Monday, 15 November 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

என் முந்தைய பதிவில் வட்டு விலகல் பற்றி எழுதியிருந்தேன். முதுகு முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டு அல்லது தட்டு போன்ற  அமைப்பு மிகவும் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக உள்ளது. காரணம் தற்போது அதிகமானோர் இந்தப் பிரச்சினையால் அவதிப்படுவதுதான்.

முதல் இடுகையைப் படிக்காதவர்கள் விரும்பினால் படிக்க கீழேயுள்ள தலைப்பை சுட்டி படிக்கலாம்.

 வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இந்த தட்டுப்பிதுக்கம் எந்த இடத்தில் அதிகம் வருகிறது என்றால் முதுகின் கீழ்ப்ப்பகுதியில் உள்ள (LUMBAR VERTEBRA) முள்ளெலும்ப்பில்தான். இதனை நாரி முள்ளெலும்பு என்று அழைக்கின்றனர்.

image

நாரி (லம்பார்)  முள்ளெலும்பில் 5 எலும்புகள் உள்ளன.  இதில் கடைசி எலும்புக்கும் சாக்ரம்(SACRUM) எலும்புக்கும் இடையில் உள்ள (L5-S1)  வட்டும் அதற்கு ஒருபடி மேலேயுள்ள (L4-L5 ) நான்காம், ஐந்தாம் எலும்புகளுக்கிடையில் உள்ள வட்டும் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

(மேலே உள்ள படத்த்ஈல் லம்பார் நாரி முள்ளெலும்பு இடுப்புப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் PELVIC என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் சாக்ரம்(SACRUM) என்ற எலும்பு உள்ளது. இதனைத் தமிழில் திரிகம் (திருவெலும்பு)  என்று அழைக்கின்றனர்.image

மேலேயுள்ள எலும்புதான் சாக்ரம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்  திரிகம் எலும்பு இதில் ஐந்து எலும்புகள்  இணைந்து ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த ஒன்றிணைந்த அமைப்பே திரிகம்.

திரிகம் 1- S1

திரிகம் 2- S2

திரிகம் 3 –S3

திரிகம் 4- S4

thirikam 5-  S5

என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

image

மேலுள்ளது வட்டு அல்லது தட்டு (DISC)) ன் படம்.

இதில் வட்டின் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டின் வெளிப்பகுதி சிதைந்து உள்ளே உள்ள பிசின் போன்ற பகுதி (NUCLEUS PULPOSIS) வெளியே தள்ளிக் கொண்டு இருப்பதைக் காணலாம்.  இந்த இடத்தில் நரம்புகள் தண்டு வடத்திலிருந்து பிரிந்து கால்களுக்குச் செல்வதால் இவை அதனை அழுத்துகின்றன. அழுத்தப்படும் நரம்பு காலின் எந்தப் பகுதிக்குச் செல்கிறதோ அங்கு வலி, மரம்மரப்பு ஆகியவை உண்டாகும்.

வட்டு விலகல் யாருக்கு வருகிறது?

வட்டு விலகல் என்ற டிஸ்க் புரொலாப்ஸ்  இளம் வயதினரையே  அதிகம் பாதிக்கிறது. அதிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வலியானது அதிகம் வேலை செய்யும்போதோ, கனமான பொருட்களைத் தூக்கும்போதோ  அதிகமாகிறது.  

இன்னும் நிறைய உள்ளது எழுத!

தேவா.

18 comments:

தேவன் மாயம் said...

சோதனை!

Arun Prasath said...

வண்டி அதிகமா ஓட்டினா இது மாறி ஆகுமா தல?

தேவன் மாயம் said...

ஆம்!ஆனால் எல்லோருக்கும் வருவதில்லை!

Praveenkumar said...

அவசியமான மருத்துவ தகவல்கள் தேவா சார். படத்தை பார்க்கும் போதே பயமா இருக்கு..!!

Anonymous said...

Thank you so much Dr. For me, the timing of this blog is perfect! My BIL is suffering some severe pain on his legs and MRI revealed it quite nicely. He is going to be operated tomorrow. I could understand from your post that it is a Disc Prolapse case.

One question Dr. - What will be the post-operative care required? Will he be able to go to office after he gets discharged? (ஓசி கன்சல்டேஷன் :-))

அகல்விளக்கு said...

நீண்ட நேரம் கணிப்பொறியில் அமர்ந்திருப்பதால் இது ஏற்பட வாய்ப்புள்ளதா...

அன்புடன் நான் said...

அய்யா வணக்கம்.... நலந்தானே?

நான் இப்போதுதான் சிங்கை வந்தேன்.....

இந்த பகிர்வு ... பிரச்சனையை சொல்கிறது.
இதற்கு தீர்வு ... இதை தவிர்க்கும் வழியும் எழுதுங்க.....
மருத்துவரின்....மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்க அய்யா. நன்றி.

Jerry Eshananda said...

"அழகுத்தமிழில் மருத்துவச்செய்திகள்".....உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் தேவா..

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...

அவசியமான மருத்துவ தகவல்கள் தேவா சார். படத்தை பார்க்கும் போதே பயமா இருக்கு..!!//

படிங்க பயம் போய்விடும் பிரவீன்!

தேவன் மாயம் said...

JMRChennai said...

Thank you so much Dr. For me, the timing of this blog is perfect! My BIL is suffering some severe pain on his legs and MRI revealed it quite nicely. He is going to be operated tomorrow. I could understand from your post that it is a Disc Prolapse case.

One question Dr. - What will be the post-operative care required? Will he be able to go to office after he gets discharged? (ஓசி கன்சல்டேஷன் :-))//

மன்னிக்கவும் ! வெளியூர் சென்று இப்போதுதான் வந்தேன்!

உடனடியாகப் போகமுடியுமா என்பது அவருக்கு எவ்வளவு தூரம் சரியாகிறது என்பதைப் பொறுத்துத்தான்! அவர் வயது என்ன? என்பதும் முக்கியம்! பெரும்பாலும் 15 நாட்களில் வலியின்றி நடக்கலாம்!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...

நீண்ட நேரம் கணிப்பொறியில் அமர்ந்திருப்பதால் இது ஏற்பட வாய்ப்புள்ளதா..

அதிக வாய்ப்பு உள்ளது!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...

அய்யா வணக்கம்.... நலந்தானே?

நான் இப்போதுதான் சிங்கை வந்தேன்.....

இந்த பகிர்வு ... பிரச்சனையை சொல்கிறது.
இதற்கு தீர்வு ... இதை தவிர்க்கும் வழியும் எழுதுங்க.....
மருத்துவரின்....மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்க அய்யா. நன்றி.//

கட்டாயம் கருணா! குழந்தை நலமா?

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...

"அழகுத்தமிழில் மருத்துவச்செய்திகள்".....உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் தேவா//

மிக்க நன்றி ஜெரி!!

பஞ்சவர்ணசோலை said...

விரிவான விளக்கம் :)))

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் டாக்டர்... வட்டு விலகல் உள்ளவர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கவும் ... எந்த மருத்துவம் சிறந்தது.... இதில் ஆயிர்வேதா பற்றியும் சொல்லுங்களேன்..

priyamudanprabu said...

இன்னும் நிறைய உள்ளது எழுத!
///

ya we too waiting....

nice

'பரிவை' சே.குமார் said...

அவசியமான மருத்துவ தகவல்கள் தேவா சார்.

Irfan khan said...

Bro நான் பேருந்தில் பயனம் பன்னும் போது மலம் வர மாதி இருந்தது நான் அடக்கி கொன்டு இருந்தேன் ஒரு கட்டத்தில் மலம் ரெம்ப அடக்க முயற்ச்சி பன்னுனேன் அப்போ என் மூளை பின் பகுதி கீலே நரம்பு புடிச்சு இழுத்த மாதிரி இருந்தது அதிலிருந்து எனக்கு தலைக்கு பின்னால் வலி வர ஆரம்பித்து விட்டது எந்த வேலையும் செய்ய முடிய வில்லை உடல் நடுக்கம் அதிகம் ஆய் விட்டது காழ்கலில் உணர்வு இல்லாம இருக்கு என்னங்கள் அதிகமாக இருக்கிரது பயித்தியம் பிடிப்பது போன்று ஊள்ளது இப்போ மலம் வர உணர்உ கூட இல்லை பயமாக இருக்கிரது இதர்கு தீர்வு சொல்லுங்க

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory