அலுவலகம் செல்லும் நம் மக்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.
1.காலை உணவைத் தவிர்த்தல்
காலையில் எழுந்து அவசரமா கிளம்பி ஒரு காபி அல்லது டீ மட்டும் குடித்துவிட்டு செல்பவரா நீங்கள்?
அலுவலகத்தில் எரிச்சல்,கடுப்பு,சரியா வேலை வேலை செய்யமுடியாமைதான் ஏற்படும்.
இதுக்கெல்லாம் என்ன காரணம்? உடலில் போதிய அளவு சக்தியின்மைதான். ஆங்கிலத்தில்
பிரேக்ஃபாஸ்ட் என்றால் பிரேக்கிங்க் தி ஃபாஸ்டிங்க் என்பார்கள்.அதாவது இரவு முழுக்க விரதம் இருந்து
காலையில் விரதம் முடிப்பது போல்!
காலையிலேயே உடலில் உண்ணாததால் சக்தி இருக்காது! மதியம் வருவதற்குள் மயக்கம்
வந்து விடும். என்ன செய்வீங்க? மதியம் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவீங்க. அதனால் என்ன
ஆகுமென்றால் உடலில் சர்க்கரை அளவு கூடி விடும். இதாலும் அசதி,தூக்கம்தான் வரும்.
என்ன செய்ய வேண்டும்: 1 கப் பால், கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸ் போல, ஒரு பழம் போதும்.
(தேவையென்றால் ஒரு முட்டை) என்று காலை உணவை முடிங்க!!
2.காபி,டீ: அளவுக்கு அதிகமா காபி,டீ சாப்பிடுவது. இது தொடர்ந்து குடிப்பவர்களுக்கு விடுவது
பெரிய சிரமமாக இருக்கும்.
காபி,டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எரிச்சல், சக்தியின்மை ஏற்படும். இரவில் தூக்கம் கூட மாறி
மறுநாள் சுறுச்றுப்பு இருக்காது. சாப்பாடுடன் சேர்த்து சாப்பிட்டால் காபி இரும்புச்சத்தை உடலில் சேர
விடாது. அதனால் சத்துக்குறைவு ஏற்படும்.
என்ன செய்யலாம்: அடிக்கடி குடிப்பதை விடமுடியவில்லையா? கொஞ்சமா குடியுங்கள்!
3.தண்ணீர்- நிறைய அலுவலகங்கள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் நமக்கு தாகம் அதிகம்
எடுக்காது.இதனால் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். உடலும் அதற்கேற்ப மாறிவிடும். இதனால்
சில வருடங்களில் மலச்சிக்கல், சரியாக செரிக்காமல் போவது, வாயுத்தொல்லை, தண்ணீர் உடலில்
குறைதல், தோல் மினுமினுப்பு குறைதல் ஆகியவை ஏற்படும்.
என்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.
அலுவலகம் முடிவதற்குள் ஒரு லிட்டரை முடித்துவிட வேண்டும். எவ்வளவு சுலபம் பாருங்க.
4.ரொம்ப பிஸியா?:மீட்டிங் மத்தியான நேரத்திலா? உங்களால் மதிய உணவு சாப்பிட
முடியவில்லையா! சரியான ஒரு நேரத்தை அதாவது 12.30-- 2.00 க்குள் தேர்ந்தெடுத்து அந்த
நேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள். இது அல்சர்,வாயுத்தொல்லை ஆகியவற்றிலிருந்து
உங்களைக்காப்பாற்றும். இது மேலும் அதிக உணவு உண்ணுதல், எடை அதிகரிப்பு ஆகியவற்றையும்
தடுக்கும்.
5.வார இறுதி: இந்த வார இறுதின்னாலே மக்களுக்கு குஷிதான்!! வாரம் முழுக்க கடின வேலை!!
வார இருதியில் கொண்டாட்டம்!!சூடான சோம பானங்கள், கெண்டகி சிக்கன் என்று அள்ளி
விளையாடுகிறீர்களா? கொஞ்சம் பொறுமை!! இந்த காம்பினேஷனெல்லாம் நீண்ட உடல் நலத்துக்கு
உதவாது. கொஞ்சம் அடக்கி வாசிங்க!!
என்ன செய்யலாம்: ஒவ்வொரு நாளுமே கொஞ்சம் வேலை முடிந்தவுடன் ரிலாக்ஸ் பண்ணவும்.
சின்ன மசாஜ்,விளையாட்டு, புத்தகம் .. என்று வார இறுதியை விட ஒவ்வொரு நாளும் ரிலாக்ஸ்
பண்ணிவிடுங்க!! அப்புறம் என்ன ஜாலிதானே!!
அன்பு மக்களே!! உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்!!
படித்து மகிழுங்கள்!!
தமிழ்மணத்தில் ஓட்டுப்போட மறந்திடாதீங்க!!!
தமிழ்த்துளி தேவா...
40 comments:
//....அந்த நேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள்//
எனக்குத் தெரிந்த மருத்துவர்கள் இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் தெரியவில்லையே..
அப்போ வார இறுதியில் grilled chicken சாப்பிட வேண்டாமென்கிறீர்களா? கொழுப்பே இல்லையாமே?
காலை உணவைத் தவிர்த்தல்\\
இது மிக முக்கியமானது.
obesity starts from here ...
என்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.\\
தண்ணீரோடு வைத்திருக்கிறேன் ;)
காலை 1 மாலை 1
//....அந்த நேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள்//
எனக்குத் தெரிந்த மருத்துவர்கள் இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் தெரியவில்லையே..
அப்போ வார இறுதியில் grilled chicken சாப்பிட வேண்டாமென்கிறீர்களா? கொழுப்பே இல்லையாமே?//
அய்யா!! விட்டுருங்கைய்யா!! தெரியாம சொல்லிப்புட்டேன்!!
காலை உணவைத் தவிர்த்தல்\\
இது மிக முக்கியமானது.
obesity starts from here///
அட! மக்கா!! சூப்பர் ஜமாலு!!
என்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.\\
தண்ணீரோடு வைத்திருக்கிறேன் ;)
காலை 1 மாலை 1///
மிக நல்லது!!
அவ்சியமான பதிவு டாக்டரே..!
காலை உணவைத் தவிர்த்தல்\\
இது மிக முக்கியமானது.
obesity starts from here///
அட! மக்கா!! சூப்பர் ஜமாலு!!\\
ஆஹா! நான் சொன்னது வேறு அர்த்தமாயிடிச்சோ!
காலை உணவை(த்)தவிர்த்தல் கூடாது.
தவிர்ப்பதால் தான் obesity வருது.
(இதுவும் ஒரு காரணம்)
நல்ல தகவல்கள். ஆனால் நாளுக்கு நாள் காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டல்லவா செல்கிறது :((
அவ்சியமான பதிவு டாக்டரே.//
டக்ளஸ் எல்லோரும் அறிந்ததுதானே!!
யார்ன்னா தமிழாக்கம் செய்துடுங்கோ
Top three reasons why we should eat breakfast (Better Homes and Gardens):
1. Better performance. Breakfast eaters have a more positive attitude toward school and work, and they perform better. A Boston study showed that children who started eating breakfast raised their test scores significantly and were late or absent from school less frequently.
2. Better overall nutrition. People who eat breakfast are more likely to get the nutrients their bodies need. A Louisiana study found that people who skipped breakfast rarely met even two-thirds of the daily requirements for most minerals and vitamins.
3. Better weight control. Breakfast revs up the body's metabolic rate first thing in the morning; burning calories faster than if the morning meal had been skipped. Thus breakfast eaters maintain their weight more easily than skippers.
காலை உணவைத் தவிர்த்தல்\\
இது மிக முக்கியமானது.
obesity starts from here///
அட! மக்கா!! சூப்பர் ஜமாலு!!\\
ஆஹா! நான் சொன்னது வேறு அர்த்தமாயிடிச்சோ!
காலை உணவை(த்)தவிர்த்தல் கூடாது.
தவிர்ப்பதால் தான் obesity வருது.
(இதுவும் ஒரு காரணம்)//
நன்றாகச் சொன்னீர்கள் ஜமால்! நீங்கள் தவறாகச்சொல்லவில்லையே!!
நல்ல தகவல்கள். ஆனால் நாளுக்கு நாள் காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டல்லவா செல்கிறது :((///
ஆம் சதங்கா !!
யார்ன்னா தமிழாக்கம் செய்துடுங்கோ
Top three reasons why we should eat breakfast (Better Homes and Gardens):
1. Better performance. Breakfast eaters have a more positive attitude toward school and work, and they perform better. A Boston study showed that children who started eating breakfast raised their test scores significantly and were late or absent from school less frequently.
2. Better overall nutrition. People who eat breakfast are more likely to get the nutrients their bodies need. A Louisiana study found that people who skipped breakfast rarely met even two-thirds of the daily requirements for most minerals and vitamins.
3. Better weight control. Breakfast revs up the body's metabolic rate first thing in the morning; burning calories faster than if the morning meal had been skipped. Thus breakfast eaters maintain their weight more easily than skippers. ///
சூப்பர் ஜமால்!!
நல்ல பதிவு தேவா!
நீங்கள் அதிகம் மருத்துவ விளக்கங்கள் எழுதனும், எங்களை போன்றோருக்கு உபயோகமாகவும் புரியும்படியாகவும்.
Breakfast & Obesity பற்றி மேலும் பல தகவல்கள்
நல்ல பதிவு தேவா!
நீங்கள் அதிகம் மருத்துவ விளக்கங்கள் எழுதனும், எங்களை போன்றோருக்கு உபயோகமாகவும் புரியும்படியாகவும்.
Breakfast & Obesity பற்றி மேலும் பல தகவல்கள்///
பதிவைப்
போடுங்க ஜமால்!!
வீ ஆர் வெயிட்டிங்க்!!
மிக்க அன்புடன் தேவா!
மருத்துவருக்கே உரிய லட்சணம் அக்கறை நண்பர்களுக்கும் பயன்படும் வண்ணம் நல்லப் பதிவுங்க.....
நல்ல பதிவு டாக்டர் !!! நன்றி !!!
டாக்டர் தேவாவின் சேவை பதிவுலகிற்கு
என்றும் தேவை
//அன்பு மக்களே!! உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்!!//
இது கலக்கல் வரிகள்...
மிக முக்கியமான பதிவு. நன்றி தேவா
இப்படியாவது என்னமாதிரி ஆளுங்க திருந்துறாங்களானு பார்ப்போம்..
பயனுள்ள பதிவு
இனிமேல் breakfast சாப்பிட ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!
நல்ல யோசனையா இருக்கே ஆனா செய்யுரதுதான் கொஞ்சம் கடினம்.. இப்படி எல்லாம் சரியா செஞ்சுடா டாக்டருக்கு வேலையில்லாம போகுமே அதுதான் யோசிக்கின்றோம்..
நல்ல நேரத்து நல்ல பதிவு
தண்ணீர் மேட்டர் மிகவும் உபயோகமாக இருக்கும்!
இன்றே ஒரு பாட்டில் தண்ணீர் மேசையில் வைக்க சொல்லிவிடுகிறேன்!
மிக மிக உபயோகமான, அருமையான பதிவு. பலருக்கு இந்த பதிவு கண்னைத் திறந்து விட்டிருக்கும்.
நன்றி
//ஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்!!! //
எனக்கெல்லாம் இந்த தவறு மறைமுகமான பெரும் தவறு அதாவது, வேலை கொடுத்தவர்கள் செய்தது தான் !
:)
ஹை மீ த 25த்
சரியாகச் சொன்னீர்கள் தேவா. நான் காலை ப்ரேக்பாஸ்டை எக்காரணம் கொண்டும் தவற விடுவதில்லை.
காபி, டீ குடுப்பது அதிகம் தான். குறைக்க வேண்டும்.
நீங்க கூறியதுப் போல் தண்ணீர் அதிகமாக அருந்துகின்றேன்.
எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் கவலையில்லை. மதியம் 1 மணிக்குச் சாப்பிட்டுவிடுவேன்.
நோ வீக் எண்ட் டிரிங்ஸ் - அதனால இதுவும் எனக்கு கவலையில்லை.
மூன்றாவது யோசனை மிக முக்கியமானது,இதனால் பாதிக்கபட்ட நான் தற்போது அலுவலகநேரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர்குடித்து
கொண்டுஇருக்கிறேன்.
கடைசி யோசனையை கடைபிடிப்பதுதான் கொஞ்சம் கடினமாக உள்ளது.
முக்கியமான பதிவு தேவா...
எங்கே இருந்து தான் மேட்டர் கிடைக்குதோ...
:-)
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
காலையில ராஜா மாதிரி சாப்பிடணும் ( பல வகை ஐட்டங்கள் );
மதியத்தில் மந்திரி மாதிரி சாப்பிடணும் ( சில வகை ஐட்டங்கள் );
இரவில் சேவகன் மாதிரி சாப்பிடணும் ( மிக சொற்ப ஐட்டங்கள் );
சூப்பர் ஆனா இதுல ஒன்ன கூட நான் கடைபிடித்தது இல்லை :)
வாழ்த்துக்கள் உங்கள் பதிவு இளமை விகடனில் குட் ப்லாக்கில்.....
நல்ல பயனுள்ள அறிவுரைகள்...
அன்பு மக்களே!! உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்!!//
நிறைய எதிர்பார்க்கிறோம்...
:)))
பயனுள்ள பதிவு தேவா.
நானும் பிரேக்ஃபாஸ்ட்டை அடிக்கடி ஸ்கிப் செய்வதுண்டு. உங்கள் அறிவுரைக்கு நன்றி.
நல்ல இடுகை - அரிய தகவல்கள் - கடைப்பிடிக்க வேண்டுமே - செய்வோம்
Good post. Thank you
Post a Comment