Sunday, 28 June 2009

மனிதர்கள் அழிந்தால்!

பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.

அப்படி  மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)

என்ன நடக்கும்?

1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.

2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.

3.மனிதப்பேன் அழிந்துபோகும். (இஃகி!!இஃகி!!!இஃகி!!!).

4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.

5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.

6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அண்ணாசாலையில்கூட்..

7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!

8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.

9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.

10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.

11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.

12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.

அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..

33 comments:

பழமைபேசி said...

//கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும்//

அதான!

*இயற்கை ராஜி* said...

nice..vote potachi

நட்புடன் ஜமால் said...

மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..\\

ப்லாக் எல்லாம் தோன்றிய பிறகுன்னு சொல்ல வேண்டியது தானே ...

தேவன் மாயம் said...

//கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும்//

அதான!///

வாங்க கொங்குத்தமிழே!!!

தேவன் மாயம் said...

nice..vote potachi//

தமிழ்மணத்திலும், தமிலிஷில் 27 ஓட்டும் பெற்ற பதிவு தந்த இயற்கைக்கு வாழ்த்துக்கள்!!!

தேவன் மாயம் said...

மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..\\

ப்லாக் எல்லாம் தோன்றிய பிறகுன்னு சொல்ல வேண்டியது தானே .///

ஜமால் அப்ப பிறக்கட்டும்!!

வெட்டிப்பயல் said...

இப்ப இருக்குற நியூக்ளியர் ரியாக்டர் எல்லாம் வெடித்தால் அனைத்து உயிர்களும் அழிந்து போகாதா என்ன?

அப்படி ஏற்படும் விபத்தால் புதிதாக இனம் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இது எல்லாம் எப்படியும் நடக்க போகிற விஷயங்கள் தான் :)

தேவன் மாயம் said...

இப்ப இருக்குற நியூக்ளியர் ரியாக்டர் எல்லாம் வெடித்தால் அனைத்து உயிர்களும் அழிந்து போகாதா என்ன?

அப்படி ஏற்படும் விபத்தால் புதிதாக இனம் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இது எல்லாம் எப்படியும் நடக்க போகிற விஷயங்கள் தான் :)//
உங்கள் கருத்தில் உண்மையுள்ளது!!

ஆ.ஞானசேகரன் said...

//அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..//

நன்றிங்க

யூர்கன் க்ருகியர் said...

நல்ல கற்பனை !

தேவன் மாயம் said...

/அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..//

நன்றிங்க///

அப்பத்தானே வசதியா வாழலாம்!!

தேவன் மாயம் said...

நல்ல கற்பனை !//

க்ருகியர்!! அறிவியல் கலந்தது!!

Anonymous said...

சார் என்ன ஆச்சு உங்களுக்கு....

மேவி... said...

என்ன சார் ஆச்சு .....

ஏன் திடிர்ன்னு என்னை மாதிரி மொக்கை போடுறிங்க??????

மேவி... said...

//கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும்//


என்ன சார் ....
திருச்சி என்ன பாவம் செய்தது????

குடந்தை அன்புமணி said...

என்ன ஆச்சு! வாழ்க்கை, மரணம் என்று ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல...

Anbu said...

:-))

அமுதா said...

/*மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்*/
இப்படி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை...

/*கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!! */
இப்படி தான் யோசிச்சேன்...

பாலகுமார் said...

ஏன் சார், ஏன் ? நல்லாத்தானே இருந்தீங்க ? :)

Rajeswari said...

தேவா சார் ? எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது

சொல்லரசன் said...

// பாலகுமார் said...
ஏன் சார், ஏன் ? நல்லாத்தானே இருந்தீங்க ? //

நம்மையெல்லாம் மதுரையில் பார்த்தபின் இப்படி ஆகிவிட்டாரோ!!!!!!!!!!!!!!

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு, மற்றும் இரண்டாவது முறையாக உங்கள் பதிவு குங்குமம் இதழில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏன் சார் இப்படி மொக்கை போடுகிறீர்கள்?
முதலில் நீங்களும் நானும் தான் மிச்சம், மற்ற எல்லாரும் அழிந்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். முடிவில் நீங்களும் நானும் வந்து பிறப்போம் என்கிறீர்கள்.எங்கேயோ தப்பு நடந்து போச்சு சார். எனக்கு என்னமோ நீங்கள் அண்மையில் வேலை அதிகம் செய்திட்டீர்களோ? என்று கவலையாய் இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கோ!

குமரை நிலாவன் said...

உங்கள் பதிவு குங்குமம் இதழில் வந்ததிற்கு வாழ்த்துக்கள் தேவா சார்

// சொல்லரசன் said...
// பாலகுமார் said...
ஏன் சார், ஏன் ? நல்லாத்தானே இருந்தீங்க ? //

நம்மையெல்லாம் மதுரையில் பார்த்தபின் இப்படி ஆகிவிட்டாரோ!!!!!!!!!!!!!!//


இருந்தாலும் இருக்கலாம் ...:-))

அப்துல்மாலிக் said...

மருத்துவரே நேற்று கனவு கண்டீரோ

மனிதர் மட்டும் எப்படி அழியமுடியும், ஏதாவது இயற்கை உபாதைகள் நடந்தால் அனைத்து உயிரினமும் அல்லவா அழிந்துவிடும், அப்புறம் காட்டு விலங்கு எப்படி வீட்டுவிலங்கை சாப்பிடும்...

இருந்தாலும் உம் கற்பனைக்கு ஒரு ஓஓ

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Menaga Sathia said...

ஏன் என்னாச்சு உங்களுக்கு,நல்லாதானே இருந்தீங்க...

குங்குமம் இதழில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள் மருத்துவரே!!

வால்பையன் said...

சூப்பர் மேட்டரா இருக்கே!

அன்புடன் அருணா said...

நல்லா சுற்றியிருக்கீங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு பூமி சொல்லும் தான

தேவா சார்?

Sinthu said...

இந்த உலகத்திலா.................... நம்ப முடியவில்லை... மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை பிரச்சனை தான் போல இருக்கே,..

SUBBU said...

இந்த உலகத்திலா.................... நம்ப முடியவில்லை... மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை பிரச்சனை தான் போல இருக்கே,..

பயமில்லாதவன் said...

Mokai pathivu

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory