உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.
இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.
2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.
3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)
4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!
6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.
8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.
9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.
10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.
11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?
12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.
13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.
14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.
15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.
16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!
நண்பர்களே! முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.
பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.
49 comments:
அப்பு, கலக்கிபுட்டிக... அனைத்தும் அருமை. கல்யாணத்துக்கு பொண்ணு தான் கிடைக்கமாட்டேன்குது :(
நல்ல ஆலோசனைகள் தேவா சார்
நல்லா பேஷண்ட்க்கு சொல்லுறதுப்போல் பேஷா ஆலோசனை சொல்லிருக்கீர்
மக்கா எல்லோரும் கடைபிடிங்க வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கும்
//இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ..//
அது ஏன் அப்படி?
அப்பு, கலக்கிபுட்டிக... அனைத்தும் அருமை. கல்யாணத்துக்கு பொண்ணு தான் கிடைக்கமாட்டேன்குது :(///
பொண்ணு பார்த்துட்டாப் போச்சு!!
me too want to replicate mr. pithan's comment. veru nice keep it up.
நல்ல ஆலோசனைகள் தேவா சார்
நல்லா பேஷண்ட்க்கு சொல்லுறதுப்போல் பேஷா ஆலோசனை சொல்லிருக்கீர்
மக்கா எல்லோரும் கடைபிடிங்க வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கும்///
அபு!!
சரிதான்!
டாக்டர் தேவா,
நன்றாக எழுதியிருக்கீறீர்கள்.
விட்டுக்கொடுத்தலே வாழ்க்கை என்பதை உணர்ந்தாலே போதும், வாழ்க்கை கொண்டாட்டம்தான்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
me too want to replicate mr. pithan's comment. veru nice keep it up.//
thanks dear.
அப்பு, கலக்கிபுட்டிக... அனைத்தும் அருமை. கல்யாணத்துக்கு பொண்ணு தான் கிடைக்கமாட்டேன்குது :(//
பித்தனின் பின்னூட்டம் அருமை!
தேவ சார் .....
என் எதிர்காலத்திற்கு இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்
சார்.....
பித்தனுக்கு உதவுற மாதிரி பதிவு எதாவது எழுதுங்க....
எனக்கும் உஸ் ஆகும்..
ஹீ ஹீ
அப்பு, கலக்கிபுட்டிக... அனைத்தும் அருமை. கல்யாணத்துக்கு பொண்ணு தான் கிடைக்கமாட்டேன்குது :(//
பித்தனின் பின்னூட்டம் அருமை!///
சென்ஷி! கஷ்டப்பட்டு எழுதினவன் நான்! இது சரியா?
தேவ சார் .....
என் எதிர்காலத்திற்கு இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்சார்.....
பித்தனுக்கு உதவுற மாதிரி பதிவு எதாவது எழுதுங்க....
எனக்கும் உஸ் ஆகும்..
ஹீ ஹீ
சேகரித்து வைங்க! பயன்படும்!!
டாக்டர்,
ரொம்ப அருமையான, பயனுள்ள பதிவு.. அடிக்கடி வீட்ல நம்ம சந்திக்கற எவ்வளவோ பிரச்சனைகள தீர்க்க இதுல சிலவற்றை கடைபிடித்தால் போதும்...
ரத்தினச்சுருக்கமான 16 குறிப்புகள் .. பேசாம இதே ஒரு பிரிண்ட் போட்டு... புது மன தம்பதிகளுக்கு "16-உம் பெற்று பெருவாழ்வு வாழ்க"-னு குடுத்துடலாம் :))
நோட் பண்ணிக்கிறேன்........
நல்ல அறிவுரைகள்
டாக்டர்,
ரொம்ப அருமையான, பயனுள்ள பதிவு.. அடிக்கடி வீட்ல நம்ம சந்திக்கற எவ்வளவோ பிரச்சனைகள தீர்க்க இதுல சிலவற்றை கடைபிடித்தால் போதும்...
ரத்தினச்சுருக்கமான 16 குறிப்புகள் .. பேசாம இதே ஒரு பிரிண்ட் போட்டு... புது மன தம்பதிகளுக்கு "16-உம் பெற்று பெருவாழ்வு வாழ்க"-னு குடுத்துடலாம் :))///
நல்ல எண்ணம் !! செய்யலாம்!
நோட் பண்ணிக்கிறேன்........
நல்ல அறிவுரைகள்//
வருக வசந்த்!
அய்யா மருத்துவரே ரொம்ப பெரிய இடுகையா இருக்கு.
இரவு படித்துவிட்டு பின்னூட்டம் போடுகின்றேன்.
இப்போதைக்கு பிரசண்ட் போட்டுகிறேன்.
பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்பது இதைத்தானோ..
// இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான்.//
சரியாகச் சொன்னீர்கள்.
அன்பை வெளிப் படுத்த வேண்டிய நேரத்தில் சரியாக வெளிப் படுத்த வேண்டும்..
// 12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள் //
சரியாகச் சொன்னீர்கள். இந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகின்றேன்.
//பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.//
ஜனநாயகக் கடமை...
இடுகைக்கு சபாசு!
அனுபவம் புதுமை.... நல்லா மந்திரங்கள்.. பலவற்றுல் உங்களிம் எதிர்பார்ப்பும் தெரிகின்றது ஹிஹிஹி...
///(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)///
ம்ம்ம்ம்ம் சூப்பர்...
அனுபவம் புதுமை.... நல்லா மந்திரங்கள்.. பலவற்றுல் உங்களிம் எதிர்பார்ப்பும் தெரிகின்றது ஹிஹிஹி...
///(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)///
ம்ம்ம்ம்ம் சூப்பர்.../
ஏதோ மக்களுக்கு புரிந்தால் சரிதான்
//பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.//
ஜனநாயகக் கடமை...
இடுகைக்கு சபாசு!//
வாங்க நண்பரே!!
// 12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள் //
சரியாகச் சொன்னீர்கள். இந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகின்றேன்.///
இராகவன் ஐயாவுக்குத்தெரியாததையா நான் சொல்லப் போகிறேன்!!
நல்ல பயனுள்ள பதிவுங்கப்பு, கலக்குறிங்க, தொடரட்டும் உங்களது பணி.
நல்ல பயனுள்ள பதிவுங்கப்பு, கலக்குறிங்க, தொடரட்டும் உங்களது பணி.//
நன்றி கும்மாச்சி!!
லூசுல உடு..லூசுல உடு.....கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்!!!!
நீங்கள் மன நலமருத்துவரும் போல...எப்படி ஆத்மார்த்தமா புரிதலை சொல்லியிருக்கீங்க..மிகவும் பயனுள்ள ஒரு பதிவு...வாழ்க்கையை தெளிவாகப் பயின்றுள்ளீர்கள்...ஒரு விஷயமும் இதில் விடுபடவில்லை....இம்மாதிரி தகவல்கள் நடுத்தர மக்களுக்கும் பிற்படுத்த மக்களுக்கும் ஒரு கவுன்சிலிங் மாதிரி கொடுத்தால் மிகவும் பயன் அளிக்கும்..இதற்கு நாமே அவர்களிடம் நேரடியாக சென்று பேசி.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்படியெல்லாம் ஆசையும் கனவும் இருக்குங்க....
லூசுல உடு..லூசுல உடு.....கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்!!!///
கல்யாணத்துக்கப்புறம் லூசுல விடக்கூடாது!!
நீங்கள் மன நலமருத்துவரும் போல...எப்படி ஆத்மார்த்தமா புரிதலை சொல்லியிருக்கீங்க..மிகவும் பயனுள்ள ஒரு பதிவு...வாழ்க்கையை தெளிவாகப் பயின்றுள்ளீர்கள்...ஒரு விஷயமும் இதில் விடுபடவில்லை....இம்மாதிரி தகவல்கள் நடுத்தர மக்களுக்கும் பிற்படுத்த மக்களுக்கும் ஒரு கவுன்சிலிங் மாதிரி கொடுத்தால் மிகவும் பயன் அளிக்கும்..இதற்கு நாமே அவர்களிடம் நேரடியாக சென்று பேசி.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்படியெல்லாம் ஆசையும் கனவும் இருக்குங்க..///
கனவையும் ஆசையையும் உடனே செயல்படுத்துங்க!
நல்ல ஆலோசனைகள்.
ஆஹா...
அருமையான யோசனைகள்... (கண்ணாளமானவங்களுக்கு)...
:-)
முதல்ல கல்யாணமாகட்டும்..
அப்புறம் ஒருமுரை திரும்ப இதை வாசிக்கிறேன்..
ஓகே...
:-)
நல்ல பயனுள்ள இடுகை...
பாலா, வேத்தியன் இருவ்ருக்கும் நன்றி!!
வேத்தியன்! எப்போ இந்தியா?
இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....
:)))
தேவா சார்.. சூப்பர்.. வருங்காலத்துக்கு ரொம்ப உபயோகப்படும்.. நன்றி..:-)
புகுந்த வீடு போகப்போகும் பெண்ணே
தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறாரு தேவன் அண்ணே...
நல்ல யோசனைகள்.
//தமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி!
//
தமிழ்ப் பெருங்கடலில் நானும் ஒரு துளி -:)
ஓட்டுகள் இரண்டையும் போட்டுவிட்டேன் தல..,
//அப்பு, கலக்கிபுட்டிக... அனைத்தும் அருமை. கல்யாணத்துக்கு பொண்ணு தான் கிடைக்கமாட்டேன்குது :(//
இந்த கமெண்டைப் பார்த்த பிறகு எனக்கு வேறெதையும் பின்னூட்டமாக எழுதத் தோன்ற வில்லை :)
உங்கள் குறிப்புகள் அனைத்தும் மிகச் சரியானவை.
சார் என்ன மந்திரத்தை செய்தாலும் ஆண்கள் ஒரு குறிப்பிட்ட கிலோமீடர் வேகத்தில் ஒரு சாட்டம் சாடுகிறார்களே அதற்கு நீங்க ஒரு மந்திரமும் சொல்லவில்லை .
நல்ல ஒரு விடயத்தை அலசியிருக்கிறீங்க. பல பேருக்கு இது உதவும். உங்களுக்குத் தெரியுமோ என்னமோ ! நம்ம ஊரில் திருமணம் செய்வோருக்கு தேவாலயத்தில் ஒரு வகுப்பு நடத்திறாங்க . அதில நீங்க சொன்ன அத்தனை விடயங்களும் இருக்கின்றன....அனுபவத்தில் சொல்கிறேன். கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது அறிவுரைகள். கடைப் பிடிப்பது ரொம்பக் கஷ்டம்.. .
தலையணை மந்திரம் என்றதும் என்னவோ ஏதோன்று நினைத்தேன்.
நன்றாக இருக்கிறது. அவசரமாகப் படித்தேன். நிதானமாக கிடைக்கும் நேரங்களில் படிக்கிறேன்
nice tips
nice tips
Its not only for couples. Also for true lovers. because true lovers become a good couples. Thank u. Thanks alot for ur great tips and ideas.
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்மகளிர் கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Ayyo
Post a Comment