Thursday, 18 December 2008

கொஞ்சம் தேனீர்!!!

கண்ணீர்!!!!


உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும் 
உன்
கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில் 
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!


தடங்கள்!!!


நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!


காலை டீயுடன் லைட்டான
ரெண்டு கவிதையும்
சேர்த்துப்பருகுங்கள்!!!

தேவா....

18 comments:

Thamiz Priyan said...

டீ இதமான சூடோடு இருக்கு!.. :)

தேவன் மாயம் said...

//டீ இதமான சூடோடு இருக்கு!.. //

தமிழ்ப்பிரியன் !!! டீ சாப்பிட வந்ததுக்கு நன்றி!!!!

தேவா.

coolzkarthi said...

நல்ல வேலை டீ ஆறுவதற்குள் வந்துவிட்டேன்.....கவிதை அருமையாக இருந்தது ....

தேவன் மாயம் said...

டீ சாப்பிட வந்ததுக்கு நன்றி! டியர் கார்த்தி!!
கவிதையை பாராட்டியதற்கும் நன்றி!!!!

நட்புடன் ஜமால் said...

\\உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும்
உன்
கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில்
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!\\

தூள் (டீத்தூள் அல்ல)

டீ பிடிக்கும்(ஐய பிடிக்காது) பழக்கம் இல்லை

KARTHIK said...

// பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!! //

ஏரி மிதிசுட்டு போயிகிட்டே இருக்காங்கன்னு சொல்லாம சொலுரீங்க:-))

படித்தேன் ரசித்தேன்.

நசரேயன் said...

டீ கவிதை அருமை

தேவன் மாயம் said...

\\உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும்
உன்
///கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில்
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!\\

தூள் (டீத்தூள் அல்ல)

டீ பிடிக்கும்(ஐய பிடிக்காது) பழக்கம் இல்லை///

டீயே பிடிக்காதா? பரவாயில்லையே!!

தேவா.

தேவன் மாயம் said...

//// பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!! //

ஏரி மிதிசுட்டு போயிகிட்டே இருக்காங்கன்னு சொல்லாம சொலுரீங்க:-))

படித்தேன் ரசித்தேன்.////

எதார்த்தமா சொன்னேங்க நான்!

அடிக்கடி வாங்க!!!!

தேவன் மாயம் said...

///நசரேயன் கூறியது...
டீ கவிதை அருமை///
நல்லா டீ போட்டிருக்கேனா!!!
நன்றி!!!

Poornima Saravana kumar said...

//நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!//

பத்திரமா பார்த்துக்கோங்க :)

தேவன் மாயம் said...

//நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!//

\\பத்திரமா பார்த்துக்கோங்க \\

நன்றி நண்பரே!!

geevanathy said...

////கவிதைகளாகின்றன!!
ஏனெனில்
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!////!

அருமையான கவிதை

தேவன் மாயம் said...

////கவிதைகளாகின்றன!!
ஏனெனில்
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!////!

அருமையான கவிதை///

நன்றி நண்பரே!!!
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!!

தமிழ் said...

/நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!/

நல்ல வரிகள்

தேவன் மாயம் said...

///நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!/

நல்ல வரிகள்///

வரிகள் பிடிச்ச்சிருக்கா!
ஓ.கே . நன்றி...

Muruganandan M.K. said...

"கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!"
மிக அழகான வரிகள்.

cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

குறும்பா சூடான தேனீருடன் இனிக்கிறது

இதயமேடுகளில் விழுவதற்காகவே அவை கவிதை ஆகின்றனவா ?

நெஞ்சிலே தடங்கள் - கடந்து வந்த பாதையினில் செய்த உதவிகளுக்காகவா ?

நன்று நன்று நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory