Saturday, 11 April 2009

நான் மறுபடியும் கல்லூரி சென்றால்!(காலக் கடிகாரம்-கல்லூரிக்கு விடாது)

அன்புடன் நண்பர்களே!  
நிலாவும் அம்மாவும் என்னை தொடர் பதிவிட அழைத்து இருந்தார்கள், யோசித்துக்கொண்டு இருந்தேன். அதற்கான நேரம் தற்போதுதான் அமைந்தது.
தலைப்பு ”திரும்ப நான் கல்லூரி சென்றால்”.இது ஒரு கஷ்டமான தலைப்புத்தான். ஏனென்றால் பெரும்பாலும் திருத்திக்கொள்ளக்கூடிய விசயங்கள் குறைவுதான். அப்படியே இருந்தாலும் சொல்ல முடியாத சங்கதிகள் அதிகம!

நிலா உங்கம்மா வச்ச தலைப்பு தொடர் பதிவுக்கு எவ்வளவு கஷ்டம் பார்! ஒரே ஒரு விசயம் மட்டும்தான் நான் சொல்லப்போறேன்! மற்றவர்களுக்கும் விசயம் தேவைதானே!

கல்லூரியில் சேர்ந்தவுடன் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள முயன்று இருப்பேன்.என் கல்லூரியில் எனக்கு நண்பர்கள் வட்டம் இருந்தாலும் எல்லோரையும் கவரும் விதமாக அது இல்லை.

.
நண்பர்கள் அதிகம் வேண்டுமென்றால் அதற்கு உபரியாக படிப்பைத்தவிர நிறைய திறமைகள் வேண்டும்.

கல்லூரியில் எனக்கு நெருங்கிய வட்டம் ஒன்று இருந்தது. இப்போதும் அது உள்ளது.

அது தவிர அருகாமையில் இருந்த பெண்கள் பொறியியல் கல்லூரியிலும், ஆண்கள் பொறியியல் கல்லூரியிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

பொதுவாக வாரத்தில் 5-7 முறை நாங்கள்{பொறியிய்லும்} கும்பலாக வெளியில் செல்வது வழக்கம்! மகளிர் கல்லூரி மக்கள் காசு கட்டி படிப்பவர்கள், பணக்கார மங்கைகள், வெளியே கும்பலாக் கிளம்பினா போற இடம் எல்லாம் ஓட்டலாக இருந்தாலும் சரி, தியேட்டராக இருந்தாலும் செம ரகளையாக இருக்கும்! அலம்பல் தாங்க முடியாது.

ஓட்டலுக்குச் சென்று ஆர்டர் செய்தால் ஒவ்வொரு அயிட்டமாக வருவதற்குள் தீர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஒரே பிளேட் அல்லது இரண்டு பிளேட்டில் எல்லோரும் சாப்பிட்டு விடுவோம்! எல்லாம் ஸ்போன்,கை ஊட்டல்தான்! நவரத்ன புலவு எத்தனை,மொகலாய் பிரியாணி எத்தனை  என்று வெயிட்டர் குழம்பும் அளவுக்கு ஆகிவிடும்!
அதே போல் சினிமா சென்றாலும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் யாரையும் கண்டு கொள்ளாமல் சட்டென்று கவுண்டர் அருகில் சென்று டிக்கெட் எடுத்துவிடுவார்கள் அந்த பொறியியல் தோழிகள்! பணத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை! முறை வைத்து செலவு செய்வது, கணக்குப் பார்ப்பது எல்ல்லாம் இல்லை, பெரும்பாலும் எங்கள் தோழிகளே செய்துவிடுவார்கள்1 நாங்கள் எப்பவாவதுதான்!

என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!

கல்லூரியில் என் திறமையை இன்னும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்!!  
எழுத நிறைய உள்ளது!
ஆயினும் நான் கல்லூரி செல்ல வாய்ப்புக்கிடைத்தால் பாட்டு,கிடார்,டான்ஸ் மூன்றும் அல்லது ஒன்றைக் கற்றுக்கொள்வேன்.

நானே கல்லூரி சென்று டேபிள் டென்னிஸ் கற்றுக்கொண்டேன். ஸ்டேட் பாங்கில் டோர்னமெண்டில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். சந்தோசமாக இருந்தது. ஆயினும் எனக்கு ஒரு வாத்தியக்கருவியோ அல்லது பாட்டோ ஏதாவது ஒன்றோ தெரிந்திருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது கலை ஒன்றை இளம் வயதிலேயே கற்றுக்கொடுங்கள்!! அது கல்லூரியில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும்!!

நமக்குக் கிடைக்காத சந்தர்ப்பங்களை குழந்தைகளுக்கு அளிப்போம்!

சரிதானா! நிறைய மிச்சம் விட்டு இருக்கிறேன், தொடருக மக்களே!

நான் தொடர அழைப்பது:

1.இராகவன் நைஜீரியா

2.அபு அப்ஸர்

3.அன்புமணி

4.ராஜேஸ்வரி

5.செய்யது.

வாங்க வந்து எழுதுங்க மக்களே!!

21 comments:

dharshini said...

//என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!//

நல்ல கொள்கை.
:)

மேவி... said...

naan college lifeyai full ah enjoy panninen boss. entha kuraiyum illai....

ponunga ellam ippadi thaan boss...
flash backyai innum nalla otti irukkalam....

app ungalai college la mindum kondu poi vitta surya madiri or guitarist ah vanthu iruppingannu solluringa....
antha madiri nadanthu iruntha ....
pavam unga simran

மேவி... said...

"என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!"


nambittom

வேத்தியன் said...

நல்ல பகிர்வு...

வேத்தியன் said...

நாம யூத் இல்ல...
:-)

ஜாலி எனக்கும் ஆதவாவுக்கும்...
:-)

தேவன் மாயம் said...

//என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!//

நல்ல கொள்கை.///

கொள்கை நல்லாயிருக்கா?

தேவன் மாயம் said...

naan college lifeyai full ah enjoy panninen boss. entha kuraiyum illai....

ponunga ellam ippadi thaan boss...
flash backyai innum nalla otti irukkalam....

app ungalai college la mindum kondu poi vitta surya madiri or guitarist ah vanthu iruppingannu solluringa....
antha madiri nadanthu iruntha ....
pavam unga simran///

மேவி!
கல்லூரி வாழ்க்கையை முழுக்க அனுபவித்து விட்டீர்கள்!!!

தேவன் மாயம் said...

நாம யூத் இல்ல...
:-)

ஜாலி எனக்கும் ஆதவாவுக்கும்.///

தொடர் பதிவு கூப்பிடமுடியவில்லை!!

வெங்கடேசன் said...

நான் படித்தது ஆண்கள் கல்லூரி , இப்போது கோ - எட் என்றால் ,நான் படிக்கலாமா ? என யோசிக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//பணத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை! முறை வைத்து செலவு செய்வது, கணக்குப் பார்ப்பது எல்ல்லாம் இல்லை, பெரும்பாலும் எங்கள் தோழிகளே செய்துவிடுவார்கள்1 நாங்கள் எப்பவாவதுதான்! //

இது எதிர்மறையா இருக்கு

பொண்ணுங்கதான் செலவு செய்ய வைப்பாங்கனு கேள்விப்பட்டேன்

அப்துல்மாலிக் said...

மற்றுமொரு தொடர்பதிவா?

தேவா சார் நீங்க வுடமாட்டீங்களே

காலேஜ் லைஃப்தானே... அதுக்கு எத்தனை பதிவு போட்டாலும் பத்தாது

இராகவன் நைஜிரியா said...

தங்கள் அழைப்புக்கு நன்றி மருத்துவர் தேவா.

இதை பற்றி எழுதுகின்றேன்.

//என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!//

ஆஹா எப்படிங்க இதெல்லாம். காசு செலவழிக்கத் தெரியாதா? இப்ப எப்படி .. எல்லாம் தங்ஸ் பாத்துகிறாங்களா?

Rajeswari said...

ஓட்டலுக்குச் சென்று ஆர்டர் செய்தால் ஒவ்வொரு அயிட்டமாக வருவதற்குள் தீர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஒரே பிளேட் அல்லது இரண்டு பிளேட்டில் எல்லோரும் சாப்பிட்டு விடுவோம்! //

நீங்களும் அப்படிதானா???

Rajeswari said...

என்னை மறுபடியும் கல்லுரிக்கு அனுப்பிய தேவன் சாருக்கு நன்றி..(ஆமா எப்போ புது நோட்டு ,டிரஸ் எல்லாம் வாங்கித்தரப்போறிங்க)

Sasirekha Ramachandran said...

//நண்பர்கள் அதிகம் வேண்டுமென்றால் அதற்கு உபரியாக படிப்பைத்தவிர நிறைய திறமைகள் வேண்டும். //
aamam.appodhane hero aagamudiyum...

Sasirekha Ramachandran said...

////என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!//

paavam :(

Sasirekha Ramachandran said...

//ஓட்டலுக்குச் சென்று ஆர்டர் செய்தால் ஒவ்வொரு அயிட்டமாக வருவதற்குள் தீர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஒரே பிளேட் அல்லது இரண்டு பிளேட்டில் எல்லோரும் சாப்பிட்டு விடுவோம்! //

ellarum unga groupa mattum paathuttu irundhirupangale!!!!ada...adha neenga gavanikkalaya?

Suresh said...

Nammalum college life a summa athira vachom no hard feelings, nalla enjoy paniyachu :-)

Suresh said...

unga post nice

Arasi Raj said...

நான் கல்லூரி செல்ல வாய்ப்புக்கிடைத்தால் பாட்டு,கிடார்,டான்ஸ் மூன்றும் அல்லது ஒன்றைக் கற்றுக்கொள்வேன்.////////////////////////

ஆஹா ஏன் ஏன் ஏன்

ஏன் இந்த விபரீத ஆசை...

தொடர் பதிவு எழுதினக்கு நன்றிங்கோவ்

ஆகாய நதி said...

//என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!//

ஆஹா எப்படிங்க இப்படியெல்லாம்... ஹூம்... உங்க தோழிகள்கிட்ட கேட்டுருக்கலாமே எப்படி செலவு செய்றதுனு :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory