Friday, 10 July 2009

பீரின் வேறு உபயோகங்கள்-5!!

நண்பர்களின் அறைகளுக்குச்செல்லும்போது பார்த்தால் அங்குமிங்கும் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கும். சில நேரங்களில் அவை பல புதிய முறைகளில்  உபயோகப்படுத்தப் பட்டு இருக்கும். ஒரு முறை விடுதி விழாவில் வார்டன், பேராசிரியர்கள் அமர்ந்திருந்த போது மேசையில் பூங்கொத்தை ஒரு பீர் பாட்டிலில் தண்ணி பிடித்து வைத்திருந்தார்கள் என்றால் பாருங்களேன். சில குடிமக்கள் சொன்ன சில உபயோகங்களைக் கீழே தந்துள்ளேன்(அவை உண்மையும் கூட.!!!)

1.பார்ட்டிக்கு ரெடியாகிறீர்கள் நண்பர்களுடன். சில நேரங்களில் திடீர்” வேர் இஸ் தி பார்ட்டி? எங்க ரூமில் பார்ட்டி” கதையாக நம் அறையிலேயே கோழி, பீர் சகிதம் ஆஜராகி விடுவார்கள்!  அந்த நேரம் கோழி மசாலா ரெடி பண்ணி கோழியை அதில் பிரட்டி ஊற வைப்போம் அல்லவா? அப்போது அந்த மசாலாத் தூளை பீர் ஊற்றி மிக்ஸ் பண்ணிப் பாருங்கள்!! அதன் ருசியே தனியாக இருக்கும்!! கட்டாயம் பாராட்டுவார்கள்!! ஒரு பீர் எக்ஸ்ட்ரா உண்டு!!

2.பீரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இது இரண்டு நாட்கள் மட்டுமே உப்யோகப்படும். எதற்கு? என்கிறீர்களா!! ஷாம்பூதான்!! நீங்கள் தலையில் ஊற்றிப்பாருங்கள்... அலாதியான நுரை வரும்!! இது பலரால் உபயோகப்படுத்தப்பட்டு பாராட்டுப்பெற்ற ஷாம்பூ!!

.மேலே பாருங்கள்!! பல நாடுகளில் பீர் ஷாம்பூ  கிடைக்குதாம் !!! நம்புகிறீர்களா?

3.இன்னொரு உபயோகம்! நம்ம அறை நாற்காலி, மேஜை ஆகியவற்றுக்கு பாலீஷ் போடாமல்(துடைக்காமல்!!!) பழையதாகத்தெரியும். பாட்டிலை தொறந்தாச்சு.. கொஞ்சம் எடுத்து ஒரு துணியில் நனைத்து துடைத்துப்பாருங்கள்!! அசந்து போய்விடுவீர்கள்! பளபளன்னு ஜொலிக்கும்!!அப்புறமென்ன ஈமெயிலில் என்னைப்பாராட்டி நன்றி சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்!!

4.நான் சொல்லக்கூடாது!! வயிறு அப்செட் ஆகி தொல்லை தருதா? பொருமலா?வாய்வுத்தொல்லை மற்றும் இன்ன பிற வயிற்றுப் பிரச்சினைகளா? கொஞ்சம் பீர் அருந்துவீர்.....அய்யா!! நான் சொல்லுவதெல்லாம் உண்மைங்கோ!! ..வயித்து வலிகூட பறந்துவிடும்.!( அல்சர் வலி மக்கள் ஊத்தீராதீங்க...!!!)

5.தோலைப் பாதுகாக்க மகளிர் அணி பல அழகு நிலையங்களுக்குப் படையெடுக்கும். மகளிருக்கு இவ்வளவு அழகு நிலையம் வைத்திருக்கும் இந்த உலகம் ஆண்களுக்குன்னு ஏதாவது செய்கிறதா? சரி விடுங்க!! நம்ம கண்டு புடிக்க மாட்டமா என்ன? நம்ம தோலைப்பாதுகாக்க சிறந்த வழி?..நம் அம்மிணிகள் குளிக்கும் தண்ணியில் வேப்பிலை,கறிவேப்பிலை,தயிர்,கழுதைப்பாலெல்லாம் ஊத்தி ஊறவைச்சுக் குளிப்பார்கள்! இதெல்லாம் வேஸ்ட் மக்கா! குளிக்கும் டப்பில் இரண்டு பீரை ஊத்துங்க! உள்ளே கொஞ்ச நேரம் உக்காருங்க!! டப் இல்லையா? இரண்டு பாட்டில் பீரை தலை முதல் கால் வரை ஊத்தி கொஞ்ச நேரத்தில் குளித்துவிடுங்கள்!!அப்புறம் பாருங்க உங்க தோல் மினுமினுப்பை!! எல்லாரும் உங்க அட்வைஸுக்கு கியூவில் நிற்பார்கள்!!

மக்களே!! மேலே நான் எழுதியுள்ளதெல்லாம் உண்மைகள்!!

_________________________________________________

யூத் விகடனுக்கு யாரும் சொல்லாதீங்க இதை! !!

________________________________________________________

தமிழ்த்துளி

காரைக்குடி தேவா..

_________________________________________________________

37 comments:

Anbu said...

சார் கலக்குறீங்கே...

Anbu said...

நான் ரொம்ப சின்னப்பையன் சார்....

குடிக்கலாமா...????

Anbu said...

இப்பத்தான் தெரியுது வால் ஏன் குடிமகன் பட்டம் பெற்றார் என்று..

வால் உங்களுக்கு இந்த டிப்ஸ் எல்லாம் தெரியுமா..

வால்பையன் said...

அப்படி வாங்க வழிக்கு,

எம்புட்டு நல்லது செய்யுற பீர திட்டலாமா!
வாங்க மக்கா ஆளுகொரு பீர் அடிப்போம்!

தேவன் மாயம் said...

நான் ரொம்ப சின்னப்பையன் சார்....

குடிக்கலாமா...????

10 July 2009 07:05//

வாலை விட சின்னப்பையனா?

தமிழ் அமுதன் said...

doctor ''i like u''

தேவன் மாயம் said...

Blogger வால்பையன் said...

அப்படி வாங்க வழிக்கு,

எம்புட்டு நல்லது செய்யுற பீர திட்டலாமா!
வாங்க மக்கா ஆளுகொரு பீர் அடிப்போம்!

10 July 2009 07:07//

கிளம்பியாச்சா!!! அன்புக்கு பதில் சொல்லவும்

தேவன் மாயம் said...

Blogger ஜீவன் said...

doctor ''i like u''//

இப்படி ஒரு நோயாளிகூடச்சொன்னதில்லை!!

துரை.ந.உ said...

எனக்கு அந்த 1 வது பாயிண்ட் புரியலியே :(

தேவன் மாயம் said...

Anonymous துரை.ந.உ said...

எனக்கு அந்த 1 வது பாயிண்ட் புரியலியே :(///

பீரை எடுங்க!
கோழியை எடுங்க!
மசாலா தூள் போடுங்க!
கொஞ்சம் பீர் ஊத்துங்க!!
கிளறி ஊறவைங்க!!
அப்புறம் சமையல் செய்க!

சூர்யா ௧ண்ணன் said...

தமிழ்துளி ன்னு பேர் வெச்சுகிட்டு பீரை தெளிக்கிரிங்களே தலைவா!
நல்லாயிருக்கு!

ஆனா நாத்தமடிக்காதா?

அ.மு.செய்யது said...

தலைவரே எங்கெயோ போயிடீங்க......

நாங்கெல்லாம் பீரே அடிக்கறதில்லையே நாங்க என்ன பண்றது ??

தினேஷ் said...

//பீரை எடுங்க!
கோழியை எடுங்க!
மசாலா தூள் போடுங்க!
கொஞ்சம் பீர் ஊத்துங்க!!
கிளறி ஊறவைங்க!!
அப்புறம் சமையல் செய்க//

ஆனா பதிவுல தண்ணிய கலக்குங்கனு போட்டிருக்கீங்களே .. நானும் குழம்பி போய்ட்டேன் ..

இதை செஞ்சு பாக்குறேன் . ஏன்னா சனிக்கிழமை கோழி , பீர் இல்லாமல் என் ரூமில் இருக்க விடமாட்டார்கள் ..
நன்றிகள் பல தகவலுக்கு..

பீர் | Peer said...

//Blogger வால்பையன் said...

அப்படி வாங்க வழிக்கு,

எம்புட்டு நல்லது செய்யுற பீர திட்டலாமா!//

பீர யாரு திட்டினது வாலு?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு செய்த விதம் நன்று!

தேவன் மாயம் said...

தமிழ்துளி ன்னு பேர் வெச்சுகிட்டு பீரை தெளிக்கிரிங்களே தலைவா!
நல்லாயிருக்கு!

ஆனா நாத்தமடிக்காதா///

உடலே நாத்தம்தான் நண்பா!! குளித்து விடணும்!!

தேவன் மாயம் said...

தலைவரே எங்கெயோ போயிடீங்க......

நாங்கெல்லாம் பீரே அடிக்கறதில்லையே நாங்க என்ன பண்றது ??///

இது அவாளுக்கு மட்டும்!!
__________________________

10 July 2009 07:40
Delete
Blogger சூரியன் said...

//பீரை எடுங்க!
கோழியை எடுங்க!
மசாலா தூள் போடுங்க!
கொஞ்சம் பீர் ஊத்துங்க!!
கிளறி ஊறவைங்க!!
அப்புறம் சமையல் செய்க//

ஆனா பதிவுல தண்ணிய கலக்குங்கனு போட்டிருக்கீங்களே .. நானும் குழம்பி போய்ட்டேன் ..

இதை செஞ்சு பாக்குறேன் . ஏன்னா சனிக்கிழமை கோழி , பீர் இல்லாமல் என் ரூமில் இருக்க விடமாட்டார்கள் ..
நன்றிகள் பல தகவலுக்கு.///

செய்து பாருங்க!! அப்புறம் சொல்லுங்க!!
_____________________________

10 July 2009 07:45
Delete
Blogger பீர் | Peer said...

//Blogger வால்பையன் said...

அப்படி வாங்க வழிக்கு,

எம்புட்டு நல்லது செய்யுற பீர திட்டலாமா!//

பீர யாரு திட்டினது வாலு?//

பீர திட்டுவமா! செல்லமா திட்டியிருப்பாங்க!!
_________________________________

10 July 2009 07:55
Delete
Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு செய்த விதம் நன்று!///

பீரின் நற்பண்புகளைச்சொன்னேன்!!
_______________________________

10 July 2009 07:56
Delete

தினேஷ் said...

//அந்த மசாலாத் தூளை தண்ணீர் ஊற்றி மிக்ஸ் பண்ணிப் பாருங்கள்//

இன்னும் பதிவுல பீருனு மாத்தலேயா . இல்ல பீரும் தண்ணீரும் ஒண்ணுதானு நினைக்கிற எங்க கூட்டத்துல ஒருத்தரா?

அப்துல்மாலிக் said...

வயிற்று வலி அதன் மூலம் கிட்னி பிராப்ளம் என்று கண்டுபிடித்த டாக்டர் தினமும் ஒரு கிளாஸ் பீர் மட்டும் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடும்படி (வேறு எந்த மாத்திரையும் தராமல்)சொல்லிருக்கிறார், இது என் நண்பன் அவருக்கு தெரிந்வர்கள் சொன்னதாம், இப்போது அது எனக்கு ஞாபகம் வருது

அப்துல்மாலிக் said...

பீர் உடல் சூட்டை தனிக்கும் என்று சொல்லுவார்களே உண்மையா, காலேஜ் படிக்கும்போதும் எப்பவும் இப்படி சொல்லிதான் என் நண்பர்கள் குடிப்பார்கள் (நா இல்லீங்கோ)

அப்துல்மாலிக் said...

//பீரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்//

பீரும் ஹாஃப் பாயிலும் சாப்பிடுபவர்கள் வயிற்றிலும் வாயிலும் நுரைதள்ளுமா, அப்போ இது தேவையில்லாததுதானே

தேவன் மாயம் said...

Blogger சூரியன் said...

//அந்த மசாலாத் தூளை தண்ணீர் ஊற்றி மிக்ஸ் பண்ணிப் பாருங்கள்//

இன்னும் பதிவுல பீருனு மாத்தலேயா . இல்ல பீரும் தண்ணீரும் ஒண்ணுதானு நினைக்கிற எங்க கூட்டத்துல ஒருத்தரா?///

மாற்றிவிட்டேன் நண்பா!
_______________________________

10 July 2009 08:18
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

வயிற்று வலி அதன் மூலம் கிட்னி பிராப்ளம் என்று கண்டுபிடித்த டாக்டர் தினமும் ஒரு கிளாஸ் பீர் மட்டும் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடும்படி (வேறு எந்த மாத்திரையும் தராமல்)சொல்லிருக்கிறார், இது என் நண்பன் அவருக்கு தெரிந்வர்கள் சொன்னதாம், இப்போது அது எனக்கு ஞாபகம் வருது

10 July 2009 08:19
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

பீர் உடல் சூட்டை தனிக்கும் என்று சொல்லுவார்களே உண்மையா, காலேஜ் படிக்கும்போதும் எப்பவும் இப்படி சொல்லிதான் என் நண்பர்கள் குடிப்பார்கள் (நா இல்லீங்கோ)

10 July 2009 08:20
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

//பீரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்//

பீரும் ஹாஃப் பாயிலும் சாப்பிடுபவர்கள் வயிற்றிலும் வாயிலும் நுரைதள்ளுமா, அப்போ இது தேவையில்லாததுதானே///

அபு!
பெரிய ஆராய்ச்சியே பண்ணனும்போல!! தலையில் நுரை வரும் அது உண்மை! வயித்துக்குள்ள நுரை தள்ளினா ஓகே!!
வாயில் நுரை தள்ளாம இருந்தாச் சரி!!

தேவன் மாயம் said...

சூரியன்!!
பீர் சிக்கன் செய்முறை ஒன்று இங்கு பார்க்கவும்.
http://www.cdkitchen.com/recipes/recs/283/Beer_Chicken16194.shtml

Unknown said...

குடிக்கயில்லை குளிக்கறத்துக்கு என்றுசொல்லி பீரை வீட்டுக்கு
வாங்கிட்டுபோக‌நல்ல ஜடியா கொடுத்த டாக்டர் வாழ்க‌

தினேஷ் said...

/சூரியன்!!
பீர் சிக்கன் செய்முறை ஒன்று இங்கு பார்க்கவும்.
http://www.cdkitchen.com/recipes/recs/283/Beer_Chicken16194.shtml //

எனக்காக இந்த லின்கை ஸ்பெசலா தந்ததுக்கு ஸ்பெசல் நன்றிகள்

Unknown said...

அடங்கொன்னியா .....!!!! அப்பறம் பீர் குடுச்சா , ஒடம்புல இருக்குற லிவர் , கிட்னி , சிறு குடல் , பெருங்குடல் ..... எல்லாம் பள.... பளன்னு... பாலீஷ் ஆவுதாமே....

மெய்யாலுமா ?????

சிநேகிதன் அக்பர் said...

பீரில் இவ்வளவு மேட்டர் இருக்கா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆறுச்சாமிய மிஞ்சீட்டீங்க...

மங்களூர் சிவா said...

/
Anbu said...

நான் ரொம்ப சின்னப்பையன் சார்....

குடிக்கலாமா...????
/

இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

என்ன என்னமோ சொல்லுறீங்க பாராட்டுகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//குளிக்கும் டப்பில் இரண்டு பீரை ஊத்துங்க! உள்ளே கொஞ்ச நேரம் உக்காருங்க!! டப் இல்லையா? இரண்டு பாட்டில் பீரை தலை முதல் கால் வரை ஊத்தி கொஞ்ச நேரத்தில் குளித்துவிடுங்கள்!!அப்புறம் பாருங்க உங்க தோல் மினுமினுப்பை!! எல்லாரும் உங்க அட்வைஸுக்கு கியூவில் நிற்பார்கள்!!//

குடிக்கிறதுக்குன்னு தான் பீர்ன்னு கேள்விபட்டிருக்கேண்!

குளிக்கிறதுக்குமா?

*இயற்கை ராஜி* said...

mm...nalla uses:-)))

அப்பாவி முரு said...

மருத்துவர் ஐய்யா அவர்களே.,

வைத்தியதிற்கு குறிப்பிட்ட பிராண்டட் பியர் தான் வேண்டுமா? இல்லை நம்ம டாஸ்மாகில் கிடைக்கும் மூன்றாம் தர பியர்களையும் பயன்படுத்தலாமா?
தெளிவுபடுத்தினால் தான் பதிவு முழுமை பெரும்!

சுந்தர் said...

நான்கூட ஜெய் கிந்துபுரம் பீர சொல்றீங்கன்னு நினச்சேன்.

sakthi said...

கொஞ்சம் எடுத்து ஒரு துணியில் நனைத்து துடைத்துப்பாருங்கள்!! அசந்து போய்விடுவீர்கள்! பளபளன்னு ஜொலிக்கும்!!அப்புறமென்ன ஈமெயிலில் என்னைப்பாராட்டி நன்றி சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்!

அப்படியா சேதி

நன்றி தேவா சார்

கிரி said...

ஒரு சிலதை செயல்படுத்தி பார்த்துட வேண்டியது தான்!

cheena (சீனா) said...

பீர்ல இவ்ளோ விசயம் இருக்கா

மருத்துவர் தேவகுமார் சொன்னா சரியாத்தான் இருக்கும்

செஞ்சிட வேண்டியது தான்

எலே அன்பு - அய்யா சொன்னர்ருன்னு ஏதாச்சும் வாலு கூட சேந்து அடிச்சி வைக்காதே - ஆமா சொல்லிப்புட்டேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory