Saturday, 10 October 2009

பதிவர்களுக்குள் மோதல்.. பேட் டச்!

அன்பு நண்பர்களே!!

வேர்விட்டு நிற்கும் மரம் எங்கும் செல்ல இயலாது.

அது போல்  வெளியில் செல்ல இயலாமல் ஆஸ்பத்திரி, வீடு என்று கிடக்கும் எனக்கு கணினியில் எழுதி முகம் தெரியாத நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி  அடைந்திருந்தேன்.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் யாருடனும் நேரம் செலவிட முடியாத காரணத்தால் சாட்டிங் முதல் யாருடனும் நட்புக் கொள்ள முயலாமல் இருக்கிறேன்.

அதே சமயம் என் மிகச்சிறிய வட்ட நண்பர்களிடம் சென்னை சென்று அங்கு நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அப்படியிருக்கும் சமயத்தில் சமீபத்தில் கெள்விப்படும் நிகழ்ச்சிகள்  மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளன!

முதலில் பெண்பதிவருடன் ஆபாச உரையாடல் என்ற பிரச்சினை!

அனானி பின்னூட்டங்கள் என்ற பிரச்சினை.

தற்போது நேரடியாகத் தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒருவரின் பதிவுகளில் உள்ள கருத்துக்கு மாற்றுக் கருத்துப் போட்டால் அவர் மனம் வருந்துமே என்று நான் கருத்துப்போடாமல் சென்று விடுவேன். அது பொறுப்பான செயல் இல்லை என்று எனக்குத்தெரியும்.

மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!

எதிர்க் கருத்துக்களைப் போடுவதால் ஒருவர் இன்னொருவருவரைத் தாக்கும் அளவு செல்வது ஆச்சரியமாக உள்ளது. இது பதிவுலகத்தின் பலவீனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக உள்ளது. பதிவுலகில் உள்ள நாம் மீடியாக்களால் கூர்ந்து நோக்கப்படும் வேளையில் இத்தகைய செய்கைகள் பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

ஏன் நமக்குப் பிரச்சினை என்று பதிவர்கள் பலர்  ஒதுங்கி கூகிள் குழுமங்கள் போன்ற குழுகளுக்குச் செல்வதும் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்வையும் நான் கண்டுகொள்ளாமல் செல்லலாம். ஆயினும் என் எண்ணத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதலாலேயே இங்கு சொல்கிறேன். இதை பொறுப்புடன் கவனிக்க வேண்டிய கட்டாயம் சென்னைப் பதிவர்களுக்கு உள்ளது.

”குட் டச் பேட் டச்”- ”ஏதாவது செய்யவேண்டும் பாஸ்” என்பது போல் இதற்கும் ஏதாவது அவசியம் செய்யவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து சென்னை மூத்த பதிவர்கள்  விலகமாட்டார்கள் என்று நம்புகிறேன்! 

49 comments:

தமிழ் தகவல்மையம்(மும்பை) said...

விடுங்க சார் இதெல்லாம், சூசூபி, உங்கள் பணி தொடரட்டும்

பழமைபேசி said...

//மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!//

good boy! yes, we got to keep our nose off!

*இயற்கை ராஜி* said...

mmmm ;-(

Rajeswari said...

leave it sir

குப்பன்.யாஹூ said...

I highly value your concerns.

Bloggers write big things in blogs but in real life they behave like uneducated.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-((

தேவன் மாயம் said...

தமிழ் தகவல்மையம்(மும்பை) said...
விடுங்க சார் இதெல்லாம், சூசூபி, உங்கள் பணி தொடரட்டும்

10 October 2009 07:32///

இருந்தாலும் தோன்றியதை சொல்வோமே!!

தேவன் மாயம் said...

பழமைபேசி said...
//மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!//

good boy! yes, we got to keep our nose off!

10 October 2009 07:37///

Thank u !

தேவன் மாயம் said...

இயற்கை,பீர்,ராஜேஸவரி,டி.வி.ஆர் நன்றி!!

தேவன் மாயம் said...

குப்பன்.யாஹூ said...
I highly value your concerns.

Bloggers write big things in blogs but in real life they behave like uneducated.///

But we have to be cultured.

தமிழ் அமுதன் said...

///இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன்.///


இவர்கள் செயலால் தங்களைபோன்றோருக்கு இப்படி எண்ணம் உதித்தது சிறிய கவலை அளிக்கிறது....!


///விடுங்க சார் இதெல்லாம், சூசூபி, உங்கள் பணி தொடரட்டும்///

இதைதான் நானும் சொல்கிறேன்..!

தேவன் மாயம் said...

ஜீவன் said...
///இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன்.///


இவர்கள் செயலால் தங்களைபோன்றோருக்கு இப்படி எண்ணம் உதித்தது சிறிய கவலை அளிக்கிறது....!


///விடுங்க சார் இதெல்லாம், சூசூபி, உங்கள் பணி தொடரட்டும்///

இதைதான் நானும் சொல்கிறேன்..!

10 October 2009 08:13//

சரி ஜீவன்!! என் எண்ணத்தைச் சொன்னேன்!!

அரசூரான் said...

நானும் உங்க கட்சிதாங்க, துஷ்டரை (எதுக்கும் மரியாதை நல்லது) கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்க. நம்ம மன மகிழ்ச்சிக்கு எழுதுரோம், அதில் ஏன் மற்றவர்களை தூற்றனும்?

தேவன் மாயம் said...

அரசூரான் said...
நானும் உங்க கட்சிதாங்க, துஷ்டரை (எதுக்கும் மரியாதை நல்லது) கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்க. நம்ம மன மகிழ்ச்சிக்கு எழுதுரோம், அதில் ஏன் மற்றவர்களை தூற்றனும்?

10 October 2009 08:16///

உண்மைதான் நண்பரே!! வருகைக்கு நன்றி!!

அத்திரி said...

டாக்டர் சொன்னா கேட்டுக்கனும்

ஆ.ஞானசேகரன் said...

என்ன சார் இப்படியெல்லா வேற நடக்குமா?

இராகவன் நைஜிரியா said...

நடந்த நிகழ்ச்சி மிக வருத்தத்தை அளிக்கின்றது.

என்னைப் போன்றவர்கள், தமிழ் படிப்பதற்கு உள்ள விசயமே இந்த வலைப்பூக்கள் தான்.

வன்முறை என்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

உங்கள் எண்ணங்களுடன் நான் ஒத்துப் போகின்றேன்.

இரண்டு நாட்களாக வலைப் பதிவில் நான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மேல் ஓங்குகின்றது என்பது மட்டும் உண்மை.

cheena (சீனா) said...

நல்லதொரு சிந்தனை

சிந்திப்போம்

கோவி.கண்ணன் said...

//இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன். //

ஒரு சிலரை வைத்து அப்படி ஒரு முடிவை எடுப்பது தவறாகவே படுகிறது

தேவன் மாயம் said...

அத்திரி said...
டாக்டர் சொன்னா கேட்டுக்கனும்

10 October 2009 08:20///

ஆகா! கிளம்பிட்டீங்களா!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
என்ன சார் இப்படியெல்லா வேற நடக்குமா?

10 October 2009 08:2//

உண்மைதான் ஞான்ஸ்!!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
நடந்த நிகழ்ச்சி மிக வருத்தத்தை அளிக்கின்றது.

என்னைப் போன்றவர்கள், தமிழ் படிப்பதற்கு உள்ள விசயமே இந்த வலைப்பூக்கள் தான்.

வன்முறை என்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

உங்கள் எண்ணங்களுடன் நான் ஒத்துப் போகின்றேன்.

இரண்டு நாட்களாக வலைப் பதிவில் நான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மேல் ஓங்குகின்றது என்பது மட்டும் உண்மை.

10 October 2009 08:27///

தயவு செய்து வலையை விட்டுச் செல்லவேண்டாம்!! ”பாசப்பறவைகள்” என்று எழுது உங்கள் அன்பு எங்களுக்கு வேண்டும்!!

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
//இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன். //

ஒரு சிலரை வைத்து அப்படி ஒரு முடிவை எடுப்பது தவறாகவே படுகிறது

10 October 2009 08:44//

நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்!! என் மனதில் ஓடியது- சொன்னேன்!!

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

நண்பர்களே என்னுடைய
http://thamizthenee.blogspot.com


வலைப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்

முகமறியா இணையம் அகமறியும்
மனதால் இணைவோம், என்று

பாராட்ட நாம் தயங்கவேண்டியதில்லை

ஆனால் குற்றம் சொல்ல, தயங்கலாம் தவறில்லை, அதே நேரத்தில் தவறான அணுகுமுறையுடன் எழுதும் பதிவர்களுக்கு இதமாக சொல்லி திருத்தலாம், இதமாக கூறியே அனைவரையும் மாற்றலாம்,

கூடியவரையில் எல்லா இடத்திலும், குறிப்பாக இணையத்திலும் அனைவருக்கும் மரியாதை அளித்தே பழகலாமே

நாம் எல்லோருமே கற்றுக்கொள்பவர்கள்தானே
நிறைய கற்போம்
நிறைவாய் கற்போம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

தேவன் மாயம் said...

Thamizth Thenee said...
நண்பர்களே என்னுடைய
http://thamizthenee.blogspot.com


வலைப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்

முகமறியா இணையம் அகமறியும்
மனதால் இணைவோம், என்று

பாராட்ட நாம் தயங்கவேண்டியதில்லை

ஆனால் குற்றம் சொல்ல, தயங்கலாம் தவறில்லை, அதே நேரத்தில் தவறான அணுகுமுறையுடன் எழுதும் பதிவர்களுக்கு இதமாக சொல்லி திருத்தலாம், இதமாக கூறியே அனைவரையும் மாற்றலாம்,

கூடியவரையில் எல்லா இடத்திலும், குறிப்பாக இணையத்திலும் அனைவருக்கும் மரியாதை அளித்தே பழகலாமே

நாம் எல்லோருமே கற்றுக்கொள்பவர்கள்தானே
நிறைய கற்போம்
நிறைவாய் கற்போம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

10 October 2009 08:50
///

நீண்டநாள் கழித்து தங்கள் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!! மிக்க நன்றி!!

சிங்கக்குட்டி said...

ரொம்ப சரியான கருத்து.

அடிதடி என்பது குஸ்தி வீரர்களின் பிழைப்பு, எழுத்தில் ஆதாரத்துடன் அருவருக்க தாக்காமல் நிருப்பிபது பதிவரின் பொறுப்பு.

ஏன் இந்த அடிதடி, கொடுமை இது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த சம்பவத்துக்கு என் மன வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன் .

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
ரொம்ப சரியான கருத்து.

அடிதடி என்பது குஸ்தி வீரர்களின் பிழைப்பு, எழுத்தில் ஆதாரத்துடன் அருவருக்க தாக்காமல் நிருப்பிபது பதிவரின் பொறுப்பு.

ஏன் இந்த அடிதடி, கொடுமை இது.

10 October 2009 08:53//

கொடுமைதான்!!

தேவன் மாயம் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்த சம்பவத்துக்கு என் மன வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன் .

10 October 2009 09:00///

கருத்தொற்றுமைக்கு நன்றி நண்பரே!!

Jerry Eshananda said...

வழிமொழிகிறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன். //

:(

//பழமைபேசி said...
//மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!//

good boy! yes, we got to keep our nose off!
//

:)

Menaga Sathia said...

விடுங்க மருத்துவரே!!

Unknown said...

விடுங்க... விடுங்க... டாக்டர்ஜி..!! உங்குளுக்கு தெரியுமா... இப்புடியா மல்லுகட்டி சண்டை போடுற சிறந்த பத்து பதிவர்களை அரசியல் கட்சிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்ப போறாங்களாம்...!! அங்க சண்ட போட ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்டைக்கு ஆள் குறையுதாம் ..... நம்ம ஆளுங்க போய்த்தான் அத பூர்த்தி செய்யனுமாம் ...!!

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் இப்பொழுது தான் அடி எடுத்து வைத்துள்ளேன் ..பதிவுலகம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்

தீப்பெட்டி said...

//இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் //

உண்மைதான்..
:(

ஜெட்லி... said...

தங்கள் கருத்துக்கள் உண்மையே....

மின்னுது மின்னல் said...

இதுவும் கடந்து போகும்..!!

மணிஜி said...

தலைவரே...என்னை நீங்க தைரியமா சந்திக்கலாம்..

butterfly Surya said...

இதுவும் கடந்து போகட்டும்.

S.A. நவாஸுதீன் said...

உங்க மாசுல பட்டதை சொல்லி இருக்கீங்க தேவா சார். இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல சார். விடுங்க. நம்ம வேலையை நாம் பார்ப்போம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((((((

மங்களூர் சிவா said...

தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்

மிக்க வருந்தமான விஷயம்.

சுந்தர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிரபாகர் said...

நீங்கள் சொல்வது நூறு சதம் சரி. பதிவர்களுக்கும் போட்டி இருக்கலாம், பொறாமையும் இருக்கலாம்.... ஆனால் மூக்குடைப்பு இருக்கக்கூடாது...

பிரபாகர்.

அப்துல்மாலிக் said...

//பதிவுலகில் உள்ள நாம் மீடியாக்களால் கூர்ந்து நோக்கப்படும்//

உண்மைதான்...
தனி நபர் தாக்குதல் வேண்டாமே, கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் தேவன் மாயம் சார். வருந்தத்தக்க, வெட்கப்பட வேண்டிய செயல். :(

அஹோரி said...

"பிரபல பதிவர்" இந்த வார்த்தை தான் ஈகோ வ தூண்டி , இவ்ளோ பிரச்சனைக்கும் காரணம். தயவு செய்து இந்த வார்த்தை பிரயோகத்தை அனைவரும் தவிர்க்கவும்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

போன பின்னூட்டத்தில் எழுத்துப்பிழை
நீக்கி விட்டேன்.

//”குட் டச் பேட் டச்”- ”ஏதாவது செய்யவேண்டும் பாஸ்” என்பது போல் இதற்கும் ஏதாவது அவசியம் செய்யவேண்டும்.//

இந்த குட்டச் பேட்டச் பதிவர் சந்திப்புக்கு வந்த பெண் மருத்துவரை 'ஓங்கு தாங்கு' என்று பண்டிதன் கடிதத்தில் வர்ணித்தது போலவே விளித்திருந்தார். சிலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். நர்சிம் பதிவு போட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். இருவரும் பதிவுகளை நீக்கிவிட்டனர்.அப்போதே இவர் பண்பு என்ன என்பதில் சந்தேகம். Benefit of doubt இவருக்கே போனது.

அதன் பின் பண்டிதன் கடிதம் என்ற பெயரில் அவர் பார்வையைச்சொல்லியிருந்தார். அது ஆடு அழுகிறதே என்று ஓநாய் அழுவதைப்போல் இருந்தது. அதிலும் நாசூக்காய் உங்களுக்கு உறுத்தினால் பார்ப்பதை தவிருங்கள் என்றே சொல்லியிருந்தேன். பிடிவாதமாக மேலும் மேலும் தான் எப்படிப்பட்டவர் என்று பின்னூட்டங்களிலும், தன் அடுத்த பதிவிலும் தெளிவாக்கினார்.

அதனாலேயே அவருக்கு ஒரே ஒரு கடுமையான பின்னூட்டம் போட்டேன். என் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை. அவரது பண்டிதன் கடிதம் பல பெண் பதிவர்களுக்கு வருத்ததை தந்ததை நானறிவேன். சாக்கடையில் கல் எறிந்தால் சேறு தெறிக்கும் என்று பேசாமல் இருந்தனர். நானும் அப்படியே இருந்திருப்பேன். சாட்டிலும் ஈமெயிலிலும் வந்து 'என்னோட அந்தப்பதிவ படிச்சீங்களா, இந்த கதை குங்குமத்தில வந்திருக்கு, தினமலர்ல வந்திருக்கு' என்று அவ்வப்போது தகவல் அனுப்பும் காரணமாகவே அவ்வப்போது அவர் பதிவுகளை படிக்க நேரிடுகிறது.

// இன்றைய தலைமுறை ஆண்களையும் பார்க்கிறேன். நேர் கொண்ட பார்வை உடையவர்களாக இருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.“//

இப்படி நான் பதிவில் போட்டிருந்ததற்கு செட் சேர்க்கிறீர்களா என்று கிண்டல் அடித்தவர் இப்போது தனக்கு சாதகமாக வந்த பின்னூட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாடகமாடிக்கொண்ட்டிருக்கிறார்.

”ஒரு பெண் குடும்பப்பெண் என்பது அவள் உடுத்தும் உடையிலோ, உடுத்தியுள்ள முறையிலே நிச்சயம் இல்லை.“ என்று நான் பதிவில் சொல்லியிருந்ததற்கு
//அம்மிணி! நெசமாத்தான் சொல்றீங்களா? பின்ன எதில இருக்குதுங்க? கொணத்திலா? //
என்று கேட்டிருந்தார். குணத்தில் இல்லை என்று சொல்லும் இவரை என்னவென்று சொல்வது.

எந்தப்பதிவையும் நீக்கக்கோரி நான் சொல்லவில்லை. அவர் வாதம் வலுவிழந்த நிலையில் பதிவுகளை தானாகவே நீக்கினார். நீக்கப்பட்ட பதிவுகள் பின்னூட்டங்களோடு மீண்டும் அவர் பிரசுரிக்கவேண்டும். படிப்பவர்களே தீர்மானிக்கட்டும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory