நச்சுப்பாம்புகளில் நல்ல பாம்பின் விசம் பற்றிப்பார்த்தோம். நல்ல பாம்பின் விசமானது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்பதையும் அதனால் தசைகள் செயலிழப்பு,மூச்சு விட முடியாமல் செயலிழந்து இறப்பு என்பதை அறிவோம்.
நல்ல பாம்பு போலவே நரம்புகளைத் தாக்கும் இன்னொரு வகைப்பாம்பு கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் என்றும் சொல்லுவர். கட்டுவிரியன் உடலில் பொதுவாக வெண்ணிறப்பட்டைகள் காணப்படும்.
1.நல்ல பாம்பு, கட்டுவிரியன்-- நரம்புமண்டலத்தைத் தாக்குபவை.
2.கண்ணாடி விரியன்(RUSSELS VIPER), சுருட்டை விரியன்(SAWSCALED VIPER)-- இரண்டும் இரத்தத்தினை உறையவிடாமல் தடுப்பவை.
கண்ணாடி விரியன்,சுருட்டை விரியன்:
நல்ல பாம்பு போல் இவை அதிகம் ஆபத்துள்ளவை அல்ல.
1.கடிபட்டவர்களில் 50%க்கு சதவீதத்தினரை விசம் தாக்குவதில்லை.
2.25% த்தினருக்கு விசத்தின் அறிகுறிகள் தெரியும். ஆயினும் அனைவரும் இறப்பதில்லை.
3.கடிபட்ட 10 நிமிடத்தில் கடிவாய் சிவந்து வீங்கி விடும்.
15 நிமிடத்தில் கடிவாயில் இருந்து இரத்தம் கலந்த நீர் வடியத் துவங்கும். விசம் குறைவாக இருந்தால் வீக்கம் முழங்கை அல்லது முழங்காலுடன் நின்று விடும்.
4.விசம் குறிப்பிடத்தக்க அளவு உடலில் ஏறியிருப்பின் வலி,வாந்தி,வேர்வை,வயிற்றுவலி ஆகியவை இருக்கும். இரண்டு மணி நேரத்தில் மயக்கம் ஏற்படும். இவை அடுத்த 2 மணி நேரத்தில் சரியாகிவிடும்.இரு நாளில் வீக்கம் உடலில் பரவும். பொதுவாக நோயாளிகள் இரண்டு நாளில் குணமடைவர்.
5.கடி பலமாக இருந்தால் மயக்கம் அதிகம் இருக்கும். இரத்த சிவப்பணு, பிளேட்லெட்டுகள் குறையும். சிறு நீரில் இரத்தம்,சர்க்கரை, புரதம் வெளிப்படும். இரத்தம் உறையும் தனமை குறையும். பல் ஈறுகள், ஆசனவாய், கடிபட்ட இடம் ஆகியவற்றிலிருவ்து இரத்தக்கசிவு ஏற்படும்.சிறு நீரகம் செயலிழக்க ஆரம்பிக்கும். நுறையீரல் செயலிழத்தல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கடிவாய் புண் பொ¢தாகி, கடிபட்ட பகுதி பெரிதாக வீங்குதல் ஆகியவை இருக்கும். உடலுக்குள் இரத்தக்கசிவாலும், உடலுறுப்புகள் செயலிழப்பாலும் இறப்பு ஏற்படலாம்.
சிகிச்சைகள் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ளன. பாம்பு கடித்தால் என்ன ஏற்படும் என்று எளிமையாகத் தொ¢ந்து கொள்ளவே இந்தப்பதிவு. ஆகையினால் இதன் பயன் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும்.
26 comments:
¸Êò¾¡ø ±ýÉ ²üÀÎõ ±ýÚ ±Ç¢¨Á¡¸ò ¦¾¡¢óÐ ¦¸¡ûǧŠþó¾ôÀ¾¢×. ¬¨¸Â¢É¡ø þ¾ý ÀÂý ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.
இந்த கட்டுரை கிராமத்தில் இருக்குரவங்களுக்கு அதிக விளிப்புணர்ச்சி அளிக்கும், இதை ப்ரிண்ட் எடுத்து எங்க ஊர் பஞ்சாயத்து போர்டில் ஒட்டி வைக்கச் சொல்லனும்..., அங்கதா தோட்ட வெளில அடிக்கடி பாம்புகடில சிக்குராங்க..
நல்ல பதிவு நன்றி.
//
தருமி said...
¸Êò¾¡ø ±ýÉ ²üÀÎõ ±ýÚ ±Ç¢¨Á¡¸ò ¦¾¡¢óÐ ¦¸¡ûǧŠþó¾ôÀ¾¢×. ¬¨¸Â¢É¡ø þ¾ý ÀÂý ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.//
ஐயா, உங்களுக்கு நெறய மொழி தெர்யும்னு தெரியும்,,,இது எந்த நாட்டு மொழின்னு சொன்னா...
தருமி said...
¸Êò¾¡ø ±ýÉ ²üÀÎõ ±ýÚ ±Ç¢¨Á¡¸ò ¦¾¡¢óÐ ¦¸¡ûǧŠþó¾ôÀ¾¢×. ¬¨¸Â¢É¡ø þ¾ý ÀÂý ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.//
// வருக! ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.!1!!!!
Jey said...
இந்த கட்டுரை கிராமத்தில் இருக்குரவங்களுக்கு அதிக விளிப்புணர்ச்சி அளிக்கும், இதை ப்ரிண்ட் எடுத்து எங்க ஊர் பஞ்சாயத்து போர்டில் ஒட்டி வைக்கச் சொல்லனும்..., அங்கதா தோட்ட வெளில அடிக்கடி பாம்புகடில சிக்குராங்க..
நல்ல பதிவு நன்றி.
///
நல்லது! செய்யுங்க!
நண்பர் ஜே சொன்னதுபோல இதை எல்லாம் பொது இடங்களில், குறிப்பாக கிராமப்பகுதிகளில் செய்தால் மக்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்..:-)))
நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்.
பாம்பு கடித்தால் வரும் விளைவுகளைப் பற்றி பல விசயங்களை, அலோபதி அறியவில்லை என்பது தெரியுமா?
நல்ல தகவல்கள் தேவா
[[எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன்]]
இது வரை அறிந்திருக்கவில்லை
கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பர் ஜே சொன்னதுபோல இதை எல்லாம் பொது இடங்களில், குறிப்பாக கிராமப்பகுதிகளில் செய்தால் மக்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்..:-)))
//
உண்மைதான் கார்த்தி!!
பிரவின்குமார் said...
நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்.
//
நன்றி பிரவீன்!
கொல்லான் said...
பாம்பு கடித்தால் வரும் விளைவுகளைப் பற்றி பல விசயங்களை, அலோபதி அறியவில்லை என்பது தெரியுமா?
//
சொல்லுங்க! கேட்போம்!
நட்புடன் ஜமால் said...
நல்ல தகவல்கள் தேவா
[[எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன்]]
இது வரை அறிந்திருக்கவில்லை
//
ஜமால் எதுவும் எழுதலையா?
யாரோ ஒருவன் said...
வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை
//
நன்றி நண்பா!!
வணக்கம் மருத்துவரே.
இந்த தகவல் மிக பயனுள்ளதே.
Jey said...
//
தருமி said...
¸Êò¾¡ø ±ýÉ ²üÀÎõ ±ýÚ ±Ç¢¨Á¡¸ò ¦¾¡¢óÐ ¦¸¡ûǧŠþó¾ôÀ¾¢×. ¬¨¸Â¢É¡ø þ¾ý ÀÂý ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.//
ஐயா, உங்களுக்கு நெறய மொழி தெர்யும்னு தெரியும்,,,இது எந்த நாட்டு மொழின்னு சொன்னா...
நல்ல பதிவு நன்றி.
மிக பயனுள்ள பதிவு டாக்டர்.
பகிர்ந்தமைக்கு நன்றி .
நிறைய விஷயங்கள் புதிதாக தெரிந்து கொண்டேன்.
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் மிக்க நன்றி.
எனக்கு பாருங்க கனவுல மட்டும்தான் பாம்பு வருகிறது? அதுவும் ராஜநாகம் இந்த கனவுக்கு மருத்துவரீதியாக எதாவது சொல்லுங்க பாஸ்.
விளிப்புணர்ச்சி கட்டுரை.
பாம்புகளைப்பற்றி நிறைய விடயம் தெரிந்துகொண்டேன்..
கிராமங்களில் வசிப்போருக்கு மிக பயனுள்ள பதிவு
¸Êò¾¡ø ±ýÉ ²üÀÎõ ±ýÚ ±Ç¢¨Á¡¸ò ¦¾¡¢óÐ ¦¸¡ûǧŠþó¾ôÀ¾¢×. ¬¨¸Â¢É¡ø þ¾ý ÀÂý ÀüÈ¢ì ¸ÕòÐò ¦¾¡¢Å¢ì¸×õ.//
உங்க இடுகையை முதலில் திறந்ததும் அந்த 'மொழி'யில்தான் தெரிந்தது.
அசத்தல்... பாம்புக்கடி மிகவும் ஆபத்தானது என்பதை உங்கள் பாணியில் எளிமையாக கூறிவுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்.நன்றி
Post a Comment