எவ்வளவுதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும் நமக்குத்தெரியாத நிறைய விசயங்கள் இருக்குங்க. நாம் நிறைய எழுதுகிறோம். அதில் பாதி குப்பைதான்!! அப்படியெல்லாம் இல்லை என்கிறீரா? என்னைப்பொறுத்தவரை நான் எழுதுவதில் பாதி குப்பைதான்!!
சரி!! எழுதவந்த மேட்டரைப்பார்ப்போம்!!
உலகின் முக்கிய பிரச்சினைகளில் குப்பையினால் ஏற்படும் தீமைகளை எப்படி தடுப்பது என்பதும் ஒன்று... குப்பையால் நிறைய பிரச்சினைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். குப்பையில் பொதுவாக மக்கும் குப்பை,மட்காத குப்பைன்னு இரண்டுவிதமா பிரிக்கிறாங்க. இரண்டையும் வேறுவேறு விதமாக நாம் சேகரித்து சுத்திகரிப்பு செய்கிறோம்.
குப்பையைப்பத்தி தெரியாத சில கருத்துக்களைப் பார்ப்போம்
1 கடலில் சேர்ந்துள்ள குப்பையின் அளவைக்கேட்டால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்! ஆம். 100 மில்லியன் டன் அளவு பிளாஸ்டிக் குப்பைகள் உலகின் கடல்பரப்பில் தேங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!!
2. இமயமலையைப் பார்ப்போம்! பனிபடர்ந்து அழகாகக் காட்சியளிக்கும் இமயமலை குப்பைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமய மலை ஏறும் மிகக்கடினமான பாதையெல்லாம் மலையேறுபவர்கள் சாப்பிட்டுப்போட்ட குப்பைகள்,கழிவுகள், தீர்ந்துபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றால் மாசுபட்டு உள்ளது. 29000 அடிக்குமேல் போனால் அங்கும் இங்கும் இறந்த மனித உடல்கள் காணப்படுமாம்!! இறந்த உடல்களை பனிப்பாறைகளிலிருந்து மீட்பது மிகக்கடினம் என்பதால் நிறைய உடல்கள் அங்கேயே விட்டு விடுவது வழக்கமாம்!
3.குப்பைகள் சாதாரணமாக எவ்வளவு நாட்களில் மண்ணோடு சேர்ந்து விசத்தன்மை இழக்கும்? கண்ணாடி பாட்டில்கள் --- 1 மில்லியன் வருடங்கள்.
ப்ளாஸ்டிக் கப்---500 வருடங்கள்
அலுமினிய டப்பா----200-500 வருடங்கள்
ப்ளாஸ்டிக் பைகள்---20 வருடங்கள்
சிகரெட் மிச்சம்--5 வருடங்கள்!!
4.குப்பைகளை நம் துப்புறவுப்பணியாளர்கள் ஊருக்கு வெளியில் சேமிப்பார்கள்!! அல்லது பெரிய அகலமான குழிகளைத்தோண்டி சேமிப்பார்கள். இதன் பக்கத்தில் வசிப்பது ஆபத்து! ஏனெனில் இதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியாகுதாம். இவை பக்கத்தில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றையும் மாசுபடுத்தும். இவற்றில் பல வாயுக்கள் புற்றுநோய் உருவாக்கும் என்று சொல்கிறார்கள்!!!
மக்களே வீடு, இடம் வாங்கும் போது கவனித்து வாங்கவும்!!
5.மேலே சொன்ன பிரச்சினைகளுக்கு விடிவு இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கு!!
டாக்டர்.லூயிஸ் என்பவர் ஒரு வழி கண்டு பிடித்துள்ளார். மின்னூட்டப்பட்ட ப்ளாஸ்மா காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது( பள்ளியில் படித்தமாதிரி இருக்கா?) சூரியனின் வெளிப்பகுதியை விட அதிகமான சூட்டை உருவாக்குமாம்?? இந்த வகை ப்ளாஸ்மா உலையில் குப்பைகளை எரித்தால் உருவாகும் வாயு பிற வாயுக்களைப்போல அதிகம் கேடு விளைவிக்காது. எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!
என்ன நண்பர்களே!! நாமும் அதிகம் குப்பை சேர்க்காமல் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்!!
தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டுப்போடுங்கள்!!
39 comments:
அடேங்கப்பா.. குப்பைய பத்தி ஒரு குபீர் ஆராய்ச்சி.. நல்லா இருக்கு தேவா..
குப்பை மேட்டரா இது?...ரொம்ப பயனுள்ள தகவல் அல்லவா ...
எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!//
அட இப்படியெல்லாம் இருக்கா?பரவாயில்லையே
நன்றாகவுள்ளது....
'நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை...
இருந்தாலும் ஏன் பேசுகின்றேன் என்றால் மீதிப்பாதியாவது அடுத்தவர்களுக்குப் போய்ச்சேருமே என்ற நம்பிக்கையில் தான் '
என்பர் கலில் ஜிப்ரான்...
தங்கள் பதிவினைக் குப்பை என்று ஒதுக்கமுடியாது!
பதிவு பயனுள்ளதாகவுள்ளது.
சுத்தமான பதிவு
" கிரி said...
சுத்தமான பதிவு"
periye repeat........
100 million what?kg.ton---------
ப்ளாஸ்டிக் கழிவுகளால் இப்போது இருப்பதைவிட தரமான சாலைகள் போட முடியும் என்று கண்டுபிடித்த தமிழ்ப் பொறியாளர்/சுற்றுச் சூழல் பாதுகாவலர் என்னவானார் என்பது யாருக்காவது தெரியுமா?
இதுதான் இந்தியா !
குப்பையைப் பத்திப் புதுப் பதிவு ஒன்னு எழுதிக்கிட்டு இருக்கேன். பாதிக்குமேலே ஓடலை. அதுக்குள்ளே நீங்க இப்படி 'குப்பை கொட்டிட்டீங்க'
நல்ல பதிவு.
அருமையான பதிவு! தகவல்கள் இப்படி வெளிவருவது நல்லது! ஈழத் தமிழன் என்ற வகையில் எமது நாம் குப்பைகளை வளவுகளில் சேர்த்து விவசாயத்திற்கு மண்ணுள் புதைப்பது வழக்கம். பழைய உடைந்த போத்தல்கள், மற்றும் கண்ணாடிகள் செடிக்கிணறு என்று சொல்லப்படும் கிணற்றினுள் போடுவது வழக்கம். தமிழகத்தில் நான் சில கிராமப் புறங்களில் சுத்தத்தை தாராளமாகக் காண முடிந்திருக்கிறது! ஆனால் இப்போது நினைத்தாலும் சென்னை மண்ணடியில் நானிருந்த இடத்தில் மழைக் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை! குமட்டிக் கொண்டுதான் வரும்! இது 1988; 89களில் இப்போது எப்படியோ நானறியேன்!
ஆனால் இங்கு சுவிற்சர்லாந்தில் குப்பைகள் தரம் பிரித்து உணவுப் பதார்தங்களின் மீதிகள், தகரங்கள் - போத்தில்கள், பத்திரிகைகள், காட்போட் மட்டைகள், ஏனைய குப்பைகள் என்று சேகரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில நாட்களில் ஒவ்வொரு புதன் காலையில் உணவு மீதிகள் - வியாழக்கிழமை காலையில் ஏனைய குப்பைகள், மாதம் ஒருமுறை பத்திரிகைகள் தனியாக, இன்னொருநாள் காடபோட்டுகள் தனியாக வண்டிகளில் போன்றவை தனியாக எடுத்துச் செல்லப்பட்டும் தகரங்கள் போத்தில்கள் அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் பிரத்தியேகமான பெரிய தொட்டி போன்ற பெட்டிகளில் போடப்படும். குப்பைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் சட்டப்படி விற்பனை செய்யப்படும் இடங்களில் வாங்கிய பைகளை மாத்திரமே பாவிக்க முடியும். இல்லாவிட்டால் குப்பைகள் எடுத்துச் செல்லப்பட மாட்டாது! இப்படியான நடைமுறைச் சட்டங்களால் தான் இங்கு சுத்தம் பேணப்படுகிறது!
அருமையான இடுகை மருத்துவரே.
// துரை.ந.உ said...
ப்ளாஸ்டிக் கழிவுகளால் இப்போது இருப்பதைவிட தரமான சாலைகள் போட முடியும் என்று கண்டுபிடித்த தமிழ்ப் பொறியாளர்/சுற்றுச் சூழல் பாதுகாவலர் என்னவானார் என்பது யாருக்காவது தெரியுமா?
இதுதான் இந்தியா !//
ஆம் இவர் என்ன ஆனார் என்று இன்றுவரைத் தெரியவில்லை.
சிங்கம் திரும்பி வந்திட்டாருல்ல.....,
சிங்கம் திரும்பி வந்திட்டாருல்ல.///
ஊட்டிவரை டூர் போயி வந்துவிட்டேன்!!!
அருமையான இடுகை மருத்துவரே.
// துரை.ந.உ said...
ப்ளாஸ்டிக் கழிவுகளால் இப்போது இருப்பதைவிட தரமான சாலைகள் போட முடியும் என்று கண்டுபிடித்த தமிழ்ப் பொறியாளர்/சுற்றுச் சூழல் பாதுகாவலர் என்னவானார் என்பது யாருக்காவது தெரியுமா?
இதுதான் இந்தியா !//
ஆம் இவர் என்ன ஆனார் என்று இன்றுவரைத் தெரியவில்லை///
எனக்கும் தெரியவில்லை!!
இப்படியான நடைமுறைச் சட்டங்களால் தான் இங்கு சுத்தம் பேணப்படுகிறது!//
நன்றி தங்கமுகுந்தன்!! அருமையான தகவல்!! நீங்களே நிறைய எழுதலாமே!
குப்பையைப் பத்திப் புதுப் பதிவு ஒன்னு எழுதிக்கிட்டு இருக்கேன். பாதிக்குமேலே ஓடலை. அதுக்குள்ளே நீங்க இப்படி 'குப்பை கொட்டிட்டீங்க'
நல்ல பதிவு.///
நியூஸியில் கொட்டுவதற்குமுன் நான் கொட்டிவிட்டேனா? அங்கே எப்படின்னு எழுதுங்க!!
ப்ளாஸ்டிக் கழிவுகளால் இப்போது இருப்பதைவிட தரமான சாலைகள் போட முடியும் என்று கண்டுபிடித்த தமிழ்ப் பொறியாளர்/சுற்றுச் சூழல் பாதுகாவலர் என்னவானார் என்பது யாருக்காவது தெரியுமா?
இதுதான் இந்தியா !//
வாங்க அண்ணாச்சி!! மறதி நம்ம உடன்பிறப்பாச்சே!!
சுத்தமான பதிவு///
கிரி,மேவி நன்றி!!
நன்றாகவுள்ளது....
'நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை...
இருந்தாலும் ஏன் பேசுகின்றேன் என்றால் மீதிப்பாதியாவது அடுத்தவர்களுக்குப் போய்ச்சேருமே என்ற நம்பிக்கையில் தான் '
என்பர் கலில் ஜிப்ரான்...
தங்கள் பதிவினைக் குப்பை என்று ஒதுக்கமுடியாது!
பதிவு பயனுள்ளதாகவுள்ளது///
பயன்பட்டால் மகிழ்ச்சி!!
எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!//
அட இப்படியெல்லாம் இருக்கா?பரவாயில்லையே//
ஆமா!! எனக்கே தகவல் புதிது!!
அடேங்கப்பா.. குப்பைய பத்தி ஒரு குபீர் ஆராய்ச்சி.. நல்லா இருக்கு தேவா..///
குபீர் ஆராய்ச்சியா? தீப்பிடித்தமாதிரி இருக்கா?
எதை எடுத்தாலும் குப்பை ஒன்னுக்கும் ஆகாது என்கிறோம்... அதுல்லே இவ்வளவு மேட்டரு இருக்கு என்பதை அறிந்து மிக்க வியப்பே..
தேவையான அருமையான பதிவு தேவா... எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம், மருத்துவ சேவை பிஸியோ?
//எவ்வளவு நாட்களில் மண்ணோடு சேர்ந்து விசத்தன்மை இழக்கும்? கண்ணாடி பாட்டில்கள் --- 1 மில்லியன் வருடங்கள். ப்ளாஸ்டிக் கப்---500 வருடங்கள் அலுமினிய டப்பா----200-500 வருடங்கள் ப்ளாஸ்டிக் பைகள்---20 வருடங்கள் சிகரெட் மிச்சம்--5 வருடங்கள்!! //
நல்ல பகிர்வு... தெரிந்துக்கொள்ளவேண்டியது
நன்றி தேவா பகிர்வுக்கு
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் பயனுள்ள ஒரு பதிவோட வந்துட்டீங்க..
குப்பை ஒரு மாபெரும் அலசல் அப்படின்னு டைடில் வச்சிருக்கலாம்.
நல்லதொரு பகிர்வு தேவன்.எனக்கு தெரிந்து சென்னையிலும் பல இடங்களில் குப்பைகளை பிரித்து சேகரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் நன்கு படித்த நம் மக்களில் சிலர் ரோட்டிலும், சாக்கடையிலும்தான் குப்பையை கொட்டுவேன் என கங்கனம் கட்டிக்கொண்டு மாசுபடுத்தி வருகின்றனர்.
தேவா...
நீங்க எழுதுறதே குப்பைன்னா, நான் எழுதுறதெல்லாம்???
:-)
நல்ல ஆராய்ச்சி தான்...
இதுக்கு நல்ல தீர்வும் கிடைச்சா நல்லது தான்...
அருமையான பதிவு!
ம்ம்ம்ம் குப்பையில் ஒரு மாணிக்கம்!!!!
அன்புடன் அருணா
குப்பைன்னாலும் - குபீர்னு சிந்திக்கிற மாதிரி இருக்குதுங்கோ.
அருமையான இடுகை
thanks
சப்பை மேட்டர்ன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்.குப்பை மேட்டர் கூட இருக்குதாங்க?
குப்பையைப் பற்றி எழுதினால் கூட அலசி ஆராய்ந்து விளக்கமாக எழுதும் தேவகுமார் - நல்வாழ்த்துகள்
சுத்தமான குப்பை பதிவு.. வாழ்த்துக்கள்.. தமிழ்த்துளி..
ஸ்ஸ்ஸ்... அப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே...
சூப்பர் நியூஸ்!
நன்தி! :)
தகவல் களஞ்சியமே... உங்க அக்கறை தெரிகிறது. வீட்ைடவிட்டு வெளியில் போகும்போது மறக்காம துணிப்பை எப்போதும் எடுத்துட்டுப்போங்க... பிளாஸ்டிக் பையை உபயோகிப்பது குறையும். சில மளிகைக்கடையில் 'பிளாஸ்டிக் பை கண்டிப்பாக கிடையாது' என்று எழுதிப்போட்டிருக்கிறார்கள். இதை எல்லாரும் கடைபிடித்தால் நல்லது.
அவசியமான பதிவு..
நன்றி..
குப்பைய பத்தி எழுதினாலும் இந்த மேட்டரை
குப்பைன்னு சொல்ல முடியாது
தேவா சார்
பிளாஸ்டிக் பொருள்களை மறு சுழற்சி முறையில்
பயன்படுத்தலாம் .அதிலும் சில பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய முடியாது அந்த வகை பிளாஸ்டிக்கை தடை செய்யலாம் .
அப்புறம் தேவா சார் என்னோட பதிவுக்கு வாங்க உங்களை பேட்டி எடுக்க கேள்விகள் இருக்கு பதில் சொல்லுங்க
அடேங்கப்பா இம்புட்டு குப்பையா?
Post a Comment