Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Tuesday, 3 March 2015

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!


நோய்க்குறிகள்
சாதாரண சளி
பன்றிக்காய்ச்சல்
.
காய்ச்சல்
காய்ச்சல் பெரும்பாலும் குறைவு.
80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
.
இருமல்
இருமலும் நல்ல சளியும் இருக்கும்.
சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.
.
உடல் வலி
உடல் வலி மிதமாக இருக்கும்.
கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
.
மூக்கடைப்பு
மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம்
குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வு
உடல் சோர்வு குறைவாக இருக்கும்.
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல்
தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம்.
சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும்.
இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
.
தலைவலி
சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது.
பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
.
நெஞ்சில் பாரம்,வலி
சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது.
பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.



பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்.


Friday, 27 February 2015

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!


பன்றிக்காய்ச்சல் மறுபடியும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் மறு பதிவாக இதனை பதிவிடுகிறேன்.
 பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.
1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.
2. எப்படிப் பரவுகிறது?
சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.
         1.இருமல்
         2.தும்மல்
         3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல்         கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.
3.இதன் அறிகுறிகள் என்ன?
  காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.
சிகருக்கு வாந்தி,பேதி வரலாம். 
4.நோயின் வீரியம் ?
நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.
கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்
அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.
ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.
இ.கர்ப்பிணிகள்
ஈ.நீரிழிவு நோயாளிகள்
உ.இதய நோயாளிகள்
ஊ.ஆஸ்துமா
எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.
5.நோய் பரவும் காலம்?
நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.
6.காத்துக்கொள்வது எப்படி?
அ. மூக்கு வாய் பகுதையை  இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .
ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.
இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள்.
ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.
உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும்   வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.
ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள்  கழுவவும்.
7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:
அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்
ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.
இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.
உ.அதிக வாந்தி
ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது
எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.
ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.
8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:
அ. மூச்சுவிடச்சிரமம்.
ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்
இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்
ஈ.நிற்காத வாந்தி
உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்
9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?
தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.
10.இந்த கிருமி எப்போது அழியும்?
75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.
மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.
11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?
சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.
12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?
குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.
13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?
சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.
14.முடிவாக சில குறிப்புகள்
1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.
2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.
3.தண்ணீர் நிறைய அருந்தவும்.
4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.
5.மது அருந்தவேண்டாம்.
6.உடற்பயிற்சி செய்யவும்.
7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்.

Monday, 30 April 2012

டெங்கு காய்ச்சல்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.
1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?
டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.
2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
  • திடீர்க் காய்ச்சல்,
  • தலைவலி,
  • தசைவலி,
  • மூட்டுவலி,
  • கண் பகுதியில் வலி 
  • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
  • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
  • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
  • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்
3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?
  • அதிக காய்ச்சல்
  • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு
4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?
  • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.
5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?
  • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
  • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை
6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?
  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்

Saturday, 18 September 2010

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

நோய்க்குறிகள்

சாதாரண சளி பன்றிக்காய்ச்சல் 
.
காய்ச்சல் காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். 
.
இருமல் இருமலும் நல்ல சளியும் இருக்கும். சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். 
.
உடல் வலி உடல் வலி மிதமாக இருக்கும். கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். 
.
மூக்கடைப்பு மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். 
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம் குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. 
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வு உடல் சோர்வு குறைவாக இருக்கும். 
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல் தும்மல் சாதாரணமாகக் காணப்படும். 
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம். சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். 
.
தலைவலி சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். 
.
நெஞ்சில் பாரம்,வலி சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.
     

பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!

மேலும் பன்றிக்காய்ச்சல்பற்றி அறிய கீழுள்ள என் இடுகைகளைப் படிக்கவும்!

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !

Tuesday, 22 September 2009

கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!!

 

முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்,

கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்,

தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்,

புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்,

உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்,

நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்,

உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!

Friday, 11 September 2009

கொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

வானவெளியையும்
நட்சத்திரங்களையும்
தாண்டி
என் கண்ணீர் உன்னை
அடையும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!

Wednesday, 26 August 2009

கொஞ்சம் தேநீர்-உனக்காக!!

கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!



விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!



உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்!!



கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory