம் புதுமையா வாழ்த்துச்சொல்லப்போறாங்கன்னு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்!
        நானும் ஏதாவது எழுதியாக வேண்டுமே!!!!.................

        சரி, மக்களைக் கடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு!!! கொஞ்சமா கடிச்சா என்ன, செம கடி போட்டா என்ன? வந்து உதைக்கவா போறீங்க!!!
        ஓங்கி மூஞ்சி மேல குத்துனாத்தான்யா இவன் அடங்குவான்னு கடுப்பா இருக்குமே............இருக்கும்...........இருந்தாகனும்!!!!! அப்படி இருந்தா........... இந்த இடுகைக்கு மேல கட்டை விரல் மேல தூக்கி இருக்கும் அதுல ஒரு குத்து குத்துஙக...............மத்தபடி வீரத்தை எல்லாம் வீட்டுல காட்டாம ரெண்டு நாளைக்கு நல்ல புள்ளையா இருங்க!!!!
         அயல் நாட்டு மக்கள் போன் மேல போன் பொட்டு வீட்டுல பாசத்தைப்பொழிஞ்சு தள்ளுங்க!!!!!
         உன்னையப் பிரிஞ்சு என்ன புது வருஷம்?......னு பீலிங்ச அள்ளி உடுங்க!!!
         புட்டி மக்கள் .... புது வருஷம்.... நண்பர்கள்லாம் விடமாட்டேங்கிறாங்க !!!லிமிட்டத் தாண்ட மாட்டேன்னோ........இல்ல போட்டதுக்கு அப்புறமோ சமாதானப்படுத்துங்க!!!!
        இதுக்கு மேல வேணாம்....................

                                         இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

                                                                      தேவா.........

Monday, 29 December 2008

அமெரிக்க கொடியும்!! இந்தியாவும்!!!


எல்லோருக்கும் வணக்கம்!!
                என்னடா இவன் எப்பப் பார்த்தாலும் அமெரிக்கா பத்தியே எழுதுகிறான்? அமெரிக்கா மேல் பாசமா.......... இல்லை! .........கோபமா? ..............என்று    நினைக்கலாம்!!!!!
                இது இரண்டையும்விட நல்லா ஏதாவது எழுதுவமேன்னு யோசித்தா சில விஷயங்க்ள் ஞாபகம் வரும்!!! அதில் ஒன்னுதான் அமெரிக்க கொடி!!!உலகின் மிகச்சிறந்த கொடி எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க?................ என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க!!!! 
                ஏன்னு காரணம் உங்களுக்கே தெரியும்??..
                 அமெரிக்கக் கொடியைப்பார்க்கும் பொதெல்லாம்  ஒரு கேள்வி என்னைக்குடையும்!!!
                  எம்.ஜி.ஆர் ப்ருக்ளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போது பார்த்தீர்கள் என்றால் அந்த பெரிய மருத்துவமனையின் மேல் அமெரிக்கக்கொடி பறக்கும் !!! அதே போலஇன்னொரு  பெரிய கட்டிடத்தில் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 30 அடி உயரம் தலைகீழாக அமெரிக்க கொடி தொங்க விடப்பட்டு இருக்கும்!
                  அதே சமயம் இந்தியாவில் கடந்த சில பல வருடங்களாக தேசியக்கொடி அரிதாகிவிட்டது! 
                              தியேட்டர்களில் தேசியகீதம் போடுவது இல்லை!! ..
                              அரசு கட்டிடங்களில் கூட தேசியக்கொடிகள் காணோம்!!!
                               சுதந்திர தினம், குடியரசுதினம் மட்டும் கொடி ஏத்துகிறோம்!!
                               அன்னைக்கும் நெறய பேர் ,.....சார்!! செகப்பு மேல வருமா?  ...
                               இல்லை!....பச்சை மேல வருமா?...ன்னு பெரிய சந்தேகம் வேறு கேப்பானுங்க!!!!!!!என்ன காரணம்?
                              இந்திய இளைஞர்கள் அமெரிக்க கொடி போட்ட தொப்பி, கைக்குட்டை, கைப்பை, பனியன்கள், சட்டைகளை ஆர்வத்துடன் உபயொகிப்பதை வருத்தத்துடன் காண்கிறேன்!!!!...........
                 இந்தியக்கொடியை  கொஞ்ச நஞ்சம் உபயோகிப்பவர் மீதும் பத்திரிக்கைகளில் தவறாக உபயோகித்ததாக வழ்க்குகள்!!!..........................எங்கே இந்தியக்கொடி உபயோகித்தாலே தண்டனை கிடைக்குமோ என்று பயப்பட வேண்டியுள்ளது!!!!! 
                 என்னிடம் வந்த ஒரு பிரமுகர்” நாந்தான் (ஒருவரை குறிப்பிட்டு), அவர் மேல் தேசியகொடியை தவறாக தொங்கவிட்டார் என்று கேஸ் போட்டேன் .....பேப்பர்ல போட்டிருந்தாங்க, போனவாரம்!!!!என்றார்,பெருமையுடன்!!!
                 இது பெருமையா??என்ன ?...................................................................................
                                                    
                  முதலில் பயன்படுத்தப்பாருங்கப்பா!!!  பிறகு தவறை உரியவரிடம் சென்று உரிமையுடன் சொல்லி திருத்தலாம்!!!! 

                    என்றும் தாங்கமுடியாத தேசப்பற்றுடன்!!!

                    தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!.......

Sunday, 28 December 2008

பிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்!


