Monday, 13 September 2010

இவர் ஆசிரியர்!

image

தலைமை ஆசிரியர் திரு.கருப்பையா- இவர் புதுக்கோட்டை அருகில் நெடுவாசல் என்ற கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

இவரின் சாதனைகள் ஆச்சரியம் தருபவை! ஆம்! பாழடைந்த பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டியிருக்கிறார்.  பள்ளியில் செடிகளை வளர்த்து தோட்டம் அமைத்திருக்கிறார்.

இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா? 

பள்ளியில் கரும்பலகைகளை அகற்றிவிட்டு ப்ரொஜெட்க்டர்கள் வாங்கி பாடமே அதில்தான் நடத்தப்படுகிறது.

அது தவிர பத்து கணினிகள் இணைய இணைப்புடன் இயங்க்குகின்றன. டி.வி.டியில் பாட சி.டிக்கள் போட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். கணினியை இயக்குதல், பிரிண்ட் எடுத்தல் எல்லாம் மாணவர்கள் அவர்களே செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் இவர் பொறுப்பேற்ற 5 வருடங்களில் செய்திருக்கிறார்.

இதெல்லாம் செய்த இவர் தற்போது அதே மாவட்டத்தில் வேறு ஒரு பள்ளிக்கு மாறுதல் கேட்கிறார். ஏன்? அறிவொளி நகர் என்ற அந்த இடத்தில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

அங்குள்ள நரிக்குறவ இன மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைத்து, கல்வியின் பலனை அவர்களும் அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்பது இவரின் அடுத்த இலக்கு என்கிறார்!!

தனிமரம் தோப்பாகாது, நான் ஒருவன் நல்லது செய்தால் உலகமே மாறி விடுமா? என்று தத்துவம் பேசும் நம்மிடையே இவர் ஒரு சாதனையாளராக ஜொலிக்கிறார்.

இவர் போன்ற நல்லோர்கள் சிறந்த மாணவர்களை  உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கம்பியூட்டருக்கென தனியாக பணம் வாங்கிவிட்டு கம்பியூட்டர் பற்றி மேம்போக்காகப் பாடம் எடுத்து விட்டு ஏமாற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையில் அரசுப்பள்ளி மாணவர்களை கம்பியூட்டர் வல்லுனர்களாக உருவாக்கும் இவர் நிச்சயம் போற்றத்தகுந்தவர்தானே!

42 comments:

தமிழ் அமுதன் said...

இவர்தான் ஆசிரியர்..!

அவரின் புகைப்படம் இருந்தால் போட்டு இருக்கலாம்..!

தேவன் மாயம் said...

தமிழ் அமுதன் said...
இவர்தான் ஆசிரியர்..!

அவரின் புகைப்படம் இருந்தால் போட்டு இருக்கலாம்..!

அன்பின் நண்பரே! படத்தை நகலெடுக்கமுடியவில்லை!

கேரளாக்காரன் said...

அழகான பதிவு

Anonymous said...

அருமையான பதிவு.இவர் போன்றவர்கள் இருப்பதால்தான் மழை பொழிகிறதோ

Thamizhan said...

இவர் மாதிரி ஆசிரியர்கள் உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப் பட வேண்டியவர்கள். தயைசெய்து முகவரியை இணைக்க வேண்டுகிறேன்.

தேவன் மாயம் said...

நன்றி கேரளாக்காரர்!

தேவன் மாயம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான பதிவு.இவர் போன்றவர்கள் இருப்பதால்தான் மழை பொழிகிறதோ

//

அப்படித்தான் தோன்றுகிறது!

தேவன் மாயம் said...

Thamizhan said...
இவர் மாதிரி ஆசிரியர்கள் உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப் பட வேண்டியவர்கள். தயைசெய்து முகவரியை இணைக்க வேண்டுகிறேன்.

//
இவர் முகவரி தற்போது கிடைக்கவில்லை. முயற்சி கெய்கிறேன்

priyamudanprabu said...

நல்லவர்களை பாராட்டனும்
நல்ல பதிவு
அவரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களையும் கொடுங்கள்

ஜீவன்பென்னி said...

NALLA VISYAM.... SIRAKKATTUM AVARATU SEVAI.

தேவன் மாயம் said...

பிரியமுடன் பிரபு said...
நல்லவர்களை பாராட்டனும்
நல்ல பதிவு
அவரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களையும் கொடுங்கள்
//
விபர்த்துக்கு முயற்சி செய்கிறேன் பிரபு!

vasu balaji said...

வணக்கத்துக்குரிய ஆசிரியரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார்.

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அருமை அருமை - ஆசிரியரைப் பற்றிய இடுகை அருமை. ஆரம்பப் பள்ளியினை நல்ல முறையில் நடத்திச் செல்லும் திறமைக்குப் பாராட்டுகள்

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

சொல்லரசன் said...

சாதனை ஆசிரியர்தான்,இவரை போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் போதும் அந்த மாவட்ட அரசு பள்ளிகள் வளம் பெறும்.இவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்காதே!!!

மதுரை சரவணன் said...

நன்றி . இவர்கள் மாதிரி ஆசிரியர்கள் தான் என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு முன் மாதிரி. இது போன்ற அறிமுகங்கள் நம் சமுதாயத்தை வலுப்படுத்தும், இது மாதிரி ஆசிரியர்களை அறிமுகப்படுத்தும். என் பள்ளியில் சக்கிமங்கலம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் பயில்கிறார்கள். நான் பல முறை அவர்கள் படிக்க அவர்கள் தலைவரிடம் பேசி யுள்ளேன். அவரும் சில நாட்கள் அனுப்புவார். நானும் என் ஆசிரியர்களும் அவர்களை குளிப்பாட்டி , அதிகாலையிலே சென்று பள்ளிப்பேருந்தில் அழைத்துவருவோம் . ஆனால் திருவிழா வந்துவிட்டால், அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. அது போக அவர்களை பள்ளிச் செல்லாக் குழந்தைகள் லிஸ்டில் சேர்த்து, ஒரு இணைப்பு மையத்தில் வைத்து பயில வைக்கிறார்கள். அதில் அந்த தன்னார்வ நிறுவனத்தில் இருந்து அழைத்து செல்ல வந்தால் , சார் இவர்கள் வகுப்புக்கு வர மாட்டர்கள் , எதுக்கு வீணா இந்த வம்பு , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சண்டை வேறு ... இது தனிக்கதை . இதில் வெற்றி பெறுவது என்பது ஒரு சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவருவதற்கு சமம். அவர் ஆர்வம் வெற்றியாக மாற வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் said...

மாஸ்டர்..கலக்குறார்...
நல்ல முயற்சி....கண்டிப்பாக வெற்றி பெறும்...

ஜோதிஜி said...

தகவல் வந்தது. உங்களுக்கும் நன்றி.

Jerry Eshananda said...

great job.

அருண் பிரசாத் said...

அவருக்கு ஒரு ராயல் சல்யூட்

அ.முத்து பிரகாஷ் said...

ஆசிரியர் திரு.கருப்பையா போன்றோர்களால் நீடித்திருக்கின்றன சில நம்பிக்கைகள் ...பகிர்வுக்கு நன்றி தோழர் !

தருமி said...

ஒரு நல்லாசிரியரைப் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி

தருமி said...

ஒரு நல்லாசிரியரைப் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி

Chitra said...

கம்பியூட்டருக்கென தனியாக பணம் வாங்கிவிட்டு கம்பியூட்டர் பற்றி மேம்போக்காகப் பாடம் எடுத்து விட்டு ஏமாற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையில் அரசுப்பள்ளி மாணவர்களை கம்பியூட்டர் வல்லுனர்களாக உருவாக்கும் இவர் நிச்சயம் போற்றத்தகுந்தவர்தானே!


........ பாராட்டப்பட வேண்டிய மனிதர். இவரை போல இன்னும் பலர் வர வேண்டும்.....

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்று.. சரவணனை வழிமொழிகிறேன்..

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு.
நல் ஆசிரியரிடம் படிக்கும் மாணாக்கர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஆசிரியருக்கு வாழ்த்தும் நன்றியும்..!

velji said...

நம் நம்பிக்கைகள் தொடர இவர் போன்றவர்களே பற்றுகோல்!

அவசியமான, நல்ல பதிவு!

Unknown said...

சத்தமே இல்லாமல் சாதனை செய்துவரும் ஆசிரியர் திரு,கருப்பையா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவரின் ஆசைகள் நிறைவேற இறைவன் துணணயிருப்பான்

ஆ.ஞானசேகரன் said...

//தனிமரம் தோப்பாகாது, நான் ஒருவன் நல்லது செய்தால் உலகமே மாறி விடுமா? என்று தத்துவம் பேசும் நம்மிடையே இவர் ஒரு சாதனையாளராக ஜொலிக்கிறார்.//

பாராட்ட கூடிய ஒருவர்... அவரை அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி

RVS said...

மிகவும் நல்ல பதிவு. குரு வணக்கம் இந்த வாத்தியாருக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Rajeswari said...

இவர்தான் ஆசிரியர்..!


Thanks for sharing..

குடந்தை அன்புமணி said...

இவர் இவர்தான் ஆசிரியர்... இவரைப்போன்று எல்லா ஆசிரியர்களும் இருந்துவிட்டால்.... ம்... நினைத்துப் பார்க்கும்போதே சிலிர்க்கிறது.

க.பாலாசி said...

நிச்சயம் போற்றுதலுக்குரியவர்தான்... வணங்குகிறேன்...

Ravichandran Somu said...

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

ஹுஸைனம்மா said...

மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தருகிறது.

ஹுஸைனம்மா said...

மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தருகிறது.

அப்துல்மாலிக் said...

சாதனை ஆசிரியர்

கண்ணகி said...

நல்ல பதிவு...

Praveenkumar said...

இவர் நிச்சயம் போற்றுதற்குரியர் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இவரது சேவை மெய்சிலிர்க்கச் செய்கிறது. இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு ஆசிரியரா...!! என பிரமித்துப் போனேன். இவருக்கு தமிழகரசின் நல்லாசிரியர் விருது கிடைக்க மனமார வாழ்த்தி வணங்குகிறேன்.
பகிர்வுக்கு நன்றி தேவா சார்.

callezee said...

unami ulaippu idhu than sadhanai..

Vijiskitchencreations said...

என் முதல் வருகை நல்ல மனிதரை பற்றி படித்ததும் சந்தோஷம்.

உண்மையிலேயே ரொம்ப நல்ல மனது கடவுள் அருள் புரியட்டும்.
gr8.


தேவன்மாயம் எங்கு சென்றாலும் உங்களை பார்க்க முடிகிறது, அது யாராக இருக்கும் அவர் வலைபதிவுன் என்ன என்று தான் தேடி இன்று ஒரு வழியாக வந்துவிட்டேன். நல்ல பதிவுகள். நல்ல எழுத்து நடை நல்ல பயனுள்ள தளம்.
www.vijisvegkitchen.blogspot.com

Aakash amma said...

ம்ம்.நன்றிங்க பகிர்வுக்கு. இவரைப் போன்றவர்கள் போற்றப்பட வேண்டும்

Aakash amma said...

இவரைப் போன்றே ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார். நாமக்கல் மாவட்டத்தில். நான் படித்த ஏழூர் என்னும் கிராமப் பள்ளியில்.மிகச் சிறிய கிராமத்தில்தான் போஸ்டிங் வேணும்ன்னு வாங்கி,அந்தப் பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள கட்டடங்களைக் கட்டினார். மாணவர்களுக்கு பற்பல வசதிகளைச் செய்தார்.இப்போது எங்க இருக்கார்ன்னே தெரியல. நாமக்கல் மாவட்டத்துக்காரங்க யாராவது இருந்தால் திரு. நடராஜன் ஐயா அவர்களைப் பற்றிய விவரம் ஏதும் தெரிந்தால் தெரிவியுங்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory