சில படங்களைப் பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. சில செய்திகளும் அது போல் படிக்கும் போது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. அதுபோலத்தான் நான் சில படங்களைப் பார்க்கும்போது நேர்ந்தது.
அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை நான் எழுதுகிறேன்.
உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழத் தகுதியற்ற நிலையில் வாழ்கிறார்கள். இன்னும் இருபத்தைந்து வருடத்துக்குள் இது இரண்டு மடங்காகிவிடும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன!
இவர்களுக்கு சுத்தமான குடிநீர்கூடக் கிடைப்பதில்லை. இவர்கள் சுவாசிக்கும் காற்று மாசுபட்டது. இவ்ர்கள் மிக அதிகமாக தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இவர்களின் குழந்தைகள் வளர்ச்சி குன்றிப் போகிறார்கள்.
..
!
.
.
..
. .
மேலேயுள்ள படங்கள் இந்தியாவில் குறிப்பாக பம்பாயில் எடுக்கப் பட்டவை. ”ஸ்லம்டாக் மில்லியனர்” மில்லியனர் போன்ற படங்கள் இந்த நிலையை படம் பிடித்துக் காட்டினாலும் அது பரிசுகளை வெல்லவும் பணம் ஈட்டவும் உதவியதே தவிர இவர்கள் வாழ்வு உயர உதவவில்லை!!
ஊரெல்லாம் சுற்றி கட்சியை வளர்க்கும் நமது இளம் அரசியல் புள்ளிகளும்,
வெளிநாட்டுப் பணத்தையும், உள்நாட்டுப் பணத்தையும் கோடிக்கணக்கில் பெறும் தொண்டு நிறுவனங்களும் ஏன் இவர்களுக்கு சுகாதாரத்தையும் கல்வியையும் அளிக்க உதவவில்லை?
மனித உரிமை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஏன் இவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளான உறைவிடம், குடிநீர் போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை!
எல்லா ராசிக்காரர்களும் இங்கு இருந்தாலும் சனிப்பெயர்ச்சி மட்டும் ஏன் இவர்கள் ஜாதகங்களில் இல்லை.
கடவுளின் சக்தியால் திருநீறு முதல் லிங்கம் வரை வரவழைக்கும் நமது வல்லமை மிக்க சாமியார்கள் ஏன் இவர்களுக்கு உதவவில்லை!
எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கும் தெய்வங்கள் ஏனோ இவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதில்லை.
சுற்றுச்சூழல் மாசு பற்றி நட்சத்திர விடுதிகளில் கூட்டம் போட்டுப் பேசும் மனிதர்கள் ஏன் இந்தக் குடிசை மக்களின் சுற்றுப் புறத்தைக் கண்டு கொள்ளவில்லை?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் அரசுகள் இவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பக் கூடாதா?
கழிவுகளை ரோட்டில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கும் நகராட்சிகள் தெருக் குப்பைகளையெல்லாம் இவர்கள் வீடுகளில்தான் கொட்டுகிறீர்களா?
இப்படி நிறையக் கேள்விகள் தோன்றுகின்றன! யாரிடம் கேட்பது? என் மனதில் தோன்றியவை இவை. உங்கள் கருத்துக்களையும் எழுதுங்களேன்!!
20 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்(-:
யோ வாய்ஸ் (யோகா) said...
இனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.///
நன்றி யோ!!
இதெல்லாம் நம்ம நாட்டு கலாச்சாரங்க..கலாச்சாரம்..
நம்ம எவ்வளவு தான் ஹைடெசிபல்ல கத்துனாலும் அவங்க காதுவுல விழாது.
மாற்று வழி யோசிப்போம் !!!
( Voted !! )
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்!!
படங்கள் அதிர்ச்சி அளிக்கிறது, எப்படி இவர்களால் இந்தச் சூழலில் வாழ முடிகிறதோ, அரசு எப்பொழுதுமே மெத்தனம் தான், எத்தனையோ மற்ற தொண்டு அமைப்புகள் இருக்குமே, அவர்களாவது ஏதாச்சும் முயற்சி எடுக்கலாமே?
எல்லாவற்றிலும் அரசியல் அதுதான் காரணம். மனம் கனக்கிறது இப்படங்களைப் பார்க்கையில்.
மனித உரிமை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஏன் இவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளான உறைவிடம், குடிநீர் போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை!
*************************************
மும்பையில் சேரியில் (சோப்பட் பட்டி) வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு அரசு வீடு கிடைத்தும் அதை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் அங்கேயே தங்கி விடுவதும் உண்டு.
சென்னையில் இதை ஒழிக்க முடிந்தால் ஏன் மும்பையில் முடியாது? அரசு தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.
//எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கும் தெய்வங்கள் ஏனோ இவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதில்லை. //
இருந்தா தானே தல சாய்க்கிறதுக்கு!
//எல்லா ராசிக்காரர்களும் இங்கு இருந்தாலும் சனிப்பெயர்ச்சி மட்டும் ஏன் இவர்கள் ஜாதகங்களில் இல்லை//
இது இது ரொம்ப பிடிச்சிருக்கு
கடைசியாக ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்களே
யார்ட்ட கேட்பதுன்னு - அது அதுதான்
-----------------
அட பிறந்த நாளா - வாழ்த்துகள் தேவா
முதலில் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.....
இந்த நிலையை மாற்ற பல "கந்தசாமி"களும் பல"சிவாஜி"களும் வேண்டும்....
பாவம் தான் என்ன செய்வது...
:((((
இதுக்கு காரணம் என்ன சொல்றது?
யாரைன்னு சொல்றது?
யாரை சொன்னாலும் அவனுக்கு நாம் சொல்வது காதில் விழப்போவது இல்லை
நம்மலால் முடிந்தது முடிந்தவரை இவர்களில் ஒரு சிலரையாவது இந்நிலையிலிருந்து மீட்டெடுப்போம்....
voted
அழுத்தமான பதிவு.
இனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.
பிறந்தநாளன்று அழுத்தமான இடுகை...
நானும் இதற்கொரு முடிவைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
விடியாத இரவு
வடியாத வெள்ளம்
இருக்காது என்ற நம்பிக்கையோடு!!
இவற்றை பதிவு செய்வதே நம்மால் தற்போதைக்கு செய்ய முடிந்தது
:((
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்!!
மும்பை வாழ் பணக்காரர்களுக்கு சேரி மக்களை முன்னுக்கு கொண்டுவர மனமில்லை. அவர்களது வீட்டு வேலைகளுக்கு எடுபிடியாக வைத்துள்ளனர். மறைமுகமாக அவர்களது முன்னேற்றத்தை இவர்கள் தடுக்கிறார்கள்...
நியாயம் தான். என்ன செய்வது
Post a Comment