ஆறுமாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?
- போடுவதில்லை.குழந்தைகளை நோய் தாக்காமல் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். கர்ப்பிணித் தாய்க்கு அளிக்கப்படும் தடுப்பூசியே பிறக்கும் குழந்தைக்குப் போதும்.
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்ட தாய் பாலூட்டலாமா?
- பாலூட்டலாம். தாய்க்குப் போடும் தடுப்பூசி அவருக்கு வரும் நோயிலிருந்து காப்பதுடன் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கும் தடுப்பாற்றல் கிடைக்கிறது.
தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் பாலூட்டலாமா?
- தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் தாயின் உடலில் அதற்கான எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கும். தாய்ப்பாலில் அந்த ஆன்டிபாடிகள் மட்டுமே இருக்கும். நோய்க்கிருமி வைரஸ் இருக்காது. ஆகையினால் தாய் நோயுற்றிருந்தாலும் பாலை சுத்தமான முறையில் சேகரித்து பாட்டிலின் மூலம் கொடுக்கலாம்.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து சாப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?
- தாய் நோயால் பாதிக்கப்பட்டால் குழந்தையை அவர் இருமுதல்,தும்முதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலம் நோய் பரவலாம். ஆகையினால் தாயின் பாலை சேகரித்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
- குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். எந்த நிலையிலும் தாய்ப்பாலைப்போலச் சிறந்த உணவு குழந்தைக்கு வேறெதுவும் இல்லை!.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பன்றிக்காய்ச்சல் சாதாரண சளி வித்தியாசங்கள்!
அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------============================================================ பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம். மேலும் படிக்க!
------------------------------------------------------------------------------------------------------------------------
14 comments:
பகிரவேண்டிய அவசிய பகிர்வு .
பகிர்வுக்கு நன்றீங்க டாக்டர் .
நண்டு! காலை வணககம்!
நன்றி டாக்டர்.
useful topic. thanks sir !
Good samaritan.
ரொம்ப அவசியமான விடயத்தை சொல்லியிருக்கீங்க தேவ்ஸ்
மிக முக்கியமான நேரத்தில் அவசியமான பதிவு டாக்டர் சார்.
ரொம்ப அவசியமான பகிர்வு.
Saiva kothu purotta thank you1
THE PEDIATRICIAN said...
useful topic. thanks sir !//
thanks my friend!
devan,
i heard h1n1 vaccination causes side effect of guillian barre syndrome at chennai city.
around 15 people affected after taking this vaccination.
kindly inform about gbs,and side effects.
ganesh
useful information
mrknaughty
அவசியமான பகிர்வு நன்றி டாக்டர்
அவசியமான பகிர்வு நன்றி டாக்டர்
Post a Comment