நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் அதனை எடுத்து செய்தல் சிறப்பு. அந்த வழியில் மதுரை பதிவர் சந்திப்பும் ஒரு சிறந்த குறிக்கோளுடன் ஆரம்பித்தது.பல வேலைகளின் காரணமாக என்னால் இந்தக் காணொளியை விரைவில் வெளியிட முடியவில்லை.
.
ஆம்! ”குட் டச்! பேட்டச்” என்று சென்னையில் நடத்தப்பட்ட அந்த சிறப்பு மிகுந்த நிகழ்வை மதுரையிலும் நடத்தலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவர் கூட்டம் கூட்டப்பட்டது!
மதுரை என்றாலேயே கூட்டத்திற்கான இடங்களை ஏற்பாடு செய்வது நம் அன்புப் பதிவர்” தருமி அய்யா” தான். இந்தமுறை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் முழுக் கல்லூரியுமே நம் கைக்கு வந்தார்ப் போல் இருந்தது.
கூட்டத்தில்
1.மருத்துவர் ஷாலினியையே வரவழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவர் சென்னையில் ஏற்கெனவே கலந்து கொண்டு சிறப்புச் செய்தவர் என்பதுவே காரணம்.
2.மூன்று வாரங்களுக்கு முன்பே அவருடைய அனுமதிபெறவேண்டும் என்பதால் இன்னும் தேதி முடிவு செய்யமுடியவில்லை.
3.சுய உதவிக் குழுக்கள், ட்ரஸ்டுகள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றை இதில் இதில் ஈடுபடுத்துவதா? என்று ஆரம்பித்த விவாதம், மதுரையில் உள்ள திருநங்கைகள் நடத்தும் ஒரு அமைப்பை பங்குபெறச் செய்யலாமா? என்பதுவரை சென்று ஒருவாறாக முதல் கூட்டம் பதிவர்கள் மட்டுமே நடத்துவது என்ற தீர்மானத்துடன் முடிந்தது.
4.இதன் பயனாளிகள் மாணவர்கள், குழந்தைகள்தான். அவர்களுக்கு நாம் நேரடியாகச் சொல்ல முடியாது. அவர்களின் பெற்றோர்களையும் நாம் சந்திக்கமுடியாது, ஆகையால் குழந்தைகளின் கட்டாய நேரடித்தொடர்பாளர்களான ஆசிரியர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
5.இதில் ஆர்வமுள்ள ஏனைய பிரிவினரையும் குறிப்பிட்ட அளவில் பங்குபெறச் செய்வது என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.
6.இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் ஒரு தனித் தளமாக ஏற்படுத்தி அனைவரும் படித்துப் பயன்பெற ஏற்பாடு செய்வது என்ற கருத்தும் சொல்லப்பட்டது. யார் இதைச் செய்வது? என்பதில் இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை. மதுரை பதிவர்கள் என்றில்லாமல் யார் முன் வந்தாலும் நல்லதுதான்.
7. பதிவர் திரு.தருமி அவர்களால் இடம் மட்டும் அமெரிக்கன் கல்லூரியில் உள்ள கான்பரன்ஸ் ஹால் என்று உறுதி செய்யப்பட்டது.
8.ஏற்கெனவே மதுரைப் பதிவர் குழு சென்னையில் உள்ள பதிவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இது சம்பந்தமான கருத்து உதவிகள், யோசனைகள் எல்லோரிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.
9.மதுரை மட்டுமல்லாது பிற அகுதிகளிலிருந்தும் நம் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் முன் கூட்டியே கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
1.தருமி-9952116112
2..சீனா-9840624293
3.தேவன்மாயம்- 9751299554--
4.கார்த்திகைபாண்டியன் -9842171138
5.ஸ்ரீதர்-9360688993
5.ஜெரி ஈசானந்தா-9791390002
சந்திப்பின் விபரம்:
மதுரையில் ...
பதிவர்கள் சந்திப்பு
நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை
காலம்: மாலை 4 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்
19 comments:
ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் சார் . இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி
முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்
கலந்து கொள்ள இயலவில்லை
ஒத்துழைப்பு முழுமையாக உண்டு
பதிவர் சந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் நடந்திருக்கிறது.காணொளிகளை
அலுவலகத்தில் காண இயலவில்லை.வீட்டிற்கு போய் பார்க்கிறேன்.
இப்போதைக்கு ஓட்டு போட்டாச்சி !!
தாமதமானாலும் விட்டுவிடாமல் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தேவா சார்
குவாலிடி நல்லாயிருக்கு!
மூண்றாவது வீடியோ முக்கால்வாசி தான் தெரியுது!
டம்பி மேவீ said...
ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் சார் . இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி
07 October 2009 19:26
///
நன்றி மேவி!!
cheena (சீனா) said...
முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்
கலந்து கொள்ள இயலவில்லை
ஒத்துழைப்பு முழுமையாக உண்டு
07 October 2009 19:36
///
நடத்தப்போவதே நீங்கதானே!!
S.A. நவாஸுதீன் said...
தாமதமானாலும் விட்டுவிடாமல் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தேவா சார்
07 October 2009 22:36
///
வீடியோ எடிட்டிங்கெல்லாம் பண்ணியில்ல போட்டிருக்கேன்!
வால்பையன் said...
குவாலிடி நல்லாயிருக்கு!
மூண்றாவது வீடியோ முக்கால்வாசி தான் தெரியுது!
07 October 2009 23:11///
முதல் வீடியோ ஹாண்டிகாமில் எடுத்தது.இரண்டும் மூன்றும் செல்போனில் எடுத்தது.
நல்ல முயற்சி!
பகிர்வு!
காணொளியை காண இயலவில்லை!
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல முயற்சி!
பகிர்வு!
காணொளியை காண இயலவில்லை!
08 October 2009 00:15//
ரொம்பச் சிரமப்பட்டு ஏற்றியுள்ளேனே!!
மூன்று காணொளிகளும் நன்றாக காணக் கிடைத்தது... கண்டு களித்தேன்... நன்றிங்க மருத்துவர் தமிழா!
பழமைபேசி said...
மூன்று காணொளிகளும் நன்றாக காணக் கிடைத்தது... கண்டு களித்தேன்... நன்றிங்க மருத்துவர் தமிழா!
08 October 2009 01:38//
சிலர் பார்க்கமுடியவில்லை என்கின்றனரே!
முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்
கலந்து கொள்ள இயலவில்லை
ஒத்துழைப்பு முழுமையாக உண்டு
பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்
நான் ஏதாவது உதவ முடியுமா என்று சொல்லுங்கள்...
நன்றி டாக்டர்
பகிர்வுக்கு நன்றி டாக்டர்
பகிர்விற்கு நன்றி, சார் !
Post a Comment