உலக வெப்பமயமாதல், அதிக எரிசக்தி உபயோகித்தல், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவை தற்போது மிகப் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. பெரிய தொழிற்சாலைகள், வாகனங்கள் இவற்றால்தான் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாமல் இதில் நம் பங்கு என்ன? என்று யோசித்து ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று சில யோசனைகள் கீழே தொகுத்துள்ளேன்.
1.குளிக்கும் போது ஷவர் உபயோகித்தால் நல்ல நவீன ஷவர் வாங்கி உபயோகிக்கவும். இதனால் தண்ணீர் 60% குறைகிறதாம்.
2.பினைல் போன்றவை தவிர்த்து பேகிங் சோடா, உப்பு,வினிகர் போன்றவை கொண்டு வீட்டைத் தூய்மைப் படுத்தலாம்.
3.எனர்ஜி ஸ்டார் முத்திரையுள்ள மின் சாதனங்களை உபயோகித்தல் மிகவும் நல்லது.
4.வீட்டில் செடிகள் நிறைய தொட்டிகளில் வளர்க்கலாம்.
5.கம்பியூட்டரை எப்போதும் ஆனில் வைத்திருக்கக் கூடாது. அணைத்து வைத்துத் தேவைப்படும்போது உபயோகித்தால் நிறைய மின்சாரம் மிச்சமாகும்.
6.15 நிமிடத்துக்கு மேல் அறையைவிட்டு வெளியில் வந்தால் மின் விளக்குகளை அணைத்துவிடவும்.
7.கம்பியூட்டருக்கு எல்.சி.டி. மானிட்டர் மாற்றவும். சி.ஆர்.டி மானிட்டரைல் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரம் இதற்குப்போதுமானது.
8.மின் விளக்குகளை சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி மின் விளக்குக்களாக மாற்றவும்.
9.தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன.
10.குளிர்ந்த நீரில் துணி துவைக்கவும். மிஷினில் துவைத்தால் 85% சக்தி விரயம் ஏற்படுகிறதாம்.
இவற்றுடன் உங்கள் குழந்தைகளுக்கு சக்தியை சேமிக்கவும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவும் கற்றுக்கொடுங்கள்.
21 comments:
எளிமையான வழிமுறைகள்தான்!!!
பின்பற்றலாம்.
தேவையான பதிவு ..
அருமை மருத்துவரே!!
உபயக பதிவு .
1 - ஆர்வம்
10 - ரொம்ப கஷ்டம்
நன்றி மருத்துவரே...
கடைபிடிக்க முடிந்த விஷயங்கள்தான் அனைத்தும்.
நல்லவழிமுறைகள்.
முடிந்தவரை கடைப்பிடித்து வருகின்றோம்.
நல்லாத்தான் இருக்கு அந்த 10ஆவதை தவிர. :-))
மின்சார சிக்கனம், தண்ணீர் சிக்கனம் பற்றி கண்டிபாக விழிபுணர்வு தேவை.
யார் இப்ப கம்யுட்டர ஆஃப் பண்றாங்க , அப்படியே அதிலே படுத்து தூங்கினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.முடிந்தவரை நாம் சொல்லி கொண்டே இருப்போம், சில பேராவது கடைபிடிக்கட்டும்
அருமை மருத்துவரே!!
எல்லோருக்கும் பயன்படக் கூடிய - கட்டாயம் பயன் படுத்த வேண்டிய - பதிவு.
சைவகொத்துப்பரோட்டா said...
எளிமையான வழிமுறைகள்தான்!!!
பின்பற்றலாம்///
எளிய வழிதான் முயற்சிசெய்வோம்!!
முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான பதிவு ..
அருமை மருத்துவரே///
நன்றி குணா!!
good post.. a very useful post.. a must read..
keep sharing such wonderful details!
சூப்பர் பதிவுங்க.
நல்ல நல்ல தகவல்கள்.
நல்ல ஆலோசனைகள். நன்றி.
இதனுடன் தொடர்புடைய பதிவு - பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)
எளிய விஷயங்கள்; நினைவு வைத்து செய்ய வேண்டும். நன்றி டாக்டர்!!
."தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன".
ஆளும் கட்சி.எதிர் கட்சி, அவற்றுக்கு நிதி கொடுக்கும் பன்னாட்டு பகாசுரன் எல்லாரும் மினரல் வாட்டர் விக்காங்க.
எப்புடி?
மினரல் வாட்டர் விக்கனும் எண்றே ரயில் நிலய ப்லொட்பார குடிதண்ணீர் குழாய் சுத்தபடுத்தாமல் இருக்கும்
நம்ம ஊரிலா?????
அப்ப்றம் நம்ம கடைல ரெகுலர் கஸ்டமர் ஆனதுக்கு ரெம்ப நண்றி
மிகவும் அவசியமான சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.
http://maunarakankal.blogspot.com/2010/04/blog-post_22.html
அருமை பதிவு மருத்துவரே!!
Great and very good weekend!
Post a Comment