Sunday, 25 October 2009

சின்ன மருத்துவத் துளிகள்!

இன்று சில குறிப்புகள்:

1.ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உணவாக சிலர் சாப்பிடுகின்றனர். உணவு போல் ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால் அது நல்லதல்ல. காயகறி சாலட்,பழம் இவற்றுடன் ஒரு சின்ன கப் ஓட்ஸ் சாப்பிடுவதுதான் நல்லது.

2.சிக்கன் மட்டனைவிட சிறந்ததா என்று கேட்கின்றனர் சிலர். சிக்கனில் மட்டனைவிட 4% கொழுப்பு குறைவு. அதேபோல் தரமான கோழிக்கறியா என்று அறிந்து வாங்குவது சிரமம். ஏனெனில் கறிக்கோழி பிராய்லர் விரைவில் எடைகூடுவதற்காக  என்னென்ன முயற்சிகள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

3.கோழிக்கறியே ஆனாலும் எண்ணேயில் பொறித்து உண்பது கொழுப்பைக் கூட்டும்.

4.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும்.  ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது.

6.சக்கரை நோயாளிகளுக்கு அரிசி உணவைவிட கம்பு,ராகி, கோதுமை உணவு சிறந்ததா?

இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத்தான் செய்யும். தனியாக தானியங்கள், மாற்றி மாற்றி உண்டாலும் உண்ணும் அளவைப் பொறுத்தே இரத்தத்தில் சக்கரை அளவு இருக்கும். கோதுமை உண்ணும் வட இந்தியர்களுக்கும் சக்கரை வியாதி நம் அளவுக்கு இருக்கிறதே!

7.குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக உயர்த்தும் திறன் குறைவு. வடித்த சாதம் உடனடியாக சக்கரையை உயர்த்தும்.

36 comments:

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொன்றும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ரொம்ப நன்றி தேவா சார்

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
ஒவ்வொன்றும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ரொம்ப நன்றி தேவா சார்

25 October 2009 00:54//

வாங்க நவாஸ்! நலமா!

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு நன்றி...!

SUFFIX said...

கேப்ஸ்யூல் மாதிரி, சிறிய இடுகைக்குள் நிறைய பயனுள்ள பல புதிய தகவல்களையும் தந்து இருக்கின்றீர்கள் டாக்டர். நன்றி!!

ராமலக்ஷ்மி said...

மிகவும் அவசியமான குறிப்புகள். நன்றி!

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி மருத்துவரே.

//.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன. //

ஷுவும் பொருத்தமானதா, நல்ல ஷூவா வாங்க வேண்டும். கண்டதையும் வாங்கினா கால் வலிதான் மிச்சம்.

Jaleela Kamal said...

//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது//

சூப்பரான பதிவு.

Muruganandan M.K. said...

மணி மணியான குட்டி மருத்துவக் குறிப்புகள். அருமை

மங்களூர் சிவா said...

nice info thanks doctor.

Anonymous said...

டாக்டர்

பைல்ஸ் பற்றிய கட்டுரை எழுதவும் இன்னும் சரியான வழிகாட்டுதல் இல்லமால், வெட்கம் கூச்சம் காரனமாக பலர் மூத்திர சந்தில் போஸ்டர் ஒட்டும் பெங்கால் பிராடுகளிடம் தான் இதற்கு வைத்தியம் பார்க்கின்றனர்.

தேவன் மாயம் said...

ஜீவன் said...
நல்ல பதிவு நன்றி...!
//

மிக்க நன்றி ஜீவன்!
=============================
25 October 2009 00:56

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
கேப்ஸ்யூல் மாதிரி, சிறிய இடுகைக்குள் நிறைய பயனுள்ள பல புதிய தகவல்களையும் தந்து இருக்கின்றீர்கள் டாக்டர். நன்றி!!

25 October 2009 01:01///

பின்னூட்டதில் உற்சாக டானிக் தந்திருக்கீங்க ஷபிக்ஸ்!

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி said...
மிகவும் அவசியமான குறிப்புகள். நன்றி!

25 October 2009 01:03//

இவை எனக்கே புதிய செய்திகள்!!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
மிக்க நன்றி மருத்துவரே.

//.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன. //

ஷுவும் பொருத்தமானதா, நல்ல ஷூவா வாங்க வேண்டும். கண்டதையும் வாங்கினா கால் வலிதான் மிச்சம்.

25 October 2009 01:11///

நைஜீரியாவில் நைக் சீப்பா!! இல்ல காஸ்ட்லியா!!

தேவன் மாயம் said...

Jaleela said...
//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது//

சூப்பரான பதிவு.

25 October 2009 01:32//

க்ருத்துக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

Dr.எம்.கே.முருகானந்தன் said...
மணி மணியான குட்டி மருத்துவக் குறிப்புகள். அருமை

25 October 2009 02:52///

உபயோகமானதுதானே அய்யா!!

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
nice info thanks doctor.///

சிவா நன்றி!
=============================

25 October 2009 02:54

Anonymous said...
டாக்டர்

பைல்ஸ் பற்றிய கட்டுரை எழுதவும் இன்னும் சரியான வழிகாட்டுதல் இல்லமால், வெட்கம் கூச்சம் காரனமாக பலர் மூத்திர சந்தில் போஸ்டர் ஒட்டும் பெங்கால் பிராடுகளிடம் தான் இதற்கு வைத்தியம் பார்க்கின்றனர்.

25 October 2009 03:32///

உண்மை! கட்டாயம் போடுவோம்!

ஈரோடு கதிர் said...

நல்ல தகவல்கள்

நன்றி

Jerry Eshananda said...

டாக்டர் பயனுள்ள பதிவு. 6 and 7 வது பாய்ண்ட்ஸ் இப்ப தான் தெருஞ்சுகிறேன். நன்றி. அப்புறம் உயர் ரத்த அழத்தம் பற்றி விரிவாக ,விரைவாக எதிர்பாக்குறேன்.

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
நல்ல தகவல்கள்

நன்றி

25 October 2009 05:41
///

நன்றி கதிர்!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் பயனுள்ள பதிவு. 6 and 7 வது பாய்ண்ட்ஸ் இப்ப தான் தெருஞ்சுகிறேன். நன்றி. அப்புறம் உயர் ரத்த அழத்தம் பற்றி விரிவாக ,விரைவாக எதிர்பாக்குறேன்.

25 October 2009 06:05///
செய்வோம் ஜெரி!

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நல்ல குறிப்புகள் - கடைப்பிடிக்க வேண்டுமே

நல்வாழ்த்துகள்

தீப்பெட்டி said...

நல்ல பயனுள்ள தகவல்கள்..
நன்றி..

தருமி said...

//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.//

இதெயெல்லாம் சொன்னாலும் தங்ஸ் கேக்கணுமே ... ம்ம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு dr.

Unknown said...

hello sir,
i have read all your articles and they were very useful sir.i have a doubt about "asprin".my relative have heart problem(have block)but he is alergic to asprin so he couldnot place stent.so,is there any alternative...
note:he got ulcer due to asprin consumption...
plz write an article about asprin alergy and alternatives sir.

முரளிகண்ணன் said...

மிக உபயோகமான பதிவு

பீர் | Peer said...

இதே போல அடிக்கடி டிப்ஸ் தாங்க டாக்டர்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தகவல்களுக்கு நன்றி

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி

ரோஸ்விக் said...

அருமையான ஆலோசனைகள். பகிர்விற்கு நன்றி. உங்கள் சேவை நீண்ட நாள் தொடர எனது வாழ்த்துக்கள் நண்பரே!

Mohan said...

//ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உணவாக சிலர் சாப்பிடுகின்றனர். உணவு போல் ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால் அது நல்லதல்ல. //

சார், நான் தினமும் காலை உணவாக 5 - 6 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியாக செய்து , மோருடன் சேர்த்து 3 - 4 கிளாஸ் சாப்பிடுகிறேன். இது தவறா? இப்படி சாப்பிட்டால் என்ன விளைவு ஏற்படும் என சொல்லுங்கள். பயமாய் உள்ளது. ப்ளீஸ்...

அப்துல்மாலிக் said...

அறிய தகவல்

//குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக உயர்த்தும் திறன் குறைவு. வடித்த சாதம் உடனடியாக சக்கரையை உயர்த்தும்//

இது புதுசு

கண்ணகி said...

உபயோகமான பதிவு டாக்டர் சார்

சொல்லரசன் said...

//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.//

தகவலுக்கு நன்றிங்க டாக்டர்

Itsdifferent said...

பெருங்காயம் பன்றி காய்ச்சலுக்கான வைரசை கொல்கிறது என்று தைவான் நாடு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அமர பாரதி said...

//இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத்தான் செய்யும். தனியாக தானியங்கள், மாற்றி மாற்றி உண்டாலும் உண்ணும் அளவைப் பொறுத்தே இரத்தத்தில் சக்கரை அளவு இருக்கும்// சர்க்கரையை ஏற்றத்தான் செய்யும். ஆனால் உடனடி உயர்வு அரிசியைப் போல இருக்காது. ராகி மற்றும் கோதுமையின் செரிக்கும் நேரம் அரிசியை விட அதிகம் அல்லவா? இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தானே?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory