Monday, 2 March 2009

தண்ணீர் அபாயம்!!

 

 

 

நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும்.    ஒருகாலத்தில் தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது என்று டி.வி.யில் செய்தி வந்தால் அதைப்பற்றி ஒரே பேச்சாக இருக்கும்!!!  

தற்போது நிலைமயே வேறு!! தண்ணீர் விலக்கு அனைவரும் வாங்கும் நிலை!!!

ஆயினும் நம்மிடையே தண்ணீரைப் பற்றி நம்மிடையே என்ன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது?

ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது. ”பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்”  என்கிற நிலையில்தான் உள்ளது!

தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!!தண்ணீர் சேமிப்பு முறைகளைக்கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்!

 

ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும்!!

சில தண்ணீர் சேமிப்பு பற்றிய தகவல்கள்:

ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.

அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும்.

கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம்.

பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.

வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.

காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். 

சுயநலம்,அலட்ச்சியப்போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!

1.சாலையோரங்களில் பொதுகுடிநீர் குழாய் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கும்!!!

2.தண்ணீர் 4 மணிநேரம்தான் வருகிறது என்றால் அதில் அடைக்கும் குழாய் பிடுங்கப்பட்டு இருக்கும்!தண்ணீர் தானே வந்து தானே நிற்கும்!!!

3.குடிதண்ணீரை சேமித்து குளிப்பது, தோட்டத்தில் பாய்ச்சுவது,கார் கழுவுவது!!

4.தண்ணீர் அதிகமாக வந்தால் ஹோஸ் மாட்டி கிணற்றுக்குள் தண்ணீர் வரும் வரை சேமிப்பது?(உண்மை!!)

இதையெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்!!

நாடுகளின் எல்லைதாண்டிய நதிநீர், ஏரிநீர் பங்கீடு

பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்ற விழிப்புணர்வு தற்போது மிக அவசியமாக உள்ளது!

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது!

உலகின் 263 ஏரிகள்,மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும். அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதான்மாக பங்கிட்டுக்கொண்டாலே நாம் எதிர்கால தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும்!

கடந்த 60 ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான,, உலகநாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!!( ஆச்சரியம்)

நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியலையே!

Sunday, 1 March 2009

இந்தியா அமெரிக்காவை முந்தியது!!

 

இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!

ஆமாங்க!!! உண்மைதான்!!! நம்புங்க!!!

எந்த செலவுல முந்தி இருக்கு என்று கேட்கிறீர்களா?

வேற எந்த செலவுல!!! தேர்தல் செலவில்தாங்க!

எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க?

ரூ. 10,000 கோடி?

இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத்தொகை பாரக் ஒபாமாவும் ,ஏனைய அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த தேர்தலில் செலவிட்ட தொகை 8000 கோடியை விட அதிகம்!

8000 கோடிதான் அமெரிக்கவரலாற்றின் அதிகபட்சம்!

அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு செலவுத்தொகையைவிட நான் ஒரு சில மாதத்தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகம்!இதுவும் ஆந்திரா,ஒரிசாவைத் தவிர்த்தாம்!

 

இந்தியாதான் தேர்தலுக்கு உலகத்திலேயே அதிகம் செலவு செய்யும் நாடாக இருக்கும்!

இது கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீட்டு அளவாகும் என்று சொல்கிறார்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடு அளவுக்கு நாட்டின் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையில் 20 விழுக்காடு அதாவது ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஆகும் செலவாகும். அதாவது தேர்தல் ஆணையத்தின் செலவு தொகை.

எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 விழுக்காடாக உள்ளது. இது மிகவும் குறைந்த விகிதமாகும்.
சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணமாகமோ அல்லது சட்டவிரோதமாகவோ அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கிற்குப் பணம் என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தவிர, மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான செலவு ரூ. 1,650 கோடி என்று தெரிய வந்துள்ளது.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory