Saturday 13 December 2008

தற்கொலையும் தமிழ்க்கவியும்!!!!!

நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!! 

தொடர்ந்து பெண்களுடைய மனசைப்பத்தியே எழுதுற மாதிரி வருது!,

 பெண்கள், நான் அவர்களை குறை சொல்லியே  எழுதுவதாக எண்ண வேண்டாம் 

!!!!!மேல படிங்க! 

நான் 

கிளினிக்லெ உக்காந்திருந்தேன். ரெகுலரா வரும் ஒரு நோயாளி!! பெரிய 

தமிழ்க்கவியுடய பேர் உள்ளவங்க! புருஷ‌னுடன் தகராறு என்று அடிக்கடி வருவார்கள்!!

 ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன் அன்று நிலைமை முற்றிப்ப்போய் விட்டது போல‌  

கைல கெடச்ச மாத்திரைகளை அள்ளிப்போட்டு தற்கொலை முயற்சி!!!ரெண்டு நாள் 

சிகிச்சை செய்து ஆளை பிழைக்க வச்சாச்சு!! நல்லா உடல் தேறியவுடன் 

அந்தப்பெண்ணீடம் " ஏம்மா நல்லா படிச்ச நீங்கள்ளாம் இப்படி பண்ணலாமா?" என்று 

கேட்டேன். அதற்கு அவர் வீட்டுக்காரர் என்மேல சந்தேகப்படுறார்! தினம் ஒரே அடி 

உதை!!!இனிமே 

என்னால தாங்க முடியாதுன்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன்! என்றார்கள்!!!

    உனக்கு குழந்தை இருக்கு, உன்னைய கல்லுரிவரை படிக்கவச்சு  செலவு பண்ணி 

கல்யாணம் பண்ணிக்கொடுத்த அம்மா,அப்பா, பாசமான அண்ணன் தம்பியெல்லாம் 

இருக்காங்க!அவங்களையெல்லாம் ஒரு நிமிடத்தில் மறந்து விட்டாயே அம்மா! 

 புருஷன் முக்கியம்தான் அவன் சரியில்லை என்பதற்காக நீ ஏம்மா சாகணும்? 

புருஷனையும் தாண்டி வாழ்க்கை ஒன்று இருக்கும்மா!!! என்றேன்.என் அப்பா அம்மா    

வருவாங்க! அவங்க‌ வரும்போது ரொம்ப அன்பா இருக்கற‌ மாதரி நடிப்பாரு  அவங்க 

போனவுடனே ரொம்ப டார்ச்சர் பன்னுவார்!!!இவரோட இருக்கவே முடியாது என்று ஒரே 

அழுகை!

      எல்லாம் ஒகே! புருஷனைத் தவிர வாழ்க்கயே இல்லையா?ன்னு சொல்லி

பெண்கள் புருஷன் இல்லாம எவ்வளவோ சாதிக்கிறாங்க! நீ படிச்ச பெண்,உன்னால 

100 பேருக்கு படிப்பு சொல்லித்தர முடியும்! எவ்வளவோ பேருக்கு வாழ வழிகாட்ட 

முடியும், உங்க அப்பா,உடன் பிறந்தோர் உதவியோட எவ்வளவோ செய்யலாம்னு 

சொல்லி ஒரு கவிதையை காண்பித்தேன்!!!

      " தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி "புகழ் பெற்ற பாரதி 

கவிதை!!!

        மறு நாள் அவங்க அப்பா அம்மா எல்லாம் வந்தார்கள்!!!

"என்ன டாக்டர் பண்ணலாம்? வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு போறோம் " என்றார்கள்!!!!

சரியென்று நிறைய‌ சொல்லி அனுப்பிவைத்தேன். டாக்டர் நான் உயிரோட இருக்கேன்னா 

நீங்கள் காட்டிய அந்தக்கவிதைதான் டாக்டர்! எனக்கு நல்ல நம்பிக்கையாக இருக்கு! 

நான் இனிமேல்

தற்கொலை முயற்சி செய்யமாட்டேன்! என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்குப் போய் 

விட்டாள்!

"ஒரு பெண்ணின்மனசை மாற்றி விட்டாய்! இறந்த பிறகும் உன்னால் பல பேர் 

வாழ்கின்றார்கள் உண்மையிலேயே நீ மகாகவிதான்!!!" என்று  பாரதியாருக்கு 

மானசீகமா ஒரு நன்றி 

சொன்னேன்!!! 

     நான்கு மாதம் சென்றது! மீண்டும் அதே பெண் ! இரண்டு மாதம் கர்ப்பமாக 

வந்திருந்தாள்!

    முகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது!! கணவன் அடித்ததால் ஏற்பட்ட 

காயம்!!! கணவனும் கூட வந்திருந்தான்! 

     "தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்" என்றாள்!!!

    நானும் ஒன்றும் கேக்கவில்லை! அவளும் ஒன்றும் சொல்லவில்லை!!!!

இதுக்குமேல் நான் ஒன்னும்  உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை!!!

22 comments:

KarthigaVasudevan said...

NOTHING TO SAY,IT IS ALSO A PART OF LIFE !!!

பழமைபேசி said...

வாக்கியங்களை வரிசைப்(format) படுத்தினீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.

ஹரிணி அம்மா said...

நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!!

சூப்பரா நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க!
பெண்களுடைய சகிப்புத்தன்மையை
அடுக்கடுக்காய்ச் சொல்லி வருகிறீர்கள்!!!
தொடருங்கள்!!!!!

தமிழ் அமுதன் said...

பாரதி கொடுத்த தெளிவு ஓகே !
கடசில என்ன சொல்ல வாறீங்க?

தமிழ் அமுதன் said...

பாரதி கொடுத்த தெளிவு ஓகே !
கடசில என்ன சொல்ல வாறீங்க?

தேவன் மாயம் said...

மிஸஸ்.டவுட் கூறியது...
NOTHING TO SAY,IT IS ALSO A PART OF LIFE !!!

yah!! its all in part of life!
thats why i didnot add my opinion!
deva.

தேவன் மாயம் said...

பழமைபேசி கூறியது...
வாக்கியங்களை வரிசைப்(format) படுத்தினீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
நன்றி!
நண்பரே!
அடுத்து கவனமாக‌
இருக்கேன்
தேவா.

தேவன் மாயம் said...

ஜீவன் கூறியது...
பாரதி கொடுத்த தெளிவு ஓகே !
கடசில என்ன சொல்ல வாறீங்க?
நன்றி ஜீவன்!!!
இதில் நான் சொன்னா
அட்வைஸ் மாதிரி
ஆயிரும்!!!

நீங்க சொன்னாத்தான்
நல்லா இருக்கும்!!!

உங்க கருத்தைச்
சொல்லுங்கள்!!

தேவா!!!

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா கூறியது...
நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!!

சூப்பரா நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க!
பெண்களுடைய சகிப்புத்தன்மையை
அடுக்கடுக்காய்ச் சொல்லி வருகிறீர்கள்!!!
தொடருங்கள்!!!!!

நன்றி!!!

நீங்க எதார்த்தமா இருக்கிங்க!

ஓகே!!!

ஆ.ஞானசேகரன் said...

டாக்டர் ஒருமுறை நாயகனுடன் பேசிப் பார்க்கலாமே! இது ஒரு வகையான மனநோய்தானே, உங்களால் மாற்றம் கொடுக்க முடியும்.. ஒரு முறை முயற்சிக்கவும்

ஹேமா said...

வணக்கம் தேவா.உங்கள் இந்தப் பதிப்பில் எனக்குப் பின்னூட்டம் போடக்கூடியதாய் இருக்கிறது.
கவிதைப் பக்கத்தில் பின்னூட்டம் போட என் கணணி மறுக்கிறது.
காரணம் தெரியவில்லை.

உண்மை தேவா நீங்கள் சொல்லியிருக்கும் இந்தச் சம்பவம்.
சில பெண்கள் ஏனோ எத்தனை வதைபட்டாலும் உணர்வற்ற ஜடமாய் வாழ்கிறார்கள்.பூச்சி புளுக்கள் கூட தன்னைச் சீண்ட வருபவர ஒருமுறை தலையைத் தூக்கி எதிர்த்துவிட்டே இறக்கும்.ஆனால் 21 ம் நூற்றாண்டில்
கூட இப்படிப்பட்ட பெண்கள் வாழ்வது பரிதாபமே.இதைச் சகிப்புத்தன்மை என்பது பொருத்தமேயில்லாத ஒன்று.

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் சொன்னது…
டாக்டர் ஒருமுறை நாயகனுடன் பேசிப் பார்க்கலாமே! இது ஒரு வகையான மனநோய்தானே, உங்களால் மாற்றம் கொடுக்க முடியும்.. ஒரு முறை முயற்சிக்கவும்
நல்ல யுக்திதான்!
அவருக்கு
கவுன்சலிங்
தேவை!
நன்றி நண்பரே!!!

தேவன் மாயம் said...

வணக்கம் தேவா.உங்கள் இந்தப் பதிப்பில் எனக்குப் பின்னூட்டம் போடக்கூடியதாய் இருக்கிறது.
கவிதைப் பக்கத்தில் பின்னூட்டம் போட என் கணணி மறுக்கிறது.
காரணம் தெரியவில்லை.

உண்மை தேவா நீங்கள் சொல்லியிருக்கும் இந்தச் சம்பவம்.
சில பெண்கள் ஏனோ எத்தனை வதைபட்டாலும் உணர்வற்ற ஜடமாய் வாழ்கிறார்கள்.பூச்சி புளுக்கள் கூட தன்னைச் சீண்ட வருபவர ஒருமுறை தலையைத் தூக்கி எதிர்த்துவிட்டே இறக்கும்.ஆனால் 21 ம் நூற்றாண்டில்
கூட இப்படிப்பட்ட பெண்கள் வாழ்வது பரிதாபமே.இதைச் சகிப்புத்தன்மை என்பது பொருத்தமேயில்லாத ஒன்று.

உங்கள் கருத்து சரிதான்!
எவ்வளவுதான் சொன்னாலும்
நிறைய பேர் அப்படித்தான்
நன்றி நண்பரே!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவான்னு நிறையப் பேர் நிறைய இடங்களில் பேசிக்கறாங்க

வனம் said...

வணக்கம் தேவன் மாயன்

\\நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!! \\
இது எல்லாறுக்கும் உள்ள குறைபாடுதான்

இடுகை நிச்சயம் யோசிக்க வேண்டியது

\\சூப்பரா நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க!
பெண்களுடைய சகிப்புத்தன்மையை
அடுக்கடுக்காய்ச் சொல்லி வருகிறீர்கள்!!!\\

இது என்னமோ எனக்கு சகிப்புத்தன்மையாக தெறியவில்லை கையாலாகாத தனமாக தெறிகிறது

நன்றி
இராஜராஜன்

தேவன் மாயம் said...

நிச்ச்யம் பெண்களால் முடியும்!

சில்ர் ரிஸ்க் எடுக்கத்தயங்குகிறார்கள்

என நினைக்கிறேன்!!!

நன்றி ராஜராஜன்!!!!

KARTHIK said...

தேவன் நீங்க அந்த ஆளை சந்தித்தப்போ நீங்க அவர்கிட்ட பேசிருக்காலம்தானே.ஒருவேள அவரு (பேரனாயிட் டிஸ்ஸாடர்?) ஏதேனும் மனநிலை பாதிக்க பட்டவராக கூட இருக்கலாம் தானே அவரை சரி பண்ணுற வழி இருந்த அடுத்தமுறை அதையும் பாக்கலாமே.இப்படியாவது அவங்களோட தற்கொலை முயற்சிய தள்ளிப்போடலாம்,இல்ல அவர திருத்தலம்.இன்றைய மருத்துவ உலகத்துல முடியாதது எதுவும் இல்லை.

இனி அந்தப்பெண் மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி செய்யாம இருந்தா சரிதான்

KARTHIK said...

// இதைச் சகிப்புத்தன்மை என்பது பொருத்தமேயில்லாத ஒன்று.//

ஆண் பெண் இரு பாலருக்கும் இந்த சகிப்புத்தன்மை இல்லாம போனதால்தான் இன்னைக்கு நாட்டுல விவாகரத்து அதிகமாயிட்டுது.

தேவன் மாயம் said...

///தேவன் நீங்க அந்த ஆளை சந்தித்தப்போ நீங்க அவர்கிட்ட பேசிருக்காலம்தானே.ஒருவேள அவரு (பேரனாயிட் டிஸ்ஸாடர்?) ஏதேனும் மனநிலை பாதிக்க பட்டவராக கூட இருக்கலாம் தானே அவரை சரி பண்ணுற வழி இருந்த அடுத்தமுறை அதையும் பாக்கலாமே.இப்படியாவது அவங்களோட தற்கொலை முயற்சிய தள்ளிப்போடலாம்,இல்ல அவர திருத்தலம்.இன்றைய மருத்துவ உலகத்துல முடியாதது எதுவும் இல்லை.

இனி அந்தப்பெண் மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி செய்யாம இருந்தா சரிதான்///

உங்கள் அக்கறை பிரமிப்பாக இருக்கிறது!!!
கட்டாயம் செய்கிரேன்!!!

அமர பாரதி said...

/தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி // எனக்கு மிக மிக பிடித்த முண்டாசுக்கவிஞனின் பாடல். நல்ல பதிவு.

//பேரனாயிட் டிஸ்ஸாடர்?) ஏதேனும் மனநிலை பாதிக்க பட்டவராக கூட இருக்கலாம் தானே // பெரும்பாலான குடும்ப பிரச்சினைகளின் வேர் ஈகோ மற்றும் பாதுகாப்பற்ற நிலையின் வெளிப்பாடுகளே. அதை 50% கவுன்சிலிங்காலும் 50% மருந்தாலும் சரி செய்ய முடியும், அதுவும் நீங்கள் ஒரு மருத்துவர். ஒரு பக்கச் சார்பாக அந்த பெண்ணின் மீது மட்டும் பரிதாபப்படாமல் அந்த கணவனின் மீதும் அக்கறை காட்டினீர்கள் என்றால் ஒரு குடும்பத்தைப் பிணைத்த மன நிறைவு உங்களுக்கு கிடைக்கும்.

சகிப்புத்தன்மைக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை.

தேவன் மாயம் said...

///தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி // எனக்கு மிக மிக பிடித்த முண்டாசுக்கவிஞனின் பாடல். நல்ல பதிவு.

//பேரனாயிட் டிஸ்ஸாடர்?) ஏதேனும் மனநிலை பாதிக்க பட்டவராக கூட இருக்கலாம் தானே // பெரும்பாலான குடும்ப பிரச்சினைகளின் வேர் ஈகோ மற்றும் பாதுகாப்பற்ற நிலையின் வெளிப்பாடுகளே. அதை 50% கவுன்சிலிங்காலும் 50% மருந்தாலும் சரி செய்ய முடியும், அதுவும் நீங்கள் ஒரு மருத்துவர். ஒரு பக்கச் சார்பாக அந்த பெண்ணின் மீது மட்டும் பரிதாபப்படாமல் அந்த கணவனின் மீதும் அக்கறை காட்டினீர்கள் என்றால் ஒரு குடும்பத்தைப் பிணைத்த மன நிறைவு உங்களுக்கு கிடைக்கும்.

சகிப்புத்தன்மைக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை.///

என் மேசையின் மேல் இந்தக்கவிதை தான் வைத்து உள்ளேன்.நீங்கள் கூறியது போல் செய்ய முயற்சி செய்கிறேன்!!!!

geethasmbsvm6 said...

//நான்கு மாதம் சென்றது! மீண்டும் அதே பெண் ! இரண்டு மாதம் கர்ப்பமாக

வந்திருந்தாள்!

முகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது!! கணவன் அடித்ததால் ஏற்பட்ட

காயம்!!! கணவனும் கூட வந்திருந்தான்!

"தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்" என்றாள்!!!

நானும் ஒன்றும் கேக்கவில்லை! அவளும் ஒன்றும் சொல்லவில்லை!!!!

இதுக்குமேல் நான் ஒன்னும் உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை!!!//

ஞானசேகரனும், கார்த்திக்கும் சொல்லி இருப்பது தான் சரி எனத் தோன்றுகிறது. ஒரு குடும்பத்தைப் பிரிப்பது சுலபம். ஆனால் ஒன்று சேர்ப்பது ஒரு கலை, உங்களால் முடியும். முயலவும், வாழ்த்துகள். பதிவுக்கு வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory