Friday, 24 September 2010

பன்றிக்காய்ச்சலிலிருந்து குழந்தைகளைக் காக்க!

Sleeve sneeze poster clip_image002

குழந்தைகளைப் பன்றிக்காய்ச்சலிலிருந்து காக்க என்ன செய்யலாம்? சில எளிய சுகாதார விசயங்க்ளை அவர்கள் கடைப்பிடித்தால் போதும்.

குழந்தைகளை அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவச் சொல்லவும்

  • விளையாடி விட்டு வரும் போது,
  • வெளியிலிருந்து வரும்போது,
  • கடைகளுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது
  • அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும்போது
  • எஸ்கலேட்டர், லிஃப்ட் ஆகியவற்றில் அதிகம் கிருமிகள் இருக்கும். அதில் உள்ள கைப்பிடிகள், கதவுகளில் நம் கை படும்போது நிச்சயம் கிருமிகள் நம் கையில் தொற்றும்.
  • ஆட்கள் கூடும் இடத்தில் யாரும் தும்மினாலோ, இருமினாலோ நம் குழந்தையின் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும்.
  • குழந்தைகள் அவர்கள் தும்மும் போது  திசுத்தாள்  ( TISSUE PAPER ) இல்லையெனில் கைகளில் தும்மாமல் முழங்கைப்பகுதியில் தும்மவோ இருமவோ செய்யலாம்.
  • உங்கள் பகுதியில் பன்றிக்காய்ச்சல் முன்னரே பலருக்கு இருந்தால் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்ல வேண்டாம்.
  • உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், விடுதியில் குழந்தைகளுக்குத் தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகியிடம் பேசி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்.
  • உங்கள் பகுதியில்  இந்த வியாதி பரவுதல் பற்றி செய்திகளைத் தொடர்ந்து படித்து விழிப்புணர்வுடன் இருக்கவும்.
  • உங்கள் குழந்தைக்கு இந்த வியாதி பற்றி விளக்கமாகச் சொல்லவும். அதைத் தடுப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர்களுக்குப் புரிய வைக்கவும்.
  • கைகளால் மூக்கு,வாய்,கண் ஆகிய பகுதிகளை அடிக்கடி தொடக்கூடாது..
  • குழந்தைகளுக்குத் தனியாகத் துடைக்கும் துண்டு, சோப் ஆகியவற்றை வைக்கவும்.  
  • நல்ல சத்தான உணவு மிகவும் அவசியம்.
  • குழவ்தைகஃள் தவறாது உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

குழந்தைகளின் கைகளைக் கழுவ சோப்பு இல்லாவிட்டால் கைகழுவும் திரவம் வாங்கி பையில் வைத்திருக்கவும். அடிக்கடி அத்திரவத்தால் குழந்தைகளின் கைகளைத் துடைத்து விடவும்.

30 comments:

Unknown said...

நான் சென்னையில் வசிப்பதால் கூடுமானவரை மிகுந்த பாதுகாப்பாகவே குழந்தைகளை பார்த்துகொள்கிறேன். இப்போது கால் ஆண்டு பரிட்ச்சை விடுமுறை முடிந்து வரும்போது கண்டிப்பாக குழந்தைகளுக்கு வேக்சின் போடவேண்டும் என பள்ளியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்.

வேக்சின் அரசு மருத்துவமனைகளில்தான் போட வேண்டுமா? தனியார் மருத்துவ மனைகளிலும் போடலாமா?

தேவன் மாயம் said...

தடுப்புமருநது தனியாரிலும் கிடைக்கிற து!

Menaga Sathia said...

useful information!!

தேவன் மாயம் said...

thank you kitchen queen!

priyamudanprabu said...

USEFULL POST , THANK YOU

மாதேவி said...

பன்றிக் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மிகவும் அவசியமான பதிவு.

தமிழ் அமுதன் said...

நன்றி டாக்டர்..!

VELU.G said...

தேவையான நேரத்தில் அளிக்கப்பட்ட மிக நல்ல தகவல்

நன்றி டாக்டர்

நட்புடன் ஜமால் said...

can we also use wet tissue Deva ?

வழிப்போக்கன் said...

சாருக்கு அனுபவம் போல......
நல்ல தகவல்கள்.... ந‌ன்றி..

வழிப்போக்கன் said...

சாருக்கு அனுபவம் போல......
நல்ல தகவல்கள்.... ந‌ன்றி..

நட்புடன் ஜமால் said...

சரியான நேரத்தில் அவசிய இடுக்கை நன்றி தேவா

தேவன் மாயம் said...

பிரபு மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

மாதேவி said...

பன்றிக் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மிகவும் அவசியமான பதிவு.//

இன்னும் எழுத வேண்டியுள்ளது..

தேவன் மாயம் said...

தமிழ் அமுதன் said...

நன்றி டாக்டர்..!//

நன்றி தமிழ்!

தேவன் மாயம் said...

வேலு..வருகைக்கு நன்றிங்க!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

can we also use wet tissue Deva ?//

உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும்!

தேவன் மாயம் said...

வழிப்போக்கன் said...

சாருக்கு அனுபவம் போல......
நல்ல தகவல்கள்.... ந‌ன்றி..

//காய்ச்சலில் அடிபட்ட அனுபவம்!!! ?

cheena (சீனா) said...

அன்பின் தேவா

தேவையான நேரத்தில் அரிய பதிவினை பகிர்ந்தமை நன்று

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

Anonymous said...

அருமையான பதிவு...வேக்சின் 3வயது குழந்தைக்கும் போடலாமா டாக்டர்?

பவள சங்கரி said...

காலம் அறிந்து பயிர் செய்திருக்கிறீகள். இந்த சமயத்தில் மிக அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

டாக்டர்...எனக்கு ஒரு டவுட்டு...

Jerry Eshananda said...

கேட்கலாமா...?.

Jerry Eshananda said...

பன்றி காய்ச்சல் மாதியே..."பன்றி தலைவலி,,பன்றி இருமல் வருமா..?

Unknown said...

தனியார் மருத்துவ மனைகளிலும் போடலாமா?

yes

http://doctorrajmohan.blogspot.com/2010/09/blog-post.html

nasovac for > 3years cost 250
vaxiflu s for 18-60 years

soory deva sir to interrupt in your blog

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி டாகடர்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பயனுள்ள இடுகை.நன்றி

ஜீவன்பென்னி said...

ரொம்ப நன்றிண்ணே. தேவையான அவசியமான தகவல்கள்.

sheik said...

பன்றிக் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மிகவும் அவசியமான பதிவு.


இதைப்பற்றி ஏற்கனவே நான் இட்ட ஒரு பதிவையும் படிச்சு பாருங்க...

http://kuwaittamils.blogspot.com/2009/08/blog-post_3213.html

ஹுஸைனம்மா said...

நன்றி டாக்டர். இதை பிரிண்ட் எடுத்து பசங்ககிட்ட கொடுக்கிறேன்.

வெளியிடங்களுக்குப் போய்ட்டு வந்து கைகால் கழுவுற பழக்கம் நிறைய பேருக்குக் கிடையாது. அப்படியே படுக்கையறை வரைகூட வருவாங்க. இதைப் படிச்சுப் புரிஞ்சுகட்டும்!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory