Monday, 19 October 2009

பிரேதப் பரிசோதனை-( ரைகர் மார்டிஸ்)-மரணவிறைப்பில் அறியவேண்டியவை-9!

 Rigor Mortis (US)

பிரேதப் பரிசோதனை எனப்படும் போஸ்ட் மார்ட்டத்தில் முதலில் பார்ப்பது ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS தான். ரைகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1.இறந்தவுடன் உடலில் ஏற்படும் விறைப்புத் தன்மைதான் ரைகர் மார்ட்டிஸ்! இறந்த உடலின் கைகள் கால்களை, முழு உடலையும்கூட  மடக்கினால் மடக்க வராது.

2.உடல் தசைகள் இறந்தவுடன் சுருங்கி விறைப்பதனால் இறந்த உடல் விறைக்கும். இதுவே ரைகர் மார்ட்டிசின் காரணம்.

3.ரைகர் மார்ட்டிஸ் உடலில் இருந்தால் குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார் என்று உறுதியாக நாம் நம்பலாம்.

4.ரைகர் மார்ட்டிசை  வைத்துப் பொதுவாக இறந்த நேரத்தைக் கணக்கிடலாம். (துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றாலும் பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் முதலில் எழுதப்படுவது இதுதான்).

5.ரைகர் மர்ட்டிஸ் இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்.

6.இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் ரைகர் மார்ட்டிஸ் வெயில் காலத்தில் 18- 36 மணிவரை இறந்த உடலில் இருக்கும்.

7.மழைக்காலத்தில் இறந்த ஒன்று அல்லது இரண்டுமணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்  ரைகர்மார்ட்டிஸ்  24-48 மணிநேரம் வரை இறந்த உடலில் இருக்கும்.

8.மேல் சொன்னவை பொதுவானவையே. வயது, இறப்பின் தன்மை, மேல்சொன்னதுபோல் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து ரைகர் மார்ட்டிசின் நேரங்கள் கொஞ்சம் கூடக் குறைய மாறலாம்.

9.ரைகர் மார்ட்டிஸை வைத்து இறந்தபோது உடல் எந்த நிலையிலிருந்தது என்று அறியலாம். ஏனெனில் ஒருவர் இறக்கும்போது கால்களை மடக்கி வைத்திருந்தால் அப்படியே கால்கள்  மடங்கிய நிலையிலேயே விறைப்பாக இருக்கும்!  

எளிமையாக பிணவிறைப்பு அல்லது மரண விறைப்பு என்று சொல்லப்படும் ரைகர் மார்ட்டிஸ் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.   கேள்விகளைக் கேளுங்கள்!!

தமிழ்த்துளி தேவா!

30 comments:

Muruganandan M.K. said...

மருத்துவத்துறை சார்ந்த ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS போன்ற விடயங்களை பொதுமக்களுக்கு புரிய வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மகிழ்ச்சியடைகிறேன்.

தேவன் மாயம் said...

Dr.எம்.கே.முருகானந்தன் said...
மருத்துவத்துறை சார்ந்த ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS போன்ற விடயங்களை பொதுமக்களுக்கு புரிய வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மகிழ்ச்சியடைகிறேன்.

19 October 2009 08:37///

உங்கள் பாராட்டு குறித்து மிகவும் மகிழ்கிறேன்!!

வடுவூர் குமார் said...

ரைகர் மார்ட்டிஸ் - முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.
எளிதான விவரனைக்கு நன்றி.

வால்பையன் said...

இறந்து மூன்று நாட்க்ஃஅளுக்கு பின் ரைகர் மார்டிஸ் இருக்காதல்லவா!, அப்போது உடலை மடக்க, வளைக்க முடியுமா!?

பாலா said...

நல்ல முயற்சி சார்
என்னை போன்ற மர மண்டைகளுக்கு இந்த இது போன்ற தகவல்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அமுதா கிருஷ்ணா said...

இந்த பெயர் முதல் முறையாக கேள்விபடுகிறேன். எப்படி தூக்குப் போட்டாங்க அல்லது கழுத்து நெரித்து கொல்லபட்டார்கள் என்று தெரிகிறது...

பாலா said...

வால்பையன் said...
இறந்து மூன்று நாட்க்ஃஅளுக்கு பின் ரைகர் மார்டிஸ் இருக்காதல்லவா!, அப்போது உடலை மடக்க, வளைக்க முடியுமா!?

19 October 2009 09:09
எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????

வால்பையன் said...

//எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????//

கேட்க மறந்துட்டேன்!
ரைகர் மார்டிஸ் மனிதர்களுக்கு மட்டும் தானா!? விலங்குகளுக்கும் உண்டா!?

குளிர் ரத்த பிராணிகள் ஏற்கனவே அப்படித்தானே இருக்கு!

JesusJoseph said...

நல்ல தகவல்.

படம் தான் பயமா இருக்கு. அது என்னால் காலில் ஒரு துண்டு.

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

Prathap Kumar S. said...

அட... இப்படி ஒரு மேட்டரு இருக்கா...? அது ஏன் இதுக்கு ரைகர் மார்டிஸ்னு பேர்வந்துச்சு? அதைச்சொல்லாம வுட்டீங்களே...???

நீங்கதானே கேள்வி கேட்க சொன்னீங்க...எங்க எஸ்கேப் ஆகறீங்க???

M.S.R. கோபிநாத் said...

நல்ல முயற்சி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்க நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

[[வால்பையன் said...

//எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????//

கேட்க மறந்துட்டேன்!
ரைகர் மார்டிஸ் மனிதர்களுக்கு மட்டும் தானா!? விலங்குகளுக்கும் உண்டா!?

குளிர் ரத்த பிராணிகள் ஏற்கனவே அப்படித்தானே இருக்கு!]]

ரைகர் மார்டிஸ் விலங்குகளுக்கும் உண்டு. ஆடு மாடு இறந்த பின் நான்கு கால்கலும் விறைப்பாக இருக்கும்.

மீன் போன்ற குளிர் ரத்த பிராணிகளுக்கும் உண்டு. அதனால்தான் மீன் வாங்கும் பொழுது அமுக்கிப்பார்த்து வாங்குகின்றோம். விறைப்பாக(கல்லுமாதுரி) இல்லை என்றால் மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டது எனவே வாங்க மாட்டோம்...

என்ன டாக்டர் சரிதானே

தேவன் மாயம் said...

வடுவூர் குமார் said...
ரைகர் மார்ட்டிஸ் - முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.
எளிதான விவரனைக்கு நன்றி.///

வருகைக்கு நன்றி நண்பரே!!

===============================
19 October 2009 08:43

வால்பையன் said...
----------------
இறந்து மூன்று நாட்க்ஃஅளுக்கு பின் ரைகர் மார்டிஸ் இருக்காதல்லவா!, அப்போது உடலை மடக்க, வளைக்க முடியுமா!?///

உண்மைதான்!! ரைகர்மார்ட்டிஸ் இருக்காது!! அப்போது கைகால்களை மடக்கலாம்!!

19 October 2009 09:09

தேவன் மாயம் said...

பாலா said...
நல்ல முயற்சி சார்
என்னை போன்ற மர மண்டைகளுக்கு இந்த இது போன்ற தகவல்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

பிரேதம் என்றாலே ரைகர் இருக்கும்!!
------------------------------

19 October 2009 09:11

அமுதா கிருஷ்ணா said...
இந்த பெயர் முதல் முறையாக கேள்விபடுகிறேன். எப்படி தூக்குப் போட்டாங்க அல்லது கழுத்து நெரித்து கொல்லபட்டார்கள் என்று தெரிகிறது..///

அது தனிக்கதை!! பின்பு எழுதுகிறேன்!!
------------------------------.

19 October 2009 09:13

பாலா said...
வால்பையன் said...
இறந்து மூன்று நாட்க்ஃஅளுக்கு பின் ரைகர் மார்டிஸ் இருக்காதல்லவா!, அப்போது உடலை மடக்க, வளைக்க முடியுமா!?

19 October 2009 09:09
எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????///

வால்ஸ் கேட்டது உண்மைதான்! ரைகர் இருக்காது!!

---------------------------------

19 October 2009 09:13

தேவன் மாயம் said...

வால்பையன் said...
//எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????//

கேட்க மறந்துட்டேன்!
ரைகர் மார்டிஸ் மனிதர்களுக்கு மட்டும் தானா!? விலங்குகளுக்கும் உண்டா!?

குளிர் ரத்த பிராணிகள் ஏற்கனவே அப்படித்தானே இருக்கு!

19 October 2009 09:20///

விலங்குகளுக்கும் உண்டு!! குளிரில் ரைகர் விரைவில் வந்துவிடும்!!

-------------------------------

தேவன் மாயம் said...

JesusJoseph said...
நல்ல தகவல்.

படம் தான் பயமா இருக்கு. அது என்னால் காலில் ஒரு துண்டு.

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com
//

காலில் இருப்பது பிரேத எண் அட்டை!!
19 October 2009 09:43
_______________________________

நாஞ்சில் பிரதாப் said...
அட... இப்படி ஒரு மேட்டரு இருக்கா...? அது ஏன் இதுக்கு ரைகர் மார்டிஸ்னு பேர்வந்துச்சு? அதைச்சொல்லாம வுட்டீங்களே...???

நீங்கதானே கேள்வி கேட்க சொன்னீங்க...எங்க எஸ்கேப் ஆகறீங்க???///

லத்தீன் மொழியில்
ரைகர் என்றால் விறைப்பு,
மார்ட்டிஸ் என்றால்- இறப்பு!!
ஐயம் நாட் எஸ்கேப்பு!!!
ஹி!! ஹி!!

19 October 2009 10:59

தேவன் மாயம் said...

கோபிநாத் said...
நல்ல முயற்சி

19 October 2009 14:26///

வருகைக்கு நன்றி நண்பா!!

cheena (சீனா) said...

பல மருத்துவத் தகவல்களைத் தரும் மருத்துவர் தேவா வாழ்க - பயனுள்ள தகவல்கல் - தெரிந்து கொள்வது ந்லலது - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
[[வால்பையன் said...

//எப்புடி அருண் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது ?
ஆட்டு மூளை அதிகமா சாப்பிடுவீங்களோ ????//

கேட்க மறந்துட்டேன்!
ரைகர் மார்டிஸ் மனிதர்களுக்கு மட்டும் தானா!? விலங்குகளுக்கும் உண்டா!?

குளிர் ரத்த பிராணிகள் ஏற்கனவே அப்படித்தானே இருக்கு!]]

ரைகர் மார்டிஸ் விலங்குகளுக்கும் உண்டு. ஆடு மாடு இறந்த பின் நான்கு கால்கலும் விறைப்பாக இருக்கும்.

மீன் போன்ற குளிர் ரத்த பிராணிகளுக்கும் உண்டு. அதனால்தான் மீன் வாங்கும் பொழுது அமுக்கிப்பார்த்து வாங்குகின்றோம். விறைப்பாக(கல்லுமாதுரி) இல்லை என்றால் மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டது எனவே வாங்க மாட்டோம்...

என்ன டாக்டர் சரிதானே

19 October 2009 16:28///

அப்படியே உண்மை!!

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
பல மருத்துவத் தகவல்களைத் தரும் மருத்துவர் தேவா வாழ்க - பயனுள்ள தகவல்கல் - தெரிந்து கொள்வது ந்லலது - நல்வாழ்த்துகள்

19 October 2009 1//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுவரை அறியாத செய்திகள், பகிர்வுக்கு நன்றி

Jerry Eshananda said...

படத்தை மாத்துங்க

கபிலன் said...

இறந்த பின் உடல் விறைக்கும் என்று மட்டும் தெரியும். அதுல இவ்ளோ மேட்டர் இருக்குன்னு இப்போ தான் தெரியும். நன்றிங்க...

இந்த மாதிரி போஸ்ட் மார்ட்டம்ல என்னவெல்லாம் செய்வாங்க...எப்படி இறப்பின் தன்மையை கண்டுபிடிக்குறாங்கன்னு கொஞ்சம் எழுதினீங்கன்னா....நல்லா இருக்கும் டாக்டர்!

S.A. நவாஸுதீன் said...

இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்ததும் நல்லதுக்குத்தான். இடுகை தெளிவாக இருந்தாலும் நண்பர்கள் கேட்ட ஐயங்களுக்கு நீங்கள் அளித்த விளக்கம் இன்னும் தெளிவாக்கியது.

க.பாலாசி said...

ரைகர் மார்ட்டிஸ் பற்றிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே....

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே.

சிங்கக்குட்டி said...

பகிர்வுக்கு நன்றி தேவா.

பின்னோக்கி said...

நல்ல கட்டுரை.
உடலின் வெப்ப நிலையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்களா இறந்த நேரத்தை கணிக்க ? மெடிக்கல் டிடக்டிவ்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அப்படி கூறினார்கள். உங்களுக்கு தெரியும் என்பதால் இந்த கேள்வி.

சொல்லரசன் said...

ரைகர் மார்ட்டிஸ் உடலில் இல்லாத போது பிரேத பரிசேதனை செய்யும் போது இறந்த நேரத்தை கணக்கிடமுடியுமா டாக்டர்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory