சூரஜ் ரந்தீவ் என்ற சுழல் பந்து வீச்சாளர் நேற்று செய்த அசிங்கம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு அசிங்கமாக அமைந்தது. ஆம் அதிரடி மன்னன் சேவாக் 99 ல் இருக்கும் போது 1 ரன் எடுத்தால் சேவாக் 100 அடிக்கும் நிலை. இந்தியாவும் வெற்றிபெறும்.
பந்தைப் போட வந்த ரந்தீவ் ஒரு இன்ச் கோட்டுக்கு வெளியில் கால் வைத்தால் பரவாயில்லை. ஒரு அடியா காலை கிரீஸை விட்டு வெளியில் வைப்பது?
விளையாட்டில் வெற்றி தோல்வி இயற்கை. எத்தனையோ மாட்ச்சுகளில் இந்தியரின் பெருந்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேற்று ரந்தீவ் செய்தது கிரிக்கெட் உலகுக்கே அசிங்கம்! அவர் கோட்டுக்கு வெளியே கால் வைத்துப் பந்து வீசியதால் நோபால் கொடுக்கப்பட்டது. ஆனால்
சேவாக் ரந்தீவ் முகத்தில் அறைந்தாற்போல் அந்தப் பந்தையும் சிக்ஸர் அடித்தார்.
நான் அம்பயராக நின்றிருந்தால் நோபாலைக் காணாததுபோல் விட்டிருப்பேன்!
ஜென்டில்மேன் விளையாட்டில் ஒரு ஷேம் ரந்தீவ்!