Tuesday, 20 October 2009

காதலைத்தூண்டும் உணவுகள்-10!( சின்னப் பசங்க எல்லாம் கில்லி வெளையாடப் போங்கப்பா!!)

 

1.செலரி- செலரி இலையை வெட்டித் துண்டு துண்டாக்கி மென்று தின்னவேண்டியதுதான்!!  எப்படி இது தூண்டுது? ஆண்ட்ரோஸ்டிரோன் என்ற மந்திரப் பொருள் அதில் இருக்குங்க!!

2.சிப்பி,(Oysters)- கிராமத்தில் ஒரு காலத்தில் நத்தை, ஊமச்சி என்று மக்கள் அவித்துச் சாப்பிடுவார்கள். மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததோ இல்லையோ நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும்  வஸ்துகள் இருக்குங்க!! ( பழைய காலத்து மக்கள் வெவரந்தான்!!!)

3.வாழைப்பழம்- இரவு சாப்பிட்டு சில ஆசாமிகள் நாட்டு வாழைப்பழம் இரண்டு சாப்பிடுவார்கள்.. பி விட்டமின், பொட்டாசியத்தோடு நமக்குத்தெரியாத வகையில் வாழைப்பழம் மேட்டரைத் தூண்டுதுங்கோ!!

4.பாதாம் போன்ற பருப்பு வகைகள்- பொதுவா அரபு நாட்டு சேக்குகள் விரும்பி சாப்பிடும் பொருள். உள்ளூர் சேக்குகள் அரேபியாவிலிருந்து வரும்போது விரும்பிக் கொண்டுவரும் பொருட்களில் சரக்குக்கு அடுத்து பாதாம், பிஸ்தாதான். காரணம்?...  எல்லாம் வெவரமாத்தான் !

5.முட்டை- படிப்பில் முட்டை வாங்கினாலும் இந்த விசயத்தில் முட்டை வாங்கக்கூடாதில்ல!! இதுவும் மேற்படி மேட்டருக்கு ரொம்ப உதவி செய்யும். மேலும் பி விட்டமின் வேற இருக்குங்க!

6.ஈரல்- கறிக்கடையில் பாருங்க. சிலர் ஈரல் மட்டும்  நூறு கிராம், இருநூறு கிராம் வாங்குவாங்க. நம்ம தனிக் கறியாக் குடுப்பான்னு வாங்கி வருவோம்.  சாமி!.....ஈரலில் குளூட்டமினோட வேறு சங்கதியைத் தூண்டும் வஸ்துகளும் அடக்கம். அடுத்த தடவை ஈரலும் கொஞ்சம் போடச் சொல்லுங்க!

7.அத்திப்பழம்- அடி ஆத்தி! எனக்கே இப்பத்தங்க தெரியும்!! ஏன் எப்படின்னு தெரியல! ஆனா யூஸ் பண்ணிப் பாருங்க!

8.பூண்டு- அல்லிசின் என்கிற வஸ்து பூண்டில் இருக்கு. அது ரத்த ஓட்டத்தைத் கூட்டுதாம்( எங்கேன்னு அப்பாவியாட்டம் கேட்கக் கூடாது!! ஹி! ஹி!). வாயில் பூண்டு வாடை அடிக்கும்.  டிக் டாக், பெப்பர்மிண்ட் ஏதாவது போட்டுக்கவேண்டியதுதான்!

9. சாக்கலேட்- சாக்கலேட் ரொம்பத்திங்கக்கூடாதுன்னு வீட்டில் திட்டுவாங்க. அதில் தியோபுரோமின், பினைல் எதிலமைன் ஆகிய மோடிமஸ்தான் அயிட்டங்கள் அதில் இருக்குங்க. குழந்தைகளுக்குக் குடுக்காதீங்க! நீங்க தின்னுங்க!

10.மாம்பழம்- சூட்டைகிளப்பிவிடும் சாப்பிடாதீங்கன்னு சொல்லுவானுங்க! தெரியாம சொல்லலை உண்மைதான்... அது இந்த சூட்டைத்தான்  கிளப்பிவிடும்!!!!

43 comments:

Anonymous said...

நல்லா கெளப்புறாங்கையா ... :)

ஜோ/Joe said...

:)

சொல்லரசன் said...

காதலைத்தூண்டும் உணவுகள்
மேட்டர் ரொம்ப சூடா இருக்கு,புதுசா உங்க பதிவ படிப்பவர்கள் நீங்க‌
அந்தமாதிரி டாக்டர் என நினைச்சிக்க போறங்க,எதுக்கும் நீங்க எலும்புமுறிவு
அறுவைசிகிச்சை டாக்டர்ன்னு உங்க பதிவில் போட்டு வைங்க.

butterfly Surya said...

விவரமா சொன்னீங்க டாக்டர். நன்றி...

வால்பையன் said...

வாழைப்பழம்
முட்டை
பூண்டு
சாக்லெட்
மாம்பழம்

இவைகளெல்லாம் என்னை போன்ற ஏழைகளுக்கு ஒகே!
மாம்பழம் கிடைக்காத பட்சத்தில் மாம்பழ ஜூஸ் ஒகேவா!?


ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்க என்ன என்ன உணவுகள்!?

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி

இளவட்டம் said...

கல்யாணம் பண்ண போற என்ன மாதிரி பேச்சிளர்களுக்கு ரொம்பா யூஸ்புல்லான தகவல்கள்.இது மாதிரி நெறைய மேட்டர் போடுங்க.(ஹி ஹி ஹி )

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சரி.. சக்கரை நோய் இருப்பவர்கள் இதில் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்றுச் சொல்லவில்லையே?

தேவன் மாயம் said...

Anonymous said...
நல்லா கெளப்புறாங்கையா ... :)

20 October 2009 23:38///

அனானி! கருத்துக்கு நன்றி!

தேவன் மாயம் said...

ஜோ/Joe said...
:)//

நன்றி!
============================

20 October 2009 23:42


சொல்லரசன் said...
காதலைத்தூண்டும் உணவுகள்
மேட்டர் ரொம்ப சூடா இருக்கு,புதுசா உங்க பதிவ படிப்பவர்கள் நீங்க‌
அந்தமாதிரி டாக்டர் என நினைச்சிக்க போறங்க,எதுக்கும் நீங்க எலும்புமுறிவு
அறுவைசிகிச்சை டாக்டர்ன்னு உங்க பதிவில் போட்டு வைங்க.///

நெட்டில் எலும்பு சிகிச்சை செய்யமுடியாது! இதாவது செய்வோமே!

20 October 2009 23:49

தேவன் மாயம் said...

butterfly Surya said...
விவரமா சொன்னீங்க டாக்டர். நன்றி...

20 October 2009 23:49//

ஓகே !

தேவன் மாயம் said...

வால்பையன் said...
வாழைப்பழம்
முட்டை
பூண்டு
சாக்லெட்
மாம்பழம்

இவைகளெல்லாம் என்னை போன்ற ஏழைகளுக்கு ஒகே!
மாம்பழம் கிடைக்காத பட்சத்தில் மாம்பழ ஜூஸ் ஒகேவா!?


ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்க என்ன என்ன உணவுகள்!?

20 October 2009 23:51//

இதெல்லாமும் ஈஸ்ட்ரோஜெனை எதிரணிக்கு சுரக்கவைக்கும்!

தேவன் மாயம் said...

இளவட்டம் said...
கல்யாணம் பண்ண போற என்ன மாதிரி பேச்சிளர்களுக்கு ரொம்பா யூஸ்புல்லான தகவல்கள்.இது மாதிரி நெறைய மேட்டர் போடுங்க.(ஹி ஹி ஹி )

20 October 2009 23:52//

உங்க ஒராளுக்காக இன்னும் எத்தனை பதிவுன்னாலும் போடுவேன்!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
எல்லாம் சரி.. சக்கரை நோய் இருப்பவர்கள் இதில் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்றுச் சொல்லவில்லையே?//

மாமபழம், வாழை தவிர அனைத்தும்!

Anonymous said...

Indha listla Drumstick-a kanum.

ஷாகுல் said...

உங்கள் சேவை எங்களுக்கு தேவை

தேவன் மாயம் said...

Anonymous said...
Indha listla Drumstick-a kanum.//


நண்பா! அதுதான் மரத்தோட ஏற்கெனவே சாப்பிடுறோமே!!

==================================

21 October 2009 00:14


ஷாகுல் said...
உங்கள் சேவை எங்களுக்கு தேவை////

நல்லா!!நான் உங்கள்
நண்பன்!
21 October 2009 00:15

அப்துல்மாலிக் said...

குட்.. குட்... குட்..

இந்த மேட்டருலேயும் காலைவெச்சிட்டீங்க‌

நீங்க சொன்ன அனைத்து வகையராவும் சர்க்கரை நோயாளீகளுக்கு முதல் எதிரி, அதுக்கு ஏதாவது இருக்கா (டிஸ்கி: நான் சர்க்கரை நோயாளி இல்லை, பட் இருப்பவர்களுக்கு எடுத்து சொல்லலாமேனுதான் ஹி ஹி ஹி)

சென்ஷி said...

//"காதலைத்தூண்டும் உணவுகள்-10!( சின்னப் பசங்க எல்லாம் கில்லி வெளையாடப் போங்கப்பா!!)"//


ஓக்கே.. பைபை. டாட்டா! :)

ஈரோடு கதிர் said...

அப்படியா

க.பாலாசி said...

கண்ண தொறந்துட்டீங்க சாமியோ.....

ஆமா ஈரல்னு சொன்னீங்களே...அது கோழி ஈரலா?...ஆட்டு ஈரலா?

கோழி ஈரல்லையும் இதெல்லாம் இருக்குமா?

க.பாலாசி said...

//நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும் வஸ்துகள் இருக்குங்க!//

ஆகா...இனிமே நத்தையையும் உட்டுவைக்கமாட்டாங்களே.........

voted 4/4

Jerry Eshananda said...

ச்சீ.. நீங்க ரொம்ப மோசம்.

S.A. நவாஸுதீன் said...

ஆஹா! டாக்டர் எந்தெந்த ஊருக்கு எப்பெப்போ விசிட் டீட்டெய்ல்ஸ் கொடுக்கலையே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

**********************************

பலருக்கு உபயோகமான தகவல்கள் தேவா சார். நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

SUFFIX said...

தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தையெல்லாம் தட்டி எழுப்பிட்டிங்களே டாக்டர்!!

சிங்கக்குட்டி said...

சூப்பர் தேவா.

//செலரி இலை & சிப்பி,(Oysters) // (அந்த இலைக்கு இங்கு கிம்சி என்று பெயர்)

பழைய காலத்து மக்கள் மட்டுமில்லை தேவா, இன்றும் தென்கொரியா உணவில் இது முக்கிய பகுதி, சமைத்தது மற்றும் சமைக்காதது கூட,

அவர்கள் சொன்ன ஒரே காரணம், ஆண்களுக்கு மிக முக்கியம் "அது" க்காக.

உலகிலேயே அதிக குறைந்த நேர இடைவெளியில் (Often) உறவு கொள்ளும் நாடு கொரியா என்பது இங்கு மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது.

பின்னோக்கி said...

முருங்கைக்காய் பத்தி ஒண்ணும் சொல்லையே ?

பின்னோக்கி said...

முருங்கைக்காய் பத்தி நீங்க பின்னூட்டத்துல சொன்னத நான் பார்க்கலை :)

பீர் | Peer said...

சேலரி இல்லாதவங்க எப்டி சார் செலரியும் சிப்பியும் சாப்பிடுவது? தீர்ப்ப மாத்தி சொல்லுங்க..

cheena (சீனா) said...

வாங்க டாகடர் - இப்படி எல்லாம் இருக்கா - இதெல்லாம் தெரியாமப் போச்ச்சே - ஆனாலும் ஒண்ணும் குறைவில்ல - சாப்டிருக்கலாமோ

நன்றி தகவலுக்கு

நல்வாழ்த்துகள்

M.S.R. கோபிநாத் said...

டாக்டர்,
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பாதாம் சாப்பிடலாம் என்று தெரியும், பிஸ்தா சாப்பிடலாமா? நன்றி.

Jerry Eshananda said...

டாக்டர் நான் உங்ககிட்ட "எப்படி குறைச்சுகிரதுன்னு வழி கேட்டா ? இப்படி உல்டாவா இன்னும் தூண்டி விடுறீங்களே.ப்ளீஸ் காப்பாத்துங்க டாக்டர்

அகல்விளக்கு said...

ம்ம்ம்ம்ம்........

முருங்கைக்காயைக் காணோம்..

அன்புடன் நான் said...

மருத்துவரே...பாடம் மிக அருமை. தொடர்ந்து நடத்துங்க.

மணிஜி said...

கில்லி பக்கத்து வீட்டு பொண்ணு ஜாக்கெட்டுக்குள்ள விழுந்துடிச்சு டாக்டர்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல தகவல்கள் டாக்டர் சார்.. ப்யூட்சர்ல யூஸ் ஆகுதான்னு பார்ப்போம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல அட்வைஸ் டாக்டர்.

Jackiesekar said...

நல்லா விபரமா சொல்லி இருக்கிங்க நன்றி டாக்டர்...

ஆ.ஞானசேகரன் said...

//2.சிப்பி,(Oysters)- கிராமத்தில் ஒரு காலத்தில் நத்தை, ஊமச்சி என்று மக்கள் அவித்துச் சாப்பிடுவார்கள். மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததோ இல்லையோ நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும் வஸ்துகள் இருக்குங்க!! ( பழைய காலத்து மக்கள் வெவரந்தான்!!!)//

மெய்யாலுமா! இங்கு சிங்கபூரில் எல்லா உணவு மையங்களிலும் கிடைக்கும்

ரவி said...

டாக்டரே. ஏற்கனவே மக்கள் தொகை அதிகமா இருக்கு. இதுல இந்த பதிவு வேறயா ? அவ்வ்.

புலவன் புலிகேசி said...

பாக்யராஜ்ஜோட முருங்கக்காய் மேட்டரையே இன்னும் யாரும் மறக்கல..இதுவுமா??? நடத்துங்க.......

creativemani said...

சார்.. காதலைத் தூண்டும் உணவுகள்'னு படிக்க வந்தா... சரி சரி... நான் கில்லி வெளயாட போறேன்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory