Tuesday, 17 March 2009

இளைஞர்களும் தவறுகள்!!-10 ம்!

இளைஞர்களான பின்னும்  நம் குழ்ந்தைகள்தானே என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது தவறு! குழந்தைகளை வளர்க்கும்போது நாம் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நாம் செய்யும் தவறுகளைப்பார்ப்போம்!

 

 

1.குழந்தைகளிடம் கத்துவது,சத்தம் போடுதல்:

இது நமது இயலாமயால் நமது கோபத்தினை வெளிப்படுத்தும் செயல்.

விளைவு:பிள்ளைகள் பெற்றோரை எதிரியாக நினைப்பர்.

செய்யவேண்டியது: கோபம் தணியும் வரை அமைதியாக இருப்பது! பின்பு அமைதியாக வேண்டுதல் அல்லது அழுத்தமாக வலியுறுத்தல்!

2.உடனே செய்!:

பெரும்பான்மை பிள்ளைகள் உடனே செய் என்று கட்டளையை அவமானமாகக் கருதுவர்!

விளைவு: வேலையை செய்யாமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அமைதியா இருந்து கழுத்தைஅறுத்து விடுவார்கள்.

செய்யவேண்டியது:அன்பாகவும் பாராட்டும் விதமாகவும் சொல்லி வேலை வாங்குவது!!

3.தவறு காணுதல்

,திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருப்பது:

விளைவு:இது பிள்ளைகளுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

செய்யவேண்டியது; அடுத்த அறையிலிருந்து கத்துவதைவிட பக்கத்தில் வந்து உடனே சாப்பிட்டால்தான் டி.வி.பார்க்கவிடுவேன் என்று அன்பாக வலியுறுத்தல்.

4.விளக்கங்களும்,புத்திமதி சொல்லுதலும்: ஒருவர் மட்டுமே பேசுவதை யாரும் விரும்புவது இல்லை!

விளைவு: வேலை நடக்காது.

செய்யவேண்டியது:குழந்தைகளிடமே கேப்பது! ஏன் மார்க் குறைந்தது! இந்த கணக்கு புரியலியா? வா நான் சொல்லிதருகிறேன். சரியாக பிரச்சினை எந்த இடத்தில் என்று கண்டுபிடித்துவிடலாம்.

5.கடுமையான கோபம்!: வந்தால் காட்ட வேண்டாம்.குழந்தைகள் மனம் உடைந்து போகலாம்.(எடு): நீ ஏண்டா உயிரோட திரியுறே!!

செய்யவேண்டியது:கோபம் அதிகமானால் ஒரு வாக்கிங் கிளம்பலாம்,ஜிம் போகலாம்.

6.எதிர்மறையாக குற்றம் சொல்லுதல்: உருப்படமாட்டே நீ, இந்தச் சின்ன விசயம் கூட உனக்கு தெரியலிய்ர்?

விளைவு: தான் திறமையில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை!

செய்யவேண்டியது:நேர்மறையாக ஊக்கப்படுத்துதல்!

7.கையும் களவுமாகப் பிடித்தல்: குழந்தைகள் தவறை மறைக்கவும்,பொய் சொல்லவும் ஏதுவாகும்..

செய்யவேண்டியது:நேரடியாக பேசுதல்,நம்பிக்கயூட்டும் விததில் நடந்துகொள்ளுதல்.

8.அதிகமாக குற்றம் சுமத்துதல்:ஏதும் இயலாத நமது செய்கைகளுக்கு பிள்ளைகளைக் குறைகூறுதல்!! “இவன் மட்டும் சரியான நேரத்தில் வந்து இருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்சினை நஷ்டம் ஏற்பட்டு இருக்காது. “

செய்யவேண்டியது:ஆதரவாக பேசுவது! ”அவனுக்கு என் மேல் அன்பு அதிகந்தான். ஏதோ சூழ்நிலை இப்படியாகிவிட்டது!”

9. அடித்தல்: சுய கட்டுப்பாடு,சுயஒழுக்கம் கற்பித்தலே சிறந்தது! அடிப்பது குழந்தைகளிடம் நமக்குள்ள மரியாதை ஆகியவற்றைக் கெடுக்கும்.

விளைவு:எதிரி மனப்பான்மை, பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல்.

செய்யவேண்டியது:தொடர்ந்து குழந்தைகளை அடிப்பவரா நீங்கள்? அதிகம் குழந்தைகளிடம் வயசுக்கு மீறி எதிர்பார்க்காதீர்கள். நிறைய புத்தகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளின் மனநிலையைப்புரிந்து கொள்ளங்கள்!

10.வலுக்கட்டாயப் படுத்துதல்: குழந்தைக்கு டாக்டரிடம் பயம் என்றால் இழுத்துக்கொண்டு உள்ளே சேர்ப்பது தவறு.

விளைவு:குழந்தை அழுது கதறி ஊரைக்கூட்டுவான்.

செய்யவேண்டியது: ”பயப்படாதே! என் கையை பிடித்துக்கொள்! நானும் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். அப்பா கூட இருக்கிறேன்” சரியா போன்ற ஆறுதல்!

சொல்லவேண்டியது இவ்வளவுதான்! நாம்தான் கடைப்பிடிக்கணும்!

இந்த கட்டுரை நல்லா இருந்தால் தமிழிஷிலும், தமிழ் மணத்திலும் ஓட்டுப் போடுங்க! இல்லைன்னா மறுபடி மொக்கைபோடப்போயிடுவேன்!

24 comments:

சி தயாளன் said...

மீ த First

சி தயாளன் said...

அருமையான பதிவு டொக்டர் தேவா...

நம் இயலாமையை நம் பிள்ளைகளிடம் காட்டக்கூடாது...ஆனால் இந்த இயந்திர வாழ்வில் அவரவர் தம் பிரச்சினைகளை இப்படிச் செய்து தானே வடிகால் தேடுகின்றனர்..:-(((

அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...

தேவன் மாயம் said...

அருமையான பதிவு டொக்டர் தேவா...

நம் இயலாமையை நம் பிள்ளைகளிடம் காட்டக்கூடாது...ஆனால் இந்த இயந்திர வாழ்வில் அவரவர் தம் பிரச்சினைகளை இப்படிச் செய்து தானே வடிகால் தேடுகின்றனர்..:-(((

அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.../

லீ தமிலிஷில் ஓட்டு போடுக

வால்பையன் said...

இதைத்தான் டாக்டர்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்.

தேவன் மாயம் said...

இதைத்தான் டாக்டர்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்.//

எல்லாம் குடுப்போம் வால்!

வேத்தியன் said...

அருமை தேவா சாரே...
பயனுள்ள பதிவு...

அப்துல்மாலிக் said...

தேவா சாரே அட்வைஸ் அட்வைஸ்
மருத்துவரென்றாலே அட்வைஸ்தானா வரும்

நல்ல பயனுள்ள பதிவு தல‌

தேவன் மாயம் said...

தேவா சாரே அட்வைஸ் அட்வைஸ்
மருத்துவரென்றாலே அட்வைஸ்தானா வரும்

நல்ல பயனுள்ள பதிவு தல‌///

கொஞ்சநாளா மொக்கையில்ல போட்டோம்.

அப்துல்மாலிக் said...

இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் அப்பா/மகன் உறவு எல்லாவகையிலும் விரிசல்தான்.. அதை திரைப்படத்திலும் அதிகமா காண்பிக்கிறானுங்க, இதுலே அப்பாவை திட்டுவான் மகன் இது ஜோக்காம்......

இந்த சூழ்நிலையில் ஒரு உருப்படியான திரனான பதிவு தேவா, இதை எல்லோரும் பின்பற்றனும்.....(?)

தேவன் மாயம் said...

இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் அப்பா/மகன் உறவு எல்லாவகையிலும் விரிசல்தான்.. அதை திரைப்படத்திலும் அதிகமா காண்பிக்கிறானுங்க, இதுலே அப்பாவை திட்டுவான் மகன் இது ஜோக்காம்......

இந்த சூழ்நிலையில் ஒரு உருப்படியான திரனான பதிவு தேவா, இதை எல்லோரும் பின்பற்றனும்.....(?)///

உண்ர்ந்து பதில் சொல்லியுள்ளீர்கள்!

ஆண்ட்ரு சுபாசு said...

அருமையான பதிவு

ஆண்ட்ரு சுபாசு said...

அருமையான பதிவு

தேவன் மாயம் said...

அருமையான பதிவு//

நன்றி சுபாசு

ஹேமா said...

அருமை.செய்யவேண்டியது-விளைவு என்று புரிய வைத்த விதம் உங்கள் சாமர்த்தியம்.

தேவையான பதிவு.சிடுமுடு அப்பா அம்மாக்களுக்கு...!

மேவி... said...

super padivu ppa....

ஆதவா said...

அருமை சார்....

Arasi Raj said...

வலுக்கட்டாயப் படுத்துதல்: குழந்தைக்கு டாக்டரிடம் பயம் என்றால் இழுத்துக்கொண்டு உள்ளே சேர்ப்பது தவறு.

விளைவு:குழந்தை அழுது கதறி ஊரைக்கூட்டுவான்./********

அதுவும் தேவா டாக்டர்னா சொல்லவே வேண்டாம்....பிள்ளைகளுக்கு பூச்சாண்டி பாக்குற மாதிரி...ஹி ஹி

priyamudanprabu said...

அது என்னாங்க எதுக்கெடுத்தாலும் 10

ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்லாயிருக்கு

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு:)

புருனோ Bruno said...

சூப்பர் சார்

ராஜ நடராஜன் said...

தெரிந்து கொள்ள வேண்டிய செம சைக்காலஜி.

Anonymous said...

டாக்டர் விஜய் கோபப்பட்டு கத்தும்போது....

பட்டாம்பூச்சி said...

அருமையான பதிவு .
எல்லா பெற்றோரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குமரை நிலாவன் said...

நல்ல பதிவு தேவா சார்
பெற்றோர்கள் புரிந்து கொண்டால்
நல்லது

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory