நிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்! இளம்வயதில்
அனைவருக்கும் கனவுகள் பல விதமாக தொடர்ந்து வரும்!
பறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்!
எனக்கு வந்த இரண்டு கனவுகளைப் பற்றி இங்கு சொல்லலாம் என
நினைக்கிறேன்.
ஒன்று என்னுடைய 10 - 15 வயது பருவத்தில் வந்தது. நான் மெதுவாகப்
பறப்பது போல இருக்கும். ரொம்ப மெதுவாக!!
எனக்கு முன் தூரத்தில் நிலவு இருக்கும்! நிலவின் ஒளியில் நான் பறந்து
கொண்டு இருப்பேன்.
நிலவுக்கும் எனக்கும் இடையில் பின்னப்பட்ட வலை போல வானம்
முழுக்க இருக்கும்! அந்த வலைகளுக்குள் மிகக்கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக நான்
செல்வது போல வரும்! இந்தக்கனவு எனக்கு நிறைய முறை வந்து உள்ளது!
ஆனால் ஒருமுறை கூட நான் வலையை தாண்டி போனதேயில்லை!
நிலவையும் தொட்டதில்லை!!!!
அந்த வயதுக்குப்பிறகு அந்த்க்கனவு வரவில்லை.
இன்னொரு கனவு -- நானும் ,என் தம்பி தங்கையும் வாசலில்
விளையாடிக்கொண்டு இருக்கிறோம். திடீரென இருட்டி விடுகிறது! என்
தம்பிகளையும், தன்கையயும் உள்ளே கொண்டு வந்து விட்டு கதவைச்சாத்தி
விடுகிறேன். திரும்பிப்பார்த்தால் பின் கதவு திறந்து கிடக்கிறது!
மறுபடியும் பின் கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் பக்கக் கதவு
திறந்து கிடக்கிறது!
பிள்ளைகள் மறுபடி அது வழியாக வெளியே செல்லுகிறார்கள்! மறுபடி
அவர்களை உள்ளே இழுத்துப்போட்டு கதவைச் சாத்துகிறேன். மறுபடி பார்த்தால்
இரண்டு கதவுகள், மூன்று, நான்கு என்று வீடு முழுவதும் நிறைய கதவுகள்
திறந்து கிடக்கின்றன!!
கனவு முடிந்து விழிப்பு வரும் வரை ஒரே பயம்தான் !!!!
கனவுகள் ஏன் வருகின்றன?
கனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம்
என்கிறார்கள்!!!!
உலகின் பாலூட்டிகள் அனைத்தும் கனவு காண்பதாக சொல்கிறார்கள்!!!
நம் வீட்டு நாய் கூட கனவு காணுதாம்!!!
எப்படியோ நம்ம கலாம் கூட கனவு காணுங்கள் என்கிறார்!!!!
மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவுதான் அமெரிக்காவில் ஒபாமா வடிவில்
நிறைவேறியதே!!!
சரி அதுக்கும் நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா?
எனக்குத்தெரியல!!! நீங்கதான் சொல்லுங்களேன்!!!!
21 comments:
kalakitel
irunga konjam system problem-a irukku meendum varren
கனவுகள் ஏராளம்.. தாராளம்.. கனவுகள் காண்பதற்கே!
என்ன வெச்சு காமெடி கீமடி பண்ணலயே
வருக!! வருக!!!
அதிரை!
தேவா.
தமிழ்ப்பிரியன் நன்றி!
நிறைவேறாத கனவுகள்
ஏதும் உண்டா?
தேவா
சுரெஷ்!
இன்னும் சென்னைக்குப் போகலையா?
உண்மையிலேயே நல்ல டைரக்டர்
ஆகலாம்!!!
இதுல ஏது காமெடி???
தேவா.
\\பறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்!\\
என்னின் அதிகமான கனவுகள் இதுதான் ...
ஏன்
மருத்த விளக்கம் ஏதும் உண்டா
புகைப்படமும் அருமை.
நன்றி ஜமால்!
உங்கள் கேள்விக்கு வந்து
பதில் சொல்றென்!!!
பதிவும் கனவுகளும் சுவாரசியம்!எனக்கு எப்போவும் பரீட்சை முடிஞ்சபின் ஒரேமாதிரி கனவுகள் வரும்..லேட்டா போவேன், இல்லன்னா ஹால்டிக்கட் விட்டுட்டு போய்டுவேன்..இந்தமாதிரி!!
/பதிவும் கனவுகளும் சுவாரசியம்!எனக்கு எப்போவும் பரீட்சை முடிஞ்சபின் ஒரேமாதிரி கனவுகள் வரும்..லேட்டா போவேன், இல்லன்னா ஹால்டிக்கட் விட்டுட்டு போய்டுவேன்..இந்தமாதிரி!!//
ஓ கனவுலயும் பரிட்சைதான் வருமா!!
பாஸ் பன்னீட்டிங்களா?
no comments
நேத்து கனவில உங்களுக்கு பின்னூட்டம் போட்டத நெனச்சேன்.
ஆனா இது நிஜம்
//நேத்து கனவில உங்களுக்கு பின்னூட்டம் போட்டத நெனச்சேன்.
ஆனா இது நிஜம்//
நல்லா எழுதுறீங்க்ளே!!!!
நீங்க கனவுல போட்ட பின்னூட்டம் என் கனவுலயும் வந்திச்சு!!!
ஹக்கிம் பயங்கர பிஸியிலும் வந்ததுக்கு நன்றி!!!!
கொஞ்சம் தூங்குங்க!!! அப்பத்தான் கனவு வரும்!!!!
கனவைப் பற்றிய பதிவு. எல்லோருக்கும் அவரவர் கண்ட கனவுகளை கலைக்காமல் நினைவூட்டும் பதிவு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நான் பிறந்து வளர்ந்த வீடு பல வருடங்களாக என் கனவில் வந்தபடி இருந்தது. நிகழ்காலத்து மனிதர்கள் கனவில் வருவார்கள். ஆனால் நடப்பவையெல்லாம் அந்த வீட்டிலாக இருக்கும். இப்போ 7,8 வருடங்களாய்தான் அது நின்றது.
//
//கனவைப் பற்றிய பதிவு. எல்லோருக்கும் அவரவர் கண்ட கனவுகளை கலைக்காமல் நினைவூட்டும் பதிவு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நான் பிறந்து வளர்ந்த வீடு பல வருடங்களாக என் கனவில் வந்தபடி இருந்தது. நிகழ்காலத்து மனிதர்கள் கனவில் வருவார்கள். ஆனால் நடப்பவையெல்லாம் அந்த வீட்டிலாக இருக்கும். இப்போ 7,8 வருடங்களாய்தான் அது நின்றது.//
நன்றி !!
மனிதர்கள் மேல் அன்பு போல் வீட்டின் மேலும் அன்பு கொண்டிருக்கிறீர்கள்!!!
கனவு ஏன் கண்டேன்னு யோசிச்சா அது கூட எனக்கு ஒரு கனவா வந்துடும்.
ஆழ்மன நினைவுகளின் தொகுப்புதான் கனவு - சரியா.
ஆனா சில கனவுகள் பலித்ததுமுண்டு
//கனவு ஏன் கண்டேன்னு யோசிச்சா அது கூட எனக்கு ஒரு கனவா வந்துடும்.
ஆழ்மன நினைவுகளின் தொகுப்புதான் கனவு - சரியா.
ஆனா சில கனவுகள் பலித்ததுமுண்டு///
வாங்க! வாங்க!!!
கனவெல்லாம் பலித்ததே!ன்னு ஒரு தமிழ்ப் படப்பாட்டு இருக்க்கு இல்ல!!!
/*சரி அதுக்கும் நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா*/
நாம கனவு கண்டால் யாருக்காவது அது பலிக்கலாம்னு இருக்குமோ? படிக்க சுவாரசியமாக இருந்த்து
******கனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம் என்கிறார்கள்!!!!**********
உண்மை தாங்க....உங்களோட இரண்டாவது கனவுக்கு எளிதா அர்த்தம் கண்டு பிடிக்கலாம்....உங்களோட தம்பி தங்கச்சியை பாதுகாப்பா வசுருக்கனும்னு உங்களுக்கு ஏதோ ஒரு மூலைல தோன்றிய எண்ணம் தான் அதுக்கு காரணமா இருக்கணும்...
என்னோட கனவு எல்லாம் விபரீத கனவுகள்....எப்போவுமே யாரவது என்னை திரத்திட்டே இருப்பாங்க........இப்போ எல்லாம் கனவு வருதா இல்லியான்னு குட தெரியாம அசந்து தூங்குறேன்...
Post a Comment