சரக்குன்னா சும்மாவா? மேல் நாட்டில் சகஜமான இது இப்ப நம் நாட்டிலும் சாதாரணமாகிக் கொண்டு உள்ளது!
வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் பாட்டில் கொண்டாந்தியா? என்பதுதான் நம் மக்களில் முதல் கேள்வியாக இருக்கும்! எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க.
அதை வச்சுக்கிட்டு கொஞ்ச நாள் மக்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாது. முழு மப்பும்,விருந்துகளும்! வாழ்க்கையை சந்தோசமா கழிப்பார்கள்!
கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா?
இதில் உலகிலேயே விலையுயர்ந்த அரிதான சோமபானங்கள் இருக்கு! அவை என்ன என்னன்னு ஒரு சின்ன பட்டியல். யாராவது இதை சாப்பிட்டு இருந்தால் சொல்லவும்..
1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்
$38000 ரூபாய்கள்!
ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. போர்கட்டா ஸ்பால,அட்லாண்டிக் சிடிலே கிடைக்குதாம். யாராவது பதிவர் இருந்தா அனுப்பிவிடச் சொல்லுங்க. என்ன படு காஸ்ட்லி!!
எவ்வளவு ஆசையா தூக்கிப் பார்க்கிறார் பாருங்க!
2.ஜானி வாக்கர் 1805!
$20000
ஜானி வாக்கர் தெரியாத மக்கள் உண்டா? மிஞ்சிப்போனா கருப்பு லேபிள் சாப்பிட்டு இருப்போம்!45-70 வருசம் முன்னாடியாம் இது! 200 பாட்டில்தான் மிச்சமாம்.இன்னேரம் முடிந்து இருக்கும்!
3.க்லென்ஃபிட்டிச் அரிய விஸ்கி 1937
$20000
1937ல் தயாரிப்பு! கையால் வடிக்கப்பட்ட ஓல்ட் காஸ்க் வகை! தயாரிக்கப்பட்ட போது 61 புட்டிகள்தான் இருந்ததாம். வால்நட் நிறமுடையதாம், மிக அருமையான சுவை மிகுந்த கலவையாம்! கீழே பாட்டிலைப் பார்க்கவும்! கலரே சூப்பர்!
4.பால்வனிக் காஸ்க் 191
$13000
பார்க் அவென்யூ பிராந்திக்கடையில் நியூயார்க்கில் கிடைக்குதாம் இந்த சோம பானம்! ஸ்காட்லாந்தில் வடித்து முறுகலாக தரம் ஏற்றியது 1950 களில் உருவாக்கப்பட்டது! பாவிப்பசங்க 83 பாட்டில்தான் காச்சினானுங்களாம்! ஒவ்வொரு பாட்டிலுக்கும் நம்பர் போட்டு கையெழுத்து போட்டு அனுப்பினார்களாம்..அனுபவிங்கப்பா!
5.மாகல்லன் ஃபைன்& அரிய வகை 1939 , 40 வயசு
$10125
1926 ஆம் வருடம் உருவானது! 1939ல் புட்டிகளில் அடைக்கப்பட்டது இந்த பூதம்! மறுபடி 2002 பாட்டில் மாத்தி அடைத்து வித்தார்களாம். அருமையான காய்ந்த பழங்களின் வாடையுடன் கூடிய இந்த பழரசம் கிடைக்குமா இப்போது!
6.மாகல்லன் லாலிக்
$10000
இந்த சரக்குக்கு வயசு 50! பாட்டிலின் ஒயிலான தோற்றமே போதையேத்துதே!
கரும்சிகப்பு நிறம் கொண்ட ”சிங்கிள் மால்ட் விஸ்கி”! ன்னு போட்டு இருக்கான்! அப்படின்னா என்ன குடிமக்களே?
ஏலக்காய்,சாக்கலேட் ,பழங்கள் வாடையெல்லாம் இந்த ரசத்தில் இருக்காம். ஒரு லார்ஜ் ஏத்தலாம்! பாக்கெட் கனமா இருக்கணும்!
7.பவ்மோர் 40 வயது
$7000
ஸ்பானிஷ் ஷெர்ரி காடுகளில், ஷெர்ரி மர பேரல்களில் 20 வருடம் கூட்டுப்பருவ வாழ்க்கை! 1975ல் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்கப்பட்டது. அதன் பின் ஷேர்ரி காஸ்குகள் அழிவினால் போர்பார்ன் காஸ்குகளுக்கு மாற்றி வாழ்க்கையைத்தொடர்ந்ததாம் இந்த சரக்கு.
காஸ்க் என்றால் என்ன?
காஸ்க் என்றால் மர பேரல்!
அடுத்த 20 வருசம் முடிந்து 1890 ல் எடுக்கப்பட்டு 10 வருடங்களுக்குமுன் வெளியிடப்பட்டது!! ஹிஸ்ட்ரி பயங்கரமா இருக்கே!.
8.ஜானிவாக்கர் ஊதா லேபிள்! 100 ஆண்டு புட்டி!
$3,500 MSRP
9.க்லென்லிவெட் செல்லார் கலெக்சன் 1964
$2000
என்ன நண்பர்களே!! ஒவ்வொரு பாட்டிலும் எவ்வளவு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு உள்ளது பார்த்தீர்களா?
நமக்கு இதெல்லாம் சரிவராது!
சீ! சீ! இந்த சரக்கெல்லால் புளிக்கும்!!
நமக்கு உகந்தது நாட்டுச்சரக்குதான்! சும்மா ”நச்”ன்னு இருக்கும்!
பி.கு:பொருள் விளக்கம்!
1.ஷெர்ரி காஸ்க்: ஷெர்ரி மர பேரல்கள் கீழே படம்:
2. போர்பான் (Bourbon)
அமெரிக்க விஸ்கி, சோளத்திலிருந்து வடிக்கப்படுவது, 18ம் நூற்றாண்டில் போர்பான் கவுண்டி, கெண்டகியில் தொடங்கப்பட்டது!
3சிங்கிள் மால்ட் விஸ்கி: ஒரே இடத்தில் வடிகலன் பானையில் மால்ட் பார்லியில் மட்டும் உபயோகித்து செய்யப்பட்டது! ஓக் மர பேரல்களில்தான் அடைக்கப்பட்டது!
சில சுட்டிகள்: single malt whisky, pot still,malted barley
59 comments:
நாந்தே மொதோ...
// எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க. //
கரெக்ட்...
எதை மறந்தாலும் இதை கண்டிப்பா மறக்கவே மாட்டாங்கல்ல...
விலையுர்ந்த தேவா!
// கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //
டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே...
:-)
// யாராவது இதை சாப்பிட்டு இருந்தால் சொல்லவும்.. //
யாராவது தண்ணி மாஸ்டர்ஸ் இருந்தா சொல்லுங்கப்பா...
நாந்தே மொதோ///
தூக்கி சாப்பிடுறீங்களே!
/ எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க. //
கரெக்ட்...
எதை மறந்தாலும் இதை கண்டிப்பா மறக்கவே மாட்டாங்கல்ல...//
ஆமாம்.
விலையுர்ந்த தேவா!///
வாங்க ஜமால்
எனக்கு தெரிஞ்சது ஜானி வாக்கர் ஒன்னு தான்...
இன்னொன்றும் தெரியும்..
அதாங்க "நாட்டு சரக்கு"...
/ கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //
டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே..///
அறிவுறை வேண்டுவோர் ஈமெயிலில் கேளுங்கப்பா!
// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்
$38000 ரூபாய்கள்!
ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. //
அப்போ தான் கிக்கு அதிகமா இருக்கும்...
அதுக்கு தான் அவ்ளோ விலை...
எனக்கு தெரிஞ்சது ஜானி வாக்கர் ஒன்னு தான்...
இன்னொன்றும் தெரியும்..
அதாங்க "நாட்டு சரக்கு".///
ரெண்டில டாப் எது வேத்தி?
// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்
$38000 ரூபாய்கள்!
ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. //
அப்போ தான் கிக்கு அதிகமா இருக்கும்...
அதுக்கு தான் அவ்ளோ விலை..///
என்னத்தையோ கொளப்பி காசு பாத்திடரானுங்க.
// thevanmayam கூறியது...
எனக்கு தெரிஞ்சது ஜானி வாக்கர் ஒன்னு தான்...
இன்னொன்றும் தெரியும்..
அதாங்க "நாட்டு சரக்கு".///
ரெண்டில டாப் எது வேத்தி? //
எவ்ளோ தான் விலை கொடுத்து ஜானி வாக்கர் சாப்பிட்டாலும் நம்ம "நாட்டு சரக்கு" சாப்பிட்ற மாதிரி வருமா??
அது ஒரு தனி அனுபவம் சாரே...
:-)
// 8.ஜானிவாக்கர் ஊதா லேபிள்! 100 ஆண்டு புட்டி! //
பாத்திருக்கேன்...
ஒருமுறை வீட்டுக்கு வெளியில இருந்து வந்த ஒருத்தர் கொண்டு வந்திருக்கார்...
/ thevanmayam கூறியது...
எனக்கு தெரிஞ்சது ஜானி வாக்கர் ஒன்னு தான்...
இன்னொன்றும் தெரியும்..
அதாங்க "நாட்டு சரக்கு".///
ரெண்டில டாப் எது வேத்தி? //
எவ்ளோ தான் விலை கொடுத்து ஜானி வாக்கர் சாப்பிட்டாலும் நம்ம "நாட்டு சரக்கு" சாப்பிட்ற மாதிரி வருமா??
அது ஒரு தனி அனுபவம் சாரே...
:-)///
அப்படியா யா யா யா யா!!!!!!!!!!!!!!!!!
// 8.ஜானிவாக்கர் ஊதா லேபிள்! 100 ஆண்டு புட்டி! //
பாத்திருக்கேன்...
ஒருமுறை வீட்டுக்கு வெளியில இருந்து வந்த ஒருத்தர் கொண்டு வந்திருக்கார்...///
நூவு பெத்த பார்ட்டி!!
வந்தாலும் இம்மேட்கர்கள் தெரியாது என்பதால் அமைதியாக ...
பயனுள்ள பதிவு தேவா..
எங்கப்பா நம்ம வாலு ??
நாலும் தெரிஞ்சுக்க நம்ம தேவா வலைப்பதிவுக்க வருக!
// வேத்தியன் கூறியது...
நாந்தே மொதோ...//
வருகையில மட்டும்தானே...?
aiyo naan chinna paiyanppa....
athanal
oru attendance matum than
"present sir"
இதில எதையும் அடிச்சதில்லை. இருந்தாலும் இந்த பதிவை பத்திரமா எடுத்து வைச்சுக்குவோம், ஒரு வேளை வருங்காலத்தில பெரிய கோடீஸ்வரனா ஆகிட்டா வாங்க வசதியா இருக்கும்!
நல்லா புது புது சரக்காதான் அறிமுகப்படுத்திருக்கீங்க
பாத்தாலே ஒரே மப்பாக்கீது, வெலய பாத்தால் எல்லா மப்பும் எறங்கிகீது ஹி ஹி
அவ்வளவு காசுகொடுத்து சாப்பிடும் மக்கா இருக்கதான் செய்து இல்லே... எல்லாம் மப்பு (போதை) என்ற கருமாந்திரம் படுத்தும் பாடு ஹி ஹி ஹி
//Joe கூறியது...
இதில எதையும் அடிச்சதில்லை. இருந்தாலும் இந்த பதிவை பத்திரமா எடுத்து வைச்சுக்குவோம், ஒரு வேளை வருங்காலத்தில பெரிய கோடீஸ்வரனா ஆகிட்டா வாங்க வசதியா இருக்கும்!
//
ஹ் ஹா ஹி ஹி ஹி கேக்க நல்லாதானிக்கீது
//வேத்தியன் கூறியது...
// thevanmayam கூறியது...
எனக்கு தெரிஞ்சது ஜானி வாக்கர் ஒன்னு தான்...
இன்னொன்றும் தெரியும்..
அதாங்க "நாட்டு சரக்கு".///
ரெண்டில டாப் எது வேத்தி? //
எவ்ளோ தான் விலை கொடுத்து ஜானி வாக்கர் சாப்பிட்டாலும் நம்ம "நாட்டு சரக்கு" சாப்பிட்ற மாதிரி வருமா??
அது ஒரு தனி அனுபவம் சாரே...
//
எல்லாம் அனுபவத்துலே வருதுல்லே...
சோமபானோ செம பானமுய்யா
கொடுப்பனை இல்லீங்க.காஞ்ச ஊறு.படங்களைப் பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.
ஐயோ...தலை சுத்துது படம் பார்த்தே !
பாருங்க ,தேவா நல்ல விஷயம் சொல்றார்ன்னு லைன் கட்டி நிக்கிறாங்க.
// ராஜ நடராஜன் கூறியது...
கொடுப்பனை இல்லீங்க.காஞ்ச ஊறு.படங்களைப் பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான்.//
பாருங்க எவ்....ளோ கவலைன்னு.
// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர் $38000 ரூபாய்கள்! //
மருத்துவரே.. பாட்டில பார்த்தவுடனே தலைகால் புரியலயா..
டாலரா... ரூபாயா... கரெக்டா சொல்லுங்க..
\\ வேத்தியன் கூறியது...
// எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க. //
கரெக்ட்...
எதை மறந்தாலும் இதை கண்டிப்பா மறக்கவே மாட்டாங்கல்ல...\\
அப்படியே மறந்துட்டு வந்தாலும், ஜிகிரி தோஸ்த் எல்லாம் நம்மள சும்மா விடமாட்டாங்களே..
// அதை வச்சுக்கிட்டு கொஞ்ச நாள் மக்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாது.//
சாதரணமாவே .. எம்சி, நெப்போலியனை வச்சுகிட்டே நாங்க ஆடுவோம்... வெளி நாட்டு சரக்கு கிடைச்சா சும்மா இருக்க சொல்றீங்களே.. இது நியாயமா.. தர்மமா.. தெய்வத்துக்கே அடுக்குமா..
// 2.ஜானி வாக்கர் 1805! $20000 ஜானி வாக்கர் தெரியாத மக்கள் உண்டா? மிஞ்சிப்போனா கருப்பு லேபிள் சாப்பிட்டு இருப்போம்!45-70 வருசம் முன்னாடியாம் இது! 200 பாட்டில்தான் மிச்சமாம்.இன்னேரம் முடிந்து இருக்கும்!//
கருப்பு லேபிள், தங்க லேபிள், பச்சை லேபிள் எல்லாம் கூட ஜானிவாக்கரில் உண்டுங்க.
// யாராவது பதிவர் இருந்தா அனுப்பிவிடச் சொல்லுங்க. என்ன படு காஸ்ட்லி!!//
வந்திச்சுன்னா நமக்கும் சொல்லிவிடுங்க...
தனியா குடிச்சா வவுத்த வலிக்கும்..
// 1975ல் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்கப்பட்டது. அதன் பின் ஷேர்ரி காஸ்குகள் அழிவினால் போர்பார்ன் காஸ்குகளுக்கு மாற்றி வாழ்க்கையைத்தொடர்ந்ததாம் இந்த சரக்கு. காஸ்க் என்றால் என்ன? காஸ்க் என்றால் மர பேரல்! அடுத்த 20 வருசம் முடிந்து 1890 ல் எடுக்கப்பட்டு 10 வருடங்களுக்குமுன் வெளியிடப்பட்டது!!//
வருஷ கணக்கு எல்லாம் தப்பு தப்பா இருக்க்து மருத்துவரே..
படம் பார்த்ததுக்கே இப்படி ஆயிட்டீங்கன்னா, கொஞ்சம் டேஸ்ட் பண்ணியிருந்தா எப்படி ஆயிருப்பீங்க...
அப்பாடா.. தப்பிச்சேன்...
மருத்துவர் இதை ஒரு தொடர் பதிவாக்காம விட்டாரே..
நான் மட்டுமா, நம்மா சகாக்கள் எல்லோரும்தான்.
(அடுத்த ஒரு மணி நேரத்தில், நண்பர் வேத்தியனின் பதிவில் இதற்கு ஒரு தொடர் பதிவு எதிர் பார்க்கலாம் என்று பட்சி சொல்லுகின்றது)
// வேத்தியன் கூறியது...
// கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //
டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே...
:-) //
இதுவும் நல்ல அறிவுரைத்தான்.. இவ்வளவு உடம்புக்கு கெடுதல்.. அதனால் சரக்கு அடிக்காதீர்கள் என்று சொல்ல வருகின்றார். இதுதான் இதன் உள் அர்த்தம்.
// வேத்தியன் கூறியது...
// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்
$38000 ரூபாய்கள்!
ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. //
அப்போ தான் கிக்கு அதிகமா இருக்கும்...
அதுக்கு தான் அவ்ளோ விலை...//
அது அப்படி இல்லை..
கிக்கு மெதுவாகத்தான் ஏறும், அது போல மெதுவாகத்தான் இறங்கும். மேலும் ஓல்ட் இஸ் கோல்ட் அப்படின்னு சொல்லுவாங்க, அது மாதிரி இதுக்கும் பழசாக பழசாக விலை அதிகம்.
// thevanmayam கூறியது...
/ கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //
டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே..///
அறிவுறை வேண்டுவோர் ஈமெயிலில் கேளுங்கப்பா! //
ஹி... ஹி... கேட்டுட்டாப் போச்சு...
இதெல்லாம் யாருங்க வாங்கி கொடுப்பாங்க.. ப்ரீயா..
// ராஜ நடராஜன் கூறியது...
கொடுப்பனை இல்லீங்க.காஞ்ச ஊறு.படங்களைப் பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான். //
என்னா பண்ணுவது.. விதி வலியது..
//வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் பாட்டில் கொண்டாந்தியா? என்பதுதான் நம் மக்களில் முதல் கேள்வியாக இருக்கும்! //
உள்நாட்டிலிருந்து யார் வந்துதாலும் கூட இதை தான் கேட்போம்.
ஜானி வாக்கர் 15 வருட பழயது சாப்பிட்டுருக்கிறேன்.
கலக்கல் தகவல்கள்
என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் கள்ளு மாதிரி வராது,...:-)
நான் 50 போட்டிடுறன்..:-)
// வேத்தியன் கூறியது...
நாந்தே மொதோ...//
வருகையில மட்டும்தானே...///
veththi is very adwanced
நம்ம கடைபக்கமே யாருமே காணுமே!
இங்கு ஒரு தடவை சென் துறப்பே எனும் பணம்படைத்தோரின் கேளிக்கைக் கடற்கரை நகரில்; றம்போ- சிவஸ்டர் ஸ்ராலன்
Sylvester Stallone தன் நண்பர்களுடன் குடித்த வைனின் விலை 44000 யூரோ ஒரு போத்தல் என
புகழ்பெற்றோருக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டினார்கள்.
இங்கு இன்னுமொரு பிரபலம் "உங்களுக்கு விலை அதிகமான வைன் குடிக்கும் பழக்கமுண்டா எனக் கேட்ட போது..".என்ன? விலை கொடுத்தாலும் அரை மணியில் மூத்திரமாகத் தானே போகுது" என ஒரு போடு போட்டார்.
//குடந்தைஅன்புமணி சொன்னது…
நம்ம கடைபக்கமே யாருமே காணுமே!
March 19, 2009 5:47 AM //
அதானே.. .என்ன ஆச்சு...
இந்த ராகவனுக்கு கூட அறிவில்ல பாருங்க.. ஊர் பாசம் வேண்டாம்.. வெரி வெரி பேட் மேன் ராகவன்
வந்து பின்னூட்டமிட்ட பெரியோர்களுக்கு அன்பு வணக்கம். சாப்பிடக்கூப்பிடுராங்க..
வரவா?
தேவா..
சும்மா போயா ...இந்தளவு துட்டை கொடுத்து நாமெங்க சரக்கு வாங்குறது ...கம்மி துட்டுலை ஜிவெண்டு ஏறுகிற சரக்கு இருந்தா சொல்லு மச்சி......என்ன சரியா
என்ன தேவா சார்
இந்த வாரம் top 10 வாரமா
கலக்குங்க .....கலக்குங்க .....
ஒரு முறை ஜானி வாக்கர் ப்ளாக் லேபிள் அடித்திருக்கிறோம்.
மிக்சிங் ஏதும் இல்லாமல் வெறும் ஐஸ் போட்டு அடிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். :(
எது எப்படியோ, நம்ம ஊர் சரக்குக்கு விட்டு தான் எல்லாம்!
ஒரு குவாட்டர் வோட்கா கிட்டத்தட்ட நூற்று ஐம்பது ரூபா. இதுவே ஜாஸ்தி-ன்னு பீல் பண்ணிட்டு இருக்கும்போது இது வேற...
Post a Comment