Saturday, 18 April 2009

இறந்த மகன் வேண்டும் !!


  அன்பு என்பது மிகச்சிறந்த விசயம்!! அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது!! ஈடு இணை இல்லாதது!!

நம் நாட்டில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படித்தான்!!

மகன் இறந்து விட்டான். ஆனால் இறந்த அந்த வாலிபனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை!! அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான்!! அவனுக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்றும் அவர்களுக்கு ஹண்டர்,வான்,டாட் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் தன் தாயுடன் பேசும் பல சமயங்களில் சொல்லி இருக்கிறான்!

இறந்த நிக்கோலஸ் ஈவான்ஸ்!!

எதிர்பாராத ஒரு நிகழ்வில் அவனுக்கு  தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது!!

கோமா நிலையில் இருக்கிறான்!! ”ப்ரெய்ன் டெத்” என்போமே அதுபோல!

அம்மா தன் மகன் பிழைக்கமாட்டான் என்பது தெரிந்தவுடன் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிக்க்கிறார்..

ஆனாலும் மகன் மேல் கொள்ளை ஆசை அவருக்கு! அந்த மகன் எந்த ரூபத்திலாவது வேண்டும் என்று ஆசைப் படுகிறார்!!

பல உறுப்புகளை இவர் சம்மத்தித்து தானம் செய்வது போல் தனக்கு தன் மகனின் விந்துஅணு தேவை!! அதை வைத்து செயற்கைக் கரு உண்டாக்கி ஏதாவது வாடகைத்தாயின் வயிற்றில் தன் மகனின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார்!!

இப்படி ஒரு விநோதமான நிகழ்ச்சி டெக்சாஸ்,அமெரிக்காவில்  !! ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இதற்கு முன் இப்படி ஒரு பிரச்சினையை சட்டத்துறைகூட சந்தித்ததில்லையாம்!!

ஆகவே உயிர் அணுக்களை பெற்றோரிடம் கொடுக்கலாமா கூடாதா என்று சட்டத்துறை நிபுணர்கள் ஆராய்ந்தனர்!!அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்!! அதை எடுக்கும் வரை குறிப்பிட்ட நபரின் உடல் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்

மகனின் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய பெற்ற தாய்க்கு உரிமை இருக்கும்போது அவருடைய உணர்ச்சிகளை மதிக்கவேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தாத போது அவருடைய தாய்மை உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய மகனின் உயிர் அணுக்களை கொடுப்பது தவறில்லை என்று நீதிபதியால் முடிவு செய்யப்பட்டது!!

எவ்வளவு மனிதாபிமானத்துடன் நீதிபதி உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் பாருங்கள்!!!

ஒரு தாயின் பாசம் இறுதியில் வென்றது!! அறிவியல் முன்னேற்றம் அன்புக்காக நல்ல வழியில் பயன்படுத்தப் படுவது சந்தோசம்தான்!!!

பிடித்திருந்தால் போடுக வாக்குகளை தமிலிஷ்,தமிழ்மணம் இரண்டிலும்!!

32 comments:

Arasi Raj said...

ஒன்னே !!

தேவன் மாயம் said...

ஒன்னே !!///

வாழ்த்துக்கள்!!

தேவா!

இராகவன் நைஜிரியா said...

உங்க இந்த இடுகை ரொம்ப பிடித்து இருந்துதங்க.

சட்டம் என்பதே மக்கள் நலத்திற்காகத்தான் என்பதால், அந்த நீதிபதி செய்தது மிகச் சரியானதுங்க.

தேவன் மாயம் said...

உங்க இந்த இடுகை ரொம்ப பிடித்து இருந்துதங்க.

சட்டம் என்பதே மக்கள் நலத்திற்காகத்தான் என்பதால், அந்த நீதிபதி செய்தது மிகச் சரியானதுங்க.///

உண்மைதான்!! இதில் நிறைய விசயங்கள் பொதிந்து உள்ளன.

மீறான் அன்வர் said...

பாசம் வென்றது மகிழ்ச்சி அழிக்கிறது நல்ல பதிவு வாழ்த்துக்கள்

பகிர்ந்தமைக்கும் நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சட்டம் ஒரு இருட்டறை............

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுகளைப் பதிவு செய்தாச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பேரப் பிள்ளைகளை காப்பாற்றும் வகையில் அந்தப் பாட்டிக்கு நீண்ட ஆயுளையும் உழைக்கும் சக்தியையும் தர எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்போம்

வழிப்போக்கன் said...

பதிவு நெகிழவைத்தது...

வழிப்போக்கன் said...

இந்த பதிவு பிடிக்காம போகுமா???
அதான் குத்தீட்டேன் வோட்ட...

தேவன் மாயம் said...

பாசம் வென்றது மகிழ்ச்சி அழிக்கிறது நல்ல பதிவு வாழ்த்துக்கள்

பகிர்ந்தமைக்கும் நன்றி///

நன்றி மீரான்!!

தேவன் மாயம் said...

பேரப் பிள்ளைகளை காப்பாற்றும் வகையில் அந்தப் பாட்டிக்கு நீண்ட ஆயுளையும் உழைக்கும் சக்தியையும் தர எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்போம்///

மிக்க நன்றி சுரேஷ்!!! I P L பிஸிதானா இனி!!

தேவன் மாயம் said...

இந்த பதிவு பிடிக்காம போகுமா???
அதான் குத்தீட்டேன் வோட்ட///
நல்லது வழிப்போக்கன்!!

kuma36 said...

அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இருக்க முடியாது அதே போல் தாய் பாசத்தையும் எவராலும் வெல்லமுடியாது! அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க! ஓட்டு போட்டாச்சு!

Subankan said...

நீதிபதி செய்தது மிகவும் சரியானதே. ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வில் கோரிக்கை மறுக்கப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம். மனித உணர்வுகளை மதிக்காத சட்டம் எதற்கு? voted!

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு
வித்தியாசமான வழக்கு மற்றும் பெற்ற தாயின் சிந்தனை

தேவன் மாயம் said...

அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இருக்க முடியாது அதே போல் தாய் பாசத்தையும் எவராலும் வெல்லமுடியாது! அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க! ஓட்டு போட்டாச்சு!///
ஆமா கலை!!
கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!!

தேவன் மாயம் said...

நீதிபதி செய்தது மிகவும் சரியானதே. ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வில் கோரிக்கை மறுக்கப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம். மனித உணர்வுகளை மதிக்காத சட்டம் எதற்கு? voted!!////

மனித உணர்வுகள் வெல்லத்தான் வேண்டும்!!

தேவன் மாயம் said...

நல்ல பதிவு
வித்தியாசமான வழக்கு மற்றும் பெற்ற தாயின் சிந்தனை
///

ஆம் அபு!!

தேவன் மாயம் said...

http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F///

அன்பின் அனானி!! பார்க்கிறேன்!!

அன்புடன் அருணா said...

ரொம்ப அருமையான பதிவு தேவா!!!
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

ரொம்ப அருமையான பதிவு தேவா!!!
அன்புடன் அருணா///

நன்றி அருணா!!

priyamudanprabu said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

நன்றி

தேவன் மாயம் said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

நன்றி///

நன்றி பிரபு!!

வேத்தியன் said...

நல்ல பகிர்வு...
அன்பு, பாசம் உலகில் பொதுவானது...
எல்லோருக்கும் புரியும் பாஷை...

ஆகாய நதி said...

பிறந்தால் தாயாக பிறக்க வேண்டும் :)

சூப்பர்! ஒரு பெண் எப்போதுமே எதோ ஒரு விதத்தில் தாய் பாத்திரம் செய்துகொண்டிருக்கிறாள் :)

மணிநரேன் said...

தாய் பாசத்திற்கு ஈடேது;)

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தேவன் மாயம் said...

நல்ல பகிர்வு...
அன்பு, பாசம் உலகில் பொதுவானது...
எல்லோருக்கும் புரியும் பாஷை...
///

வருகைக்கு மிக்க நன்றி!!!

தேவன் மாயம் said...

பிறந்தால் தாயாக பிறக்க வேண்டும் :)

சூப்பர்! ஒரு பெண் எப்போதுமே எதோ ஒரு விதத்தில் தாய் பாத்திரம் செய்துகொண்டிருக்கிறாள் :)///

உண்மைதாங்க!!!

தேவன் மாயம் said...

தாய் பாசத்திற்கு ஈடேது;)

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.///

வாங்க! மண்நரேன்!!

sakthi said...

nekila vaithuvitathu thevan sir

தேவன் மாயம் said...

nekila vaithuvitathu thevan sir//

Thanks sakthi!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory