ரஜினி கமல் இருவரும் தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இருவரையும் வைத்துப் படம் எடுப்பது பற்றி பலரும் பேசிவருகிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள்.
ஆனால் யாருக்கும் இதுவரை அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆமா!! அது பெரிய விசயங்க.
ரஜினி கமல் இரண்டு பேரையும் வைத்து எடுக்கும் தயாரிப்பாளராகட்டும், இயக்குனராகட்டும் பெரும் பணம் சம்பாதிக்கப்போவது உறுதி. இது நம்ம நடிகர்களுக்குத் தெரியாதா என்ன? அதனால் இதில் பெரும் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.
கமலை வைத்து தசாவதாரமும், ரஜினியை வைத்து படையப்பாவும் தந்து வெற்றிகரமான் இயக்குனராக இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். இரண்டு பேரையும் சமாளித்துப் படம் பண்ணும் திறமையாளர்களில் இவர் முன்னணியில் உள்ளார்.
நல்ல கதையும் சந்தர்ப்பமும் அமைய வேண்டும் என்று இரு நடிகர்களும் தப்பித்துக்கொண்டுள்ள சமயத்தில் டைரக்டர்.ரவிக்குமாரிடம் இதைப்பற்றிக்கேட்ட போது” ரஜினி,கமல் இருவருக்கும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. யாராவது சரியானமுறையில் தூண்டிவிட்டால்தான் இது நடக்கும். அப்படியே நடக்கும்பட்சத்தில் அந்த பட்ஜெட் தாங்கக்கூடிய தயாரிப்பாளர் வேண்டும்.”
”என்னைய விட்டு விடுங்க! நான் அவர்களிடம் போய் படம் செய்யுங்க என்று நிற்க மாட்டேன்.நான் ஏதோ பணம் பண்ண ஆசைப்பட்டு வருவதாக சொல்வார்கள்” என்று தப்பித்துவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். திரையுலகம் புத்துணர்ச்சி பெற இத்தகைய முயற்சிகள் தேவை. மலையாளப் பட உலகில் மம்முட்டி,மோகன்லால் எல்லாம் சேர்ந்து நடிப்பது சாதாரணம்!!
நம் தமிழ்ப் பட உலகில் இது சாத்தியப்படவில்லை!! ஏன்?
ரசிகர்களின் இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
தமிழ்த்துளி.தேவா.
29 comments:
me the first
இருவரும் இணைந்து நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..
இதுபோல் விஜய்-அஜித் நடித்தால் இன்னும் நல்லா இருக்கும்..
நல்ல படமா வருதான்னு பாருங்க
சேர்ந்தா என்னா
சேராட்டி தான் என்னா
(எப்படியோ மேட்டர் படு ஜூடு தான் )
தேவா சார் நீங்க படம் தயாரிக்க தயார் என்றால் அவர்களை சம்மதிக்க வைப்பது என் வேலை :)
//இருவரும் இணைந்து நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..///
மிக நன்றாக இருக்கும்...
//இதுபோல் விஜய்-அஜித் நடித்தால் இன்னும் நல்லா இருக்கும்..
//
படு கேவலமாக் இருக்கும்
//சேர்ந்தா என்னா
சேராட்டி தான் என்னா// யாரை சொல்றீங்க ஜமால் சாரூஊஊஊஊ
அப்படியே நடக்கும்பட்சத்தில் அந்த பட்ஜெட் தாங்கக்கூடிய தயாரிப்பாளர் வேண்டும்.” டைரக்டர் சங்கர் என்றால் தான் தயாரிப்பாளர் ஓடிடுவார்.
இவர்களுக்கு பட்ஜெட் பெரிய விச்யம் இல்லை. சேர்ந்து நடிக்கும் ஆசை/ மனசு அவர்களுக்கு இல்லை என்பதே உன்மை
Blogger Anbu said...
இருவரும் இணைந்து நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..
இதுபோல் விஜய்-அஜித் நடித்தால் இன்னும் நல்லா இருக்கும்..
01 July 2009 01:05///
நல்லாத்தான் இருக்கும்!!
நல்ல படமா வருதான்னு பாருங்க
சேர்ந்தா என்னா
சேராட்டி தான் என்னா
(எப்படியோ மேட்டர் படு ஜூடு தான் )//
அதே!! அதே!!
Anonymous Anonymous said...
//இருவரும் இணைந்து நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..///
மிக நன்றாக இருக்கும்...
//இதுபோல் விஜய்-அஜித் நடித்தால் இன்னும் நல்லா இருக்கும்..
//
படு கேவலமாக் இருக்கும்
01 July 2009 01:17
Delete
Anonymous Anonymous said...
//சேர்ந்தா என்னா
சேராட்டி தான் என்னா// யாரை சொல்றீங்க ஜமால் சாரூஊஊஊஊ
01 July 2009 01:19
Delete
Anonymous Anonymous said...
அப்படியே நடக்கும்பட்சத்தில் அந்த பட்ஜெட் தாங்கக்கூடிய தயாரிப்பாளர் வேண்டும்.” டைரக்டர் சங்கர் என்றால் தான் தயாரிப்பாளர் ஓடிடுவார்.
இவர்களுக்கு பட்ஜெட் பெரிய விச்யம் இல்லை. சேர்ந்து நடிக்கும் ஆசை/ மனசு அவர்களுக்கு இல்லை என்பதே உன்மை
01 July 2009 01:22
Delete
///
அனானி !!
நல்ல ஜூடா இருக்கே!!
நடத்துங்க!!
தேவா சார் நீங்க படம் தயாரிக்க தயார் என்றால் அவர்களை சம்மதிக்க வைப்பது என் வேலை :)//
நான் இயக்குகிறேன்!!
நீங்க தயாரிங்க!!!
மருதநாயகத்தில் ரஜினி நடிப்பதாக பேச்சு அடிபட்டது.அதற்கு பிறகு
இருவரும் சேர்ந்து நடிக்க போவதாக, வதந்தி கூட வரவில்லை.
இதுல நிறைய ஈகோ பிராப்ளம் இருக்கு தேவா சார்.
நல்ல படமா இருந்தா சரி..
விடுங்க பாஸூ...டி ஆரு, விஜயகாந்து, எஸ் ஜே சூர்யா, சிம்பு, ரித்திசு, சாம் அண்டர்சன் எல்லாரும் சேர்ந்து படம் நடிப்பதாக நான் ஒரு கனவு நேற்று கண்டேன். என்ன ஒரு பயங்கரமான கனவு...:-)
♥ ரவிக்குமார் சொல்வது சரிதான். ஆனால் அவருக்கும் ஆசை இருப்பது இதன் மூலம் நிருபணமாகியுள்ளது. (இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....)
அஜித்தும், விஜயும் கூட இப்போ சேர்ந்து நடிக்க மாட்டாங்க!
ரஜினியும், கமலுக்கும் போயிட்டிங்க!
நேத்து முளைச்ச காளானுக்கே அம்புட்டு இருக்கும் போது, ரெண்டு ஆலமரங்கள் ஒண்ணாவருமா?
சிம்பு தனுஷ ஒண்ணா நடிக்க வெக்க முடியுமான்னே தெரியல, நீங்க வேற.. :-)
//சிம்பு தனுஷ ஒண்ணா நடிக்க வெக்க முடியுமான்னே தெரியல, நீங்க வேற.. :-)//
அண்ணே முதல்ல ரஜனி கமல் ஒன்னா நடிச்சாங்க இப்ப இல்ல..அஜித்,விஜய் ஒன்னா நடிச்சாங்க இப்ப இல்ல..ஏன்னா அவங்க செட்டில் ஆகீட்டாங்க அதான்... :)))
நல்லாதான் இருக்கும் ஆனா பேசி புரோஜனம் இல்லை!!!
இப்போ இருக்குற ஜுஜுபி தனுஷ், சிம்பு சேர்ந்து நடிக்கிறதே நம்ம தமிழ் சினிமாவில ப்ப்ப்ப்ப்ப்பெரிய விஷயம். அவங்க ரெண்டு பெரும் எங்க தல பண்ணப்போறாங்க.
hmmm
parpom...
viraivil varum or padam entru
நீங்க ஹீரோ வ நடிங்க .... உங்களுக்கு அப்பாவாக ரஜினி கதாநாயகி த்ரிஷா க்கு அப்பாவாக கமல் ....
ஓகே வா ?????
ஹி ஹி ஹி
ஆமா....ஆமா...!!! யாராவது ரஜினி , கமல ஒரே படத்துல நடிக்க வெச்சா நல்லாத்தான் இருக்கும்......
ஆனா ரெண்டு பேர்த்துக்கும் ஜோடியா... எங்க காவியத் தலைவி " ஷகிலாதான் " ஜோடியா நடிக்கணும்...!!! இல்லாங்காண்டி .... எங்க ரசிகர் சங்கத்துல இருந்து எதிர்ப்பு தெரிவிப்போம்.....!!!!!
நல்லாயிருக்கும்....
சேர்ந்து நடித்தால் கொஞசம் சுதப்பலாக வந்துவிடலாம்... என்னை கேட்டால் வேறு இளம் நடிகர் படத்தில இருவரும் கெஸ்ட் ரோலில் வரலாம்
இந்த கேள்விக்கு ரஜினியே ஒரு மேடையில் பதில் சொன்னார், அதாவது ரெண்டுபேரு இரண்டு பேனரில் நடித்தால் இரண்டு பேனரில் தனிதனியே அதிகம் பேரு வேலை செய்து சம்பாதிப்பாங்க, இரண்டுபேரும் இணைந்து ஒரே பேனரில் நடித்தால் ஒரு பேனருக்கு உள்ள தொழிலாளர்கள் தான் பயனடைவார்கள்...
அதன் காரணமாகதான் இரண்டுபேரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று சொன்னார்
▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩
MASILAMANI FULL MOVIE!
A great new tamil movie with amazing songs!
Download the full movie in a clear version!
http://hotfile.com/links/7867032/52e78b0/Masilamani-DVDRIP_(2009).part1.rar.html
http://hotfile.com/links/7866991/cf7964c/Masilamani-DVDRIP_(2009).part2.rar.html
▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩
இரண்டு பேருக்கும் இத்தன வயசாகிடுச்சி. இனிமே சேர்ந்து நடிக்கணும்னா நல்ல கதை வேணும். மொதல்ல அது இருக்கான்னு கேளுங்க. :)
Post a Comment