Friday, 20 March 2009

மனைவியை மயக்கும் மந்திரங்கள்!

மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!

ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!

இது ஆண்களுக்கு மட்டும்.

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல.

அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!

1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?

2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.

4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் “இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே” அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை”” இப்படிச் சொல்லனும்!

6.ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

7.வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.

8.வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9.அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!

10.ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11.எப்பவுமே  அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12.குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13.வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14.வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16.ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.

17.மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

 

18.மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19.மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20.முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும்.

இப்படி இன்னும் நிறையவுள்ளது..

உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டதில் சொல்லவும்!!

109 comments:

Thamiz Priyan said...

சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு..

வேத்தியன் said...

நாந்தே ரெண்டு...

வேத்தியன் said...

தலைவரே என்னா இது??
திடீர்னு இப்பிடி ஒரு பதிவு???
ஏதாச்சும் நுண்ணரசியல் இருக்கா ???
:-)

வேத்தியன் said...

நல்லா வேளை...
நமக்கு இப்ப தான் 20 ஆவுது...
இன்னும் கண்ணாளம், காட்சி எல்லாம் பாக்க காலம் இருக்கில்ல...

ஆயில்யன் said...

//வேத்தியன் கூறியது...
நல்லா வேளை...
நமக்கு இப்ப தான் 20 ஆவுது...
இன்னும் கண்ணாளம், காட்சி எல்லாம் பாக்க காலம் இருக்கில்ல...
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் :)))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் கூறியது...
சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு..
//

அட!

அண்ணன் அலறுது! அதிருது :)))

தமிழ் அமுதன் said...

யப்பாடி!! நம்மால இம்புட்டு நடிக்க வராது!!

இவ்ளோ பண்ணுறதுக்கு அவங்க டார்ச்சர் பண்றதே தேவலாம்!!!

இந்த பதிவ காட்டி நீங்க உங்க வீட்டுல நல்ல பேர் எடுக்க

நாங்க அவ்ளோ கஷ்டபடனுமா?

;;)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன்

மோனி said...

___//சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு.//___

கூடிட்டோம்ங்க ...

கண்ணதாசன் காரைக்குடியில இருந்து இப்படியுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...

ttpian said...

இதுக்கு பேசாமல் வக்கீலை பார்த்து விடுபடலாம்!

நட்புடன் ஜமால் said...

மயங்குமா! ...

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரே.. என்னாது இது..

அனுபவமா...

இராகவன் நைஜிரியா said...

// மனைவியை மயக்குவது எப்படி //

தப்பு.. மனைவியிடம் மயங்குவது எப்படி என்று இருக்க வேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

// கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.

இராகவன் நைஜிரியா said...

// சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! //

இந்த டகல்பாச்சி, பூச்சி வேலைகள் எல்லாம் இங்க பலிக்காதுப்பு...

அம்மணி ரொம்ப ஸ்டிரிக்டு... ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

// பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!! //

பூதம்... வுட்டுக்கார அம்மாவை பூதம் அப்படின்னு சொல்லிட்டீங்க...

இந்த பதிவை எல்லாம் அவங்க படிப்பாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! //

இங்க நாங்களே.. அனஸ்தீசியா குடுத்த மாதிரி மயங்கி கிடக்கிறோம்.. அப்புறம் எங்க மயக்கத்தில வைக்கிறது..

இராகவன் நைஜிரியா said...

// இது ஆண்களுக்கு மட்டும். //

Adults only - மாதிரிங்களா?

இராகவன் நைஜிரியா said...

// அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்! //

அதாவது என்ன மாதிரி அப்பாவிகளுக்கு மட்டும் என்று சொல்ல வர்றீங்க..

இராகவன் நைஜிரியா said...

// 1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா? //

அதாவது மனைவிக்கு அல்வா வாங்கி வரேன்னு சொல்லி அல்வா கொடுக்கணும் அப்படின்னு சொல்றீங்க.

என்ன மாதிரி வெளி நாட்டுல இருக்குரவங்க என்ன பண்றது டாக்டரே.. இங்கே அல்வாவே யாருக்கும் தெரியாதே?

அத்திரி said...

//SUREஷ் கூறியது...
இந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன்
//

ரிப்பீட்டேய்..............

இராகவன் நைஜிரியா said...

// 2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்! காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க. //

கரெக்டா சொன்னீங்க..

பில்டர் காபி.. இன்ஸ்டெண்ட் காப்பியான்னு சொல்லவில்லையே..

இராகவன் நைஜிரியா said...

// 3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக. //

அயர்ன் பண்ணி அடுக்கி வைக்கணும். இல்லாட்டி அதுக்கு வேற திட்டு வாங்கணும்..

குடந்தை அன்புமணி said...

இதோ வந்துட்டேன். படிச்சிட்டு வர்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// 4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள். //

டபுள் டூட்டி..

ஆபிசில் ஆணி புடுங்க வேண்டும். இங்கும் ஆணி புடுங்க வேண்டும்.

கல்யாணம் பண்ணியதற்கு, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

குடந்தை அன்புமணி said...

25

இராகவன் நைஜிரியா said...

ஹையா.. மீ த 25...

குடந்தை அன்புமணி said...

25க்கு வாழ்த்துகள் ராகவன் அண்ணே!

இராகவன் நைஜிரியா said...

// 5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! //

குண்டுன்னா சாதாரண குண்டு இல்ல... அணுகுண்டு...

வெடிக்காமலேயே ரேடியேஷன் ஜாஸ்தி உண்டுங்க..

குடந்தை அன்புமணி said...

அப்புறமா நம்ம கடைக்கு வாங்க... கஜல் கவிதை போட்டிருக்கேன்.
(என்னதில்லை)

இராகவன் நைஜிரியா said...

// குடந்தைஅன்புமணி கூறியது...

25க்கு வாழ்த்துகள் ராகவன் அண்ணே! //

நன்றி அன்புமிக்க தம்பி குடந்தை அன்புமணி...

(சரி உங்க பேரை படிக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. குடந்தை என்பதாலா?)

இராகவன் நைஜிரியா said...

// குடந்தைஅன்புமணி கூறியது...

அப்புறமா நம்ம கடைக்கு வாங்க... கஜல் கவிதை போட்டிருக்கேன்.
(என்னதில்லை) //

வரேன்... விரைவில்

இராகவன் நைஜிரியா said...

// அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! //

don't trouble the trouble...

இது உங்களுக்கு தெரியாதா.. வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்க முடியுமா?

மௌனம் கலக நாஸ்தி என்று சொல்லுவார்கள்.. அது மாதிரி இருக்கணும்

இராகவன் நைஜிரியா said...

// 6.ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்.. //

ரொம்பவும் கடிக்காதீங்க.. அப்புறம் பல் எல்லாம் உடைஞ்சு போயிடும்..

இராகவன் நைஜிரியா said...

// வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க. //

நாய் அப்படின்னு அம்மணியை சொல்லலேன்னு நினைக்கின்றேன்..

வீட்ல இருப்பது ஒரு வண்டிதாங்க. அதுவும் அம்மணிக்குத்தாங்க.. நாம எல்லாம் ஓட்டுனர், அதனால் வண்டிய ஒழுங்கா தொடைச்சு வச்சுக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

// 8.வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க. //

ஆபிசில் ஆணி புடுங்கணும், வீட்ல ஆணி அடிக்கணும்.

வீட்ல ஆணி புடுங்கினா, தங்ஸ் ஆணி அடிச்சுருவாங்க..

குடந்தை அன்புமணி said...

(சரி உங்க பேரை படிக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. குடந்தை என்பதாலா?)

என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா... (நம்ம ஊர் மக்கள் யாரும் இருந்தா கண்டுபிடிக்கத்தான் ஊர் பெயரையும் சேர்த்துக்கிட்டேன்.)

இராகவன் நைஜிரியா said...

// 9.அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!//

சாமான் தீர்ந்து போச்சான்னு மட்டும் பார்க்கணும்.. ஆபிஸ் நினைப்புல போன மாசம் இவ்வள்வு வாங்கினீயே எல்லாம் அதுக்குள்ள தீர்ந்து போச்சான்னு எல்லாம் கேள்விக் கேட்கக் கூடாது.. அப்புறம் கதை கந்தர்வ கோளமாகி விடும்.

இராகவன் நைஜிரியா said...

// 10.ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்! //

நோ சமையல்... அப்பாட இன்னிக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்ற ஜாலிதான் வேற ஒன்னுமில்ல

இராகவன் நைஜிரியா said...

// 11.எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க. //

எப்பொதும் அம்மா மட்டும்தான் உங்களை டிரில் வாங்கணுமா, உங்க பசங்களும் உங்களை ஒரு இரண்டு மணி நேரம் டிரில் வாங்க விடுங்க..

குடந்தை அன்புமணி said...

தேவா சார் குடுத்த டிப்ஸ் எல்லாமே நல்லா இருக்கு. (அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கத்தான் வேணும்)

இராகவன் நைஜிரியா said...

// 12.குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்! //

நடக்க கூடிய காரியமா... ஆத்து மணலைக் கூட கயிறா திரிச்சுடலாம்.. நம்ம குறைகளை எண்ணிப் பார்ப்பதா..

மருத்துவரே.. இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி..

இராகவன் நைஜிரியா said...

// 13.வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க. //

ரொம்ப ப்ளேபாக் பண்ணாதீங்க.. அப்புறம் ஏண்டா அன்னிக்கு அப்படி பேசினேன் என்று மனசு உடைஞ்சு அப்புறம் டாஸ்மாக் தேட ஆரம்புச்சுடுவீங்க..

இராகவன் நைஜிரியா said...

// 14.வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும். //

வீட்டிலேயே அப்படித்தான்.. வெளியில் போனா என்ன வாழுது.. எல்லாத்தையும் செய்ங்க அப்பு

இராகவன் நைஜிரியா said...

// 15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும். //

இதையும் அவங்க சொன்னாத்தான் செய்யணும்.. இல்லை என்றால் அதற்கு சந்தேகப் படுவார்கள்..

Be careful on this?

ஒரு சந்தேகம்.. மீசை இல்லாதவர்கள் எப்படி டிரிம் பண்ண முடியும்..

இராகவன் நைஜிரியா said...

// 16.ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.//

சம்மந்தா சம்மந்த இல்லாம எதோ சொல்லியிருக்கீங்க... புரியலயே...

இராகவன் நைஜிரியா said...

// 17.மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது.. //

அதாவது மனைவியின் நண்பிகளை என்று சொல்ல வராரு..

இராகவன் நைஜிரியா said...

// 18.மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள். //

ஆமாம் அப்புறம் உங்களை வச்சு கிழி கிழின்னு கிழிச்சுடுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

// 19.மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது. //

மனைவி பேச நேரம் ஒதுக்குங்க..

“ம்”, “சரி”, “ஓகே”.. இதெல்லாம் அடிக்கடி சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

50

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா மீ த 50

இராகவன் நைஜிரியா said...

// 20.முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும். //

நீங்களா கேட்கவில்லை என்றால் அவங்களா சொல்லுவாங்க.. அப்ப அதை அப்படியே பாலோ பண்ணனும்.

இராகவன் நைஜிரியா said...

// இப்படி இன்னும் நிறையவுள்ளது.. உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டதில் சொல்லவும்!! //

சொல்லிட்டோமில்ல..

யாருப்பா அங்க.. ஒரு சிங்கிள் டீ கொண்டுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

இப்படி தனியா டீ ஆத்துவது இருக்கே..

கஷ்டம்தான்.. ஒரு சுகம் போட்டி இல்லாம 25, 50 அப்படின்னு நாமளே அடிச்சுகிட்டு இருக்கலாம்.

போட்டி இல்லாத போது அது அவ்வளவு சுகமாவும் இல்லத்தான்.

ரொம்ப குழப்பமாயிடுச்சா..

என்ன பண்றது இந்த பதிவை படிச்சப்புறம் இப்படி ஆயிட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

மீ த 55..

அவ்வளவுதாங்க.. இனிமே யாரவது வந்து கும்மி அடிங்க..

நான் ஜூட்..

தேவன் மாயம் said...

சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு.///

ஆஹா... மாட்டிக்கிடேனா..

தேவன் மாயம் said...

தலைவரே என்னா இது??
திடீர்னு இப்பிடி ஒரு பதிவு???
ஏதாச்சும் நுண்ணரசியல் இருக்கா ???
:-)///

இதுவே ரொம்ப நுண்ணியமேட்டர்தானே

தேவன் மாயம் said...

நல்லா வேளை...
நமக்கு இப்ப தான் 20 ஆவுது...
இன்னும் கண்ணாளம், காட்சி எல்லாம் பாக்க காலம் இருக்கில்ல..///
அதெல்லாம் வேணாம் ஒரு காவி வேட்டி வாங்குப்பா உட்னே

தேவன் மாயம் said...

தமிழ் பிரியன் கூறியது...
சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு..
//

அட!

அண்ணன் அலறுது! அதிருது :)))///

மக்கள் அலறுதே!

தேவன் மாயம் said...

யப்பாடி!! நம்மால இம்புட்டு நடிக்க வராது!!

இவ்ளோ பண்ணுறதுக்கு அவங்க டார்ச்சர் பண்றதே தேவலாம்!!!

இந்த பதிவ காட்டி நீங்க உங்க வீட்டுல நல்ல பேர் எடுக்க

நாங்க அவ்ளோ கஷ்டபடனுமா?

;;)))///

பதிவு இன்னும் பார்க்கலே. பார்த்தா நானே அவ்வளவும் செய்யனும்!!

தேவன் மாயம் said...

இந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன்///

என்னா சுரேசு இதுக்குப்போய்...

தேவன் மாயம் said...

__//சங்கத்தைக் கூட்டுங்கப்பா... இந்த டாக்டர் நமக்கு எதிரா பதிவு போட்டு இருக்காரு.//___

கூடிட்டோம்ங்க ...

கண்ணதாசன் காரைக்குடியில இருந்து இப்படியுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

கண்ணதாசன் 2,3ல்ல!

தேவன் மாயம் said...

இதுக்கு பேசாமல் வக்கீலை பார்த்து விடுபடலாம்!///

பெஸ்ட்...

தேவன் மாயம் said...

மருத்துவரே.. என்னாது இது..

அனுபவமா...//

ட்ரையலில் இருக்கு.

தேவன் மாயம் said...

// மனைவியை மயக்குவது எப்படி //

தப்பு.. மனைவியிடம் மயங்குவது எப்படி என்று இருக்க வேண்டும்///

அதான் பாத்த்வுடனே தரையிலதானே..

தேவன் மாயம் said...

// கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.///

ஒரு வண்டிதானே!

தேவன் மாயம் said...

// சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! //

இந்த டகல்பாச்சி, பூச்சி வேலைகள் எல்லாம் இங்க பலிக்காதுப்பு...

அம்மணி ரொம்ப ஸ்டிரிக்டு... ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க..///

அப்பாவி+சின்ஸியர் முகம்!!

தேவன் மாயம் said...

/ பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!! //

பூதம்... வுட்டுக்கார அம்மாவை பூதம் அப்படின்னு சொல்லிட்டீங்க...

இந்த பதிவை எல்லாம் அவங்க படிப்பாங்களா?///

ஒரு பேச்சுக்கு....

எடுத்துகுடுக்கிறீயளே!

சி தயாளன் said...

இது ஒரு 10 வருடத்துக்கு பின்பும் பொருந்துமா...?

இல்லை அப்ப நான் உங்களுக்கு போன் பண்ணி ஐடியா கேட்கவா...?

தேவன் மாயம் said...

/ ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! //

இங்க நாங்களே.. அனஸ்தீசியா குடுத்த மாதிரி மயங்கி கிடக்கிறோம்.. அப்புறம் எங்க மயக்கத்தில வைக்கிறது..///

மயக்கம் கொஞ்சம் தெளிந்து வருக..

தேவன் மாயம் said...

/ அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்! //

அதாவது என்ன மாதிரி அப்பாவிகளுக்கு மட்டும் என்று சொல்ல வர்றீங்க..///

அப்பா WE அப்பா

தேவன் மாயம் said...

// 1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா? //

அதாவது மனைவிக்கு அல்வா வாங்கி வரேன்னு சொல்லி அல்வா கொடுக்கணும் அப்படின்னு சொல்றீங்க.

என்ன மாதிரி வெளி நாட்டுல இருக்குரவங்க என்ன பண்றது டாக்டரே.. இங்கே அல்வாவே யாருக்கும் தெரியாதே?///

யோசிங்க. ஏதாவது வழி இருக்கும்..

தேவன் மாயம் said...

/SUREஷ் கூறியது...
இந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன்
//

ரிப்பீட்டேய்..///

அத்திரி வருக..

தேவன் மாயம் said...

/ 2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்! காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க. //

கரெக்டா சொன்னீங்க..

பில்டர் காபி.. இன்ஸ்டெண்ட் காப்பியான்னு சொல்லவில்லையே///

ரசிகரே.. அவங்க விருப்பம்.

தேவன் மாயம் said...

/ 3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக. //

அயர்ன் பண்ணி அடுக்கி வைக்கணும். இல்லாட்டி அதுக்கு வேற திட்டு வாங்கணும்..///

ஆமா.. ஆமா.. மறந்துவிட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.

தேவன் மாயம் said...

// 4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள். //

டபுள் டூட்டி..

ஆபிசில் ஆணி புடுங்க வேண்டும். இங்கும் ஆணி புடுங்க வேண்டும்.

கல்யாணம் பண்ணியதற்கு, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.///

சத்தம் போடாதீங்க.ஏடாகூடமாயிடும்..

தேவன் மாயம் said...

// 5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! //

குண்டுன்னா சாதாரண குண்டு இல்ல... அணுகுண்டு...

வெடிக்காமலேயே ரேடியேஷன் ஜாஸ்தி உண்டுங்க..//

வெடிச்சா?

Arasi Raj said...

This blog information hasbeen successfully forwarded to Rangamani.......A preliminary evaluation will be done and the reports will be published....

he he

Arasi Raj said...

தேவா, நிறைய பேருக்கு நல்லது செஞ்ச புண்ணியம் கிடச்சுருக்கு போல இருக்கே......

Arasi Raj said...

அந்த பக்கம் வந்து நிலாவின் ஓவியத்துக்கு கருத்து சொல்லுவீங்கன்னு நினச்சேன்...வரலியேப்பா [ சிவாஜி மாதிரி ]

தேவன் மாயம் said...

தேவா, நிறைய பேருக்கு நல்லது செஞ்ச புண்ணியம் கிடச்சுருக்கு போல இருக்கே...///

உங்களுக்கு உதவியா இருந்தா சரிதான்>

தேவன் மாயம் said...

அந்த பக்கம் வந்து நிலாவின் ஓவியத்துக்கு கருத்து சொல்லுவீங்கன்னு நினச்சேன்...வரலியேப்பா [ சிவாஜி மாதிரி ]///

இதோ வருகிறேன்.

சின்னப் பையன் said...

:-))))))))))

super

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam சொன்னது…

// கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.///

ஒரு வண்டிதானே!//

கூறை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், மானம் ஏறி எதோ பிடிக்க போன்னான்ற கதையா இல்ல இருக்கு நீங்க சொல்வது.

ஒன்ன கட்டிகிட்டே மாரடிக்க முடியல.. இதுல ஸ்டெப்னி வேறயா?

ஆள வுடுங்க சாமி..

தேவன் மாயம் said...

/ கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.///

ஒரு வண்டிதானே!//

கூறை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், மானம் ஏறி எதோ பிடிக்க போன்னான்ற கதையா இல்ல இருக்கு நீங்க சொல்வது.

ஒன்ன கட்டிகிட்டே மாரடிக்க முடியல.. இதுல ஸ்டெப்னி வேறயா?

ஆள வுடுங்க சாமி..///

இப்படி ஓடினா எப்படி? வாங்க வெவரமா சொல்றேன்..

தேவன் மாயம் said...

:-))))))))))///

நன்றி சின்னப்பையன்!!!

ஒரு காசு said...

* நீங்க பொம்பளையா இருக்கணும், அல்லது

* உங்க வீட்டுக்காரம்மா உங்க பேர்லே டைப் பண்ணதா இருக்கணும், அல்லது

* ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு வாங்கி கட்டிக்கிட்ட பின்னாலே, இந்த பதிவ எழுதி இருக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

thevanmayam கூறியது...

/ கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.///

ஒரு வண்டிதானே!//

கூறை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், மானம் ஏறி எதோ பிடிக்க போன்னான்ற கதையா இல்ல இருக்கு நீங்க சொல்வது.

ஒன்ன கட்டிகிட்டே மாரடிக்க முடியல.. இதுல ஸ்டெப்னி வேறயா?

ஆள வுடுங்க சாமி..///

இப்படி ஓடினா எப்படி? வாங்க வெவரமா சொல்றேன்..//

வரேன்.. நேரில... அப்ப சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

\\வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?\\

பெரும் அல்வாவா இருக்கே!

தேவன் மாயம் said...

* நீங்க பொம்பளையா இருக்கணும், அல்லது

* உங்க வீட்டுக்காரம்மா உங்க பேர்லே டைப் பண்ணதா இருக்கணும், அல்லது

* ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு வாங்கி கட்டிக்கிட்ட பின்னாலே, இந்த பதிவ எழுதி இருக்கணும்.///

இதில் ஏதோ ஒன்னு உண்மைதான்..

தேவன் மாயம் said...

இது ஒரு 10 வருடத்துக்கு பின்பும் பொருந்துமா...?

இல்லை அப்ப நான் உங்களுக்கு போன் பண்ணி ஐடியா கேட்கவா...?///
இது ஃபாரெவர்..

தேவன் மாயம் said...

ஒன்ன கட்டிகிட்டே மாரடிக்க முடியல.. இதுல ஸ்டெப்னி வேறயா?

ஆள வுடுங்க சாமி..///

இப்படி ஓடினா எப்படி? வாங்க வெவரமா சொல்றேன்..//

வரேன்.. நேரில... அப்ப சொல்லுங்க///

அன்பின் நண்பரே வருக..

தேவன் மாயம் said...

வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?\\

பெரும் அல்வாவா இருக்கே!///

ஆமா அன்பரே!

தேவன் மாயம் said...

தொடர்ந்து நான் இல்லாத நேரத்திலும் பின்னூட்டம் பிளந்து கட்டிய ”இரா.நைஜீ “ ””பின்னூட்ட மகாகுரு ”””
பட்டம் வழங்கப்படுகிறது..

மேவி... said...

"இராகவன் நைஜிரியா கூறியது...
// 15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும். //

இதையும் அவங்க சொன்னாத்தான் செய்யணும்.. இல்லை என்றால் அதற்கு சந்தேகப் படுவார்கள்..

Be careful on this?

ஒரு சந்தேகம்.. மீசை இல்லாதவர்கள் எப்படி டிரிம் பண்ண முடியும்.."

repeat........

மேவி... said...

asin ithai ellam ethirparkka mattanga

Rajeswari said...

இதெல்லாம் படிசிடாவது திருந்துராங்கலானு பார்ப்போம்.

Rajeswari said...

//ஜீவன் கூறியது...
யப்பாடி!! நம்மால இம்புட்டு நடிக்க வராது!!

இவ்ளோ பண்ணுறதுக்கு அவங்க டார்ச்சர் பண்றதே தேவலாம்!!!

இந்த பதிவ காட்டி நீங்க உங்க வீட்டுல நல்ல பேர் எடுக்க

நாங்க அவ்ளோ கஷ்டபடனுமா?//

அண்ணன் ரொம்ப பீல் பண்ணுற மாதிரி இருக்கே. வீட்டுல சொல்லிரட்டா

Rajeswari said...

இராகவன் நைஜிரியா கூறியது...
// கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! //

பல வருஷம் ஆனாலும் சில வருஷம் ஆனாலும், மக்கர் மக்கர்தான்.//

அட இங்கையும் பீலிங்க்ஸ் தானா..பாவம்

அப்துல்மாலிக் said...

தேவா சாரே இப்படிதான் உங்க வாழ்க்கை ஓடுதோ

அப்துல்மாலிக் said...

நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாத்தையும் செய்தோம்னா அப்புறம் நம்ம வேளையை அவுக பாப்பாகளா

அப்துல்மாலிக் said...

1. கால‌ கய அமுக்கு விடுறது
2. சோறு ஊட்டிவிடுவது
3. துணிமனை துவைத்துப்பொடுவது
4. குளிக்கவைப்பது(இதுக்கு எல்லோரும் ரெடியா இருப்பாங்க ஹி ஹி)
5. முக்கியமா வாரம் ஒரு முறையாவது புடவை, நகை கடைக்கு கூட்டிட்டுப்போவது
6. வேலைக்கு போகும்போது அவங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணாமல் போவது
7.
8.
9.
10.

இப்படியே செய்துகிட்டு இருந்தால் ரொம்ப நல்லாவே ?????? இருக்கும் ஹி ஹி

எப்படி நம்ம டிப்ஸ்

cheena (சீனா) said...

நல்லாவே இருக்கு - தேவா - இப்படி எல்லாம் பண்ணியும் பூதத்தே அடைக்க முடிலேன்னா என்னா பண்றது ......

வால்பையன் said...

மொத்தத்துல ஆண்கள் அடிமையா இருக்கனும்னு சொல்றிங்க சரியா!

shabi said...

கணவனின் அம்மாவ பத்தி மனைவியிடம் குறைகூற வேண்டும்.மனைவியின் சொந்தங்களை பற்றி பெருமயாக பேச வேண்டும்.சொந்த அனுபவம்.

Kiruthigan said...

கல்யாணத்துக்கப்புறம் பாத்துக்கலாம் சார்...
http://www.tamilpp.blogspot.com/

vaarththai said...

முதல்ல இத எல்லாம் முழுசா படிக்கவே முடியாது, இதுல இதையெல்லாம் செய்யணுமா?
வெளங்கீரும்
:)

hosuronline.com said...

இப்படி மெனக்கட்டு விளக்கம் கொடுத்ததுக்கு பதிலா. ஒரே வெரியில.. கொத்தடிமையா மாறிடுங்க ஆண் வர்க்கமேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்ல

AYFA said...

அய்யா இனி செய்யறதுக்கு வேற என்ன வேலை இருக்கு. அதான் எல்லா வேலையையும் எழுதிட்டீங்களே. மிகசிறந்த வழி அம்மா வீட்டுக்கு அம்மணியை அடிக்கடி கொண்டு போய் விட்டு வந்தால் அவங்களும் மகிழ்சியாய் இருப்பார்கள். ஆண் வா்கமும் இத்தனை வேலை செய்யாமலே மிகமகிழ்சியாய் இருப்பார்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory