Monday, 5 October 2009

அந்தி நேரம் சந்திசாய...!

 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிவிளையாடும் தஞ்சை மாநகரின் விடியாத ஒரு காலைப் பொழுது. மசமசவென்றிருந்த அந்த நேரம் திருவள்ளுவர் பேருந்து ஒன்று தன் பயணிகளை இறக்கி விட்டது.

அண்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டுமாத இயந்திரவியல் படிப்பில் ஃப்ளெமிஷ்,இங்கிலீஷ் பாண்டுகளைப் பாதிபடித்தும் படிக்காமலும்,

அண்ணா கல்லூரியின் ராகிங்கில் புகழ்பெற்ற “டு....கைக் கையில் பிடித்து முட்டிக்கால் போட்டு சீனியர்களுக்கு வணக்கம் சொல்லும்

” அந்தி நேரம் சந்திசாய,

அந்த மாமுனிவர்கள் தங்கள்

அடி .......... ....பிடுங்க..

.... ........... ............. ................”

என்ற பாடலை மட்டும் நன்கு மனப்பாடம் செய்திருந்த அவனும் அப்பொழுதுதான் புதிதாக வந்து இறங்கி அடுத்து என்ன செய்வது என்று அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தான். 

இராசராசன் முதல் புகழ்பெற்ற சோழ மன்னர்கள் உலாவந்த சோழப்பேரரசின் புகழ்பெற்ற தலைநகரான அந்தத் தஞ்சைதான் அவனுடைய எதிர்காலத்தை நிர்ண்யிக்கப் போகிறது என்ற சந்தோசத்துடன் பக்கத்திலிருந்த குழாயில் முகம் கழுவி விட்டு டீ ஒன்றை வாங்கிக் குடித்துவிட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு பஸ் எங்கே வரும் என்று விசாரித்து எதிரில் இருந்த நகரப் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

( சாண்டில்யன் போல் வர்ணணையுடன் பெரிய தொடர்கதைகள் எழுத என் சக கதை எழுதும் பதிவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!)

அன்றுமுதல் தஞ்சையில் எங்கு உணவருந்தினாலும் பாண்டிய நாட்டில் இல்லாத ஒரு ஊறுகாய் அவனுக்குப் பரிமாறப்பட்டது. அதுதான் மாவடு இஞ்சி ஊறுகாய். மிக வித்தியாசமான சுவையுள்ள அந்த ஊறுகாய் செய்முறையை சாஷிகாவின் பதிவில் கண்டேன்.

என் நினைவுகள் பின்னோக்கிச்சென்றதன் விளைவே இதற்கு முந்தைய பத்தியில் இருக்கும் வர்ணனை!

மேலே குறிப்பிட்ட ராகிங் பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என் ராகிங் நினைவுகளை பதிவுகளாகப் போடும் உத்தேசமும் உண்டு. பாடல் தெரியாவிட்டால் பாடல் ஈமெயிலில் அனுப்பப்படும்!!!

இந்த நினைவுகளைத் தூண்டிவிட்ட சாஷிகாவுக்கு தண்டணை உடனடியாக எனக்கு ஒருபாட்டில் மாஇஞ்சி ஊறுகாய் பார்சல் அனுப்புவதே!

ஆயினும் இன்னும் நான் இடுகையின் முக்கிய பகுதிக்கு வரவில்லை. ஆம்! சாஷிகா எனக்கும் மீண்டும் ஒரு விருது அளித்துள்ளார்.

 [BrilliantWebBlogAward.jpg]

கண்டும் காணாததுபோல் நான் இருந்தாலும் அவர் என்னை விடுவதாயில்லை! பின்னூட்டங்களில் வந்து மிரட்டி விருதை ஏற்றுக் கொள்ளவைத்துவிட்டார். மிக்க நன்றி சாஷிகா!! ( இந்த நினைவுகளுக்கும் பதிவுக்கும் காரணமாக இருந்ததற்கும்!!).

இதோ அவர் இடுகையில் உள்ள மாஇஞ்சி ஊறுகாய்!

 

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

Labels: ஊறுகாய் - Sunday, 4 October 2009

தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை :
* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.
*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.
*இதை உடனே செய்து சாப்பிடலாம்.
பி.கு:
மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.

இந்த விருதை என் இனிய பதிவர்களுக்கு அளிக்கிறேன்!!

அன்பு உள்ளங்களே! வருக! விருதினைப் பெருக!


வால்பையன்


 

சூரியன் சென்ஷி

பாலா

கோவி.கண்ணன்

S.A. நவாஸுதீன்

ஆ.ஞானசேகரன்

ஹேமா

சொல்லரசன்

க.பாலாஜி

நாணல்

அபுஅஃப்ஸர்

கபிலன்

வினோத்கெளதம்

ஆரூரன் விசுவநாதன்

31 comments:

மணிஜி said...

வெறும் ஊறுகாய் எனக்கு பிடிக்காது என்பதால் என்னை விட்டு விட்டீர்களா மருத்துவரே?

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
வெறும் ஊறுகாய் எனக்கு பிடிக்காது என்பதால் என்னை விட்டு விட்டீர்களா மருத்துவரே?

05 October 2009 08:08 /

ஆகா! மறந்துவிட்டேனே!

பீர் | Peer said...

எனக்கு வெறும் ஊறுகாயும் பிடிக்கும்... ;)

வால்பையன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தல!

எங்க ஊர் பக்கம் தீடிர்னு மழை பெய்யறது நின்னு போணதால நான் காலேஜ் பக்கம் ஒதுங்க முடியாம போச்சு தல! அதனால அந்த பாட்டு எனக்கு தெரியாது!

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
எனக்கு வெறும் ஊறுகாயும் பிடிக்கும்... ;)

05 October 2009 08:43 ///

ஊறுகாய்க்கு தொட்டுக்க?

தேவன் மாயம் said...

வால்பையன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தல!

எங்க ஊர் பக்கம் தீடிர்னு மழை பெய்யறது நின்னு போணதால நான் காலேஜ் பக்கம் ஒதுங்க முடியாம போச்சு தல! அதனால அந்த பாட்டு எனக்கு தெரியாது!

05 October 2009 08:46///

விருதை ஏற்றுப் பதிவிடுக மக்கா!

பாலா said...

என்ன டாக்டர் சார் வெறும் ஊறுக்காய் மட்டும் தானா
அப்படியே பார்த்து செய்யுங்க உங்களுக்கு புண்ணிய மா போகும்
விருதுக்கு நன்றி தலைவா

cheena (சீனா) said...

ஆமா இதென்ன மாங்கா இஞ்சி ஊறுகா செய்வதெப்படி - செய்முறையா

நல்லாவே இருக்கு - மா.இ.ஊ

ஆமா அதென்ன எங்கேயோ துவங்கி எங்கேயோ போறீங்க - சரி சரி - மெயில் அனுப்புங்க - நானும் மதுரை - பொறியியல் ராகிங் பாடலெல்லாம் அனுப்பறேன்

துபாய் ராஜா said...

விருதிற்கு வாழ்த்துக்கள்.

நான் இந்த மாங்காய் இஞ்சி ஊறுகாய் டேஸ்ட் பண்ணியிருக்கேன் டாக்டர்...
நல்ல டேஸ்ட்டா இருக்கும்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்ப இருக்கற பசங்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லையே...

தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் பாடல்களுக்கும் அதே கதிதான்

Menaga Sathia said...

எனக்கு பிடித்த ஊறுகாய்.பதிவு போட்டதற்க்கு நன்றி சகோ!!.அதென்ன கண்டும் காணாத மாதிரி இருந்தீங்கன்னு சொல்றீங்க.அப்படியிருந்த விட்ருவோமா நாங்க?விடமாட்டோம்ல....

ராகிங் பாடல் எனக்கும் தெரியலயே? எனக்கும் மெயில் அனுப்புங்க ப்ரதர்..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராகிங் பாடல் எனக்கும் தெரியலயே? எனக்கும் மெயில் அனுப்புங்க ப்ரதர்..
//

ஆழம் தெரியாம கால விடப் பார்க்காதீங்க அம்மா,,,

kanagu said...

viruthu petramaikku vaazthukkal nanba :)

தேவன் மாயம் said...

பாலா said...
என்ன டாக்டர் சார் வெறும் ஊறுக்காய் மட்டும் தானா
அப்படியே பார்த்து செய்யுங்க உங்களுக்கு புண்ணிய மா போகும்
விருதுக்கு நன்றி தலைவா

05 October 2009 09:16///

பதிவர் சந்திப்பில் ஏற்பாடிசெய்வோம்!!

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
ஆமா இதென்ன மாங்கா இஞ்சி ஊறுகா செய்வதெப்படி - செய்முறையா

நல்லாவே இருக்கு - மா.இ.ஊ

ஆமா அதென்ன எங்கேயோ துவங்கி எங்கேயோ போறீங்க - சரி சரி - மெயில் அனுப்புங்க - நானும் மதுரை - பொறியியல் ராகிங் பாடலெல்லாம் அனுப்பறேன்

05 October 2009 09:18//

சார் பாட்டெல்லாம் இன்னுமா ஞாபகம் இருக்கு?

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
எனக்கு பிடித்த ஊறுகாய்.பதிவு போட்டதற்க்கு நன்றி சகோ!!.அதென்ன கண்டும் காணாத மாதிரி இருந்தீங்கன்னு சொல்றீங்க.அப்படியிருந்த விட்ருவோமா நாங்க?விடமாட்டோம்ல....

ராகிங் பாடல் எனக்கும் தெரியலயே? எனக்கும் மெயில் அனுப்புங்க ப்ரதர்..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

05 October 2009 11:14///

ஊறுகாய் டேஸ்ட் அருமைதான்!! பாடல் தடை செய்யப்பட்டது!!

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...
விருதிற்கு வாழ்த்துக்கள்.

நான் இந்த மாங்காய் இஞ்சி ஊறுகாய் டேஸ்ட் பண்ணியிருக்கேன் டாக்டர்...
நல்ல டேஸ்ட்டா இருக்கும்...

05 October 2009 09:38///

ஆமாம் ராஜா!!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
இப்ப இருக்கற பசங்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லையே...

தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் பாடல்களுக்கும் அதே கதிதான்

05 October 2009 09:52//

அப்படியா!!

தேவன் மாயம் said...

வசந்த, கனகு நன்றி!!

Jerry Eshananda said...

நல்ல மார்க்கெட்டிங். உஊருகாய் மதுரை ஏரியாவுக்கு எனக்கு விநியோக உரிமை கொடுங்க.

நாணல் said...

நன்றி டாக்டர்... விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

ஊறுகாய் மட்டும் கொடுத்து விருது கொடுத்துட்டீங்க. பிரியாணி இல்லையா? (நம்ம ஊருப்பக்கம் அது ரெண்டும்தான் ஜோடி). சரி அடுத்த தடவை பார்த்துக்கலாம்.

விருதுக்கு ரொம்ப நன்றி தேவா சார். பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

கபிலன் said...

விருதிற்கு நன்றிகள்!

ஊறுகாய் அருமை!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

Anonymous said...

ஆஹா ஆவக்காய்கே வாய் ஊறுதே...

பாலகுமார் said...

தலைப்பை பார்த்தவுடன் ஓடி வந்தேன்... அதே கதை தான்.. :) இந்த பாட்டு என்ன, எல்லா பொறியியல் கல்லூரிகளுக்கும் பொதுவா? எங்க கல்லூரியிலும் ஒப்புவித்து, ஒப்புவிக்க வைத்த பாடல் தான்,, வணக்கம் வைக்கும் முறை உட்பட...... ஆனா என்ன சார், பாதில ஊறுகாய் போட போய்ட்டீங்க ? சீக்கிரம் மலரும் நினைவுகளை சொல்லுங்க, சார்..

ஆ.ஞானசேகரன் said...

இப்படியும் இருக்கா? நன்றி டாக்டர்

மங்களூர் சிவா said...

/
மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.
/

சூப்பரா இருக்கும், எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கண்ணகி said...

டாக்டர் சார், ஈஸியான செய்முறை. நன்றி

அப்துல்மாலிக் said...

ஊறுகாயுடன் சேர்த்து விருதுமா?

உங்க பாசத்துக்கு அளவேயில்லை தேவா சார் நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory