Monday, 16 February 2009

கொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை!

 

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

நான் உனக்காக

எதுவும்

எழுதப்போவதில்லை.

என் எழுத்துக்கள்

எவர் மனதும்

தொடாத போது!

 

படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?

என் எழுத்துக்கள்

எதுவும்

செய்யப்போவதில்லை,

காற்றில்

கரைந்து மறைந்த

உன் அழுகுரல் போல்,

கன்னத்தில் உறைந்து

மறைந்த உன்

கண்ணீர் போல்,

 

நான் எதுவும்

எழுதப்போவதில்லை!

 

என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?

 

பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும்  நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!

 

துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?

 

உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!

44 comments:

வேத்தியன் said...

கவிதையெல்லாம் அருமை...
ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்கீட்டீங்க...
வாழ்த்துகள் !

பழமைபேசி said...

//என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!
//

இல்லே, இல்லேன்னு போட்டுத் தாக்கிட்டே இருக்காரு பாருங்க....

வாழ்த்துகள்!

சி தயாளன் said...

//என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?//

:-((((

சி தயாளன் said...

//பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும் நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!



துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?
//

உண்மைதான்...என்ன செய்வது நம்மால் முடிந்தது இவ்வளவு தானே...?

இராகவன் நைஜிரியா said...

Me the First ??

இராகவன் நைஜிரியா said...

// உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!//

இந்த கவிதையை பாராட்டவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...

சொல்லலாம்... அருமை என்று.. ஆனால் அது கூட முற்று பெறவில்லை என்றே எனக்கு தோன்றுகின்றது

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் உண்மை நிலையை யதார்த்தமாய் கூறும் கவீதை - அருமை அருமை

தேவன் மாயம் said...

கவிதையெல்லாம் அருமை...
ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்கீட்டீங்க...
வாழ்த்துகள் !///

நன்றி வேத்தியன்!

தேவன் மாயம் said...

/என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!
//

இல்லே, இல்லேன்னு போட்டுத் தாக்கிட்டே இருக்காரு பாருங்க....

வாழ்த்துகள்!///

பதில் எழுத
வார்த்தைகள்
இல்லை!!

தேவன் மாயம் said...

//என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?//

:-((((//

என்ன லீ இது?
புரிலபா!

தேவன் மாயம் said...

/பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும் நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!



துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?
//

உண்மைதான்...என்ன செய்வது நம்மால் முடிந்தது இவ்வளவு தானே...?//

ஆமாம் லீ.

தேவன் மாயம் said...

/ உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!//

இந்த கவிதையை பாராட்டவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...

சொல்லலாம்... அருமை என்று.. ஆனால் அது கூட முற்று பெறவில்லை என்றே எனக்கு தோன்றுகின்றது//

ஆமாம் எனக்கும் அப்படித்தான்
தோன்றுகிறது!!

தேவன் மாயம் said...

ம்ம்ம்ம் உண்மை நிலையை யதார்த்தமாய் கூறும் கவீதை - அருமை அருமை///

நன்றி அன்பின் சீனா அவர்களே!

kuma36 said...

//பீரங்கிகளுக்கும்,
குண்டுகளுக்கும் பயந்து
ஓடும் நீ
என் கதைகள்
படிக்கப்போவதில்லை!

துப்பாக்கியும்,தோட்டாக்களும்
துளைத்த உன்
உடலுக்கு என் வார்த்தைகள்
உயிர் தருமா?///

உணர்வு பூர்வமான வார்த்தகள், வரிகள்.

ஒரு வாரம் வலைச்சாரலில் கலக்கல் இனி இங்கு....

அ.மு.செய்யது said...

//நான் எதுவும்

எழுதப்போவதில்லை!
//

ஆமா சொன்னத செஞ்சிங்களா ??? இல்லையே !!!!

எழுத மாட்டேன் எழுத மாட்டேனு இவ்ளோ அழகா எழுதிட்டீங்க...

அசத்துங்க தேவா !!!!!!

Back to tea kadai !!!!!

ஹேமா said...

தேவா,என்னிடம் வார்த்தைகள் இல்லை.நான் எழுதப் போவதில்லை என்று சொல்லிச் சொல்லியே தேநீரோடு நிறைய எழுதியிருக்கிறீர்கள்.
வரிகள் மனதைத் தொட்டன.

மீண்டும் எங்கள் அருகில் வந்துவிட்டீர்கள்.நன்றி தேவா.

priyamudanprabu said...

//என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!
//

இல்லே, இல்லேன்னு போட்டுத் தாக்கிட்டே இருக்காரு பாருங்க....

வாழ்த்துகள்!

நானும் சொல்கிறேன் வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு

தேவன் மாயம் said...

/பீரங்கிகளுக்கும்,
குண்டுகளுக்கும் பயந்து
ஓடும் நீ
என் கதைகள்
படிக்கப்போவதில்லை!

துப்பாக்கியும்,தோட்டாக்களும்
துளைத்த உன்
உடலுக்கு என் வார்த்தைகள்
உயிர் தருமா?///

உணர்வு பூர்வமான வார்த்தகள், வரிகள்.

ஒரு வாரம் வலைச்சாரலில் கலக்கல் இனி இங்கு..///

அன்பின் கலை,
நீங்கள் வலைச்சரம் வ்ந்தும் கருத்துத்தெரிவிக்கவில்லை! பரவாயில்லை!!
தேவா..

