வலை நண்பர்களே!! இதற்கு முன் கொஞ்சம்
தேநீர்-14- நானும் என் நிழலும்
எழுதி இருந்தேன்!! ரசித்தவர் பலர்!!
சிலர் புரியவில்லை என்றனர்!
அந்தக் கவிதை இளமை விகடனில்
வெளியாயிற்று!!
http://youthful.vikatan.com/youth/thevanmayampoem16042009.asp
தற்போது அதே நிழலின் தாக்கத்தில்
ஒரு சிறிய சிந்தனை!!
-------------------------------------------------------------------------------
கொஞ்சம் தேநீர்-15-நிழல்!
கொஞ்சிப் பாலூட்டுகையில்
அன்னையின் மடியில்
மறைந்திருந்தது
என் நிழல்!
கைபிடித்து
கடைவீதி நடக்கையில்
தெரியவில்லை என் நிழல்!
என் அப்பாவின்
நிழலில் மறைந்திருந்து,
கவிதைப் போட்டியில்
பரிசு பெற்ற பாடலின்
வரிகளின் ஊடே
பொதிந்து கிடந்தது
தமிழ் ஐயாவின் நிழல்!
கல்லூரியில்
ஆய்வுக்கட்டுரையின்
அறிவியலின்
விரிவுகளில்
மறைந்து கிடந்தது
என் பேராசிரியரின் நிழல்!
தயங்கியும் மயங்கியும்
தள்ளாடிய
என் வாலிபம்
தஞ்சம் புகுந்தது
என் மனைவியின் நிழலில்!!
இன்னும் காத்திருக்கும்
வாழ்வின் வழிநெடுக
எண்ணிலடங்கா
நிழல்கள்!!
நிழல்கள்
இல்லாமல்
நிங்களோ நானோ
யாருமில்லை!!
-------------------------------------
பிடித்திருந்தால் தமிலிஷிலும்
தமிழ்மணத்திலும் தட்டுங்க!
26 comments:
CONGRATES Deva
அழுத்தமான நிழல்.
அருமை.
புரிந்தவர்களுக்கு புரிந்து புதிய பதிவாக பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்
CONGRATES Deva//
thanks abu!
அழுத்தமான நிழல்.
அருமை///
நன்றி ராம்ஸ்!!!
புரிந்தவர்களுக்கு புரிந்து புதிய பதிவாக பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்///
புரிந்தவரின் அன்புக்கு நன்றி!!
மச்சான் வாழ்த்துகள் முதலில்
அப்புறம் உன் கொஞ்சம் தேநீர்-15-நிழல்!
கொஞ்சும் அழகு
ஒரு அட்டோகிராப் போன்று அனைவரின் நிழலையும் அழகாய் சொன்னாய் என் உயிர் நண்பனே
மச்சான் வாழ்த்துகள் முதலில்
அப்புறம் உன் கொஞ்சம் தேநீர்-15-நிழல்!
கொஞ்சும் அழகு
ஒரு அட்டோகிராப் போன்று அனைவரின் நிழலையும் அழகாய் சொன்னாய் என் உயிர் நண்பனே///
மாப்ஸ்!! நன்றி சொன்னா நல்லா இருக்காது !!!
சூடான இடுகைகள் தொடர்ந்து கொடு!!
கவித சூப்பர் தல....
:)))
நிழல்கள் இல்லாமல் நிங்களோ நானோ யாருமில்லை!!//
உண்மை தான்..
நிழல்கள் இல்லாமல் நிங்களோ நானோ யாருமில்லை!!//
உண்மை தான்..
வோட்டியாச்சுண்ணா.....
நிழல்கள் இல்லாமல் நிங்களோ நானோ யாருமில்லை!!//
உண்மை தான்.///
ஆமா!!!
வோட்டியாச்சுண்ணா..///
நன்றி என் அன்புத் தம்பியே!!
நிழல்கள்
நிகழ்வுகளோடு
தமிழ்துளி
தமிற்கடலாய்
கவிதை இளமை விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் தேவா...
//நிழல்கள்
இல்லாமல்
நிங்களோ நானோ
யாருமில்லை!!//
நிதர்சனமான வரிகள்...
ஆஹா...
இப்பிடியொரு கவிதை போட்டாச்சா???
என் கண்ணுல படவே இல்லையே...
முதல்ல டாக்டர்கிட்ட கண்ணைக் காட்டனும்..
:-)
ரொம்ப நல்லா இருக்கு எல்லா வரிகளும்..
நல்ல சிந்தனை...
கையை குடுங்க தல,
கலக்கிட்டீங்க.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தேவா சார்
இன்னும் காத்திருக்கும் வாழ்வின் வழிநெடுக எண்ணிலடங்கா நிழல்கள்!! நிழல்கள் இல்லாமல் நிங்களோ நானோ யாருமில்லை!
உண்மைதான் தேவா சார்
கையை குடுங்க தல,
கலக்கிட்டீங்க.
வாழ்த்துக்கள்.//
நன்றி தராசு!!
நிழல்கள்
நிகழ்வுகளோடு
தமிழ்துளி
தமிற்கடலாய்
///
சுரேஷ்!
நீங்கள்
எழுதியது
கவிதைபோல்
உள்ளது!!
//நிழல்கள்
இல்லாமல்
நிங்களோ நானோ
யாருமில்லை!!//
நிதர்சனமான வரிகள்...///
நன்றி புதியவன்!
ஆஹா...
இப்பிடியொரு கவிதை போட்டாச்சா???
என் கண்ணுல படவே இல்லையே...
முதல்ல டாக்டர்கிட்ட கண்ணைக் காட்டனும்..
:-)//
என் கண்ணிலும் கோளாறு இருக்கு!!
வாழ்த்துக்கள் தேவா சார்
இன்னும் காத்திருக்கும் வாழ்வின் வழிநெடுக எண்ணிலடங்கா நிழல்கள்!! நிழல்கள் இல்லாமல் நிங்களோ நானோ யாருமில்லை!
உண்மைதான் தேவா ////
குமரையின் நிழல் என் புறம் வந்ததற்கு நன்று!!
Post a Comment