சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும்
வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!
சிறுவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது இங்கு
அதிகரித்து உள்ளது என்கின்றனர்!
இதனால் நீதிமன்றத்தில்
இத்தகைய வழக்குகள் குவிந்த வண்ணம்
உள்ளனவாம்!!.
நீதிபதிகளின் கடுமையான கேள்விகளுக்கு
சிறுவர்களுடைய பெற்றோர்களும் உள்ளாகின்றனர்.
தங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்காக சிறார்
நீதிமன்ற வாசலில் ஒவ்வொரு நாளும் பல
பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.
நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கைப் பாருங்கள்!!
இந்த வழக்கைப்பார்த்தாலே சிங்கை இளைஞர் பற்றி
புரியும்!
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு!
என்னதான் 13 - 16 வயது வரையுள்ள வயதினர்,
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும்
அடிப்பார்கள்,திட்டுவார்கள், நாம் கேள்விப்பட்டவரை!
இந்த சம்பவம் ரொம்ப ஓவர்!
மேட்டர் என்னன்னா பதினாறு வயதுப்பெண்
ஒருத்தியை பதிமூன்று வயதுப்பெண்
தரக்குறைவாகவும்,அசிங்கமாகவும் பேசித்திட்டி
விட்டாளாம்.
தன்னைப் பற்றித் தரக் குறைவாகப் பேசி அவமானப்
படுத்தியதற்காக அந்தப்பெண் பதிமூன்று
வயதுப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டாள்!!
அதற்காக ஆள் வைத்து அந்த பதிமூன்று வயது
சிறுமியைக் கற்பழிக்குமாறு கூறியிருக்கிறாள்!
(அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)
அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக்
கற்பழிக்க முடியவில்லை.
ஆத்திரமடைந்த 16 வயது பெண், 13-15 வயது நிரம்பிய
சக நண்பர்களுடன் சேர்ந்து, 13 வயதுச் சிறுமியைக்
கடுமையாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறாள்!
அந்த ஆணுடன் பிற பாலியல் செய்கைகளில்
ஈடுபடுத்தியிருக்கிறாள்!
நினைக்கவே கொடுமையாகவுள்ளது! இதுபோன்ற
நிகழ்வுகள் பல நாடுகளில் நடக்கின்றன. சிங்கப்பூரில்
நடந்தது வெளியில் தெரிகிறது..
அந்த 16 வயதுக் குற்றவாளியைச் சிறார் நீதிமன்றம்
மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பிவைத்து உள்ளது!!!
கொடுமைடா சாமி!!!
இளம் வயதினரிடையே நிலவும் வன்முறை பற்றிய
விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது
சிங்கப்பூர் நற்பணிப் பேரவை.
ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம்
செலுத்துங்கள்!!
.
.
.
.
.
36 comments:
//சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும்
வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!
//
உண்மை தாங்க...
//(அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?) //
சிங்கை பதிவர்கள் தார்மீக பொறுப்பேற்று இதற்கு பதிலளிப்பார்களாக..
//சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும்
வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!
//
உண்மை தாங்க.///
என்னப்பா சொல்றீங்க!
//(அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?) //
சிங்கை பதிவர்கள் தார்மீக பொறுப்பேற்று இதற்கு பதிலளிப்பார்களாக..///
நீங்கள் நல்லவர்களப்பா!
உங்களை சொல்லுவனா?
பள்ளியில் படிக்கும் காலங்களியே குழுவுடன் சேரும் படி நிர்பந்திக்கப்படுவது என்பதெல்லாம் ஒரு காலத்தில் மிக மும்மரமாக நடந்துவந்தது பிறகு காவல் துறை கண்காணிப்பு போட்ட பிறகு கொஞ்சம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.அப்பிரச்சனையே மிக முக்கிய காரணங்களில் ஒன்று.குழுக்களுக்கிடையே பூசல் அடி தடி வரை போய் அதன்பிறகு இரு குழுக்கள் ஆட்களும் காவல்துறை கண்காணிப்பு போய் வரும் நிலையும் ஏற்படும்.இது போன்ற பல நிகழ்வுகளை தொலைக்காட்சியில் காண்பித்து பாதிக்கப்படும் மாணவர்கள்/பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்று காவல்துறை/அரசாங்கம் விளக்கம் கொடுக்கிறது.
ஏங்க! இதுக்கும் நம் பதிவாளர்கள் பொறுப்புக்கும் என்ன சம்பந்தம்?
வாங்க குமார்!
உங்கள் கருத்துக்கு
நன்றி!!!
உலகம் எங்க போயிட்டிருக்கு சார்???
ரொம்ப வெவகாரமான விசயமுங்க...
என்னா மருத்துவரே, எப்போ நிருபரா (பிளாக்கில்) மாறுனீங்க
ம்ம் வெரி ஃபாஸ்ட் அப்டேட்
//அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)
/
ஆஹா எங்கே போகிறது, சீக்கிரம் ஒரு வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்யுங்க சிங்கை பதிவர்களே
//அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக் கற்பழிக்க முடியவில்லை//
சட்ட திட்டம் கடுமை.. அப்படி இருக்கும்போது சிங்கப்பூரின் சட்டம் நல்லாதான் செயல்படுது இல்லியா தேவா சார்
happy slapping எனப்படும் ஒருவகையான சித்திரவதைகள்...இவை..
பாலியல் சித்திரவதைகளாகவும் போய் முடிவது உண்டு
சாதரண பாடசாலைகளில் மட்டுமின்றி பிரபல பாடசாலைகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறுவது வழக்கம்..
இது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கள் நடந்து சம்பவங்கள் கொஞ்சம் குறைந்து விட்டதாகவே எண்ணுகிறேன்...
பெற்றோரின் நேரமின்மை/அக்கறையின்மை...பிரதான காரணம்...
//ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள்!!
.
//
இது ரொம்ப.... முக்கியம் தல
இது சிங்கபூர் மக்களுக்கு மாத்திரம் இல்லே, உலகில் வாழும் அனைத்து பெற்றோர்களுக்கும் சொல்லப்பட்ட வேதம்.
பிள்ளைகளின் வளர்ப்பில்தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது
சிங்கை பற்றியுமா ...
உலகம் எங்க போயிட்டிருக்கு சார்???
ரொம்ப வெவகாரமான விசயமுங்க..///
ஆமா வேத்தியன்!
/அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)
/
ஆஹா எங்கே போகிறது, சீக்கிரம் ஒரு வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்யுங்க சிங்கை பதிவர்களே.///
தொடர் வழக்காடு மன்றம்!!
உலகத்தகவல் மையம்ன்னு நல்லவரு சொன்னாரே சரிதான் ...
/அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக் கற்பழிக்க முடியவில்லை//
சட்ட திட்டம் கடுமை.. அப்படி இருக்கும்போது சிங்கப்பூரின் சட்டம் நல்லாதான் செயல்படுது இல்லியா தேவா சார்///
ஒன்னும் சொல்லமாட்டேன்!
happy slapping எனப்படும் ஒருவகையான சித்திரவதைகள்...இவை..
பாலியல் சித்திரவதைகளாகவும் போய் முடிவது உண்டு
சாதரண பாடசாலைகளில் மட்டுமின்றி பிரபல பாடசாலைகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறுவது வழக்கம்..
இது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கள் நடந்து சம்பவங்கள் கொஞ்சம் குறைந்து விட்டதாகவே எண்ணுகிறேன்...
பெற்றோரின் நேரமின்மை/அக்கறையின்மை...பிரதான காரணம்...//
சரியாச் சொன்னீங்க!!
/ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள்!!
.
//
இது ரொம்ப.... முக்கியம் தல
இது சிங்கபூர் மக்களுக்கு மாத்திரம் இல்லே, உலகில் வாழும் அனைத்து பெற்றோர்களுக்கும் சொல்லப்பட்ட வேதம்.
பிள்ளைகளின் வளர்ப்பில்தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது//
நன்னாயிட்டு இருக்கு!!
உலகத்தகவல் மையம்ன்னு நல்லவரு சொன்னாரே சரிதான் //
என்னமோ சொல்லுங்க!
கவிஞர் திடீரென செய்தியாளராக மாறிய மாயம் என்ன..?
கவிஞர் திடீரென செய்தியாளராக மாறிய மாயம் என்ன..?///
கவிதையும் ரெடியா உள்ளது
CNN,
BBC WORLD,
TIMES NOW,
NDTV,
SYDNEY MORNING HERALD,
தமிழ்த்துளி.
CNN,
BBC WORLD,
TIMES NOW,
NDTV,
SYDNEY MORNING HERALD,
தமிழ்த்துளி.///
அய்யா!
கடைசியா உள்ளது தெரிந்தமாதிரி இருக்கு!!
மேல உள்ளது?????
நல்ல பெற்றோர் ,நல்ல சமுதாயம் ,கூடவே ஆசிரியர்கள் ,இவர்கள் தான் ,என்னை பொறுத்தவரை குழந்தையின் வளர்ச்சியில் பங்கெடுப்பவர்கள். பெற்றோரின் கண்காணிப்பை பொறுத்தே நண்பர்கள் அமைவது கூட ..
நல்ல பெற்றோர் ,நல்ல சமுதாயம் ,கூடவே ஆசிரியர்கள் ,இவர்கள் தான் ,என்னை பொறுத்தவரை குழந்தையின் வளர்ச்சியில் பங்கெடுப்பவர்கள். பெற்றோரின் கண்காணிப்பை பொறுத்தே நண்பர்கள் அமைவது கூட ..///
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...
பெற்றோர் கவனம் தேவை
அடப்பாவமே!!! சிறுமிகள் நெஞ்சில் இப்ப்டி ஒரு வன்முறை ஏறியிருக்கிறதா??? நினைக்கவே பதறுகிறது!!
என்ன செய்யலாம்.......................?
நிஜமாவே கொடுமைதாங்க! ஒன்னும் செய்யமுடியாது... பின்னூட்டம் மட்டும் போடமுடியும்....
அடப்பாவமே!!! சிறுமிகள் நெஞ்சில் இப்ப்டி ஒரு வன்முறை ஏறியிருக்கிறதா??? நினைக்கவே பதறுகிறது!!///
உண்மைதான்!
என்ன செய்யலாம்.......................?///
பதில் நீதான் சொல்லவேண்டும்!!
நிஜமாவே கொடுமைதாங்க! ஒன்னும் செய்யமுடியாது... பின்னூட்டம் மட்டும் போடமுடியும்.....///
சிங்கை மிக கட்டுப்பாடான நாடு என்கின்றனர்!!
நாம் என்ன செய்ய முடியும்!!
பெரும்பான்மையான மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து பழியுணர்வு அதிகரித்து வருகிறது. மாறி வரும் குடும்ப சூழலே இதற்கு காரணமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
உளவியல் ரீதியான அணுகுமுறைகள் அதிகம் தேவை.
சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டதற்காக இந்தியர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. ?
பெரும்பான்மையான மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து பழியுணர்வு அதிகரித்து வருகிறது. மாறி வரும் குடும்ப சூழலே இதற்கு காரணமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
உளவியல் ரீதியான அணுகுமுறைகள் அதிகம் தேவை.///
ஆமாம்!! இதற்கான பல காரணங்கள் ஆராயப்படவேண்டும்!!
சிங்கையில் சிறுவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் ஏற்ப்பட்ட விளைவு
எதிலும் கட்டுப்பாடு வேண்டும்
Post a Comment