அன்பு நண்பர்களே!!
நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது! ஒரு படம் கலைப்படமா இல்லை பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டதா என்பது ஒரு படத்தைப் பார்க்கப் போகும் முன் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த விதத்தில் இது ஒரு பொழுதுபோக்குப் படம். அந்த மன நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதில் எனக்குத் தோன்றியவை.
1.விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று காட்ட டைரக்டர் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறார். இது நாம் ரஜினி உட்பட எல்லா ஆக்ஷன் ஹீரோக்களுக்கும் நமது இயக்குனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாகவேண்டிய கட்டாய ஃபார்முலா!! உங்களிடமோ என்னிடமோ இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்யக் கொடுத்தால் இன்றைய ட்ரெண்டில் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் படத்திலிருந்து நம்மைத் தூக்கிவிடுவார்கள்!!
2.ஒரு வணிகப் படத்தில் விஜய் இந்தப் படத்தில் செய்திருப்பதைவிடச் சிறப்பாகச் செய்ய வழியில்லை.
3.படத்தில் விஜய் காஸ்ட்யூமில் இன்னும் அக்கரை காட்டி இருக்க வேண்டும். சில இடங்களில் சட்டைக்குப் பொருந்தாத காட்டன் கால்சட்டைகள் பொருந்தவில்லை.
4.கதாநாயகி கட்டாயம் வேறு ஒருவரைப் போட்டிருக்கலாம். முகபாவனைகள் தமிழ் செண்டிமெண்டுக்கு ஒத்துப் போகவில்லை.
5.காதல் சம்பவங்களை இன்னும் ரொமாண்டிக்காகப் பின்னியிருக்கலாம்.
6.படத்தில் வன்முறை மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளது. இது தற்போது எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காணப்படும் விரும்பத்தகாத ஒன்று.
7.ஒரு நல்ல போலீஸ் அதிகாரி போலீஸ் துறையினரின் உதவியுடனேயே தன் குடும்பம், கண் பார்வை இழப்பதும், குடும்பப் பெண்கள் ரவுடி செல்லாவால் கற்பிழப்பதும் நம் சமூக அமைப்பில் சாதாரண மக்கள் மற்றும் நல்ல போலீஸ் அதிகாரிகள் மதிப்புடன் வாழ முடியாதோ என்ற அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
8.எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காட்டப்படும்- டிட் ஃபார் டாட் வகை வில்லன் ஹீரோ பழி வாங்கும் ஃபார்முலா நிகழ்ச்சிகள் இந்தப் படத்திலும் கையாளப் பட்டிருப்பதால் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை படம் பார்க்கும் நாம் கணிக்க முடிகிறது.
9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.