                        எல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்! 
                        அதாவது உடல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தமிழகத்தில் சரியான மரியாதை தருவதில்லை என்றும், சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார்!!
                        அதைப்படித்ததில் இருந்து அதைப்பற்றி அவருக்கு விள்க்க வேண்டிய கடமை நம்மில் யாவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தேன்.
                        அதன் விளைவாகவே இந்த இடுகை!!
                        அவருடைய உணர்வுகள் உண்மையனவைதான்!! ஏறக்குறைய ஊன்முற்றோர் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது உண்மைதான்!!
                        தற்போது உள்ள சூழ்நிலையை நான் கூறுகிறேன்!!!
                        அவரை மறுத்தோ, அவர் சொன்னது தவறு என்றோ நான் கூற வரவில்லை!!
                        நான் இன்று காலை 9.00 மணிக்கு உடல் குறைபாடு சான்றிதழ் வழங்கும் முகாமுக்குச் சென்றேன்!! 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன்! தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும்! அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும்!! முகாம் மாதம் இருமுறை சுழல் முறையில் குறிப்பிட்ட ஊர்களில் நடக்கும்.
                         இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அங்கேயே , மூன்று சக்கர வண்டிகள்,ஊன்றுகோல்,செயற்கைக்கால்கள்(எனக்கே ஆச்சரியம்) பதியப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. பயணர்கள் உடனடியாக ஓட்டியும் செல்கின்றனர்.
                         இத்தனைக்கும் கொஞ்சம் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் கூட்டிப்போட்டு உதவித்தொகை 400 ரூபாய் மாதம் உடனடியாக வழன்குகிறார்கள்!! இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ ,  ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை!! அவர்களும் முகாமில் கடைசிவரை அமர்ந்து இருப்பார்கள்!
இதில் யாருக்கும் எந்தப்பணமும் தர வேண்டியது இல்லை!!! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
                         மற்றபடி முன்பு போல் அலைய வேண்டியதோ பணம் தர வேண்டியதோ தற்போது இல்லை!!
                         இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!!
                         தேவா........

Friday, 26 December 2008

அமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்!!!                        சமீபத்தில் ஒரு மெயிலில்(கொஞ்சம் பழைய மெயில்தான்) படித்தேன்! ஒரு நார்வே பெண்மணி சுமார் 10-15 வருடங்களுக்கு முன், பணம் இல்லாமல் ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது-ஒரு உயரமான வாலிபர் அவர் நிலை அறிந்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.
                      
                        நீண்ட நாட்கள் கழித்து அந்தப்பெண் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது அதே நபரை தொலைக்காட்சியில் பார்த்துப்பரவசம் அடைந்தார். நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆறிந்து தன் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போன் செய்து இந்த நிகழ்ச்சியைக்க்கூறி அவரை ஆதரிக்க வேண்டினார்!!!
                        உங்கள் அனைவருக்கும் தெரியும் !!! அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம்! ஆனால் அவருடைய மனிதத்தன்மை இந்த நிகழ்வில் போற்றத்தகுந்தது!!
                      
                      நான்கு நாட்களுக்கு முன் ஒரு அரசியல் கோஷ்டி நிதி கேட்டு என்னிடம் வந்தனர்! அவர்கள் கட்சித்தலைவர் தலைநகர் வருவதாகவும் ,பெரிய அளவில் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்!!

                        மாவட்டத்தலைவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவரை இதுவரைய  நான் பார்த்ததில்லை அவருடைய பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்!பெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டது! ( அவர் என் சக மருத்துவரைப்பற்றி அவதூறான போஸ்டர் போட்டவர்) .
                                                                      ஓ!!! நீங்களா அது?.... போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினீர்களே?..... என்று கேட்டேன்!! இப்படிக்கேட்டவுடன் அவர் முகம் சுருங்கி விட்டது!!
                        
                        நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்!  ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!! ஆனால்.. சாரி, தற்போது என்னால் பணம் தர முடியாது என்று கூறி ஒரு வழியாக அனுப்பி விட்டேன்!!!

                         வெளியே செல்லும் பொது பெரிய பெரிய விளம்பரங்கள் கண்ணில் பட்டன. 
                         அதில் எனக்குத்தெரிந்த அரசியல் வாதிகள் கை கூப்பிக்கொண்டு இருந்தனர். ஆச்சரியம்! மிக குறுகிய காலத்தில் நிறைய பேர் கட்சி மாறி விட்டனர்!! 
                       அதில் இருந்த இன்னொரு நபர் என்னிடம் அவர் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்கி விட்டு ஏமாற்றியவர்! அவருடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தவர் என் இன்னொரு நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டி போலீசால் தேடி
மாவட்டம் மாவட்டமாக ஓடி ஒளிந்தவர்!!
                                                                                     இப்படி போஸ்டர்களைக்கண்டு மனம் வெறுத்துப்போனேன்!
                                             புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்!!!
                                                                             இது புதியவர்கள்மீது உள்ள நம்பிக்கையைத் தகர்க்கிறது!!! தமிழ்நாட்டு அரசியல் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது!!!! 
                                         தமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்!
                                புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா? 
                                 வலைஞர்கள் தங்கள் கருத்தை எழுதலாமே!!!

Thursday, 25 December 2008

கொஞ்சம் தேனீர்-3மொழி!!!

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப் 
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!

விழி!!!

உன்னுடன் உறவாட
தினம் என் 
விழிகள் ஏங்கினாலும்,
என் கண்ணீர்த்துளிகள்
ஜன்னல்  கம்பிகளோடு
தான்!!!

தீ!!!

முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?

நேரமாகிப்போச்சுதான்!

ஆனா வந்திட்டு

சும்மா போகலாமா!

ஒரு வாய் தேத்தண்ணி

சாப்பிட்டுப்போங்க!!!

தேவா!!!

உன் அப்பாவைப் பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினார்.
உன்

Wednesday, 24 December 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!


                    அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!!
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் ஒரு பொதுப்பண்டிகையாக அனத்து மதத்தாரும் கொண்டடுவதை அறிந்தேன்!
இந்துக்களும் விருந்து ,விழா என்று கொண்டாடுகிறார்கள் என்பது மக்களின் பரந்த மனப்பான்மையைக் காடுகிறது என்றே எடுத்துக்கொள்ளவெண்டியுள்ள்து.
                    இந்தியாவிலும் தீபாவளி போன்ற பண்டிகைகள் எல்லா மத சிறுவர்களுக்கும் பொதுவாக ஒன்றாகவே இருப்பதும் நாம் அறிந்ததே!
                    இந்த நன்நாளில் எல்லா மதத்தினரிடமும் அன்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் பொங்க வாழ்த்துக்கள்!!!!!
                                                                தேவா...

Tuesday, 23 December 2008

அமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்


                     ஒரு சாயங்காலம்!!!!!
நண்பருடைய அப்பா, மகனைப்பார்த்துவிட்டு வர வெளிநாடு சென்றிருந்தவர், இந்தியா திரும்பி விட்டார் என்று கேள்விப்பட்டு பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் உயர் படிப்பு படித்தவர். 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்!கடந்த முறை வந்திருந்தபோது குழந்தைகளை ஊட்டி பள்ளியில் சேர்க்க விரும்பினார். என்ன காரணமோ சேர்க்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஊட்டி பள்ளியில் சேர்க்கப்பார்ப்பார். சேர்க்காமல் போய் விடுவார்.அவருடைய பையன்கள் இருவர். இருவரும் இந்த இழு பறியில்  உயர்நிலைப்ப்ள்ளி லெவலுக்குப்ப்போய் விட்டார்கள்! 

                     மேலும் அவரும் இந்தியா வந்து விடவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேலை விசாரிப்பார். சம்பளம் குறைவு என்று போய் விடுவார்.

                     சரி அவர் அப்பாவைப்பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன்!.
வீடு நல்ல பெரிய வீடு!!
                      
                     என்ன அப்பச்சி! எப்படி இருக்கீங்க? வெளிநாடு போகும் போது பார்த்தது! கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி!!!) எங்கே? என்றவாறு உள்ளே நுழைந்தேன்!!
                     வரவேற்று பேசிக்கொண்டு இருந்தார்!! வெளிநாட்டில் குளிர் அதிகம்,
கோட்டு இல்லாம இருக்க முடியல என்று அவர் அங்கு இருந்தபொது உபயோகித்த கோட்டையெல்லாம் கொண்டு வந்து காண்பித்தார்.
                      அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது கேட்டேன். எப்ப அவர்கள் இந்தியா வருகிறார்கள்? என்று!!
                       அதுவரை நல்லா பேசிக்கிட்டு இருந்தவர் சட்டுன்னு டல் ஆயிட்டார். அதையேன் தம்பி கேக்கிறே, பேரன்க ரெண்டு பேரும் இதப்பத்தி பேச்ச எடுத்தாலே எந்திருச்சுப் போயிடுறானுங்க! முகம் குடுத்துப்பேச மாட்டேன்கிறானுங்க!!
                       அதவிடவும் ஒருநாள் மாடியில் ஒரே சத்தம்!! நான் மேல ஏறிப்போய்
பார்த்தால் அவன் கூடப்படிக்குற பையன்களும் பொண்ணுங்களும் பாட்டைப் போட்டுக்கொண்டு ஒரே ஆட்டம்!!!
                       ஆடிக்கிட்டு இருந்தவனுங்க என்னையப்பாத்ததும் ஆடிக்கிட்டு இருந்தத விட்டுட்டு என் கிட்ட வந்தானுங்க. வந்து பயங்கரமா திட்டிப்புட்டானுங்க. உன்னைய யாரு பெர்மிஷன் இல்லாம மேல வரச்சொன்னது? உனக்கு டீஸன்ஸியே இல்லயேன்னு சொல்லி” நீ இதையெல்லாம் கேக்கக்கூடாது, கீழே போ”ன்னு கீழே அனுப்பிட்டனுங்க!
                       அப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு? அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு? வீ டோண்ட் லைக் இண்டியா!! நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே! வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க!
                       ஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையா?ன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை! தாத்தா! வீ ஆர் அமெரிக்கன் !”னு ஒரே போடா போட்டுட்டானுங்க!!!!”
                      ” அப்புறம் நான் என்னத்தை சொல்லுறது! ஏதோ வந்தா வரட்டும்பா!
மகன் இருக்கிறவரை அப்பப்ப வருவாங்க,மகனுக்குப்பிறகு பேரன்கள்ளாம் வர மாட்டாங்கப்பா”என்று மிகுந்த வருத்தத்துடன் முடித்துக்கொண்டார்!!!
                       மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது!
                       நம்ம பதிவாளர்கள் நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்
அவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்!!! 
                        

 
                     

Saturday, 20 December 2008

கொஞ்சம் தேநீர் -2

மௌனங்கள்!!கண்ணே!
உன் உதடுகளின்
மௌனத்தில்
என் உள்ளமே
ஊனமாகிவிடுகிறது!

உன் மௌன ஊசிகள்
என் இதயத்தைக் குத்தும்போது
வழிகிறது என் உயிர்!!

உன் பேச்சைக்கேட்க
என் கண்களும்
ஏங்குகின்றன,
உப்புக்கரிக்கிறது
என் உதடுகளில்!

உன் பேச்சை 
சுவாசித்த என் நெஞ்சம்
காற்றை 
சுவாசிக்க மறுக்கிறது!!

உன் மௌனங்கள் 
தாக்கும் ஒவ்வொரு முறையும்
நான் இறக்கிறேன் 
உயிருடனேயே!

 இரவு சாப்பிட்டீங்களா?
 
பதிவு போட தூக்கம் வராம

இருக்க கொஞ்சம் தேநீர்

குடிங்க!!!

தேவா...

Thursday, 18 December 2008

கொஞ்சம் தேனீர்!!!

கண்ணீர்!!!!


உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும் 
உன்
கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில் 
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!


தடங்கள்!!!


நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!


காலை டீயுடன் லைட்டான
ரெண்டு கவிதையும்
சேர்த்துப்பருகுங்கள்!!!

தேவா....
உன் கண்களிலிருந்து          

Monday, 15 December 2008

என் கனவுகள்!!!


            நிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்! இளம்வயதில் 

அனைவருக்கும்  கனவுகள் பல விதமாக தொடர்ந்து வரும்!

            பறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்!

எனக்கு வந்த இரண்டு கனவுகளைப் பற்றி இங்கு சொல்லலாம் என 

நினைக்கிறேன்.

            ஒன்று என்னுடைய 10 - 15 வயது பருவத்தில் வந்தது.   நான் மெதுவாகப் 

பறப்பது போல இருக்கும். ரொம்ப மெதுவாக!!

           எனக்கு முன் தூரத்தில் நிலவு இருக்கும்! நிலவின் ஒளியில் நான் பறந்து

 கொண்டு இருப்பேன்.
  
           நிலவுக்கும் எனக்கும் இடையில் பின்னப்பட்ட வலை போல வானம் 

முழுக்க இருக்கும்! அந்த வலைகளுக்குள் மிகக்கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக நான் 

செல்வது போல வரும்! இந்தக்கனவு எனக்கு நிறைய முறை வந்து உள்ளது!

           ஆனால் ஒருமுறை கூட நான் வலையை தாண்டி போனதேயில்லை! 

நிலவையும் தொட்டதில்லை!!!!

            அந்த வயதுக்குப்பிறகு அந்த்க்கனவு வரவில்லை.

            இன்னொரு கனவு -- நானும் ,என் தம்பி தங்கையும் வாசலில் 

விளையாடிக்கொண்டு இருக்கிறோம். திடீரென இருட்டி விடுகிறது! என் 

தம்பிகளையும், தன்கையயும் உள்ளே கொண்டு வந்து விட்டு கதவைச்சாத்தி

விடுகிறேன். திரும்பிப்பார்த்தால் பின் கதவு திறந்து கிடக்கிறது!

            மறுபடியும் பின் கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் பக்கக் கதவு

திறந்து கிடக்கிறது!

            பிள்ளைகள் மறுபடி அது வழியாக வெளியே செல்லுகிறார்கள்! மறுபடி 

அவர்களை உள்ளே இழுத்துப்போட்டு கதவைச் சாத்துகிறேன். மறுபடி பார்த்தால்

இரண்டு கதவுகள், மூன்று, நான்கு என்று வீடு முழுவதும் நிறைய கதவுகள் 

திறந்து கிடக்கின்றன!! 

         கனவு முடிந்து விழிப்பு வரும் வரை ஒரே பயம்தான் !!!!

கனவுகள் ஏன் வருகின்றன?

     கனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம் 

என்கிறார்கள்!!!!

   
உலகின் பாலூட்டிகள் அனைத்தும் கனவு காண்பதாக சொல்கிறார்கள்!!!

   நம் வீட்டு நாய் கூட கனவு காணுதாம்!!!

 எப்படியோ நம்ம கலாம் கூட கனவு காணுங்கள் என்கிறார்!!!!

    மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவுதான் அமெரிக்காவில் ஒபாமா வடிவில்

நிறைவேறியதே!!!

      சரி அதுக்கும்  நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா?

எனக்குத்தெரியல!!! நீங்கதான் சொல்லுங்களேன்!!!!


Saturday, 13 December 2008

தற்கொலையும் தமிழ்க்கவியும்!!!!!


நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!! 

தொடர்ந்து பெண்களுடைய மனசைப்பத்தியே எழுதுற மாதிரி வருது!,

 பெண்கள், நான் அவர்களை குறை சொல்லியே  எழுதுவதாக எண்ண வேண்டாம் 

!!!!!மேல படிங்க! 

நான் 

கிளினிக்லெ உக்காந்திருந்தேன். ரெகுலரா வரும் ஒரு நோயாளி!! பெரிய 

தமிழ்க்கவியுடய பேர் உள்ளவங்க! புருஷ‌னுடன் தகராறு என்று அடிக்கடி வருவார்கள்!!

 ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன் அன்று நிலைமை முற்றிப்ப்போய் விட்டது போல‌  

கைல கெடச்ச மாத்திரைகளை அள்ளிப்போட்டு தற்கொலை முயற்சி!!!ரெண்டு நாள் 

சிகிச்சை செய்து ஆளை பிழைக்க வச்சாச்சு!! நல்லா உடல் தேறியவுடன் 

அந்தப்பெண்ணீடம் " ஏம்மா நல்லா படிச்ச நீங்கள்ளாம் இப்படி பண்ணலாமா?" என்று 

கேட்டேன். அதற்கு அவர் வீட்டுக்காரர் என்மேல சந்தேகப்படுறார்! தினம் ஒரே அடி 

உதை!!!இனிமே 

என்னால தாங்க முடியாதுன்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன்! என்றார்கள்!!!

    உனக்கு குழந்தை இருக்கு, உன்னைய கல்லுரிவரை படிக்கவச்சு  செலவு பண்ணி 

கல்யாணம் பண்ணிக்கொடுத்த அம்மா,அப்பா, பாசமான அண்ணன் தம்பியெல்லாம் 

இருக்காங்க!அவங்களையெல்லாம் ஒரு நிமிடத்தில் மறந்து விட்டாயே அம்மா! 

 புருஷன் முக்கியம்தான் அவன் சரியில்லை என்பதற்காக நீ ஏம்மா சாகணும்? 

புருஷனையும் தாண்டி வாழ்க்கை ஒன்று இருக்கும்மா!!! என்றேன்.என் அப்பா அம்மா    

வருவாங்க! அவங்க‌ வரும்போது ரொம்ப அன்பா இருக்கற‌ மாதரி நடிப்பாரு  அவங்க 

போனவுடனே ரொம்ப டார்ச்சர் பன்னுவார்!!!இவரோட இருக்கவே முடியாது என்று ஒரே 

அழுகை!

      எல்லாம் ஒகே! புருஷனைத் தவிர வாழ்க்கயே இல்லையா?ன்னு சொல்லி

பெண்கள் புருஷன் இல்லாம எவ்வளவோ சாதிக்கிறாங்க! நீ படிச்ச பெண்,உன்னால 

100 பேருக்கு படிப்பு சொல்லித்தர முடியும்! எவ்வளவோ பேருக்கு வாழ வழிகாட்ட 

முடியும், உங்க அப்பா,உடன் பிறந்தோர் உதவியோட எவ்வளவோ செய்யலாம்னு 

சொல்லி ஒரு கவிதையை காண்பித்தேன்!!!

      " தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி "புகழ் பெற்ற பாரதி 

கவிதை!!!

        மறு நாள் அவங்க அப்பா அம்மா எல்லாம் வந்தார்கள்!!!

"என்ன டாக்டர் பண்ணலாம்? வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு போறோம் " என்றார்கள்!!!!

சரியென்று நிறைய‌ சொல்லி அனுப்பிவைத்தேன். டாக்டர் நான் உயிரோட இருக்கேன்னா 

நீங்கள் காட்டிய அந்தக்கவிதைதான் டாக்டர்! எனக்கு நல்ல நம்பிக்கையாக இருக்கு! 

நான் இனிமேல்

தற்கொலை முயற்சி செய்யமாட்டேன்! என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்குப் போய் 

விட்டாள்!

"ஒரு பெண்ணின்மனசை மாற்றி விட்டாய்! இறந்த பிறகும் உன்னால் பல பேர் 

வாழ்கின்றார்கள் உண்மையிலேயே நீ மகாகவிதான்!!!" என்று  பாரதியாருக்கு 

மானசீகமா ஒரு நன்றி 

சொன்னேன்!!! 

     நான்கு மாதம் சென்றது! மீண்டும் அதே பெண் ! இரண்டு மாதம் கர்ப்பமாக 

வந்திருந்தாள்!

    முகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது!! கணவன் அடித்ததால் ஏற்பட்ட 

காயம்!!! கணவனும் கூட வந்திருந்தான்! 

     "தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்" என்றாள்!!!

    நானும் ஒன்றும் கேக்கவில்லை! அவளும் ஒன்றும் சொல்லவில்லை!!!!

இதுக்குமேல் நான் ஒன்னும்  உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை!!!  


Wednesday, 10 December 2008

ஒரு உயிரும் நானும்!

ரத்தமும் நண்பனும் பதிவைப்படித்தவர்களில்
சில நண்பர்கள் இறப்பை இவ்வளவு எளிமை
யாக எடுத்துக்கொள்கிறீர்களா என்று மிகவும்
வருத்தப்பட்டிருந்தார்கள்!!!

   அவர்களுக்கு நன்றி!!

 ஒரு நோயாளி என் நண்பனின் அக்கா!
கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக‌
உட்கார்ந்து இருக்கும் போது மண்ணெண்ணையை
இரன்டு கால்களிலும் இடுப்புவரை ஊற்றி
தீ வைத்துக்கொண்டார்கள்!

   நாந்தான் அந்த பெண்ணை தினமும்
பார்ப்பேன்!
  
   தொடை இரண்டிலும் உள்ள தோலை
தினமும் சலம் பிடிக்காமல் வேட்டி வெட்டி
சுத்தப்படுத்துவேன்.

   21 வது நாள் என்று நினைக்கிறேன்!!
விடுதியில் இருந்த எனக்கு போன் வந்தது!

   உடனே சென்று பார்த்தேன்! அப்பெண் 
மூச்சுவிட சிரமப்பட்டுக்கொன்டு இருந்தார்கள்
அருகில் நண்பர்!
   உடனே ட்ரிப்(குளுக்கோஸ்)பைப் பார்த்தால்
மெதுவாக இருந்த்து!

    இரத்தநாளங்கள் சரியாக தெரியவில்லை!
உடனே கையில் தோலை அறுத்து இரத்த நாளத்தில்
ட்ரிப் ஆரம்பித்தேன்!

    உயிர் காக்கும் மருந்துகள் அதிக அளவில்
தேவைப்பட்டதால் வார்டு வார்டாகச்சென்று
சேகரித்துவந்து அவருக்கு செலுத்திக்கொண்டே
இருந்தேன்.
    
    சுய நினைவு போவதும் வருவதுமாக 
இருந்தது!

    கிட்டத்தட்ட ஒன்றறை நாள் அப்பெண்ணின்
அருகில் இருந்து சிகிச்சை அளித்தேன்.

   அப்பெண் இறந்து விட்டாள்! நான் அந்த‌
ஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை!
நம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்
என் நண்பனும்!

   அப்பெண் இறந்தவுடந்தான் அந்த வார்டை
விட்டே வெளியே வந்தேன்.
   அதன் பிறகுதான் பாடியை மார்ச்சுவரி அனுப்பிவிட்டு
வந்து ஒரு மாம்பழ சாறு அருந்தினேன்.

   ஏன் இதைசொல்கிறேன் என்றால் உயிர் விலை
மதிக்கமுடியாதது! நான் அதனை அறிவேன்!!!!
 

Monday, 8 December 2008

ரத்தமும் நண்பனும்

மகப்பேறு பிரிவு!!ராஜா மிராசுதார் மருத்துவமனை!!
பொதுவா ஆண் பயிற்சி மருத்துவர்களுக்கு மகப்பேறு
பிரிவு என்றால் ஜாலியா இருக்கும். ஏன்னா நான் நீன்னு
சான்சுக்கு பெண் மருத்துவர்களிடையே போட்டியிருப்பதால்
நாங்க ஸ்கூட் அடிக்க தோதா இருக்கும்!!!!ஒரு நாள்
இரவு 10 மணி இருக்கும்...ஒரு இளம் பெண் வயது
20தான் இருக்கும்,மாட்டு வண்டில கூட்டிட்டு வந்தாங்க.
முதல் குழந்தை பிரசவத்துக்கு! பெண்மருத்துவர் பார்த்தார்.
வயிரு இரண்டாக இரண்டு பக்கமும் சரிந்தார்ப்போல்
இருந்தது.
    பிரசவத்துக்கு கிராமத்தில் அனுபவமில்லா நர்ஸிடம்
ரொம்ப நேரம் செலவாகியிருந்த்தது.குழந்தை பெரிதாக‌
இருந்ததால் கர்ப்பப்பை சற்றே பிள்விபட்டு குழந்தை
கர்ப்பப்பையை விட்டு வயிற்றுக்குள் வர ஆரம்பித்து
விட்டது.இதனால வயிற்றுக்குள்ளேயே ரத்தம் நிறய‌
வெளியாகி அந்தப்பெண் மயக்கம் ஆகியிருந்தாள்.
நாடி குறைந்து கொண்டே இருந்தது...அந்தப்பெண் 
ஆபத்தான கட்டத்தில் இருந்தாள்.
    உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்!
இல்லாவிட்டால் பெண் உயிரைக்காப்பதே சிரமம்.
கூட வந்தவர்கள் கிராமத்து ஆட்கள் ஒரே சத்தம்.
உடனே ஆபரேசன் பண்ணி உயிரைக்காப்பாத்துன்னு
ரகளை.ரத்த பிரிவை சோதனை செய்து பார்த்தால்
ஒரு அரிய வகை ரத்தம்.ரத்த வங்கியில் இரண்டு
பாட்டில் இருந்தது.அதையும் போட்டாச்சு.பற்றவில்லை.
ஆபரேசனுக்கு மேலும் ரத்தம் தேவை.
    கூட வந்த சொந்தக்காரங்களைக் கூப்பிட்டு
ரத்தம் வேணும். டெஸ்ட் பண்ணுவம் வாங்க. 
ரத்தம் சேந்திச்சின்னா எடுப்போம்ன்னேன். கூட்டம்
மெதுவா கலைஞ்சி ஒருதனக்கூட காணோம்.
    பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்
பாக்கி.ரத்தம்ன்னவுடனே எல்லோரும் ஒடிட்டானுங்க.
அந்தப்பொண்ணு அப்பாவைக்கூப்பிட்டு சோதனை
பண்ணோம்.அதே குரூப் ரத்தம்!! அதற்குள்
அம்மாகாரி வந்து "அய்யோ அவர் ரத்தத்தை
எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய‌
வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.
ரத்தம் எடுக்க விடவேயில்லை.
    சரி எப்படியோ போங்க நான் போய் சாப்பிட்டு
வந்திற்றேனுட்டு நானும் நண்பனும் ஓட்டலுக்குப்
போயிட்டொம்.
     சாப்பிட்டு கொஞ்சம் அசத்தவே அவனும்
நானும் ரிடைரிங் ரூம் போய் கொஞ்ச நேரம்
தூங்கிட்டோம்.
      திடீர்னு முழிப்பு வந்து எழுந்து வார்டை
நோக்கி போனோம்.நண்பனோ "கேஸ் கோல்தான்
மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.
வார்டுக்கு போனோம்! கேஸ் ஆபரேஷன் முடின்சிச்சு
பிழைத்துக்கொண்டு விட்டது என்றார்கள்.
      ரத்தம் எப்படி கிடைத்த்து என்றேன்!!
உங்க நண்பர் உங்களைப்பார்க்க வந்தார். நீங்க இல்ல‌
அவர் ரத்தம் இந்த பிரிவுதானாம்.சரின்னு அவர்
கொடுத்து விட்டு அவசர வேலை நான் போகிறேன்னு
ஒரு சீட்டெழுதி கொடுத்திட்டுப்போனார்னு துண்டு
காகிதம் ஒன்றைத்தந்தார்கள்!!!
    பிரித்துப்பார்த்தேன்! என் வகுப்பு தோழன் ,
அன்பு நண்பன் கையெழுத்து" தேவா ஊர்ல அம்மாவுக்கு
உடம்பு சரியில்லை. நான் விழுப்புரம் போகிறேன்! 
அன்பரசன்!" என்று இருந்தது.
    டாக்டர் வந்தாங்க! எங்கப்பா போனீங்க ரெண்டு
பேரும்? பரவாயில்லை அப்ஸ்கான்ட்(தலைமறைவு)
ஆனாலும் உங்க நண்பனை அனுப்பி ரத்தம் கொடுக்
க ஏற்பாடு பண்ணீட்டீங்களே, வெரி குட்!! போய்
தூங்குங்க ரெண்டு பேரும்".... 
    மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றி
அன்பு

Sunday, 7 December 2008

தண்ணி பார்ட்டியும் தமிள்நாட்டுப்பொண்ணும்

நல்லா மழை பேஞ்சி ஓஞ்சிரிந்திச்சி.24மணி நேர எமெர்ஜென்சி (எலும்பு முறிவுலெ) நான் ஒக்காந்து என்னடா மாப்ளை கேசே வ்ல்ல! தண்ணி கோஷ்டியெல்லாம் மழையில ஊட்லயே உக்காண்டானுங்களா!!!ன்னேன். பக்கத்லெ ஒக்காந்திருந்த பார்ட்டி"பாஸ் சும்ம இருந்த என்னை கெளப்பி உட்டீங்க்ளே பாஸ்.போய் ஒரு பீரை தாக்கி உட்டு வந்திரவா, குளிருக்கு கொஞ்சம் நல்லாயிருக்கும் தலைவா!!!"ன்னான்.டேய் நீ வேர ஆர்,ஆர்,எஸ்(எங்க அஸ்ஸிஸ்டன்ட் ப்ரொஃபெஸ்ஸர்ங்க)வந்தார்னா தாக்கிற்வாற்றா!ன்னேன்.
         ஓபிலெ ஏதோ சத்தம்‍.... பாத்தா ஒரு பொம்பளை உடம்பெல்லாம் கொஞசம் சிராய்ப்பு காயம்!! அவ்ளுக்கு அம்மா வயசுல ஒரு பொம்பளை!!!பின்னாடி புல் மப்புல ஒரு பார்ட்டி. "அய்யய்யோ என் மவள வந்து இந்த அடி அடிக்கிறானெ கட்டைல போறவென் தெரியாம இந்த குடிகார பயலுக்கு பொண்ணக் குடுத்துட்டனே,அனாதப்பய என் பொன்ன என்ன அடி அடிச்சிருக்காம் பாருங்க டாக்டர்"னு அந்த அம்மாகாரி ஒரே அலம்பல்.நம்ம பர்ர்ட்டி அமைதிப்பூங்காவா ஸ்டெடியா பென்ச்சுல உக்காந்திருக்காப்ல.
         சரி இவன்கலைத்திருத்த முடியாது! மாப்ள அந்த பொன்னுக்கு ட்ரீட்மென்ட முடிப்போம்.ஏதாவது எலும்பு எஙகயவது புட்டுக்கிச்சா பாருன்னேன். பாஸ்" எக்ஸ்ரே வேனாம்பாஸ்.அடி சீரியசா இல்ல போலீஸ் அடி மாரி எலும்பு ஒடயாம அடிச்சிருக்கான் பார்ட்டிதான் ஆக்ட் குடுக்கிரா"
         எம்மா சொம்மாயிரு கொஞ்சம்"போலீஸ் க்கு சொல்லி அவன் பென்டைக்களடீர்வமா"ன்னேன்.
         இது எப்பவும் நடக்குரதுதான் சார்! போலீஸ்லாம் வேணாம் அங்க போனா அவன்களுக்கும் நாங்கதான் அழுகணும்!!!வற்ற வழியுல அவனும் ஆட்டோலருந்து எறங்கி கீல உளுந்து அவனுக்கும் கொஞ்சம் காயமா இருக்கு!!! கொஞ்சம் அவனையும் கொஞ்சம் பார்த்து உட்டிருங்கன்னா அம்மாகாரி. டே பாத்தியாடா மாப்பிள்ளை! நம்ம தமிள்நாட்டுப் பொம்பளைங்கன்னா தமிள்னட்டுப்போம்பளைங்க தான்டா,அவன் இந்த அடி அடிச்சிருக்கான், அவனையும் கவனிங்கன்றா பாத்தியா!!!நீ என்னடான்னா பொன்னுகளுக்கு பயந்துக்கிட்டு கல்யாணமே வேணன்ற! போனப் போட்டு உங்கப்பாவ பொண்ணுபாக்கச் சொல்லவா?ன்னேன். "அய்யோ தலைவா! கொஞ்சம் கம்னு இருங்க ஆன்னா ஊன்னா கல்யாணத்த சொல்லி பயமுருத்திரீங்களே" சரி சரி வாங்க அவனை பாப்பம்!!!
           டேய் மவன ஏந்திர்ரா! கண்டபடி தண்ணிய பொட்டு எங்க உயிர வாங்கிரியேடா! 
           லைட்டா அவன் வாயிலருந்து "போலீஸ்"னு ஒரு சத்தம்.என்னது போலீசா வந்தான்ங்கன்னா பொட்டியக்களட்டீர்வானுங்க தம்பி கம்னு இரு உன்னால பேச முடியலல்லன்னேன்.
         பாஸ் சோத்துக்கய்ய இவனால ஆட்ட முடியல பாஸ் ,எடது கைலயும் காயம் இருக்கு உளுந்து ஒடச்சுக்கிட்டான் போல ,எக்ஸ்ரே எடுத்திட்ரேன் பாஸ்ன்னான் .  
         சரி சரி எடு இவனுக்கெல்லாம் எக்ஸ்ரே ஒரு கேடா? பிலிம்தான்டா வேஸ்ட்டு சாவடிக்கனுன்டா இவன்கள!!! ஆம்பிலைங்க பேர கெடுக்கிறான்கடா!!!!ன்னேன்.
        கொஞச நேரத்ல எக்ஸ்ரே வந்திருச்சு பார்த்தா வலது கை எலும்பு உடஞ்சு இருந்திச்சி, இடது கை எலும்பு ஆறுமாசத்துக்கு முன்னாடி உடஞ்சு சேந்தாப்ல் இருந்திச்சு," சரி கட்டப்பொடு இவனுக்கு சரியான தண்டனைதான்"ன்னுட்டு கட்டு பொட்டு முடிச்சு தூங்கப்போயிட்டோம்.
          காலையில  வார்ட்ல பார்த்தா பார்டி தெளிஞ்சு ஒக்காந்திருந்தான்.
போய் "ஏன்டா இப்பிடி தண்ணிய போட்டு பொண்டாட்டிய அடிக்கிரீங்க"ன்னேன்.
சார் நான் தண்ணிய போட்டு ரகள பண்ணது உண்மதான், ஆனா நான் கீள எல்லாம் உளுகலே. எம்பொண்டாட்டியும் அவ அம்மாவும் சேந்து என்னையெ அடிச்சுதான் கைய ஒடச்சுப்புட்டள்ங்க!!! நான் நைட்டே சொல்லப்பாத்தேன் மப்புல முடியலன்னான்!!!! 
அடப்பாவி   ....... "சரி அந்தக்கையி?"    .....ஆரு மாசம் முன்னாடி தண்ணீல‌
அவுங்க ரென்டு பேரும் ஒடைச்ச்துதான். அப்ப நீங்க இல்ல வேர டாக்டர் இருந்தாரு!!!!!!!   
    

Friday, 5 December 2008

கண்ணீரும் சொரணயும்

தரமில்லாத பொருள் வாங்குவமா நம்ம? வாங்கமாட்டமே.. கத்திரிக்காயைக்கூட நம்ம மக்கள் அமுக்கிப்பாத்துத்தான் வாங்குவோம். வெண்டிக்காய நுனி ஒடக்காம வாங்குரதே இல்லை.கடைக்காரன் மூக்கால அழுவான்.. அதென்னங்க மூக்கால அழுவுறது...எனக்குத்தெரியல! நமக்கு அழுவவே சரியா வராது.அதுவும் ரொம்ப சொந்தக்காரங்க செத்தாக்கூட.."தம்பி நம்மலயெல்லாம் வுட்டுட்டு போய்ட்டார்யா! நான் என்ன பண்ணப்போரேன்னு தெரியலயேன்னு" கட்டிப்புடிச்சு கத்தும்போது‍ நம்ம எப்பிடி அழுவுரதுன்னே நமக்கு தெரியது! என்ன பண்றதுன்னே புரியாது.
             அந்த நேரம் பாத்து நம்ம கண்மணிங்க வருவாள்ங்க பாருங்க!.....
எங்கதான் கண்ணித்தண்ணிய வச்சிருப்பாள்ங்கன்னே தெரியாது...செட்ட சேத்துக்கினு... வீட்டு வாசல் வரைக்கும் "யெப்பிடி செத்துச்சு? நல்லாத்தானே இருந்துச்சி.. சாகுர வயசா அதுக்கு? ஆர்டட்டாக்குங்ராஹ...பிளசரா இருந்துச்சு!!! ரத்தமா வாயில வந்துச்சாம்ல...ஒருவெள மருந்த கிருந்த குடிச்சிருக்குமோ!!!னு பயங்கரமா பேசிக்கிட்டே, செத்ததுலெ பெரிய கொளப்பத்தெயெ பரப்பிக்கிட்டு வர்ரவள்ங்க வீட்டு வாசல்க்கு வந்த்வுடனே என்ன மாயம் பண்ணுவாள்ங்கனே தெரியாது.....அய்யோ ஆத்தாஆஆஆஆஆஆஆ!!!!!நல்லாத்தானே இருந்தீயன்னு ஆரம்பிச்சா கொட்டும்பாருஙக கண்ணுல தண்ணி மக்கள் பின்னி யெடுத்துருவாள்ங்க அழுகை... 
             நம்ம கல்லு மாதிரி நிக்க வேண்டியதுதான்!!!!!
நம்ம ப்ளாக் கண்மணிங்க இந்த வித்தய விளக்கிச்சொல்லுங்களேன்.....வெளக்கமாத்தோட வந்திராதிங்கம்மா!(மரியாதைய பாத்தியளா) முதுகு தாங்காது!!!!!
             ஹாங்... என்னமோ சொல்லவந்து எங்கேயோ பொய்ட்டேன்!!
மருக்கா சங்கதி என்னன்னா எல்லாத்தயும் தரமா வாங்குர நம்ம மக்க குண்டு பாயாத சட்ட வாஙுகுங்போது  கோட்டவிட்டாய்ன்க அப்பு!!!அந்த சட்டய பொட்டுக்குனு போன நம்ம கார்கரேயும்,மிச்ச ரெண்டு ஆபீசரும் கார்லெ இருக்கும்போதே, அவன்க சுட்டு செத்துப்போயிட்டாங்க!!
              நமக்கும் கண்ணீர் வராது....   நம்ம அரசியல் அப்புக்களுக்கும் சொரணை வராது......     

Thursday, 4 December 2008

உன் பார்வை

கொழுந்து விட்டெறியும்
ஒரு சின்ன 
தீக்குச்சியாய்
உன் பார்வை விரல்கள்!

நீட்டி என்னைத்தொடதே
நித்தமும்
பற்றி எரிகிறேன்
ஒரு
வைக்கோல் போராய்!

Sunday, 30 November 2008

கல்லூரி கனாக்கள்

வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....

நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....

ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

தோழியா என் காதலியா!!!

தோழியா என்றாய்?
தோழமையுடன் வந்தேன்
தோழமை கொள்ளவில்லை நீ!
மனைவிதானே என்றாய்|
காதலியா என்றாய்?
காதலுடன் வந்தேன்
காதலும் பண்ணவில்லை நீ!
ம்னைவிதானே என்றாய்‍‍‍‍‍‍‍_சரி
மனைவிதான் என்றேன்
மதிக்கவும் இல்லை நீ!
இஙகே பாருங்கள் 
பூமாதேவி நான்!திருமகள் நான்!
பசிதீர்க்கும் அன்னை நான்! 
மதியூகி நான்!
தாதி நான்! தாசி நான் என்றேன்
இல்லை அது
ராமன்(எம்ஜிஆர்)தேடிய சீதை(ஜெயலலிதா) 
என்றாய்!
சரி!
மனைவி என்றால் என்ன என்றேன் 
மண்ணாங்கட்டி என்றாய்!!!!. 

Saturday, 29 November 2008

இலவச பணம்

நான் நேற்று ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வ்ழங்கும் முகாமுக்குச் சென்றிருந்தேன்(காரைக்குடி அருகில் கல்லல் என்ற ஊருக்கு). நிறய கூட்டம். ஊனமுற்றோரைப்பார்க்க மிகவும் க்ஷ்டமாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது நம் கடமை. முகாம் நடுவில் ஒரு பையன் வந்தான்.யாரையோ கூட்டிக்கொண்டு வந்தான்.என்னன்னு கேட்டா அவனுக்கு ஊன சான்று கேட்டான்.சரி படிக்க யூஸ் ஆகும்தானே, ப்டிப்பு உதவித்தொகை வாங்கலாம்,கல்லூரில படிக்க உதவியா இருக்கும்னு சரிப்பான்னு போட்டுக்கொடுத்தேன். இப்ப்த்தான் ஜோக்கைக்கேளுங்கள். மருபடியும் வந்து இன்னொரு பாரம் கையெழுத்துப்போட்டுத்தாங்க என்றான்.யேன்டான்னு கேட்டா மாசாமாசம் 400 ரூபாய் உதவித்தொகை வேணும்கிறான்.நான் சொன்னேன்: ஊனம் கம்மியாத்தான் இருக்கு நீ படி,இல்ல லோன் வாங்கி தொழில் செய் என்றேன். அவன் கேக்கவே இல்லை,சிபாரிசுக்கு ஆளையெல்லாம் கூட்டி வந்தான். இதுபோல நிறய முகாம்ல நடக்குது. பசங்களுடய மனப்பான்யைபத்தி நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே!!!!!!

Tuesday, 25 November 2008

எம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு கிடைத்து M D படிக்க ஒரு டாக்டர், தன்னுடன் படிக்கும் எம்பிபிஸ் முடித்து நீண்ட நாள் ஆகி 40 வயதைத்தாண்டிய சக டாக்டரிடம் வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது

சொல்கிரார்:

என்ன சார் வர வர நடத்துரது ஒன்னுமே புரிய மாட்டேங்குது!

வயதான டாக்டர்: எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...!!!!!

மருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மருத்துவர். இருவரும் தங்களிடம் நீண்ட நாள் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தின் கல்யாணத்திற்கு செல்கின்றனர்.

பெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம்: டாக்டர் அம்மவைத்தெரியுதாம்மா!

இவுங்கதான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க,நீ இவங்ககிட்டதான் பொறந்த!

இதய மருத்துவரைப்பார்த்து: டாக்டரைத்தெரியுதா! உன் தாத்தா அதாண்டி என் மாமனார் நெஞ்சுவலின்னு இவர் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போனோம்

ஒரு ஊசிதான் போட்டார், அதோட முடுஞ்சிருச்சு!!!! ரொம்ப ராசியான டாக்டர்.           

 

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory