Monday 31 August 2009

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

நோய்க்குறிகள்

சாதாரண சளி பன்றிக்காய்ச்சல்
.
காய்ச்சல் காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
.
இருமல் இருமலும் நல்ல சளியும் இருக்கும். சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.
.
உடல் வலி உடல் வலி மிதமாக இருக்கும். கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
.
மூக்கடைப்பு மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம் குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வு உடல் சோர்வு குறைவாக இருக்கும்.
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல் தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம். சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
.
தலைவலி சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
.
நெஞ்சில் பாரம், வலி சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.
     

பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!

கணவர்கள் கேட்கும் உரிமைகள்-7!

மாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

மனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!

1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்!!).

2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா?..! சரி பரவாயில்லை! மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்!!

3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே!( ஒரு விண்ணப்பம்தான்!! கோபம் வேண்டாம்......).

4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.

5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).

6.எங்கள் நண்பர்கள் வரும்போது  சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).

7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது. சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.

இன்னும்  நிறைய எழுதலாம். இந்தத் துறையில் அனுபவமிக்க நம் பதிவர்கள் தம் அனுபவங்களை பின்னூட்டங்களில் நிரப்புங்கள்!!

நமது சங்கத்தினரின் சந்தோசத்துக்காக சில அபூர்வமான படங்கள்:

1.நம்ம சகா என்ன ஜாலியா தம்மடித்துக்கொண்டு போகிறார் பருங்க!!! பின்னாட அவரின் தங்கமணி இஃகி இஃகி!!..

.2.இது எப்படி!!! சில பேர் எப்படியோ ஜாலியா இருக்கானுங்க!!!..

3.ஹை!! நல்லா பெண்டெடுக்கிறானே!!!..

4.எப்பிடிப்பு இப்பிடியெல்லாம்!!..

5.தங்கமணியை வெளியே தள்ளிவிட்டு சைக்கிள் பெருசாப் பூடுச்சா ஒனக்கு?.husband of the year. Bike in tent.

சங்கத்தின் சட்டபூர்வ எச்சரிக்கை:

மேலேயுள்ள படங்கள் ஒரு சில இடங்களில் வெகு அரிதாக காணப்படுவது. இவற்றை நம் தங்கமணிகளிடம் பிரயோகித்து உடலைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டாம்..

தொடர்பதிவு போடுவோர் வரவேற்கப்படுகிறார்கள்!

Saturday 29 August 2009

கொஞ்சம் தேநீர்-மரணத்தைத் தூக்கிலிட்டேன்!

image

அன்று மரணம்

வந்திருந்தது!

யாருமற்ற மாலையில்

என் புலன்களின்

முடிச்சுகளை

மெதுவாக அவிழ்த்து

பரவிப் படர்ந்தது!

 

இருளைப் போர்த்தி

இருந்த அதன்

நிர்வாணம் கிளர்ச்சியூட்டுவதாக

இருந்தது!

 

களவின் சுவையைக்

காற்றில் பரப்பி

உடலெங்கும் வியாபித்த

அதன் வெம்மையின் பிடி

இறுகத்தொடங்கியது.

 

துணையற்ற இரவில்

கிளைத்த என்

உணர்வுகளின் வேகம்

பரவிப்படர்ந்தது

மெதுவாக

மரணத்தை நோக்கி!

 

ஒரு கணத்தின் முடிவில்

சிதறிக்கிடந்த

என் புலன்களைச்

சேகரித்து

உருவம் திரும்பினேன்.

 

மீதமிருந்த என்

உயிர் திரட்டி

தூக்கிலிட்டேன் மரணத்தை!

---------------------------------------------------

படமும் படைப்பும்,

தமிழ்த்துளி தேவா.

----------------------------------------------------

Friday 28 August 2009

அழகாக இருக்க!- 12 வழிகள்!

image

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும். 

Thursday 27 August 2009

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!

சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.

இஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.

நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

 மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:

அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

Wednesday 26 August 2009

கொஞ்சம் தேநீர்-உனக்காக!!

கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்!!கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !

Monday 24 August 2009

ஜாக்சன் எதனால் இறந்தார்?

மைக்கேல் ஜாக்சன் மரணம் ஒரு எதிர்பாராத நிகழ்வாக முடிந்துவிட்டது. அவரின் திடீர் மரணம்  அவரின் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எப்படி இந்த மரணம் ஏற்பட்டது? இதற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இதனை ஆராய்வது ஜாக்சன் இறந்தது எப்படி? என்று கண்டுபிடிப்பதைவிட நாம் அறியாத சில( அறியவேண்டிய!!) விசயங்களுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. இந்த செய்திகள் தமிழ் மக்களாகிய நமக்குப் புதிது.

ஜாக்சனின் மருத்துவ அறிக்கை ஜாக்சன் அதிக போதை மருந்துகள் உட்கொண்டார் என்று சொல்கிறது. ஒரு மிகப்பெரிய கலைஞனை நாம் போதைப் பழக்கத்தால் இழந்துவிட்டோம் என்பது மிகப்பெரிய சோகம்.

ஜாக்சன் ஏன் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டார்? ஜாகசன் இசைத்துறைக்கு வருவதற்கு முன்பே போதைக்கு அடிமையா? என்ற கேள்விகள் நம்முன் எழாமல் இல்லை.

ஜாக்சன் இறந்த அறையில், ஊசிமருந்துக் குழாய்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஊசி மருந்துகள் காணப்பட்டுள்ளன. இது ஜாக்சனுக்கு மட்டுமல்ல..தற்போது மேற்கத்திய இசைத்துறையில் காணப்படும் சாதாரண நிலைமை ஆகும்.

ஜாக்சன் புரோபஃபால் என்ப்படும் மருந்தை அதிக அளவில் உபயோகித்துள்ளார். இந்த புரோபஃபால் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும்  மயக்க மருந்து ஆகும்.

டிப்ரிவின்(Diprivan, or Propofol) என்ற பெயரில் பிரபலமாக உள்ள ப்ரொபஃபால், மில்க் ஆஃப் அம்னேஷியா என்றும் அழைக்கப்படுகிறது. பால் போல் இருக்கும் இதனை உறக்கம் வராமல் இருக்கும் அம்னேஷியாவிற்குக்கூட உபயோகப்படுத்துகிறார்கள்.

ஈபே( e bay) எனப்படும் ஆன்லைன் ஏல நிறுவனம் கூட இந்த மருந்தை விற்றுள்ளது என்றால் நமது சர்வதேச போதை  தடுப்புத்துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்று பாருங்கள்.

76% மேல் அமெரிக்க மக்கள் கஞ்சாவின் பல்வேறு வடிவ போதை மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.15.9மில்லியன் 12 வயதுக்கு மேற்பட்டோர் போதை மருந்து உட்கொள்கிறார்கள். 8வது கிரேட் மாணவர்களில் 35%பேர் போதை மருந்தை உட்கொண்டுள்ளனர்.

உங்கள் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும் காவல் போதை தடுப்புத்துறையினர்

1. சினிமாத்துறை

2. ஆடை பேஷன் துறை

3. மாடலிங் துறை

4. இசைத்துறை

ஆகியவற்றில்  புரளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதைப் பொருட்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஏர்போர்ட்டில்  மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா?

பொதுவாக இதனை ஆராய்ந்தால் மேலை நாட்டுப்பாடகர்களில் போதைப் பழக்கம் மிக அதிகம் என்பது தெரிகிறது. எல்லாத்துறைகளிலும் போதைத்தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டுவரும் சர்வதேச அமைப்புகள் பாடகர்கள் மேடையில் நிகழ்ச்சிகள் செய்யும் முன் சோதனை செய்வதில்லை. இந்தச் சோதனையை எல்லாத்துறையில் உள்ளோரிடமும் அடிப்படைச் சோதனையாக  செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரபலங்களின், பாடகர்களின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

Sunday 23 August 2009

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?-2

சக்கரை நோயாளிகள் பழம் சாப்பிடலாமா? என்ற இடுகையின் தொடர்ச்சியாக இதனை எழுதுகிறேன். முதல் இடுகையை கீழே தட்டி படிக்கலாம்.
 
சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.

வாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல, ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.

பப்பாளி: பப்பாளியில் விட்டமின் ’ஏ’ அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.

ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லி: விட்டமின் ‘சி’ இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும், அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.

ஜூஸ்:

சிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.

1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.

2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.

3.விட்டமின்களும் வீணாகின்றன.

சக்கரை சேர்க்காத பழரசங்கள்:

இவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்.

கர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.

மேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.

காலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.

நூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:

பழம் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து கலோரி
ஆப்பிள் 19 கிராம் 0.36கிராம் 3.3 கிராம் 72
சாத்துக்குடி 7.06 0.47 1.9 20
பப்பாளி 13.7 0.85 2.5 55
தர்பூசணி 11.6 0.94 0.6 46
ஆரஞ்சு 15.4 1.23 3.1 62
மாதுளை 26 1.46 0.9 105
அன்னாசி 19.6 0.84 2.2 74
எலுமிச்சை 7.8 0.92 2.4 24

 

மதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.

இரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.

இப்படி உண்டால் மாவுசத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள்,தாது உப்புக்களும் கிடைக்கின்றன. வயிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.

உங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்.

Saturday 22 August 2009

குமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி!!..

பன்றிக்காய்ச்சல் பற்றிப் புதிய தகவல்களை தொடர்ந்து எழுதியதால்  குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து என்னை அணுகி அதுபற்றி இந்த குமுதம் ரிப்போர்ட்டரில் பேட்டி வெளியிட்டுள்ளார்கள். 

.image.

.image

.. .

image

.உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

தமிழ்த்துளி தேவா.

Friday 21 August 2009

செமென்யா ஆணா? பெண்ணா?

 

தென்னாப்பிரிக்க வீராங்கணை கேஸ்டர் செமன்யா

Caster Semenya of South Africa celebrates after she won the women's 800 metres final during the world athletics championships at the Olympic stadium in Berlin.

தென்னாப்பிரிக்காவின் கேஸ்டர் செமென்யா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை செய்திருக்கிறார்.

உலகமே வியக்கும் வண்ணம் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 1:55.45 என்ற நேரத்தில் பெர்லினில் உலக சாதனை செய்திருந்தாலும் IAAF அவருடைய பாலினம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. ஏனெனில் அவர் உடலில் ஆண் தன்மை ( மீசை போன்றவை, குரல்,தசை அமைப்பு) காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் இதற்கு போதிய வசதியில்லை என்று கூறப்படுகிறது. அதுவே இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம்.

ஏன் சோதனையில் குழப்பம்.?

பொதுவான விதி என்னவென்றால்

1. X X குரோமோசோம்கள் இருந்தால் ஆண்

2. X Y  குரோமோசோம்கள் இருந்தால் பெண்

ஆனாலும் இது பொதுதான். இதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன!! குழப்பங்களுக்குக் காரணம் அதிகமாகவோ,குறைவாகவோ சில குரோமோசோம்கள் சிலருக்கு பிறவியிலேயே இருந்துவிடுவதுதான். இப்படி அமைந்து விட்டால் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

ஆயினும் இந்த வீராங்கனையை வளர்த்த அவருடைய பாட்டி ”அவள் பெண்தான். இதில் சந்தேகம் ஏதுமில்லை” என்று உறுதியாகக் கூறுகிறார்.

தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் சங்கத்தலைவர் சாம் செமென்யா இப்படி நடத்தப்படுவதை கண்டணம் செய்துள்ளார். ஒரு மிகப்பெரிய போட்டியில் வெற்றி பெறும்போது இப்படி செய்வதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

”அவர் அயராது பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் இந்தக்கல்லூரிக்கு வருமுன் அவருக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை” என்று கூறும் அவர் படிக்கும் பிரிட்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் செமென்யாவின் தந்தை ”செமன்யா பிறக்கும்போது பெண்ணாகத்தான் பிறந்தார், வளர்ந்ததும் அப்படித்தான் என்று கூறுகிறார். அவள் பெண்தான்! இதனை நான் இலட்சம் முறை சொல்லுவேன்.தயவு செய்து என் மகளை விட்டுவிடுங்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக்கூறியுள்ளார்.

இது மருத்துவதுறையில் உள்ளோர், மரபணுத்துறையினர், எண்டோக்ரைன் சுரப்பி நிபுணர், என்று பலரும் சோதித்து முடிவு செய்யவேண்டிய விசயம். அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே செய்திருக்கலாம்.

ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன்  சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். 

Thursday 20 August 2009

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.

சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?

இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்: சாப்பிடக்கூடாத பழங்கள்:
1.ஆப்பிள் 1.மாம்பழம்
2.ஆரஞ்சு                                         2.வாழை
3.சாத்துக்குடி 3.பலாப்பழம்
4.மாதுளை 4.சப்போட்டா
5.கொய்யா 5.திராட்சை
6.பப்பாளி 6.சீதாப்பழம்
7.தர்பூசணி  
8.அன்னாசி  
9.எலுமிச்சை  
10.தக்காளி  
11.நெல்லிக்காய்  

        

2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.                                         

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.

4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.

5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

Wednesday 19 August 2009

மிட்ஷெல் ஒபாமா சிற்றுடை-பரபரப்பு!!

மிட்ஷெல் ஒபாமா கவர்ச்சிகரமாக? உடையணிந்து வந்தார் என்று ஒரு பரபரப்பு.

பொதுவாக பிரபலங்கள்,பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் கறைகள் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. இது அனைத்து நாட்டிலும் உள்ள மரபு.

அதை அவ்வப்போது உடைத்து சில பிரபலங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

டயானா போன்ற பிரபலங்கள் இதில் அடக்கம். அவை டயானா போன்றோருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அரசியல் வட்டத்தில் விரும்பப்படவில்லையெனினும் அவை பொதுமக்களிடையே ஒரு நடிகையைவிட அதிக செல்வாக்கைப் பெற்றுத்தந்தது உண்மை.

மிட்ஷெல் ஒபாமா கிராண்ட் கான்யான் என்ற அரிசோனாவில் உள்ள சுற்றுலாத்தலத்துக்கு வந்தார். வரும்போது தொடைகள் தெரியும் வண்ணம் குட்டை நிஜார் அணிந்து வந்துள்ளார்.First lady Michelle Obama and daughter Malia Obama, walk off ...

 

.President Barack Obama with first lady Michelle Obama, and daughters ....

.First lady Michelle Obama arrives Sunday, Aug. 16, 2009, at ....

.U.S. President Barack Obama, first lady Michelle Obama and their ....

பார்த்தீர்களா படங்களை. இதனைப் பத்திரிக்கைகள் விமரிசனம் செய்துள்ளன. உலகின் மிகப்பெரிய வல்லரசின் முதல் பெண்மணி இப்படி உடை நாகரீகத்தைக் காற்றில் விட்டதை  அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

தமிழ்த்துளி தேவா.

Tuesday 18 August 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்!!

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி இங்கிலாந்தில் முதல் கட்டமாகப் போடப்படப்படும் என்று தெரிகிறது.

இந்த தடுப்பூசியில் தையோமெர்சால் என்ற பாதரசப்பொருள் உள்ளது. அது குழந்தைகளுக்கு ஆபத்தானது. கர்ப்பிணிகளுக்கும் போடக்கூடாது. ஏனெனில் இது குழந்தைகளில் நரம்புக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதேபோல் செயலிழக்கப்பட்ட வைரஸ்தான் தடுப்பூசிமருந்தில் இருக்கும்!!! ஆம்! இதுதான் நம் நோய் எதிர்ப்புசக்தியை மட்டும் தூண்டும். ஆனால் நோயை உண்டாக்காது( கொஞ்சம் தவறினால்?).

இந்த தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தவும் செய்யலாம். அதற்கு அதில் சேர்க்கப்படும் ஸ்குவாலின் என்ற பொருளே காரணம் என்கிறார்கள்!!

இன்னும் இதுபோன்ற நிறையத்தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன!!

அவற்றைப்படித்து தெளிவு பெறுங்கள்!!http://www.organicconsumers.org/articles/article_18720.cfm

.http://www.prisonplanet.com/washington-post-swine-flu-vaccine-will-contain-mercury.html

http://www.examiner.com/examiner/x-6258-Huntsville-Natural-Parenting-Examiner~y2009m8d6-Swine-Flu-vaccine-contains-diseased-flesh-of-African-monkeys

http://www.telegraph.co.uk/health/swine-flu/6029856/Parents-are-worried-about-the-swine-flu-vaccine.html

தமிழ்த்துளி தேவா..

Sunday 16 August 2009

மூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்!!

 
15.8.2009 ஆக இருந்த மணற்கேணி 2009
 
போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...

Manarkeni 2009
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது

மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....
இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...

 

புதியவர்களுக்கு என் பழைய இடுகையில் போடப்பட்டிருந்த போட்டி குறித்த முழுத் தகவல்கள் கீழே:-

Wednesday, 1 July 2009

போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம் …

கீழ்வரும் தலைப்புகளில் எழுதவேண்டும்...

போட்டித் தலைப்புகள்
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  science@sgtamilbloggers.com
1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை
2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)
4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்
5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்
6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  literature@sgtamilbloggers.com
1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை
2) மொழி/நிலம் சார்ந்த அறிவு
3) திணையும், நிலமும்
4) தமிழர் இசை
5) குறளில் மேலாண்மை
6) சங்கம் மருவிய காதல் இன்று
7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு

படைப்புகள் இந்தத் தலைப்புகளில் எழுதவேண்டும்!மேலும் அறிய மணற்கேணி

என்ன மக்களே சிங்கப்பூர் செல்ல தயாரா?

-----------------------------------------------------------------

என் பழைய கவிதை ஒன்று படிக்க

கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட

கோலம்!!

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!


தமிழ்த்துளி தேவா..

Saturday 15 August 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

In this photo taken Wednesday, July 22, 2009 released by China's Xinhua newsஇந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம் அதிர்ச்சியூட்டும்  தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.

இந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.

இந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.

இதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது

1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

2.500 பேருக்கு GBS தாக்கியது.

3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.

தற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.

அதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு  இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.

மேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.

ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா?

தமிழ்த்துளி தேவா.

கொஞ்சம் தேநீர்-உனக்காக!

கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!

 

விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!

 

உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்!!

 

கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !

Friday 14 August 2009

பன்றிக்காய்ச்சல்-புதிய மருந்து!

பன்றிக்காய்ச்சல் பற்றிப் பல விசயங்களை அவ்வப்போது பலரும் பதிந்து கொண்டு இருக்கிறோம். அது பற்றிய புதிய தகவல்கள் சிறிதாயினும் அனைவரையும் சென்றடைவது அவசியம்.

டாமிஃப்ளூ மாத்திரையை 48 மணி நேரத்துக்குள் சாப்பிட்டால் வைரஸின் பெருக்கம் தடைபடும் என்று கண்டோம்.

கீழே பழைய இடுகைகள்:

1.பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!
 
2.பன்றிக் காய்ச்சல்-2

 

தற்போது புதிய மருந்து ஒன்றை உபயோகிக்கலாம் என்று புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

பாஸ்போ ஆண்டிஜென்(phosphoantigen) என்ற இந்த மருந்து எலும்பு வியாதியான ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுவது.

டாமிஃப்ளூ - வைரஸின் பெருக்கத்தைக்குறைக்கும் தன்மையுடையது.

ஆனால் பாஸ்போஆண்டிஜென்கள் வைரஸ் பாதித்த செல்களை அழித்துவிடுகின்றனவாம். இதனை எப்படி செய்கிறது என்றால் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் ஒரு பிரிவை இது பல்மடங்கு பெருகச்செய்துவிடுகிறது.

இந்த வெள்ளை அணுக்கள் பெருகி வைரஸ் பாதித்த செல்களை சாப்பிட்டுவிடுகிறதாம். இந்த வெள்ளை அணுக்கள்தான் உடலின் சாதாரண நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பவை.

இதே H1 N1 வைரஸால் 1918ல் ஸ்பெயினில் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவினால் 50மில்லியனிலிருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர்.

ஆயினும் தற்போது வந்துள்ள பன்றிக்காய்ச்சல் ஸ்பானிஷ் ஃப்ளூ போல் கொடுமையானது அல்ல என்பது ஒரு ஆறுதலான விசயம்.

Thursday 13 August 2009

இழந்த காதலை மீட்க 10 யோசனைகள்!!

அன்பு நண்பர்களே!!

clip_image002

காதல்! காதல்!! காதல்!!! இந்த மூன்றெழுத்துச் சொல் படுத்தும் பாடு இருக்கிறதே!! அதனை நாம் எழுத்தில் வடித்துவிட முடியாது.

அப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.

பிரிவுக்கு என்ன காரணம் என்று நிறைய நேரங்களில் இருவருக்குமே புரியாது. சூழ்நிலைகள் அதுபோல் அமைந்து இருக்கும்.  ஆயினும் உங்கள் மனமோ இன்னும் அவரை விரும்புகிறது. என்ன செய்வது? காதலில் பிரிவு நிரந்தரம் இல்லை. மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில வழிகள் உள்ளன. அவற்றைக் கவனமாக பயன்படுத்தவும்..

1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும்.

வாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது.

2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி? நலமா? என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது.

3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ  வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை  ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும்.  அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.

4.எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன? பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” என்ற செய்தியை உங்கள் வாழ்த்தும் செய்கைகளும் அவ்ளை உங்கள் வசம் திருப்பும்.

5.உங்கள் எக்ஸ் உண்மையில் காதலில் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளவும். அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும்.

6.நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள். அடுத்த நபர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆத்திரமாகத்தான் இருக்கும். மனதை அடக்குக.. உங்கள் பொறாமை வெளியே தெரியக்கூடாது.. பொறாமைப்படாதீர்கள்.

7.உங்கள் எக்ஸ் லவர் நட்பு வட்டத்தில் எப்படிப் பழகுகிறார்கள் என்று விசாரிக்கவும்..” அவள் உன்மேல் குறையில்லைன்னு சொல்றாளாம் மாப்ஸ்”- ஓகே!! இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு!!!!

அலட்சியமாகவும், எதிர்மறைப்பேச்சாகவும் இருந்தால் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். இப்போது நடவடிக்கை எதுவும் வேண்டாம்.

8.உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி ஆறுதல் பெற வேண்டாம். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். கொஞ்சம் பொறுமையாகவும் இருங்கள்.

9.உங்கள் எக்ஸ் மேல் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி பிரிவின் காரணம் அவர்தான் என்று பழிபோட வேண்டாம். அது அவர்களை மிகவும் காயப்படுத்திவிடும். மீண்டும் சேர வாய்ப்புகள் குறைந்துவிடும்.

10.உடைந்து போய் விட வேண்டாம். ஏற்கெனவே ஒருவரைக் கவர்ந்து விட்டீர்கள். ஆகையால் நீங்கள்  காதலில் பாஸ்தான். பிரிவு இயல்பாக வருவது. ஆகையால் தளர வேண்டாம். விளையாட்டு , உடற்பயிற்சி என்று இன்னும் கவர்ச்சிகரமாக மாறுங்கள். உங்கள் எக்ஸின் பார்வை கட்டாயம் உங்கள்மேல் திரும்பும்.

இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட அவரவற்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் உபயோகித்து வெற்றியடையுங்கள்!

தமிழ்த்துளி தேவா.

Tuesday 11 August 2009

பன்றிக் காய்ச்சல்-2

நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் தற்போது முன்னைவிட தீவிரமாகப் பரவி வருகிறது.

 

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? இதை வருமுன் தடுக்கமுடியுமா? போன்ற கேள்விகள் நிறைய எழுபியுள்ளன. முதல் பதிவில் உள்ளவற்றை நான் இங்கு எழுதவில்லை. மிகவும் சுருக்கமாகவே இப்பதிவை எழுதியுள்ளேன்.

பன்றிக்காய்ச்சல் முதல் பதிவை படிக்கவிரும்புவோர்
 
பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! 

படிக்கவும்!!

முதல் பதிவின் பின்னூட்டத்தில் நம் நண்பர்கள் இது தொடர்பாக தொடர்ந்து செய்தி தரக்கோரி இருந்தனர் அவற்றுக்கான சில பதில்கள்:

Blogger 1.S.A. நவாஸுதீன் said...

ரொம்ப தேவையான பதிவு தேவா சார். ரொம்ப நன்றி. இதன் தொடர்ச்சியாக கிடைக்கும் அணைத்து தகவல்களையும் உங்கள் பதிவில் வெளியிட்டால் ரொம்ப நல்லது.///

நன்றி நண்பரே!! அதற்காகவே இச்சிறு பதிவு.

Blogger 2.மாசற்ற கொடி said...

Thanks Doctor. Pls. keep us updated if there is some other precation that we can take.
Anbudan
Masatra Kodi///

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!!1

Blogger 3.உமா said...

மிக அவசியமான பதிவு டாகடர். சென்னையில் இப்போது பரவிவருவதால் பயமாகத்தான் இருக்கிறது. இப்போது இங்கு climate change ஆகி வருவததால் சாதாரண throat infection அல்லது ஜுரம்வந்தால் எரித்திரோமிசின் குரோசின் போட்டுக்கொள்ளலாமா? அலலது எப்போதும் போல்டாக்டரரிடம் போவதே சரியா? [தானாக மருந்து சாப்பிடுதுதவறுதான். டாக்டரிடம்கூட்டமாகஇருப்பதால் பயமாகஉள்ளது.]///

நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. சரியாகவில்லையெனில் மருத்துவரிடம் செல்லலாம். கூட்டத்தில் இருப்பதைத்தவிர்ப்பதும் நல்லது.

Blogger 4.சுந்தர் said...

இதுக்கு தடுப்பு ஊசி இன்னும் வரலையா டாக்டர் ?///

மேலும் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

இது தொடர்பாக சில தகவல்களைப் பார்ப்போம். இவற்றைக் கேள்வி பதில் வடிவில் தந்துள்ளேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேட்கவும்.

1.இதிலிருந்து தப்ப தடுப்பூசி உள்ளதா?

தடுப்பூசி இல்லை.

2.யாருக்கு தடுப்பு முறைகள் அவசியம்?

அ.தற்போது நோய் கண்டவரின் குடும்பத்தினர்

ஆ.நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர்,பணியாளர்.

3.எப்போது நோய் பரவும்?

நோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள்வரை பரவும்.

4.தடுப்பு மருந்து உள்ளதா?

நோயாளிகளுக்கு உபயோகிக்கும் டாமிஃப்ளூ TAMIFLU(oseltamivir) மருந்தே இதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

5.டாமிஃப்ளூ எவ்வாறு செயல்படுகிறது?

இது வைரஸின் பெருக்கத்தைத் தடுத்துவிடுகிறது. அதனால் வைரஸ் இனப்பெருக்கம் செய்யமுடியாது. உடலின் பல செல்களையும் பாதிக்க முடியாது.

6.டாமிஃப்ளூ எப்போது நன்கு செயல்படும்?

வைரஸ் உடலுக்குள் நுழைந்த 48 மணிநேரத்திற்குள் நன்கு செயல்படும். அதன் பின் உபயோகித்தால் வைரஸ் பல்கிப்பெருகி உடலின் பல செல்களைத்தாக்கி இருக்கும்.

7.மருந்தின் அளவு மற்றும் காலம் எவ்வளவு?

டாமிஃப்ளூ 75மிகி பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து குறையும். 1 வயதுக்குக் கீழ் சாதாரணமாகக் கொடுப்பதில்லை. ஆயினும் நோயின் வீரியம் அதிகமானால் கொடுக்கப்படுகிறது.

8.டாமிஃப்ளூவின் பக்கவிளைவுகள் என்ன?

குமட்டல்,வாந்தி, பேதி,வயிற்றுவலி,தலைவலி, ஒவ்வாமை, மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்குள்ள அனைத்தும்.

இளைஞர்கள் மனநிலையில் விபரீதமான மாற்றங்களை விளைவிக்கலாம்.

9.இதுவரை டாமிஃப்ளூ எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது?

1999 லிருந்து 50 மில்லியன் மக்கள் உபயோகித்துள்ளனர்.

10.இந்தியாவில் மருந்து எங்கு கிடைக்கிறது?

அரசு மருத்துவமனைகளில்  கிடைக்கிறது. டாமிஃப்ளூ குறைந்த அளவே உள்ளது. 2 கோடி டாமி ஃப்ளூ மாத்திரைகளை கையிருப்பில் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

---------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களே!!

நம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது!! யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்!!http://adiraijamal.blogspot.com/..

--------------------------------------------------------------------------

Monday 10 August 2009

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!

அன்பு நண்பர்களே!!

பன்றிக்காய்ச்சலில் உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தியாவிலும் இன்றைய தினமே இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2. எப்படிப் பரவுகிறது?

சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.

         1.இருமல்

         2.தும்மல்

         3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல்         கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.

3.இதன் அறிகுறிகள் என்ன?

  காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.

சிகருக்கு வாந்தி,பேதி வரலாம்.  

4.நோயின் வீரியம் ?

நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.

கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்

அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.

ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

இ.கர்ப்பிணிகள்

ஈ.நீரிழிவு நோயாளிகள்

உ.இதய நோயாளிகள்

ஊ.ஆஸ்துமா

எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

5.நோய் பரவும் காலம்?

நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.

6.காத்துக்கொள்வது எப்படி?

அ. மூக்கு வாய் பகுதையை  இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .

ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.

இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள். 

ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும்   வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.

ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள்  கழுவவும்.

7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:

அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்

ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.

இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.

உ.அதிக வாந்தி

ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது

எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.

ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.

8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:

அ. மூச்சுவிடச்சிரமம்.

ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்

இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்

ஈ.நிற்காத வாந்தி

உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்

9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?

தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.

10.இந்த கிருமி எப்போது அழியும்?

75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.

மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.

11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?

சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.

12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?

குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.

13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?

சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.

14.முடிவாக சில குறிப்புகள்

1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.

2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.

3.தண்ணீர் நிறைய அருந்தவும்.

4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.

5.மது அருந்தவேண்டாம்.

6.உடற்பயிற்சி செய்யவும்.

7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்.

Saturday 8 August 2009

சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!

அன்பு நண்பர்களே!!!

எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல்  நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.

2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.

3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள்  வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.

4.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு  சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)

5.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.

6.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.

7.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.

8.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.

9.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.

10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.

      நிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

தமிழ்த்துளி தேவா.     

Friday 7 August 2009

புற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி!!

நவீன மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. வியாதிகளும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் நாம் அறிந்தால் நிச்சயம் நாம் அவற்றில் பாதியையாவது நாம் தடுக்க முடியும். இந்த ஊசியைப்போட்டு இருந்தால் எனக்கு இந்தப் புற்றுநோய் வந்து இருக்காதே என்று வருந்தும் நிலை யாருக்கும் வரக்கூடாது.

புற்றுநோயைத் தடுக்கும் ஊசி இருக்கிறதா? என்று கேட்கிறீர்களா? ஆம் உள்ளது.

பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.

ஆண்டுதோரும் 74000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.

இந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர்.இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.

இதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் Pap Smear பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.

நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.

H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.

------------------------------------------------------------------------------

விஜய், அஜீத் கண்டுபிடியுங்கள்!

போன இடுகையின் அனைத்துப் படத்தையும் சரியாகக் கண்டு பிடித்து சொன்னவர்:

1.S.A. நவாஸுதீன்.

இரண்டாவது 7 கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னவர்:

2.தமிழரசி

நவாஸுதீனுக்கும் தமிழரசிக்கும் வாழ்த்துக்கள்!!

முடிவுகள்:

1 . சூர்யாimage 2.பிரபுதேவாimage 3.அஸின்image
4.விஜய்image


5.மாதவன்image 6.அஜீத்image
7.விஷால்image 8.சரத்image 9.விக்ரம்
image

10.ஐஸ்வர்யாimage 11.த்ரிஷா
image

 

----------------------------------------------

 

தமிழ்த்துளி தேவா..

___________________

Wednesday 5 August 2009

விஜய், அஜீத் கண்டுபிடியுங்கள்!!

அன்பின் வலை நண்பர்களே!!

தொடர்ந்து மருத்துவப் பதிவுகளும் விழிப்புண்ர்வுப் பதிவுகளும் போடுவது நம் சங்க விதிகளுக்கு ஒத்து வராது என்பதாலும்,  அன்பு சங்க நண்பர்களின் வேண்டுகோளினாலும்(போன்,ஈமெயில், மிரட்டல்களாலும்!!!!!) மொக்கை என்ன போடுவதுன்னு யோசித்து மூளைக்கு வேலை கொடுக்கும் அபாரமான பதிவைக் கண்டுபிடித்துவிட்டேன்.

சிங்காரவேலன் படத்தில் கமலிடம் பூவிலே குண்டுப்பூ குஷ்பூவின் சின்ன வயதுப் படம் இருக்கும். அதை வைத்து தற்போது குஷ்பூ எப்படி இருப்பார் என்று கண்டு பிடிப்பார்கள்.

அதுபோல் இங்கு 11 நட்சத்திரங்களின் படங்கள் கொடுத்துள்ளேன். அது யார் யாருடைய படம் என்று சொல்ல வேண்டும்.

விஜய், அஜீத்,சூர்யா,விக்ரம்,மாதவன்,பிரபுதேவா,விஷால்,அசின்ஐஸ்வர்யா ராய்,சரத்குமார், திரிஷா ஆகியோரின் படங்கள்தான் அவை.

-------------------------------------------------------------------------------

1........................ clip_image002

-------------------------------------------------------------------------------

 

2...........................................clip_image002[4]

-------------------------------------------------------------------------------

3..

............................clip_image002[6].

-------------------------------------------------------------------------------.

4...........................clip_image002[8]..

-------------------------------------------------------------------------------

5....................................clip_image002[10]

------------------------------------------------------------------------------

6...........................clip_image002[12]

------------------------------------------------------------------------------

7..............................clip_image002[14]

-----------------------------------------------------------------------------

8......................................clip_image002

-------------------------------------------------------------------------------

9.......................................clip_image002[16]

--------------------------------------------------------------------------------10...........................clip_image002[18].

----------------------------------------------------------------------------

11............................clip_image002[20].

-------------------------------------------------------------------------------

என்ன கண்டுபித்துவிட்டீர்களா?

தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory