நண்பர்களின் அறைகளுக்குச்செல்லும்போது பார்த்தால் அங்குமிங்கும் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கும். சில நேரங்களில் அவை பல புதிய முறைகளில் உபயோகப்படுத்தப் பட்டு இருக்கும். ஒரு முறை விடுதி விழாவில் வார்டன், பேராசிரியர்கள் அமர்ந்திருந்த போது மேசையில் பூங்கொத்தை ஒரு பீர் பாட்டிலில் தண்ணி பிடித்து வைத்திருந்தார்கள் என்றால் பாருங்களேன். சில குடிமக்கள் சொன்ன சில உபயோகங்களைக் கீழே தந்துள்ளேன்(அவை உண்மையும் கூட.!!!)
1.பார்ட்டிக்கு ரெடியாகிறீர்கள் நண்பர்களுடன். சில நேரங்களில் திடீர்” வேர் இஸ் தி பார்ட்டி? எங்க ரூமில் பார்ட்டி” கதையாக நம் அறையிலேயே கோழி, பீர் சகிதம் ஆஜராகி விடுவார்கள்! அந்த நேரம் கோழி மசாலா ரெடி பண்ணி கோழியை அதில் பிரட்டி ஊற வைப்போம் அல்லவா? அப்போது அந்த மசாலாத் தூளை பீர் ஊற்றி மிக்ஸ் பண்ணிப் பாருங்கள்!! அதன் ருசியே தனியாக இருக்கும்!! கட்டாயம் பாராட்டுவார்கள்!! ஒரு பீர் எக்ஸ்ட்ரா உண்டு!!
2.பீரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இது இரண்டு நாட்கள் மட்டுமே உப்யோகப்படும். எதற்கு? என்கிறீர்களா!! ஷாம்பூதான்!! நீங்கள் தலையில் ஊற்றிப்பாருங்கள்... அலாதியான நுரை வரும்!! இது பலரால் உபயோகப்படுத்தப்பட்டு பாராட்டுப்பெற்ற ஷாம்பூ!!
.மேலே பாருங்கள்!! பல நாடுகளில் பீர் ஷாம்பூ கிடைக்குதாம் !!! நம்புகிறீர்களா?
3.இன்னொரு உபயோகம்! நம்ம அறை நாற்காலி, மேஜை ஆகியவற்றுக்கு பாலீஷ் போடாமல்(துடைக்காமல்!!!) பழையதாகத்தெரியும். பாட்டிலை தொறந்தாச்சு.. கொஞ்சம் எடுத்து ஒரு துணியில் நனைத்து துடைத்துப்பாருங்கள்!! அசந்து போய்விடுவீர்கள்! பளபளன்னு ஜொலிக்கும்!!அப்புறமென்ன ஈமெயிலில் என்னைப்பாராட்டி நன்றி சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்!!
4.நான் சொல்லக்கூடாது!! வயிறு அப்செட் ஆகி தொல்லை தருதா? பொருமலா?வாய்வுத்தொல்லை மற்றும் இன்ன பிற வயிற்றுப் பிரச்சினைகளா? கொஞ்சம் பீர் அருந்துவீர்.....அய்யா!! நான் சொல்லுவதெல்லாம் உண்மைங்கோ!! ..வயித்து வலிகூட பறந்துவிடும்.!( அல்சர் வலி மக்கள் ஊத்தீராதீங்க...!!!)
5.தோலைப் பாதுகாக்க மகளிர் அணி பல அழகு நிலையங்களுக்குப் படையெடுக்கும். மகளிருக்கு இவ்வளவு அழகு நிலையம் வைத்திருக்கும் இந்த உலகம் ஆண்களுக்குன்னு ஏதாவது செய்கிறதா? சரி விடுங்க!! நம்ம கண்டு புடிக்க மாட்டமா என்ன? நம்ம தோலைப்பாதுகாக்க சிறந்த வழி?..நம் அம்மிணிகள் குளிக்கும் தண்ணியில் வேப்பிலை,கறிவேப்பிலை,தயிர்,கழுதைப்பாலெல்லாம் ஊத்தி ஊறவைச்சுக் குளிப்பார்கள்! இதெல்லாம் வேஸ்ட் மக்கா! குளிக்கும் டப்பில் இரண்டு பீரை ஊத்துங்க! உள்ளே கொஞ்ச நேரம் உக்காருங்க!! டப் இல்லையா? இரண்டு பாட்டில் பீரை தலை முதல் கால் வரை ஊத்தி கொஞ்ச நேரத்தில் குளித்துவிடுங்கள்!!அப்புறம் பாருங்க உங்க தோல் மினுமினுப்பை!! எல்லாரும் உங்க அட்வைஸுக்கு கியூவில் நிற்பார்கள்!!
மக்களே!! மேலே நான் எழுதியுள்ளதெல்லாம் உண்மைகள்!!
_________________________________________________
யூத் விகடனுக்கு யாரும் சொல்லாதீங்க இதை! !!
________________________________________________________
தமிழ்த்துளி
காரைக்குடி தேவா..
_________________________________________________________