இதற்கு முந்தைய பதிவில் சின்னம்மை பற்றிய சில முக்கிய தகவல்களை எழுதி இருந்தேன். அதுபற்றி இன்னும் சிறிது விளக்கம் கேட்டிருந்தனர். குழந்தைகள் சம்பந்தமானது என்பதால் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது உபயோகமாக இருக்கும் என்பதாலேயே இதனை எழுதுகிறேன்.
என் முந்தைய பதிவு சின்னம்மை(CHICKEN POX)-5
நான் என் குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது சின்னம்மைக்கான தடுப்பூசி போட்டிருக்கிறேன். இது எவ்வளவு தூரம் இந்த நோயை அல்லது அதன் கடுமையைத் தவிர்க்கும் என்று விளக்க முடியுமா?
பொதுவாக ஒரு வயது இருக்கும்போது போடுவது வழக்கமானதுதான்.
இந்தத் தடுப்பூசி எத்தனை வருடம் நோயிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கும் என்று இதுவரை அறுதியிட்டுச் சொல்லவில்லை. ஆனால் 10 வருடங்கள் வரை அதன் வீரியம் இருக்கும் என்றும் அதன் பிறகு அதன் தடுப்பாற்றல் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சக குழந்தைகளுக்கு வரும் சின்னம்மை நோயானது வீட்டிலுள்ளோர், மற்றும் தொடர்பில் உள்ளோருக்கு எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுவதால் அதன் பின் தடுப்பூசி தேவைப்படுவதில்லை.
இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றால் ஒரு வயதிலிருந்து 12 வயதுவரை உள்ளோருக்கு ஒரு முறை தடுப்பூசியும், அதற்கு மேல்பட்ட வயதினருக்கு இரண்டு முறை அதாவது ஆறு முதல் பத்து வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.
யாருக்கு இந்த ஊசி போடக்கூடாது?
- அதிக காய்ச்சல்
- கர்ப்பிணிகள்
- புற்று நோய் சிகிச்சை பெறுவோர்
- ஏமக்குறை நோய் (AIDS) உள்ளோர்
- இரத்தம் ஏற்றப்பட்டோருக்கு மூன்று மாதம் வரை.
உலகம் முழுவதும் இத்தடுப்பூசி போடுகிறார்களா?
- ஜப்பானில் போடப்படுகிறது.
- அமெரிக்காவிலும் போடப்படுகிறது.
- ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகப் போடப்படுவதில்லை.
- ஆஸ்திரேலியா,கனடாவில் பெருமளவில் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
- பொதுவாக உலகெங்கும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.
இதன் நோய் தடுக்கும் திறன் எவ்வளவு?
- நோயின் கொடிய விளைவுகளிலிருந்து 95% பாதுகாப்புத்தருகிறது.
- 70-90 சதவிகிதம் நோய் வராமல் தடுக்கிறது.
21 comments:
unmaiyil therinthu kollavendiya arumaiyana pakirvu doctor sir.
pakirnthamaikku nanri.
நன்றி தேவா!
மேலதிக தகவல்களுக்கு நன்றி.
நன்றி டாக்டர்.
மிக்க நன்றி டாக்டர்.
தெளிவாகப் பதில் அளித்துள்ளீர்கள்.
சே.குமார் said...
unmaiyil therinthu kollavendiya arumaiyana pakirvu doctor sir.
pakirnthamaikku nanri.//
பயனிருந்தால் நல்லது குமார்!
ஜமால் நன்றி.
கருத்துக்கு நன்றி சை.கொ.புரோட்டா!
நன்றி மதுரை சரவணன்!
நல்ல தகவல்
அன்பின் தேவா
பயனுள்ள தகவல் - பகிர்வினிர்கு நன்றி தேவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
டாக்டர், இந்தத் தடுப்பூசி போட்ட பின்பும் என் மகன்களுக்கும், என் உறவினரின் குழந்தைகளுக்கும் சின்னம்மை வந்தது. மற்ற மூவருக்கும் சிறிய அளவுதான் பாதிப்பு என்றாலும், என் சின்ன மகனுக்கு மட்டும் அதிகப் பாதிப்பு இருந்தது.
தடுப்பூசி போட்ட பின்னும் எப்படி வந்தது டாக்டர்?
நல்ல பகிர்வு..நன்றி தேவன் சார்!!
ஹுஸைனம்மா said...
டாக்டர், இந்தத் தடுப்பூசி போட்ட பின்பும் என் மகன்களுக்கும், என் உறவினரின் குழந்தைகளுக்கும் சின்னம்மை வந்தது. மற்ற மூவருக்கும் சிறிய அளவுதான் பாதிப்பு என்றாலும், என் சின்ன மகனுக்கு மட்டும் அதிகப் பாதிப்பு இருந்தது.
தடுப்பூசி போட்ட பின்னும் எப்படி வந்தது டாக்டர்?
//
எல்லா மருந்துகளும்100% நோய் தடுக்கவல்லவை அல்ல! எவ்வளவு தடுப்பூசி போட்டாலும் 85% லிருந்து 44% வரை தடுப்பாற்றல்தான் இதற்கு உள்ளது. அதாவது தடுப்பூசி போட்டவர்களில் 100 க்கு 15லிருந்து 56 பேருக்கு வரலாம்.
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியத் தகவல் அரியத் தந்ததற்கு நன்றிங்க தேவா.
மருத்துவ தகவல்களுக்கு நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பகிர்வுக்கு நன்றி டாக்டர் சார்..
எனக்கு எல்லா அம்மைகளும் வரிசை கட்டி வந்துவிட்டன ...
பகிர்வுக்கு நன்றி தேவா.
குழந்தகளுக்கு தடுப்பூசி போட்டலும் வரும் என்கிறார்கள், 10 வயதுக்கப்புறம் தடுப்பூசி போடலாம் என்பதுபுது தகவல் நன்றி
நன்றி
Post a Comment