தட்டம்மையும் வைரஸ் கிருமியால் வரும் தொற்று நோய்தான்.
தொற்றுவழிகள்:
- தும்முதல்,இருமுதலால் எச்சில் தெரிக்கப்படுவதால்.
- ஒரே வீட்டில் வசிப்போருக்கு
- நேரடித் தொடர்பின் மூலம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளோருக்கு மிக எளிதில் பரவுகிறது.
நோய்காப்புக்காலம்:(INCUBATION PERIOD):
- 6-19 நாட்கள்
நோய்க்குறிகள்:
- நான்கு நாள் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல்,
- கண் சிவத்தல், கண் கூசுதல்,
- கொப்ளிக் புள்ளிகள்- வாயின் உட்புறம் சிறு புள்ளிகள்.
- கொப்ளிக் புள்ளிகளை வைத்து நாம் தட்டம்மை நோயை அறியலாம்.
- அதன் பின் சிவந்த தடிப்புகள் ( RASHES ) முதலில் காதின் பின்புறமும் நெற்றியிலும் தோன்றும்.
- அதன் பின் உடல் முழுவதிலும் புள்ளிகள் பரவும்.
- இததடிப்புகள் மறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சல் குறைந்துவிடும்.
நோயின் பின் விளைவுகள் என்ன?
- வயிற்றுப்போக்கு
- நிமோனியாக் காய்ச்சல் (நுரையீரல் அழற்சி)
- மூளைக் காய்ச்சல் (ENCEPHALITIS)
- கண் கருவிழி பாதிப்பு (CORNEAL ULCER)
பொதுவாக பின் விளைவுகள் வயது வந்தோருக்கு இந்நோய் தாக்கும்போது அதிகம் காணப்படுகிறது.
தடுப்பூசி
- MMR (MUMPS, MEASLES, RUBELLA) என்ற முத்தடுப்பூசியாக இது போடப்படுகிறது.
- ஒன்றரை வயதில் முதல் முத்தடுப்பூசி போடப்படுகிறது.
- இரண்டாவது ஊசி நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்காக நான்கிலிருந்து ஐந்து வயதுக்குள் போடப்படுகிறது.
இது மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆயினும் 1000 ல் 1 அல்லது 2 பேர் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
20 comments:
உபயோகமான தகவல்..நன்றி
தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .
தொடருங்கள் டாக்டர் .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .
தகவல்களுக்கு நன்றி மருத்துவரே.
அந்த வாய்ப்புண் போட்டோ எங்க கிடைச்சிச்சி தேவா!
நல்ல தகவல்கள் நன்றி.
thxs for sharing...
உபயோகமான தகவல்..நன்றி
நன்றி காயத்ரி!
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .
தொடருங்கள் டாக்டர் .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .//
மிக்க நன்றி நண்பரே!
நன்றி! சைவக்கொத்து புரோட்டா!
வாய்ப்புண் போட்டோ விக்கியில் இருக்கு ஜமால்!
நன்றி மேனகா!
நன்றி பிரபு!
அன்பின் தேவா
பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார்!
பயனுள்ள தகவல்கள். நன்றி.
தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .
பகிர்வுக்கும் தவல்களுக்கும் நன்றிண்ணா.
மருத்துவத்தகவல்கள் பயனுள்ளவைகளாக உள்ளன. வாழ்த்துக்கள்.
zolpidem online ambien side effects sweating - where to buy ambien cheap
Ennaku 20 days aa iruku vittu vittu thatti vadiva red collar la varuthu, any person help
Post a Comment