Monday, 23 August 2010

ஏன் நீதிபதி விசாரணை?

              


                 சில நேரங்களில் நீதிபதி அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய நோயாளிகளை  இறப்பதற்கு முன் விசாரிப்பதைப் பார்த்து இருப்போம்.
                 அதே போல் சில குறிப்பிட்ட விவகாரங்க்களில் நீதிபதியின் விசாரணை நடக்கும். நீதிபதியின் விசாரணை என்றால் என்ன  என்பதனைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
                  நீதிபதியின் விசாரணை-ஆங்கிலத்தில் Magistrates Inquest எனப்படும்.
Inquest என்றால் பெரிதாக ஒன்றுமில்லை! விசாரணையைத்தான்  Inquiry அல்லது enquiry  என்று கூறுகிறார்கள்.
( இன்க்வெஸ்ட் an inquiry into the cause of an unexpected death
enquiry, inquiry - a systematic investigation of a matter of public interest)
                  சாதாரண குற்றங்க்களை காவல்துறையினர் விசாரிப்பர். சில குறிப்பிட்ட குற்றங்களில் நீதிபதியின் விசாரணை வேண்டப்படுகிறது.

1.எந்த மாதிரியான நிகழ்வுகளில் நீதிபதியின் விசாரணை தேவை?
  • சிறையில் இறப்பு
  • காவல் துறை விசாரணையின் போது காவல் நிலையத்தில்,
  • காவல் துறையால் சுடப்பட்டால்,
  • மனநோய் மருத்துவமனையில் இறந்தால்,
  • வரதட்சணை இறப்பு,
  • சந்தேகமான முறையில் இறந்ததாகக் கருதப்பட்ட சடலத்தை புதைகுழியிலிருந்து தோண்டி விசாரணை மேற்கொள்ள,
இந்த மாதிரியான விசாரணை செய்யும் தகுதி நீதிமன்ற நீதிபதி தவிர மாநில அரசால் வேறு பதவிகளில் உள்ளோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனைக்கீழே பார்ப்போம்.
2. எந்தப் பதவியில் உள்ளோர் இதனை விசாரிக்க நீதிபதிகளாகக் கருதப்படுவார்கள்?
  • மாவட்ட நீதிபதி அவர்கள் 
  • சப் டிவிசனல் நீதிபதி
  • சிறப்பு நீதிபதிகள்
3.சிறப்பு நீதிபதிகள் என்பவர்கள் யார்?
       இவர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுபவர்கள்
  • மாவட்ட ஆட்சியர்
  • மாவட்ட உதவி ஆட்சியர்
  • தாசில்தார்
     நமக்குத் தேவையான எளிய சட்ட விவகாரங்களைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

தமிழ்த்துளி தேவா.

27 comments:

priyamudanprabu said...

நமக்குத் தேவையான எளிய சட்ட விவகாரங்களைத் தொடர்ந்து எழுதுகிறேன்.
/////

கண்டிப்பா
நல்ல பகிர்வு

priyamudanprabu said...

இன்னும் தெளிவா நிறைய எழுதலாமே (உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம் )

நட்புடன் ஜமால் said...

மருத்துவம் சார்ந்த சட்ட விடயங்களா

நன்றி தேவா!

க.பாலாசி said...

நன்றிங்க டாக்டர்... நல்ல தகவலை பகிர்திருக்கீங்க...

ஜீவன்பென்னி said...

புதிய தகவல்கள். தொடருங்கள்.

அப்துல்மாலிக் said...

//சந்தேகமான முறையில் இறந்ததாகக் கருதப்பட்ட சடலத்தை புதைகுழியிலிருந்து தோண்டி /

நார்மலா பிணத்தை புதைத்தவுடன் 2-3 நாட்களில் அழுகி உருதெரியாமல் போய்விடும், சில கேஸ்களின் விசாரனைக்காக 1 மாதம் கழித்தும் கூட தோண்டி எடுக்கிறார்களே அழுகிய நிலையில் உள்ள உடலை எந்த வகையில் பரிசோதிக்க முடியும், இதன் மூலம் சந்தேகங்களை தீர்க்க முடியுதா? விளக்கவும் நன்றி

அருண் பிரசாத் said...

உம்,,, புதிய விஷயங்கள். தேவையான ஒன்றுதான்..... தொடருங்கள்

அன்பரசன் said...

நல்ல தகவல்கள்...

Ramesh said...

தேவையான தகவல்கள்தான் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

புதிய தகவல்கள். தொடருங்கள்.

Jerry Eshananda said...

வக்கீல் ஐயா வணக்கம்,சைடுல வக்கீலுக்கும் ப்ராக்டிஸ் பண்றீங்களோ...?

ஜோதிஜி said...

அவஸ்யம் நீங்கள் இது போன்ற விசயங்களை தொடர்ந்து எழுத வேண்டும்.

எஸ்.கே said...

மிகவும் அவசியமான பதிவு! வாழ்த்துக்களும் நன்றிகளும்!

தேவன் மாயம் said...

பிரபு தொடர்ந்து எழுதுகிறேன்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
மருத்துவம் சார்ந்த சட்ட விடயங்களா

நன்றி தேவா!




க.பாலாசி said...
நன்றிங்க டாக்டர்... நல்ல தகவலை பகிர்திருக்கீங்க...



ஜீவன்பென்னி said...
புதிய தகவல்கள். தொடருங்கள்.

-------------------------------

ஜமால் , பாலாசி, பென்னி மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

அப்துல்மாலிக் said...
//சந்தேகமான முறையில் இறந்ததாகக் கருதப்பட்ட சடலத்தை புதைகுழியிலிருந்து தோண்டி /

நார்மலா பிணத்தை புதைத்தவுடன் 2-3 நாட்களில் அழுகி உருதெரியாமல் போய்விடும், சில கேஸ்களின் விசாரனைக்காக 1 மாதம் கழித்தும் கூட தோண்டி எடுக்கிறார்களே அழுகிய நிலையில் உள்ள உடலை எந்த வகையில் பரிசோதிக்க முடியும், இதன் மூலம் சந்தேகங்களை தீர்க்க முடியுதா? விளக்கவும் நன்றி//

அழுகிய உடலையும் பிரேதப்பரிசோதனை செய்யலாம். சில முக்கியமான விபரங்க்கள் கிடைக்காமல் போகலாம். தனியாக எழுதுகிறேன்!

தேவன் மாயம் said...

அருண் பிரசாத் said...
உம்,,, புதிய விஷயங்கள். தேவையான ஒன்றுதான்..... தொடருங்கள்
//

நன்றி அருண்!

தேவன் மாயம் said...

அன்பரசன் said...
நல்ல தகவல்கள்...



ரமேஷ் said...
தேவையான தகவல்கள்தான் தொடர்ந்து எழுதுங்கள் நண்ப


வெறும்பய said...
புதிய தகவல்கள். தொடருங்கள்.

----------------------------

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
வக்கீல் ஐயா வணக்கம்,சைடுல வக்கீலுக்கும் ப்ராக்டிஸ் பண்றீங்களோ...?
//

நாட்டாமை! இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

தேவன் மாயம் said...

ஜோதிஜி said...
அவஸ்யம் நீங்கள் இது போன்ற விசயங்களை தொடர்ந்து எழுத வேண்டும்.

//
தொடர் வருகைக்கு நன்றி ஜோதிஜி!

தேவன் மாயம் said...

எஸ்.கே said...
மிகவும் அவசியமான பதிவு! வாழ்த்துக்களும் நன்றிகளும்!///

எஸ்.கே. நன்றிங்க!

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..

Unknown said...

மிகவும் அவசியமான தகவல் .. தொடந்து இதைபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிரபார்க்கிறேன்

சிங்கக்குட்டி said...

மிக அருமையான பகிர்வு, ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சட்டம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.

Praveenkumar said...

புதிய முயற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது தேவா சார். தொடர்ந்து இது போல் நிறைய தகவல்கள் எழுதுங்கள்..!!
நீவீர் பெற்ற தகவல்கள் வையகமும், வலையுலகமும் பெறட்டும்..!!

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.

இன்னும் நிறைய எழுதலாமே?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory