முட்டை நம் உணவில் முக்கியமானது. கறி,மீன் விரும்பி உண்ணாதவர்கள் கூட முட்டையை விரும்பிச் சாப்பிடுவார்கள்!
முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதெல்லாம் விஞஞானிகளின் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேலை. நமக்கு அது வேண்டாம்
கோழியால் பறவைக்காய்ச்சல் வந்தது! அது போல் முட்டையால் வியாதி எதுவும் வருமா? வரும்! அதைப் பற்றிக்கொஞ்சம் பார்ப்போம்.
நம் ஊரில் முட்டை வாங்கினால் கோழி முட்டையின் மேல் கோழியின் கழிவு அப்படியே ஒட்டியிருக்கும், பார்த்திருப்பீர்கள். நோயுள்ள கோழியின் கழிவில் உள்ள கிருமி சரியாகக் கழுவாமல் முட்டையை உடைப்பதால் முட்டைக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உடையாத முட்டையிலிருந்தும் நோய் பரவுமாம்.
- கோழிமுட்டையிலிருந்து நோய் எப்படிப் பரவுகிறது? அ. உடைந்த கோழி முட்டை மூலம், உடையாத முட்டையில் சிறு துவாரங்கள் உள்ளன- அவற்றின்மூலம் கிருமி உள்ளே சென்றிருந்தால், நோயுள்ள கோழியின் வயிற்றில் முட்டை உருவாகும் போதே!
- நோய்க்கிருமியின் பெயர் என்ன? சால்மனெல்லா (Salmonella Enteritidis )
- சால்மனெல்லா நோயுள்ள கோழிமுட்டையால் என்ன விளைவுகள் ஏற்படும்? உண்ட 12-72 மணி நேரத்தில் காய்ச்சல், வாந்தி,அடிக்கடி மலம் போதல், வயிற்று வலி ஏற்படும். 4 லிருந்து 7 நாட்களுக்கு இந்த வியாதி இருக்கும். சாதாரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்க்குப் போதும்.
- இந்த நோய் வராமல் காத்துக்கொள்வது எப்படி? முட்டையை குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கவும். உடைந்த முட்டையை உண்ண வேண்டாம். முட்டையை நன்கு வேக வைத்துச் சாப்பிடவும். 2 மணி நேரத்துக்கு மேல் முட்டையை குளிர்பெட்டியிலிருந்து அறையில் வெளியில் வைக்க வேண்டாம். பச்சை முட்டை சாப்பிட வேண்டாம்.
- சால்மனெல்லாவால் யார் யாருக்கு ஆபத்து? குடலை முதலில் இது பாதிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் கலந்தால் ஆபத்து. குழந்தைகள், வயதானவர்கள், கல்லீரல் வியாதி உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இது கடுமையாக பாதிக்கும்.
____________________________________________________________
************************************************************************************************
ஜிடாக்கில் ஒரு அசைவ சாட் !http://abidheva.blogspot.com/2010/08/blog-post_04.html
புதிய நண்பர் பிரதாப் ஜிடாக்கில் வந்தார். ம்துரை ஓட்டல் முட்டை வடியல் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் முட்டையின் பல்வேறு வகைகளைச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்கள்! உங்க ஊர் முட்டையைப் பற்றிச் சொல்லுங்க!
Prathap: //இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள்//
சில இடங்களில் வழியல் என்பார்கள்
சென்னையில் ஒரு கடையில் ”டிங்டாங்” என்றார்கள்...
என்னடா என வாங்கிப்பார்த்தால் இது...
thevan: முட்டைதானே! எனக்கு சரியாகத்தெரியவில்லை
*************************************************************************************************
____________________________________________________________
25 comments:
முட்டையிலும் இவ்ளோ மேட்டர் இருக்கா!!
ரொம்ப பயமுறத்தாம விட்டீங்களே
----------------
நல்ல இடுக்கை தேவா நன்றி
சைவக் கொத்து புரோட்டா! பதிவு போட்டவுடன் உடனடி கமெண்டா!! சூப்பர் பாஸ்ட்!!
உங்களை சைவக் கொத்து புரோட்டா முந்திவிட்டார் ஜமால்!!
ம்ம் நான் வேறு நிறைய முட்டை சாப்பிடுகிறேன்
ம்ம் நீங்க சொன்னதையும கணக்குல வச்சுக்கிறேன்
நன்றி
பயனுள்ள தகவல்
இது எனக்கு மிகுந்த உபயோகமான தகவல், காரணம் முட்டை அதிகம் விரும்பி சாப்பிடுபவன் நான் ..
நல்ல தகவல்
விழிப்புணர்வளிக்கும் இடுகை மருத்துவரே..
ஈரோடு பக்கமா...
முட்டைய வேகாம வெங்காயம்போட்டு ஊத்திக்கொடுக்கறாங்க..
கேட்டா “கலக்கி“ என்று கலக்கலா ஒரு பேரு சொல்றாங்க மருத்துவரே.
பிரியமுடன் பிரபு said...
ம்ம் நான் வேறு நிறைய முட்டை சாப்பிடுகிறேன்
ம்ம் நீங்க சொன்னதையும கணக்குல வச்சுக்கிறேன்
//
நிச்சயம்!
நன்றி கார்த்திக்!
நன்றி வேலு!
கே.ஆர்.பி.செந்தில் said...
இது எனக்கு மிகுந்த உபயோகமான தகவல், காரணம் முட்டை அதிகம் விரும்பி சாப்பிடுபவன் நான் .//
மிக்க நன்றி செந்தில்!
முனைவர்.இரா.குணசீலன் said...
ஈரோடு பக்கமா...
முட்டைய வேகாம வெங்காயம்போட்டு ஊத்திக்கொடுக்கறாங்க..
கேட்டா “கலக்கி“ என்று கலக்கலா ஒரு பேரு சொல்றாங்க மருத்துவரே//
நண்பரே! கோழிக்கு வியாதி வரும் காலத்தில் கவனமாக இருப்பது நல்லது!
பயனுள்ள தகவல்.
சல்மோலினா பிறந்த வீடூ முட்டையென இது வரை தெரியவில்லை.
அப்புறம் பயில்வான் ஆவதற்கு ரெண்டு பச்சை முட்டை குடிச்சிட்டு உடற்பயிற்சி செய்யணுமின்னு கதை கட்டி விட்ட ஆளை தேடிகிட்டு இருக்கிறேன்:)
குமார் நன்றி!
ராஜ நடராஜன் said...
சல்மோலினா பிறந்த வீடூ முட்டையென இது வரை தெரியவில்லை.
அப்புறம் பயில்வான் ஆவதற்கு ரெண்டு பச்சை முட்டை குடிச்சிட்டு உடற்பயிற்சி செய்யணுமின்னு கதை கட்டி விட்ட ஆளை தேடிகிட்டு இருக்கிறேன்:)
//
சால்மனெல்லா பெரும்பான்மையான உணவுகளில் பெருகும்.
அப்போ ஆம்லேட். ஆப்பாயில்லாம் சாப்பிடகூடாதா தேவா சார்!
நன்றிங்க டாக்டர்... அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியை பகிர்ந்தமைக்கு...
நல்ல விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.
உபயோகமான ஒன்று.
பயனுள்ள பகிர்வு....
அருண் பிரசாத் said...
அப்போ ஆம்லேட். ஆப்பாயில்லாம் சாப்பிடகூடாதா தேவா சார்!
//
சுத்தமான முட்டையில் சாப்பிடலாம்!!
சித்ரா,
அன்பரசன்,
சினேகிதி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
Post a Comment