பிரேதப் பரிசோதனை எனப்படும் போஸ்ட் மார்ட்டத்தில் முதலில் பார்ப்பது ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS தான். ரைகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.
1.இறந்தவுடன் உடலில் ஏற்படும் விறைப்புத் தன்மைதான் ரைகர் மார்ட்டிஸ்! இறந்த உடலின் கைகள் கால்களை, முழு உடலையும்கூட மடக்கினால் மடக்க வராது.
2.உடல் தசைகள் இறந்தவுடன் சுருங்கி விறைப்பதனால் இறந்த உடல் விறைக்கும். இதுவே ரைகர் மார்ட்டிசின் காரணம்.
3.ரைகர் மார்ட்டிஸ் உடலில் இருந்தால் குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார் என்று உறுதியாக நாம் நம்பலாம்.
4.ரைகர் மார்ட்டிசை வைத்துப் பொதுவாக இறந்த நேரத்தைக் கணக்கிடலாம். (துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றாலும் பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் முதலில் எழுதப்படுவது இதுதான்).
5.ரைகர் மர்ட்டிஸ் இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்.
6.இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் ரைகர் மார்ட்டிஸ் வெயில் காலத்தில் 18- 36 மணிவரை இறந்த உடலில் இருக்கும்.
7.மழைக்காலத்தில் இறந்த ஒன்று அல்லது இரண்டுமணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் ரைகர்மார்ட்டிஸ் 24-48 மணிநேரம் வரை இறந்த உடலில் இருக்கும்.
8.மேல் சொன்னவை பொதுவானவையே. வயது, இறப்பின் தன்மை, மேல்சொன்னதுபோல் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து ரைகர் மார்ட்டிசின் நேரங்கள் கொஞ்சம் கூடக் குறைய மாறலாம்.
9.ரைகர் மார்ட்டிஸை வைத்து இறந்தபோது உடல் எந்த நிலையிலிருந்தது என்று அறியலாம். ஏனெனில் ஒருவர் இறக்கும்போது கால்களை மடக்கி வைத்திருந்தால் அப்படியே கால்கள் மடங்கிய நிலையிலேயே விறைப்பாக இருக்கும்!
எளிமையாக பிணவிறைப்பு அல்லது மரண விறைப்பு என்று சொல்லப்படும் ரைகர் மார்ட்டிஸ் பற்றிச் சொல்லியிருக்கிறேன். கேள்விகளைக் கேளுங்கள்!!
தமிழ்த்துளி தேவா!