தேவன் மாயம் said...

//நான் எதுவும்

எழுதப்போவதில்லை!
//

ஆமா சொன்னத செஞ்சிங்களா ??? இல்லையே !!!!

எழுத மாட்டேன் எழுத மாட்டேனு இவ்ளோ அழகா எழுதிட்டீங்க...

அசத்துங்க தேவா !!!!!!

Back to tea kadai !!!!!///

ஆமா! இதுதானே நம்ம கடை!

தேவன் மாயம் said...

தேவா,என்னிடம் வார்த்தைகள் இல்லை.நான் எழுதப் போவதில்லை என்று சொல்லிச் சொல்லியே தேநீரோடு நிறைய எழுதியிருக்கிறீர்கள்.
வரிகள் மனதைத் தொட்டன.

மீண்டும் எங்கள் அருகில் வந்துவிட்டீர்கள்.நன்றி தேவா///

சிந்தனைகள் கையாலாகாத என்னை எழுதச்சொல்கின்றன..

தேவன் மாயம் said...

/என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!
//

இல்லே, இல்லேன்னு போட்டுத் தாக்கிட்டே இருக்காரு பாருங்க....

வாழ்த்துகள்!

நானும் சொல்கிறேன் வாழ்த்துக்கள்///

நன்றி நண்பரே!

நட்புடன் ஜமால் said...

முதலில்

வாழ்த்துக்கள் தேவா (வலைச்சரம்)

நட்புடன் ஜமால் said...

\\படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?\\

ம்ம்ம் ...

மொத்தமும் நல்லாயிருக்கு தேவா ...

நட்புடன் ஜமால் said...

\\என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?\\

வார்த்தைகளில் தெரிகின்றது தங்களது துயரம்.

நட்புடன் ஜமால் said...

\\துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?\\

மிகவும் அருமை தேவா ...

புதியவன் said...

//என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?//

கவிதை இல்லை என்று அருமையாக எழுதிட்டீங்க தேவா...

ஆதவா said...

வலைச்சர ஆசிரியரா இருந்தமைக்கு வாழ்த்துக்கள்...

பின்றீங்க சார்... வார்த்தையே இல்லைன்னு வார்த்தையாலயே கவிதையை கட்டி நிரப்பிட்டீங்க...

வாழ்த்துக்கள்.....

(என்னோட ஓட்டும் உண்டு!!!:))

Anonymous said...

துடிப்புள்ள கவிதை.
ரசித்தேன்
நன்றி

தேவன் மாயம் said...

\படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?\\

ம்ம்ம் ...

மொத்தமும் நல்லாயிருக்கு தேவா///

நன்றி ஜமால்!

தேவன் மாயம் said...

\துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?\\

மிகவும் அருமை தேவா ...///

நன்றி

தேவன் மாயம் said...

வலைச்சர ஆசிரியரா இருந்தமைக்கு வாழ்த்துக்கள்...

பின்றீங்க சார்... வார்த்தையே இல்லைன்னு வார்த்தையாலயே கவிதையை கட்டி நிரப்பிட்டீங்க...

வாழ்த்துக்கள்.....

(என்னோட ஓட்டும் உண்டு!!!:)) ///

நன்றி ஆதவா!.

தேவன் மாயம் said...

துடிப்புள்ள கவிதை.
ரசித்தேன்
நன்றி//
நன்றி
வருகைக்கும்
கருத்துக்கும்!

குடந்தை அன்புமணி said...

உண்மையை உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை. பாரட்ட வார்தைகள் இல்லை என்னிடத்தில்!

SASee said...

உன் பேனாவின்
கூர் முனை
எனக்கு புதிதாய்
வலிக்கிறது.

வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

உண்மையை உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை. பாரட்ட வார்தைகள் இல்லை என்னிடத்தில்//

நன்றி அன்புமணி!!!

அப்துல்மாலிக் said...

//என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

நான் உனக்காக

எதுவும்

எழுதப்போவதில்லை
/

இப்படி சொல்லி நிறைய எழுதிருக்கீங்களே

அப்துல்மாலிக் said...

//என் எழுத்துக்கள்

எவர் மனதும்

தொடாத போது!

//

என் மனது தொட்டுடுச்சி தேவா

அப்துல்மாலிக் said...

//படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?

என் எழுத்துக்கள்

எதுவும்

செய்யப்போவதில்லை,

//

யார் சொன்னது
எழுத்துக்களால் புது உலகம் படைக்கலாம், எத்தனையோ உலகம் தலைக்கீழாக மாற்றியிருக்கிறது எழுத்துக்கள்

அப்துல்மாலிக் said...

//என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?

//

நல்ல கேள்விக்கணை

அப்துல்மாலிக் said...

//உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!

//

ம்ம் உருவாக்குங்கள்

வாழ்த்துக்கள் தேவா

தேவன் மாயம் said...

அபு நன்றி
வருகைக்கும்
கருத்துக்கும்!!
தேவா>..

Sinthu said...

எழுத எதுவுமே இல்லை என்று சொல்ல்விட்டு இப்படியா?

குமரை நிலாவன் said...

பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும் நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!



துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?


உண்மை தான்.
என்ன சொல்வது

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory