Showing posts with label வூய். Show all posts
Showing posts with label வூய். Show all posts

Monday, 13 April 2009

எயிட்ஸ் - ஒரு அறிமுகம்

எயிட்ஸ் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்.நிறைய படித்தும் இருப்போம். ஆனால் ரொம்ப புரியாத நுட்பமான அறிவியல் வார்த்தைகள் இருப்பதால் அப்படியே பாதியில் படிக்காமல் விட்டு விடுவோம்! இதனால் இந்த நோய் பற்றி ஒரு தெளிவு இருக்காது!! நான் ஒரு நோயாளியின் கதையாக ஒரு முன்னுரை தருகிறேன்.

நான் செல்லும் அரசு ஆஸ்பத்திரிக்கு 5 மாதம் முன்னாடி ஒரு நோயாளியைக் கூட்டி வந்தனர்!

டி.பி. மாதிரி எலும்பும் தோலுமாக இருந்தார்! அவருக்கு மூன்று மனைவியர்(அப்பாடி).கடைசி மனைவிதான் கூட்டிவந்தது! டி.பி.மாதிரியேசளி,காய்ச்சல்,வேகமான எடை குறைவு எல்லாம் இருந்தது! ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் டி.பி.இல்லை என்று தெரிய வந்தது! அப்படியானால் என்ன?

உங்களுக்குத்தெரியும்! ஆம்! எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி.இவரும் மருந்துஒழுங்காகச் சாப்பிடலை.ஆனால் பாருங்க இந்தநோய்க்குஆயிரக்கணக்கான ரூபாய்க்கான மருந்து அரசு இலவசமா தருதுங்க! அதை ஒழுங்கா வாங்கி சாப்பிடவில்லை இவர்.

இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!

கிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் நோயுடனேயே 10-15 வருடம் கூட வாழ்கிறார்கள்! உடலுறவு தவிர போதை மருந்து ஊசியை இரண்டு மூன்று பேர் கழுவாமல் போட்டுக்கிறதுனால கூட இது பரவிவிடும்!

மருத்துவமனை போனா தனி புதிய சிரிஞ் உபயோகிக்கிறார்களான்னு பாருங்க! ரொம்ப கிராமம்னா ஒரு புதிய சிரிஞ் வாங்கிக்கொண்டு போய் விடுங்கள்!!

எயிட்ஸுக்கு நல்ல மருத்துவம் தாம்பரம் டி.பி.சானிடோரியத்தில் கிடைக்கிறது!அது தவிர எல்லா தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் கிடைக்கும்! என்ன இந்த வியாதியை குணப்படுத்த முடியாது! கட்டுப்படுத்தி கொஞ்ச நாள் வாழ்க்கையை தள்ளிப்போடலாம்!

இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்!

அப்புறம் அந்த நோயாளியை விட்டுவிட்டமே! அவர் 3 நாள் கழித்து உடல்நிலை ரொம்ப சீரியஸ் ஆகி கோமா நிலைக்குப்போய்விட்டார்! உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்!போன் மூலம் கூப்பிட்டாலும் யாரும் வரவில்லை! இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்!

கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!

பிடித்து இருந்தால் தமிலிஷ், தமிழ்மணத்தில்

ஓட்டுப்போடவும்!!

-------------------------------------------------------------


Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory