Wednesday 1 July 2009

போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

 

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம் …

கீழ்வரும் தலைப்புகளில் எழுதவேண்டும்...

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  science@sgtamilbloggers.com
1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை
2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)
4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்
5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்
6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

 

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  literature@sgtamilbloggers.com
1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை
2) மொழி/நிலம் சார்ந்த அறிவு
3) திணையும், நிலமும்
4) தமிழர் இசை
5) குறளில் மேலாண்மை
6) சங்கம் மருவிய காதல் இன்று
7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு

படைப்புகள் இந்தத் தலைப்புகளில் எழுதவேண்டும்!மேலும் அறிய மணற்கேணி

என்ன மக்களே சிங்கப்பூர் செல்ல தயாரா?

தமிழ்த்துளி தேவா..

24 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல்

தாங்களும் கலந்து கொள்ளுங்கள்

நட்புடன் ஜமால் said...

வாருங்கள் காத்திருக்கிறோம் சந்திக்க

அகநாழிகை said...

தேவா,
போட்டி பற்றிய அறிமுகப்பதிவு அருமை.
அதைவிட நான் ரசித்து வாசித்தது நீங்கள் முன்னுரையாக எழுதியது. ஒவ்வொருவருக்குள்ளும் எழுதும் திறன் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
மிகவும் நன்றாகவும், வழக்கமான உங்கள் நடையிலிருந்து சற்றே மாற்றத்துடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள், தேவா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கோவி.கண்ணன் said...

வெளி இட்டு விளம்பரப்படுத்துவதற்கு மிக்க நன்றி !

சுந்தர் said...

ஓகே, பாஸ்போர்ட் எடுத்துருவோம்.

ஆ.ஞானசேகரன் said...

சிங்கை பதிவர் சார்பாக மிக்க நன்றி தேவன் சார்..

குடந்தை அன்புமணி said...

தேவன் சார், உங்களை சிங்கப்பூரில்தான் சந்திக்கணும்னு இருக்கு போல... உடனே வேலையை ஆரம்பிங்க...

வால்பையன் said...

சிங்கப்பூர் போறவங்க சொல்லிட்டு போங்கப்பா, வாங்கிட்டு வர ஒரு லிஸ்ட் இருக்கு!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்தல்

தாங்களும் கலந்து கொள்ளுங்கள்

01 July 2009 20:00

நட்புடன் ஜமால் said...
வாருங்கள் காத்திருக்கிறோம் சந்திக்க
///
வந்து விடுகிறேன்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல அறிமுகம் தேவா சார்..

தேவன் மாயம் said...

"அகநாழிகை" said...

தேவா,
போட்டி பற்றிய அறிமுகப்பதிவு அருமை.
அதைவிட நான் ரசித்து வாசித்தது நீங்கள் முன்னுரையாக எழுதியது. ஒவ்வொருவருக்குள்ளும் எழுதும் திறன் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
மிகவும் நன்றாகவும், வழக்கமான உங்கள் நடையிலிருந்து சற்றே மாற்றத்துடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள், தேவா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
///
அன்பு நண்பரே!! மிக்க நன்றி!! அது சிங்கைப் பதிவர்கள் எழுதியது.... வாழ்த்துக்கள் அவர்களையே சாரும்!!

தேவன் மாயம் said...

Blogger கோவி.கண்ணன் said...

வெளி இட்டு விளம்பரப்படுத்துவதற்கு மிக்க நன்றி !///
இது நம்ம கடமைங்க!!
-----------------------

01 July 2009 20:32
Delete
Blogger சுந்தர் said...

ஓகே, பாஸ்போர்ட் எடுத்துருவோம்.///
ஆமா உடனே!!!
---------------------

01 July 2009 21:12
Delete
Blogger ஆ.ஞானசேகரன் said...

சிங்கை பதிவர் சார்பாக மிக்க நன்றி தேவன் சார்..///

வாருங்கள் ஞான்ஸ்!!
=-------------------------

01 July 2009 21:53
Delete
Blogger குடந்தை அன்புமணி said...

தேவன் சார், உங்களை சிங்கப்பூரில்தான் சந்திக்கணும்னு இருக்கு போல... உடனே வேலையை ஆரம்பிங்க...///

பொட்டி கட்டியாச்சு
-----------------------

01 July 2009 22:12
Delete
Blogger வால்பையன் said...

சிங்கப்பூர் போறவங்க சொல்லிட்டு போங்கப்பா, வாங்கிட்டு வர ஒரு லிஸ்ட் இருக்கு!///

சரக்குவகைகள் உண்டு
-----------------------

சி தயாளன் said...

:-))

அப்பாவி முரு said...

//போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!! //


அதென்ன செல்லுங்க...

எங்களால்தான் கலந்து கொள்ள முடியாது. ஆனாலும், மற்ற எல்லா தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.

வால்பையன் said...

//எங்களால்தான் கலந்து கொள்ள முடியாது. ஆனாலும், மற்ற எல்லா தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை. //

அதானே! முரு கேட்கும் கேள்வி நியாமமானது தான். சிங்கப்பூரில் இருப்பவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் எங்கே அனுப்புவார்கள்!

யூர்கன் க்ருகியர் said...

சிங்கப்பூரிலிருந்து வரும்போது "சென்ட்டு பாட்டில்" வாங்கி வரவும்.
நன்றி

Rajeswari said...

தகவலுக்கு நன்றி தேவா சார்

அப்துல்மாலிக் said...

சென்னை பதிவர்களுக்கு மட்டும்தான் இந்த போட்டிய‌

நாங்களெல்லாம் படித்து ரசிக்க மட்டும்தானா

தாங்கள் முன்னுரை நல்லாயிருந்தது

குமரை நிலாவன் said...

நல்ல முன்னுரை தேவா சார்

சென்னை பதிவர்களுக்கு மட்டும்தான் இந்த போட்டிய‌

நாங்களெல்லாம் படித்து ரசிக்க மட்டும்தானா

வெற்றி-[க்]-கதிரவன் said...

//
வால்பையன் said...
சிங்கப்பூர் போறவங்க சொல்லிட்டு போங்கப்பா, வாங்கிட்டு வர ஒரு லிஸ்ட் இருக்கு!

//
மீ டு

தேவன் மாயம் said...

’டொன்’ லீ said...
:-))

வாங்க டொன்லீ!!
--------------------------
02 July 2009 00:49
அப்பாவி முரு said...
//போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!! //


அதென்ன செல்லுங்க...

எங்களால்தான் கலந்து கொள்ள முடியாது. ஆனாலும், மற்ற எல்லா தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.///

உங்களுக்கு இந்தியா வர டிக்கெட் தருவாங்க!!

ரிடர்ன் டிக்கெட்டை முதலில் உபயோகித்துவிட்டு.............
-------------------------

02 July 2009 01:38
வால்பையன் said...
//எங்களால்தான் கலந்து கொள்ள முடியாது. ஆனாலும், மற்ற எல்லா தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை. //

அதானே! முரு கேட்கும் கேள்வி நியாமமானது தான். சிங்கப்பூரில் இருப்பவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் எங்கே அனுப்புவார்கள்!

-------------------------
02 July 2009 02:02
யூர்கன் க்ருகியர்..... said...
சிங்கப்பூரிலிருந்து வரும்போது "சென்ட்டு பாட்டில்" வாங்கி வரவும்.
நன்றி////

புரியுது!! புரியுது!!!
-------------------------

02 July 2009 02:57
Rajeswari said...
தகவலுக்கு நன்றி தேவா சார்///

வாங்க!!
-----------------------

02 July 2009 04:58
அபுஅஃப்ஸர் said...
சென்னை பதிவர்களுக்கு மட்டும்தான் இந்த போட்டிய‌

நாங்களெல்லாம் படித்து ரசிக்க மட்டும்தானா

தாங்கள் முன்னுரை நல்லாயிருந்தது//

எங்களை ஊக்குவிக்க வாங்க!!
---------------------

02 July 2009 05:04
குமரை நிலாவன் said...
நல்ல முன்னுரை தேவா சார்

சென்னை பதிவர்களுக்கு மட்டும்தான் இந்த போட்டிய‌

நாங்களெல்லாம் படித்து ரசிக்க மட்டும்தானா//

எங்களை வரவேற்க ... ட்ரீட் குடுக்க...
------------------------

02 July 2009 05:11
பித்தன் said...
//
வால்பையன் said...
சிங்கப்பூர் போறவங்க சொல்லிட்டு போங்கப்பா, வாங்கிட்டு வர ஒரு லிஸ்ட் இருக்கு!

//
மீ டு///

கட்டாயம் வாங்கிவருவோம்!!

கிரி said...

சிங்கை பதிவர்கள் சார்பாக நன்றி

அமுதா said...

நல்ல பகிர்வு

Suresh Kumar said...

பதிவர்களை உற்சாகப்படுத்தும் தமிழ் வெளி மற்றும் சிங்கை பதிவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல நீங்களும் கலந்து சிங்கை செல்ல வாழ்த்துகிறேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory