அன்பு நண்பர்களே!!
கொலெஸ்ட்ரால் அல்லது கொழுப்புச்சத்து நம் உடலுக்குக் கேடானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
தற்போது உடல் பருமன்,இதயநோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.
கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகள் வராதா?
எனக்கு கொலெஸ்ட்ரால் சரியான அளவு உள்ளது. எனக்கு மாரடைப்பு வராதுதானே? என்றெல்லாம் நாம் கேட்கலாம்.
முன்பு ஆம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை..
ஆம்.. தற்போதைய ஆய்வின்படி திடீர் மரணம் சம்பவிப்பதில் 30% பேர் முதல் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முன் அவர்களுக்கு இதய நோயோ கொழுப்புச்சத்தோ இருந்ததில்லை.
அப்படியாயின் இதயநோய் வருமா வராதா என்று கண்டுபிடிப்பது எப்படி? என்று கேட்கலாம்...
அதற்கு பதிலும் தற்போது கிடைத்துள்ளது.
கொலெஸ்ட்ரால் கொழுப்பு வெண்ணை போல் பிசுபிசுப்புடன் ஒட்டும் தன்மையுள்ளது. இந்த கொலெஸ்ட்ராலில் Total cholesterol ( மொத்த கொழுப்பளவு) பொதுவாக கீழ்கண்ட வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அவற்றைச் சுட்டியாகவே தந்துள்ளேன்.
- உயர் அடர்த்தி கொழுப்பு (உடலுக்கு நலம் தருவதால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது) High density lipoprotein cholesterol (HDL-C)
- குறந்த அடர்த்தி கொழுப்பு( உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது). Low density lipoprotein cholesterol (LDL-C)
- ட்ரை கிளிசரைடு கொழுப்பு Triglycerides
- மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்பு Very low density lipoprotein cholesterol (VLDL-C).
குறைந்த அடர்த்தி கொழுப்பு உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது. Low density lipoprotein cholesterol (LDL-C).
ஆகையால் குறைந்த அடர்த்தி கொழுப்பு இரத்தத்தில் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என்று கூறப்பட்டு வந்தது.
கொழுப்புகள் பொதுவாக நீரில் கரையாது. இரத்ததில் அதனால் சரியாக பயணிக்க முடியாது. ஆகையால் இவை வேறு ஒரு பொருளால் போர்த்தப்பட்டு(கவச வண்டி என்று நாம் சொல்லிக்கொள்வோம்) இரத்தத்தில் பயணிக்கின்றன.
இப்படி குறைந்த அடர்த்தி கொழுப்புக்களை ஏற்றிச் செல்லும் கலனாக LDL-P கவச வண்டி செயல்படுகிறது.
கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றிச்செல்லும் L D L- P க்களின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அது இரத்தக்குழயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இந்த நெரிசலில்தான் இரத்தக்குழாய் சேதமடைந்து(Atheroscerosis) விடுகின்றன.
இதுவே மாரடைப்புக்குக் காரணமாக அமைகிறது.
விடை இப்போது தெரிகிறதா? ஆம். LDL-P க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய சோதனையின் பெயர் NMR LIPID PROFILE .
ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோரும் இதய நோயால் இறக்கின்றனர். இந்த புதிய சோதனைகளின் மூலம் இதை அறிந்தால் நாம் நம் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாமே!!!
41 comments:
தகவலுக்கு நன்றி டாக்டர்!
ஜாக்கிரதையாக இருக்கிறோம்!
இந்த சோதனையை எல்லா மருத்துவமனைகளிலும் செய்யலாமா டாக்டர்
உபயோகமான தகவல்
வால்பையன் said...
தகவலுக்கு நன்றி டாக்டர்!
ஜாக்கிரதையாக இருக்கிறோம்!//
நன்றி !!
சொல்லரசன் said...
இந்த சோதனையை எல்லா மருத்துவமனைகளிலும் செய்யலாமா டாக்டர்///
பம்பாயிலுள்ள சோதனை மையங்கள் செய்கின்றன. நாம் இரத்தம் அனுப்பவேண்டும்.
sakthi said...
உபயோகமான தகவல்//
வாங்க சக்தி!
தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல.
எளிமையான முறையில் அமைந்த
அறிவியல் விளக்கம்.,
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்
நன்றி தகவலுக்கு
பயனுள்ள தகவல்கள் டாக்டர்!
பகிர்விற்கு மிக்க நன்றி. இதுபோன்ற அத்தியாவசிய தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன :-(
தகவலுக்கு நன்றி...
அரிய தகவலுக்கு நன்றி நண்பரே
ஆனால் பம்பாய் அனுப்ப வேண்டுமா - பண விரைஅய்ம் ஆயிற்றே - சென்னை யில் கூட இல்லையா
நல்ல தகவல். LDL-P என்பது என்ன? அதை அதிகரிக்க என்ன செய்யலாம்?
உபயோகமான பகிர்வு டாக்டர், நன்றி.
HDL also should be high
LDL க்கும் LDL - p க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மிக நல்ல தகவல் நிறைந்த பதிவு.
தகவலுக்கு நன்றிகள் வைத்தியர் ஐயா.
உபயோகமான தகவல்
நல்ல தகவல் டாக்டர்.
பயணுள்ள தகவல்
நன்றி தேவா!
இராகவன் நைஜிரியா said...
தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல.///
வாங்க ஐயா!!
Blogger நிகழ்காலத்தில்... said...
எளிமையான முறையில் அமைந்த
அறிவியல் விளக்கம்.,
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்///
வாங்க நண்பரே!
குசும்பன் said...
நன்றி தகவலுக்கு//
நன்றி
ஜெட்லி said...
தகவலுக்கு நன்றி...//
நன்றி ஜெட்லி..
Blogger cheena (சீனா) said...
அரிய தகவலுக்கு நன்றி நண்பரே
ஆனால் பம்பாய் அனுப்ப வேண்டுமா - பண விரைஅய்ம் ஆயிற்றே - சென்னை யில் கூட இல்லையா///
இங்குள்ள ஆய்வகத்திலிருந்தே அனுப்பிவிடுவார்கள்..
தமிழ் பிரியன் said...
நல்ல தகவல். LDL-P என்பது என்ன? அதை அதிகரிக்க என்ன செய்யலாம்?//
உங்களுக்கான தகவல்களை பதிவில் சேர்த்துள்ளேன். பார்க்கவும்.
நல்ல தகவலுக்கு நன்றி தேவன் சார்
டாக்டர் சார் நல்ல தகவல் சொன்னீங்க கொழுப்பு கூடுதலா இருப்பவர்கள் எதையெல்லாம் சாப்பிடலாம் எதையெல்லாம் சாப்பிட கூடாது என்று சொன்னாலும் நல்லா இருக்கும்
ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி.
அவசியமான தகவல்கள்...
பதிவு பயனுள்ளது...
பதிவர்களுக்கென்று ஏதாவது டயட் அல்லது எக்ஷ்சசைஸ் புதிதாக வந்திருக்கிறதா?
அதாவது கணினி பெண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்களுக்கு...
மிகவும் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் அழகிய இடுகை. மிக்க நன்றி.
தகவல் பெட்டகம் தேவாசார் நீங்க
இதற்கான பரிசோதனை செய்வார்களா, அப்படி குறைவாக இருப்பதற்கு அறிவுரை மற்றும் அதற்கான மெடிசின் கிடைக்குமா
தகவலுக்கு நன்றி டாக்டர்!!!!
யோசிக்க வைக்கும் பிரயோசமான தகவல்.நன்றி டாக்டர்.
உபயோகமான தகவல். மிக்க நன்றி தேவா சார்.
தகவலுக்கு நன்றி தேவன் சார். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி .நல்ல தகவல் கொடுத்திருக்கிறீர்கள்.
உபயோகமாக இருக்கிறது.
Nice info Dr.
நல்ல தகவல் டாக்டர் மிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி டாக்டர்.
ரொம்ப அருமையான தகவல்கள்
நல்ல பதிவு
வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவா சார்
Post a Comment